
இனிய நண்பர் தமிழ்பிரியன் தம்பதியினர் குட்டி தேவதைக்கு பெற்றோராக இன்று (24.09.09) புரமோஷன் பெற்றுள்ளனர்!
குட்டி தேவதைக்கு அன்பான ஆசிகளையும் தம்பதியருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்!
***********
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…
செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…
பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கயிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்
மீசையில்லாத மகள் என்று சொன்னேன்
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
***
இனிய செய்தியினை பகிர்ந்து கொள்வதில் மகிழும்...!
ராமலெஷ்மி அக்கா & சந்தனமுல்லை அக்கா