Sunday, September 26, 2010

Wishes: 11 ஆம் ஆண்டு திருமணநாள் வாழ்த்துகள் - ஆ.ஞானசேகரன் !


சிங்கப்பூர் பதிவர் மற்றும் திருச்சியை பிறப்பிடமாகக் கொண்டவருமான நிழல்படக் கலைஞர் அம்மா அப்பா பெயரில் பதிவு வைத்திருப்பவரும், எனது நெடுநாள் நண்பருமான திரு ஆ.ஞானசேகரன் இணையர்களுக்கு இன்று 11 ஆம் ஆண்டு திருமண நாள்.

திரு ஞானசேகரன் இணையர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Friday, September 10, 2010

Wishes : அழகிய சிங்கைப் பதிவர் கிஷோர் திருமண நாள் வாழ்த்துகள் !

காதலியை கரம் பிடிக்கும் சிங்கைப் பதிவர் கிஷோர் திருமணம் இன்று இனிதே நிறைவுற்றது, நாளை திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடலூரில் நடை பெறுகிறது.

கிஷோர் இணையர்கள் இணையும் இந்த நல்வாழ்க்கையில் நடப்பவை யாவும் நன்மையாகவும் இனிமையாகவும் துவங்கி வளர்ந்து செழித்து நிலைக்க

நல்வாழ்த்துகளை சிங்கைப் பதிவர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.


நம் பதிவர் சகோதரி G3 - செந்தில்குமார் திருமண வாழ்த்து!!!


திருமண வாழ்த்து

மணமகள்: G 3 என்கிற காயத்ரி
மணமகன்: செந்தில் குமார்
இடம்: பெசண்ட் நகர் சமுதாயக்கூடம்
நாள்: செப்டம்பர் 10 - 2010


இன்னார்க்கு இன்னார் என்று
இறைவன் நிர்ணயிக்க
இவருக்கு இவளே துணை என்று
இருவீட்டார் நிச்சயிக்க - இங்கே
இனிதாய் துவங்குகிறது ஒரு
இல்லறப்பயணம்

மத்தளங்கள் கொட்ட
மலர்க்கூட்டம் பொழிய
அட்சதையேற்று இவர்கள்
அமர்ந்திருக்கும் நேரம்
வாழ்க! வளர்க!! வளம் பல பெருக!!! என்று
எண் திசை அனைத்திலும் வாழ்த்துரை நிறைந்திருக்க
அன்றில் பறவையாய் மணமொன்றி வாழவும்
இசையும் இனிமையுமாய் இணைபிரியாதிருக்கவும்
அன்புருவால் நின்று ஆசீர்வதிக்கின்றோம்
தமிழ் வலைப்பதிவர்களாகிய நாங்கள்!

புதுகை தென்றலுக்கு இன்று பிறந்த நாள்!!! வாழ்த்தலாம் வாங்க!!!


வலையுலகின் சின்ன துளசி டீச்சர், எல்லோருக்கும் அன்பானவங்க, நம்ம அயித்தான் ஸ்ரீராமின் ஜாடிக்கேத்த மூடி, ஆஷிஷ், அம்ருதாவுக்கு அன்பான தாய் மற்றும் ஆசான், புதுகை தந்த புதுவீடு கட்டிய தென்றல், 2007ல் வலைப்பூ ஆரம்பித்து இது வரை தன் வலைப்பூவில் மட்டுமே 600 பதிவுக்கு மேல் பூக்க வைத்த பிரம்மாண்ட நாயகி நம்ம "புதுகைத்தென்றல்" என்கிற ஒய்ஃபாலஜி புரபசர் திருமதி.கலாஸ்ரீராம் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.

இந்த பிறந்த நாளில் அவர்கள் எல்லா வளமும் பெற்று, எல்லா செல்வங்களும் பெற்று, எல்லா நிம்மதியையும் பெற்று நீடூடி வாழ எல்லாம் வல்ல ஆண்டவனிடம் வேண்டுகின்றோம்.

அருமையான பிறந்த நாள் கேக் வாங்கி இந்த சுவரொட்டி பதிவிலே அப்டேட் செய்யும் அன்பர்களுக்கு இன்று அய்தராபாத்தில் ஆவாக்காய் பிரியாணி போடப்படும்!

Thursday, September 2, 2010

Wishes : திருமண நாள் சீனா ஐயா - செல்வி ஷங்கர் அம்மா !



மதிப்பிற்குரிய சீனா ஐயா - செல்வி ஷங்கர் அம்மா இணையர்களின் 37 ஆம் திருமண நாள் இன்று.

இவர்களின் இல்லற நல்லறத்தில் பிறந்த இருமகள்களையும் நன்கு படிக்க வைத்து, நல்ல இடங்களில் மணம் முடித்துக் கொடுத்து அவர்களின் இலண்டன் நல்வாழ்க்கையில் விளைந்த பேரப்பிள்ளைகளை கொஞ்சி மகிழ சென்று வரும் பேறு பெற்றிருக்கிறார்கள்.

சீனா ஐயா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணி புரிந்துவருகிறார், செல்வி ஷங்கர் அம்மா பள்ளி ஆசிரியராக பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். மதுரையில் வீற்றிருக்கும் சிதம்பரம் இவர். எல்லோரிடமும் இன்முகம் எதிர்கொண்டு பழகும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் இருவருமே. அவர்களின் இல்லத்திற்கு அழைக்கப்பட்டு விருந்து படைக்கப்பட்ட பல்வேறு பதிவர்களில் நானும் ஒருவன் என்கிற மகிழ்ச்சி எப்போதும் எனக்கு உண்டு.

வாழ்த்த வயதில்லை என்றாலும் பார்த்து மகிழ வயதுண்டு.



சீனா ஐயா - செல்வி ஷங்கர் அம்மா அவர்களின் நல்லுள்ளத்திற்கேற்ப என்றென்றும் நலமும் வளமும் நிறைந்து வாழ்வார்கள்.

Wednesday, September 1, 2010

சீனா சார்-செல்வி ஷங்கர் தம்பதிகளின் திருமண நாள் வாழ்த்துக்கள் !!!


1950 ல் ஒரு அக்டோபர் மாதம் 16ம் தேதி பிறந்த இவர் இன்னும் 74 நாட்களில் தனது சஷ்ட்டியப்த பூர்த்தியை தனது மனைவியோடு கோலாகலமாக கொண்டாடப்போகும் இவர் பிறந்தது என்னவோ தஞ்சை மாவட்டம் தஞ்சாவூரில் தான் எனினும் இவர் பல மாவட்டங்களுக்கு சொந்தக்காரர். ஆமாம் தஞ்சையில் பிறந்து மதுரையில் வளர்ந்து படித்து பின்னர் சென்னையில் புகழ்பெற்று இப்போது திரும்பவும் மதுரையில் வசிக்கின்றார்.

நாம் அசை போட்டால் தாடை வலிக்கும். இவர் அசை போட்டால் பதிவு பிறக்கும். அப்படியாக "அசைபோடுகிறேன்" என்கிற தலைப்பிலே எழுத ஆரம்பித்து மாதம் மாதம் தாவறாமல் வரும் பௌர்ணமி மாதிரி பளிச்சுன்னு ஒரு பதிவை பிரசவித்து விடுவார். சில சமயம் மாதத்துக்கு இரண்டு பௌர்ணமி கூட வந்து விடும். ஆனால் ஜனவரி மாதமானால் மட்டும் ஐந்துக்கு குறையாமல் பௌர்ணமி எட்டி பார்த்துவிடும்.

பதிவுலகில் இவர் சம்பாதித்தது எக்கச்சக்கம். ஆமாம் நண்பர்கள் எக்கச்சக்கம். எல்லா வயதிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு. சமீபத்தில் கூட குட்டிகோவியார் என்னும் புதிய ஆண் நண்பர், குட்டி வால் என்னும் பெண் நண்பர். இப்படியாக அந்த மாதிரி மூத்திர பதிவர்கள் முதல் மூத்த பதிவர்கள் வரை இவருக்கு நண்பர்கள்.

இவர் குடும்பமே எழுதும். இளைய மகள் 1995 கனையாழியில் கூட எழுதியிருக்காங்க. அன்பான மனைவி, அன்பான குழந்தைகள் அருமையான பேத்தி என ஒரு நிறைவான குடும்பம். கிட்ட தட்ட இவரது வெற்றிக்கு காரணம் கூட அந்த அன்பான குடும்பம் என்றே சொல்லலாம்.

எழுத வரும் பல புதியவர்களை ஊக்குவிப்பவர். எழுதி மறந்த பல பழைய பதிவுகளை தூசி தட்டி படிக்க வைப்பவர். ஆம் வலைச்சர பொறுப்பாசிரியர். \\தமிழ் கற்றவன் - அறிஞன் இல்லை - கவிஞன் இல்லை - புலவன் இல்லை - தமிழ் கற்றவன் - அவ்வளவு தான்\\ என தன்னை பற்றி குறைவாக சொல்லி கொண்டாலும் அதை எல்லாம் தாண்டி நன்றாக எழுத கூடியவர்.வங்கிப்பணியில் இருந்தவர்.

இவரை பிடிக்காதவர் இன்னும் பிறக்கவில்லை. பிறக்க போவதும் இல்லை. எந்த பிரச்சனைக்குள்ளும் இவரின் நிழல் கூட புகாது.எல்லாத்துக்கும் மேல இவர் ஒரு மனிதநேயமிக்க மனிதர். நல்ல ஆன்மீக சிந்தனை உடையவர். பிறந்தது ஒரு மடத்தின் வீட்டில், பழகியது ஒரு மடத்தின் கூட என்றெல்லாம் மடம் இவர் கூட இவர் வாழ்வில் தொடர்ந்து கொண்டே இருந்தாலும் இவர் தொடராத ஒரு மடம் அது பிடதி மடம் தான்:-)))

இத்தனை வெற்றிக்கும் காரணம் இவரது திருமணம். ஆமாம் இவரது வெற்றிக்கான சக்தி வந்ததே இவரது திருமணத்துக்கு பின்னர் தான். இன்னும் சொல்ல போனால் சக்தியே மனைவியாக வந்தது. ஆமாம் அந்த அக்காவின் பெயர் செல்விஷங்கர். ஆமாம் இப்போது புரிந்ததா இத்தனை நேரம் யாரைப்பற்றி சொல்லிக்கொண்டு இருந்தேன் என்று. அதே அதே....நாம் சீனாசார் என செல்லமாக அழைக்கும் சீனாசார்- செல்வி ஷங்கர்அவர்களின் திருமண நாள் செப்டம்பர் இரண்டாம் தேதியாகிய இன்று தான்.

நாம் வாழ்த்துவோம். ஆசீர்வாதம் வாங்கிப்போம்! சீக்கிரம் மணிவிழா கொண்டாட இருக்கும் இந்த தம்பதியர் எல்லா வளமும் பெற்று நீண்ட நாள் நம்மை எல்லாம் வழிநடத்த ஆண்டவனை வேண்டுகின்றோம்!

குறிப்பு: போஸ்டர் ஒட்டியது அபிஅப்பா! பசை தடவியது சிங்கை சிங்கம் ஜோசப் பால்ராஜ்! படம் உதவி ஆயில்யன் இல்லை கூகிள்.