Friday, July 31, 2009

Wishes: திராச!

நம்ம திராச ஐயா, தாத்தா ஆயிட்டாருங்கோ! :)
சிங்கையில் பிறந்த தங்கப் பேரன் பேரு சாரங்! (Saarang)

* சாரங்கா-ன்னு ராகம்!
* சாரங்கி-ன்னு இசைக் கருவி!
* அதுக்கும் மேல எம்பெருமான் திருக்கை வில்லுக்குப் பேரு சாரங்கம்! சாரங்கபாணி!
So, நம்ம திராச பேரன் வில்லு! :)

தாழாதே "சாரங்கம்" உதைத்த சர மழை போல் - வாழ்க! வாழ்க!
இனிய வாழ்த்துக்கள் சேய்க்கும், தாய்க்கும், தந்தைக்கும், தாத்தா பாட்டிக்கும்! :)

Wishes:கப்பி

இன்று தன்னுடைய 18’வது பிறந்தநாள் கொண்டாடும் சிரஞ்சிவி கப்பிகாரு’வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் குடியும்,குடித்தனமாக வாழ வாழ்த்துக்கள்...

Monday, July 27, 2009

Wishes: நட்புடன் ஜமால்!

பேரன்ட்ஸ் க்ளப் பிதாமகரும், ஹாஜர் அப்பாவுமான நம்ம நட்புடன் ஜமாலுக்கு பிறந்த நாள் மக்கா! (Jul-27)


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால்! :)
இன்னுமொரு நூற்றாண்டு இரும்! :)


வாழ்த்துவது: புதுகைத் தென்றல் அக்கா மற்றும் சங்கம்!

Saturday, July 25, 2009

Wishes : பரணி

* பாவனாவின் தீவிர ரசிகர்

* Holding wallet is gentleman's job என்ற அற்புதமான கொள்கையை பல காலமாய் கடைபிடித்து எங்க போனாலும் நான் தான் பில்லு கட்டுவேன்னு அடம் புடிச்சு பில்லு என்ற புனைப்பெயரை பெற்றவர்

* கல்யாணத்துக்கு முன்னாடி வரை காதல் கவிதைகளா போட்டு தாக்கியவர்

* கடைசி வரை அந்த எதிர் வீட்டு ஜன்னல பத்தி சொல்லாமலே அப்ஸ்காண்ட் ஆன நல்லவர்

இப்படி பல அருமை பெருமைகளை கொண்ட பில்லு பரணிக்கு இன்று பிறந்தநாள்.


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பரணி !!!

Thursday, July 23, 2009

Wishes: CVR!

* லவ் சயின்டிஸ்ட்
* விண்வெளி சயின்டிஸ்ட்
* சிந்தனை சயின்டிஸ்ட்
* கதை, கவிதை சயின்டிஸ்ட்
* பயணக் கட்டுரை சயின்டிஸ்ட்
என்ற இவரின் பழைய சயின்டிஸ்ட் பட்டம் எல்லாம் போயே போச்சு! :))

இப்போ இவர் கிட்ட இருக்குற ஒரே பட்டம் நாட்காட்டி சயின்டிஸ்ட்!
* ஏப்ரல் மாத ஆட்காட்டிகள்,
* மே மாத ஆட்காட்டிகள்,
* ஜூன் மாத ஆட்காட்டிகள்
என்று மாசம் தவறாம சிவகாசி காலண்டர் போடும் எங்க தல......:)
ஜூலை மாசம் மட்டும் போடவே இல்லையே! ஏன்?

ஜூலை மாதம் வந்தால்.............. :)

Fill in the Blanks கரீட்டா பண்றவங்களுக்கு பிறந்த நாள் பார்ட்டி-ல்ல பல சரக்கு இலவசம்...ச்சே பரவசம்! :)

நம்ம புன்னகை மன்னன், CVR-க்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! (Jul-24)தம்பி எடுத்த இந்தப் புகைப்படம் பார்க்கும் போதெல்லாம் தம்பி ஞாபகம் தான் வரும்! எங்கேயோ ஒரு கோபுரத்துல சுட்டானாம்!
ஹிஹி! இது பார்க்க கொஞ்சம் கொஞ்சம் நம்ம சீவீஆர் மாதிரியே இல்ல, மக்கா? :)))

மனத்துக்கினிய பிறந்தநாள் வாழ்த்துகள் சீவீஆர்!
எம்பெருமான் திருவருளால் நீடு-பீடு-மன(ண)மகிழ்ச்சி-நீங்காதசெல்வம் நிறைந்து வாழ்க! :)

Happy Birthday Cinderella CVR! :)

Wednesday, July 22, 2009

வினோத் கெளதமை வாழ்த்தலாம் வாங்க!!!

கொஞ்சம் கூட சிரமம் பார்க்காமல் சந்திப்பு என்றதும் இரு முறை ஆர்வமாக அலைனில் இருந்து வந்து கலந்துக்கொண்ட வினோத் கெளதமுக்கு இன்று பிறந்தநாள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வினோத்!

Tuesday, July 21, 2009

2 வயது குழந்தையின் சிகிச்சைக்கு உதவி தேவை

2 வயது குழந்தையின் கேன்சர் சிகிச்சைக்கு உதவி தேவை. குழந்தையின் தந்தையிடமிருந்து வந்த மின்னஞ்சல்:

***

Sub: Request for Financial help for my 1.9 year old son’s Cancer treatment.

My Child’s Cancer initially started with a fever which is confirmed after a few tests like USG scan, CT , MRI, VMA (Urine test), Bone Marrow test, Bone Scan, Chest CT Scan, IHC test, etc. All these tests confirmed that there is a big mass above the adrenal gland (left) of about 11 cm. We also did Biopsy which proved that this is a case of Neuroblastoma (Stage 4 Metastatic Cancer). The cancer cells are also seen in bone marrow.

My Child has undergone a few cycles of Chemotherapy. He is being treated by Medical Oncologists – Kumaran Hospital – PH road, near Sangam theatre). Also, my child needs to undergo few more cycles of Chemotherapy, a surgery, and a Stem Cell Transplantation (alone costs 8.5 lakhs approx). The total cost would be around 12 – 15 lakhs approx. If all the above treatments are done.

Currently, I am not able to meet the treatment cost, as it is going very high. I request you to kindly provide financial help for my Son’s treatment.

Note: If required, I am ready to provide the copy of treatment reports.

Kindly send in your valuable contribution to the above address or transfer to the following account.

Name : Balaji R

A/c number : 021201570417

Name of the bank : ICICI bank

Branch : Santhome, Chennai

Type of A/c : Savings A/C

My Official Email id: balaji-3.ramachandran-3@cognizant.com

My Personal Email id: ramrbalaji81@yahoo.com

My Contact number: +91 99625 38550


Thanking you,

Yours Sincerely,

BALAJI R

5 மாதங்களுக்கு முன்னர் எடுத்த புகைப்படம்:
சமீபத்திய புகைப்படம்:

****

உதவுங்கள் நண்பர்களே!

மை ஃபிரெண்ட்! கும்மிக்கே கும்மி அடிக்க முடியுமா?

கும்மிக்கே உங்களால கும்மி அடிக்க முடியுமா?

(July-22-2009....இன்னும் ஒரு மணி நேரத்தில்....)
நம்ம மை ஃபிரெண்ட் அனுவோட "ஸ்பெஷல்" பிறந்த நாளு மக்கா, இந்த வருசம்! :)


தொலைபேசியில் வாழ்த்து சொல்வது யாரு? அசத்தப் போவது யாரு? :))


மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜிஸ்டர்! :)
பல்லாண்டு பல்லாண்டு, இன்னுமொரு நூற்றாண்டு இன்பமாய் இரு! :)


Very Happy Birthday to You!
Many Happy Returns of this Day :)கீழ்க் கண்டவங்க, மேலே தொலைபேசறவரோட நடிக்கணுமாம்!

நீங்க பெரிய மனசு பண்ணி கால் ஷீட் கொடுப்பீங்களா?-ன்னு ஒங்க பொறந்த நாள் அதுவுமா கேக்கறாங்க! இவிங்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தா, எனக்கே (எங்களுக்கே) மகிழ்ச்சி கொடுத்தா மாதிரி! என்ன சொல்றீங்க ஜிஸ்டர்? :)))))

Friday, July 17, 2009

அஞ்சலி - டி.கே.பட்டம்மாள்

சென்னை: பழம்பெரும் கர்னாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் நேற்று மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 90. முன்னணி இசைக் கலைஞர்கள் பலர் மலர் அஞ்சலி பழம்பெரும் கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள், சென்னை கார்ப்பரேஷன் ரேடியோவில் கர்நாடக இசைப் பாடகியாக இசைப் பயணத்தைத் தொடர்ந்தார். ஆயிரக்கணக்கான மேடைகளில் பக்தி பாடல்களை பாடியுள்ளார். பாரதியாரின் பல பாடல்களை பாடியுள்ளார். "ராமராஜ்யம், வேதாள உலகம், நாம் இருவர், வாழ்க்கை' உட்பட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் பாடியுள்ளார். "சாந்தி நிலவ வேண்டும்' என்று பெயரில் தனி பாடல்களும் நிறைய பாடியுள்ளார். எச்.எம்.வி., ஏ.வி.எம்., ஆடியோ நிறுவனங்களுக்கும் பக்தி மற்றும் தேசிய பாடல்களை பாடியுள்ளார். இவரது இசைச் சேவையை பாராட்டி மத்திய அரசு, பத்மபூஷண் மற்றும் பத்மவிபூஷண் விருதுகளையும் வழங்கி கவுரவித்துள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் அவரது மகன் சிவகுமார் வீட்டில் பட்டம்மாள் இருந்து வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வீட்டிலிருந்தபடியே மருத்துவ சிகிச்சையும் செய்யப்பட்டது.

நேற்று மதியம் 1.30 மணிக்கு மாரடைப்பால் இறந்தார். கர்நாடக இசைக் கலைஞர்கள் பாலமுரளிகிருஷ்ணா, உமையாள்புரம் சிவராமன், திருச்சூர் ராமச்சந்திரன், சாருமதி ராமச்சந்திரன், ரவிகிரண், சவுமியா, அருணா சாய்ராம், காயத்ரி, ராகவன், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், வைஜெயந்திமாலா பாலி , தொழிலதிபர் நல்லி குப்புசாமி, சென்னை தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குனர் நடராஜன் உட்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர். பட்டம்மாளுக்கு சிவகுமார், லஷ்மண்குமார் என்ற மகன்கள் உள்ளனர். பிரபல கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் இவரது பேத்தியாவார். சென்னை மயிலாப்பூரில் உள்ள இடுகாட்டில், பட்டம்மாள் உடல் நேற்று இரவு தகனம் செய்யப்பட்டது. "பட்டம்மாள் மறைவு அதிர்ச்சி தருகிறது: சுருதிக்கும் லயத்திற்கும் சிறப்புப்பெற்றவர். மரபு இசையில் சிறந்தவர் , இளம் கலைஞர்களை ஊக்குவித்தவர்' என்று கர்னாடக இசையில் முதுபெரும் கலைஞரான டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா கூறினார்.

பட்டம்மாள் - கர்னாடக இசையின் "பாட்டம்மாள்': கர்நாடக சங்கீதத்தால் தமிழக நெஞ்சங்களை தாலாட்டியவர், தனது கனத்த சாரீரத்தால் ரசிகர்களை கவர்ந்தவர் டி.கே. பட்டம்மாளின் (90) மறைவு இசையுலகுக்கு பேரிழப்பாக அமைந்துவிட்டது. பெண்கள் மேடையேறிப் பாடுவதும், கச்சேரி செய்வதும் ஏற்றுக் கொள்ளாத அந்த காலத்தில், இசையை தனது முழுநேரப் பணியாக ஏற்றுக் கொண்டு சாதனை படைத்தவர். இளம் வயதிலேயே மிகச் சிக்கலான பல்லவிகளைக் கூட, தனது கனமான குரலில் பாடி வியப்பை ஏற்படுத்தியவர். முத்துச்சாமி தீட்சிதர் மற்றும் பாபநாசம் சிவன் ஆகியோரின் பாடல்களை உணர்ச்சிப்பூர்வமாகவும் கனகச்சிதமாகவும் பாடிசிறப்பித்தவர்.தமால் கிருஷ்ணசாமி தீட்சிதர் மற்றும் ராஜம்மாளுக்கு மகளாக, காஞ்சிபுரத்தில் 1919 மார்ச் 28ம் தேதி பிறந்தவர் பட்டம்மாள். பெற்றோர் இருவரும் நல்ல பாடகர்கள்.அவர் இவருக்கு வைத்த பெயர் அலமேலு. பட்டம்மாள் மற்றும் அவரது சகோதரர்கள் டி.கே.ரங்கநாதன் மற்றும் டி.கே.ஜெயராமனும், தந்தையிடமிருந்து ராகங்களை பாடித் தெரிந்து கொண்டனர்.

சுலோகங்களை சொல்வதிலும் "ஷ்யமாளா தண்டகத்தை' பாடுவதிலும் சிறுமியாக இருந்த போதே பட்டம்மாள் தேர்ந்தவராக இருந்தார். ஏழு வயதில், ஒரு குடும்ப திருமண விழாவின் போது, பாடி அனைவரது கவனத்தையும் பெற்றார். இதைக் கண்டு வியந்த கர்நாடக இசை கலைஞர் பட்டம்மாளுக்கு வீட்டுக்கு வந்து பாட்டு சொல்லிக் கொடுக்க இசைந் தார். அந்த காலத்தில், மிகச்சிறந்த கர்நாடக இசை கலைஞராக திகழ்ந்த, காஞ்சிபுரம் நைனா பிள்ளையின் பாடல்களை கேட்கும் வழக்கத்தைக் கொண் டிருந்தார் பட்டம்மாள். அவருடைய பாணியை கடைபிடிப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். "நெஞ்சே நினை' எனத் துவங்கும் பட்டம்மாள் பாடிய "ஜகன்மோகினி' ராகம் நைனா பிள்ளையின் பாணியில் அமைந்ததுதான். பட்டம்மாளின் இசைத்திறனை கேள்விப்பட்ட நைனாபிள்ளை, தியாகராஜ ஆராதனை விழாவில் அவர் பாடுவதற்கு ஏற்பாடு செய்தார். தியாகராஜ கீர்த்தனையில் மிகவும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு அளிக்கும் அந்த வாய்ப்பு, சிறு வயதிலேயே பட்டம்மாளுக்கு கிடைத்தது. "ரக்ஷ பெட்டாரே' எனத் துவங் கும் "பைரவி' ராக பாடலை பாடி வியப்பை ஏற்படுத்தினார்.

1920களில், பட்டம்மாள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருந்த அம்முக்குட்டி அம்மாள் அவருடைய குரல் வளத்தைப் பார்த்து, பள்ளி விழாக்களில் பாடச் செய்து ஊக்குவித்தார். அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் மாணவரான வைத்யநாதன், நைனா பிள்ளையின் மாணவரான கிருஷ்ணசாமி அய்யங்கார் ஆகியோரிடமும் சங்கீதம் கற்றுக் கொண்டார். திருப்புகழில் பாண்டித்யம் பெற்ற காஞ்சிபுரம் அப்பாதுரை ஆச்சாரியாரிடமிருந்து கீர்த்தனைகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் பட்டம்மாளுக்கு கிடைத்தது. பட்டம்மாள் பாடிய கிராமோபோன் ஆல்பத் தின் கவரில் பட்டம்மாள் படத்தை வெளியிட அனுமதி கேட்ட போதும், மேடை கச்சேரி வாய்ப்புகளையும் பட்டம்மாளின், ஆச்சாரமான பிராமண குடும்பத்தை சேர்ந்த அவரது தந்தை மறுத்து வந்தார். என்றாலும் பலரும் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தார்கள். இதற்கிடையில் அந்த ஆல்பம் நல்ல வரவேற்பைப் பெற்றது.வை.மு.கோதைநாயகி அம்மாள் பட்டம்மாளின் தந்தையை சமாதானப்படுத்தி, சென்னை எழும்பூரில் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தார்.ராகம், தாளம், பல்லவி ஆகிய மூன்றிலும் மேடைக் கச்சேரி செய்த முதல் பெண்மணி அவர். 1929லேயே சென்னை வானொலியில் பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 1930ம் ஆண்டில் பேராசிரியர் சாம்பசிவமூர்த்தி நடத்திய கோடை கால இசைப் பயிற்சியிலும் பட்டம்மாள் சேர்ந்துபயின்றார். "காம்போஜி' ராகத்தில் அமைந்த " ஸ்ரீ சுப்ரமண்ய நமஸ்தே' எனும் பாடலை சிறப்பாக பாடினார். முத்துச் சாமி தீட்சிதர் பாணியை கடைபிடிப்பதில் சிறிதும் பிறழாத பட்டம்மாளை, தீட்சிதரின் வழித்தோன்றலான அம்பி தீட்சிதரே பாராட்டியுள்ளார். அவரே பட்டம்மாளுக்கு சங்கீதம் சொல்லித் தர இசைவு தெரிவித்து அதன்படியே பல்வேறு கீர்த்தனைகளை சொல்லித்தந்தார். டி.எல். வெங்கடராம அய்யரும் பட்டம்மாளின் குரல் வளத்தை மெருகூட்டினார். பாபநாசம் சிவன், மாரிமுத்துப் பிள்ளை, அருணாச்சல கவிபாடல் களாகட்டும் தேவாரம், திருவாசகமாகட்டும் பாடல்களையும் விருத்தங்களையும் மெய்ருகப்பாடி கேட்பவர்களின் கண்களில் நீர் சுரக்க செய்துவிடுவார்.எளிமையான குரலால் எல்லோரையும் கவர்ந்துவிடுவார்.கச்சேரிகளுக்காகவும், இசைத்துறையில் திறமையை வளர்த்துக் கொள்ளவும் பட்டம் மாள் சென்னையில் குடியேறினார்.1932ம் ஆண்டில் சென்னையில் முழு கச்சேரி, மறு ஆண்டில் பாபநாசம் சிவனிடம் அறிமுகம், 1934ல் மும்பை கச்சேரி என்று பட்டம்மாளின் இசைவாழ்க்கையின் சுருதி கூடியது.

1939ம் ஆண்டு கே.சுப்ரமணியத்தின் இயக்கத்தில் வெளியான தியாக பூமியில் முதல் சினிமா வாய்ப்பும் கிடைத்தது.1939ல் ஈஸ்வரன் என்பவரை பட்டம்மாள் மணந்தார். 1947ம் ஆண்டு வெளியான நாம் இருவர் படத்தில் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் வாய்ப்பை ஏற்று, சுப்ரமணிய பாரதியின் "வெற்றி எட்டு திக்கும்' எனத் தொடங்கும் பாடல் மற்றும் "ஆடுவோமே' எனும் மற்றொரு பாடலையும் பாடினார்.1947 ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று ஆல் இண்டியா ரேடியோவில் தேசபக்தி பாடல்களைப் பாடிய பெருமையையும் பெற்றார். பிழைக்கும் வழி, வேதாள உலகம், தீராத விளையாட்டு பிள்ளை, வாழ்க்கை உள்ளிட்ட படங்களில் ஏறத்தாழ 100 சினிமா பாடல்களை பாடினார். 1949ம் ஆண்டில் "பாரத சமுதாயம் வாழ்கவே' எனும் வாழ்க்கைப் படத்தில் வெளியான பாட்டு மிகப்பிரபலம் ஆனது. சுதந்திர தினம் என்றாலே இவரது குரல் எல்லோரது மனதிலும் ரீங்காரம் இடும். காதல் பாடல் களை பாடுவதற்கு அவர் இசைவு தெரிவிக்கவில்லை. அவரது இசைப்பயணம் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனது. ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பட்டம்மாளை ராஷ்டிரபதி பவன் அழைத்து பாடச் சொல்லி சிறப்பித்தார். கர்நாடக சங்கீத உலகில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் புகழ் பரந்து விரிந்து இருந்த போது, அதே காலகட்டத்தில் சங்கீதத்தில் உயர்ந்து நின்ற பட்டம்மாள், தனக்கும் இசையுலகில் உள்ள மிகச்சிறப்பான இடத்தை தனது கடினமான உழைப்பால் பெற்றார். டி.கே.பட்டம்மாள் (டி.கே.பி.,), எம்.எஸ்.சுப்புலட்சுமி (எம்.எஸ்.,) மற்றும் எம்.எல். வசந்தகுமாரி (எம்.எல்.வி.,), இசை உலகை பிரமிக்க செய்த இந்த மூவரும் தற்போது இல்லை. அரியக்குடி ராமானுஜ அய்யர், செம்பை வைத்யநாத பாகவதர், முசிறி சுப்ரமணிய அய்யர், செம்மங்குடி சீனிவாச அய்யர் உள்ளிட்டோர் பட்டம் மாளின் சமகாலத்தில் கர்நாடக சங்கீதத்தில் கொடி கட்டி பறந்தவர்கள். சிக்கலான பல்லவிகளை பாடி, தாளங்களுக்கேற்ப அதன் நுட்பங்களை திறம்பட வெளிப்படுத்தியதால் இவர் "பல்லவி பட்டம்மாள்' என்றே அழைக்கப்பட்டார். பட்டம் மாள் பாணி எனும் தனிப்பாணியே உருவானது. 1970களிலிருந்து அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல வெளி நாடுகளில் கச்சேரி செய்தார். டைகர் வரதாச்சாரியார் இவருக்கு "ஞான சரஸ்வதி' எனும் பட்டத்தை அளித்தார். இதைத் தொடர்ந்து ஏராளமான விருதுகள் குவிந்தன. சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதும் ஜனாதிபதியிடம் பத்ம பூஷன் விருதும் பெற்றார். 1998ம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதும் பெற்றார். 2002ம் ஆண்டில் சென்னை மியூசிக் அகடமியின் 75வது ஆண்டு விழாவில் செம்மங்குடி சீனிவாசஅய்யர், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பட்டம்மாள் ஆகியோருக்கு ஜனாதிபதி அப்துல்கலாம் சிறப்பு விருது வழங்கினார். பட்டம்மாளின் பேத்தி நித்யஸ்ரீயும் கர்நாடக இசை கலைஞர். வாழ்நாளின் பெரும்பகுதி யை கர்நாடக இசைக்காகவே வாழ்ந்த பட்டம்மாளின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.நன்றி : தினமலர்

Sunday, July 12, 2009

Wishes: அசத்தப் போவது யாரு’ல் கார்க்கி

கார்க்கியின் இப்படி கூட உயிர் போகுமா? அசத்தப் போவது யாருல மதன் பாப் சொல்றாரு. இனிமே கார்க்கி ”அசத்தல்” கார்க்கின்னு அழைப்படுவாரு..அதாவது அசத்தப்போவது யாரு புகழ் கார்க்கி

Asatha01 @ Yahoo! Video


http://www.karkibava.com/2009/01/blog-post_6880.html

title ல கொஞ்சம் சொதப்பல் ஆகிருச்சுங்க. தமிழ்மணம் ரசிகர்கள் மாத்தி படிச்சுக்கங்க.

திருமண வாழ்த்து(க்)கள் - ஸ்ரீமதி & கிரிதரன்
இனிமையான இல்லற வாழ்வில் இன்று (12-ஜூலை-2009) அடியெடுத்து வைக்கும் வலைப் பதிவர் கரையோரக் கனவுகளுக்கு சொந்தக்காரர் ஸ்ரீமதி மற்றும் கிரிதரன் இருவரையும் வாழ்த்துகின்றோம்.மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ வலைப்பதிவர்கள் சார்பிலும், சங்கத்தின் சார்பிலும் வாழ்த்துகின்றோம்.


தமிழ் பிரியன்
ஆயில்யன்
நிஜமா நல்லவன்
கானா பிரபா
காதல் கறுப்பி
மற்றும் சங்கத்தினர்

இதே வேளை நம்ம சின்னப்பாண்டி ரொம்பவே இஷ்டப்பட்டு தங்கச்சி கல்யாணத்துக்கு ஒரு வாழ்த்துப் பாட்டு போடச்சொன்னார். பெரியபாண்டி அண்ணன் சின்னப்பாண்டி சார்பில் வழங்கும் மொய் இதோ

மணமாலையும் மஞ்சளும் சூடி புதுக்கோலத்தில் நீ வரும் போது
அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில் நனைந்தே நான் வாழ்த்துவேன்


Friday, July 10, 2009

WISHES - ஜோசப் பால்ராஜ்


இன்று (11-07-2009) பிறந்த நாள் காணும்
சிங்கப்பூர் வாழும் சிங்கம்
மாரநேரி பெற்றெடுத்த தங்கம்
எங்கள் இனிய நண்பர்
ஜோசப் பால்ராஜ்-க்கு
எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

இவண்
மொக்கை குழும நண்பர்கள்

Thursday, July 9, 2009

Advt: வலைப்பூcomவிற்பனைக்கு

வலைதளம்- வலைப்பூ.com விற்பனைக்குள்ளது.

Blogற்கு தமிழில் வலைப்பூ என்றோர் அர்த்தம் உண்டு.


தொடர்புகொள்ள admin@valaipoo.com

Wednesday, July 8, 2009

அறிவிப்பு: பதிவர் சிந்தாநதி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

பதிவர் சிந்தாநதி ஆண்டு 2007 ல், சிறப்பாக எழுதிவந்த பதிவர், தமிழ்மணத்தில் நட்சத்திரமாகவும் எழுதி இருக்கிறார். பல குழுமங்களில் உறுப்பினராகவும், ஆலோசனை வழங்குபவராகவும் செயலாற்றினார்.

சிந்தாநதி அவர்களின் திடிர் மறைவு, நம்ப முடியாதாகவும், மிகுந்த சோகத்தையும் மன வருத்ததையும் தருகிறது, அவரது இல்லத்தினருக்கு மன அமைதி கிடைக்கவேண்டும்.

பதிவர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்
:(

மேலும் விவரங்களுக்கு.

Wishes: கவிதாயினி காயத்ரிகவிதைகள் எல்லாம் அதிரடி,
படிக்கிறவங்களுக்கு கன்பார்ம்டு ஏர்வாடி,

கையில வெச்சுக்கிறாங்க மெஹந்தி,
இவுங்க கூட சேட் பண்ணினா நமக்கு வரும் பீதி.

நம்பர் வெச்ச ஜிமெயில் ஐடி,
ஜிடாக்ல லாகின் பண்ணினா போயிருங்க பேசாம ஓடி.

மலையில கிடைக்கும் திணை,
இவுங்க கவிதை படிச்சா நமக்கு வரும் வினை,

டீ ஆத்துறதுல இவுங்க செம கில்லாடி,
பாலை கவிதை படிச்சவன் குடுப்பான் கல்லடி.

பதிவுக்கு வெச்ச பேரு பாலை,
படிச்சா கலங்குறது நம்ம மூளை.

மக்கள் இவுங்களுக்கு குடுத்த பட்டம் கவிதாயினி,
காயத்திரி பதிவு போட்டா, படிப்பியா நீ?

பொண்ணுங்களுக்கு புடிச்ச கலரு பிங்கு,
இவுங்க பிலாக் படிச்சா ஊதுறாங்க சங்கு.

பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா..
மெட்ராசுக்கா...திருச்சிக்கா..திருத்தணிக்கா..
கவிதை எல்லாம் போட்டு
இனிமே எங்களை கொலை பண்ணவேணாங்க்கா

யானைக்கு இருக்கு தும்பிக்கை,
இவுங்க கவிதை எல்லாம் ஒரே மொக்கை.

தட்டி தட்டி கை யெல்லாம் வலிக்குது,
ஜல்லடை இல்லாமலேயே இவுங்க பதிவு எல்லாம் சலிக்குது.

அம்மணிக்கு கொஞ்சம் தலையில ஓவர் வெயிட்டு,
கலருமட்டும் கிராபிக்ஸ் இல்லாத சிவாஜி ஒயிட்டு.


என்னிக்குமே காளை மாடு பாலு தராது,
நல்லா கலாய்ச்சுக்கோ, சான்ஸ் போனா வராது.


கவிதையாலே எங்களை
கல்லால அடிக்கும்
கவலைப் படாத காரிகை
கவிதாயினி காயத்ரிக்கு பிறந்த நாள்(8-ஜூலை) நல்வாழ்த்துக்கள்

Wishes by
Sangam Groups.


இது பழைய பதிவு தான்.... என்ன பண்ண...!! வருசம் திரும்பிருச்சே....... :)

Tuesday, July 7, 2009

இரங்கல்: குமரனின் தந்தையார்!

நமது ஆன்மீகச் செம்மல், குமரனின் தந்தையார், சற்று நேரத்துக்கு முன் இறைவனடி சேர்ந்தார் என்பதை இங்கே மிக்க வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

சில வாரங்களுக்கு முன்னர் தான் மருத்துவமனையில் சிறுநீரக அறுவை மருத்துவம் தொடர்பாக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் எலும்பு முறிவுக்கு அனுமதிக்கப்பட்டு, சற்றே நலம் பெற்று, வீடு திரும்பினார்!

இன்று குரு பூர்ணிமைத் திருநாள்!
அன்னாரின் இன்னுயிர் எம்பெருமான் திருவடிகளில் இளைப்பாற வேண்டுவோம்!

குமரனுக்கும் அவர் குடும்பத்தார்க்கும் நமது கனிவான இரங்கல்!
குமரன் மனம் தேறவும் அடியேன் வேண்டுதல்,விண்ணப்பம்! நாராயண! நாராயண!

Monday, July 6, 2009

WISHES:- இயற்கை மகள்

இயற்கை மகளுக்கு 07-ஜுலை 09) இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!காதல்,தொடர்கதை ,கல்லூரி கதைகள் & மாணவர்கள் நலன் தொடர்பில் இன்னும் பல பதிவுகளில் மேலும் தன்னை மிளிரச்செய்து கொண்டே,மேற்படிப்பிலும் கவனம் செலுத்தி, ஊசி போடாத மருத்துவராக,மாணவர்களை டார்ச்சர் செய்யாத பேராசிரியராக, இந்த இனிய தருணத்தில் அனைவரும் வாழ்த்துவோம்!

Wishes:தூயா

அன்பு சகோதரி,இணையத்து சமையல் குறிப்பு பதிவுகளின் அரசி (எகொஇச) தூயா’வுக்கு இன்னிக்கு பிறந்தநாள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தங்காச்சீ...இங்கு வாழ்த்து பின்னூட்டங்கள் இடுபவர்களுக்கு தூயா தன் கையால் சமைத்த உணவு விருந்து வழங்குவார் என அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.

Wishes : மிஸ்டர்& மிஸஸ் ப்ளெஸ்ஸிங் மிஸ்!!

மிஸ்டர்& மிஸஸ் ப்ளெஸ்ஸிங் மிஸ் aka ராப்-பிற்கு திருமணநாள் வாழ்த்துகள்!
மறத்தமிழ்மாதே...
பதிவுலக தெய்வக்கொயந்தையே!

லொடுக்கு சுந்தரிகளின் நலம்விரும்பியே..
என்டிடிவியை எட்டிப் பிடித்தாயே!

வந்தாய் நீ மீ த ஃப்ர்ஸ்ட்!
கருத்துக் காமாட்சிகளுக்கு செக்!

பெற்றாய் நீ பின்னூட்டங்கள் இருநூறு..
உன் கவுஜயில் வெடித்த மண்டைகள் பலநூறு!


சரி..சரி இதோட நிறுத்திக்கறேன்..அகிலாண்ட நாயகனின் அல்டிமேட் ரசிக மன்ற தலைவியின் திருமண நாளில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்! :-))

இனிய திருமண நாள் வாழ்த்துகள் ராப்!!

Sunday, July 5, 2009

WISHES : இளவஞ்சி


இன்று (04-07-2009) பிறந்த நாள் காணும்
எங்கள் ஆசான்
தனித்துவமானவன்
தனித்தும் ஜெயிப்பவன்
பிரம்மச்சாரிகளின் குலகுரு
கேமராக்கண்களில் அசுர உரு
காமெடி நயாகரா
சென்ட்டிமென்ட்டல் ஆக்ரா
இளவஞ்சியை

வாழ்த்த வயதில்லை
கீழ வுழுந்து கும்புட்டுக்கறோம்!

இனிய பொறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்யாரே....!!!


இப்படிக்கு

கொலவெறி ரசிகர் மன்றத்தினர் சார்பாக

அன்பு கோபிநாத்

Friday, July 3, 2009

WISHES : கோபிநாத்


இன்று (03-07-2009)
பிறந்த நாள் கொண்டாடும்
அமீரகச்சிங்கம்
கோபிநாத்திற்கு
நண்பர்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!