Monday, February 25, 2008

Wanted: சங்கரன்



மனம் பிறழாத நிலையில் இருக்கும் இந்த இளைஞரை காணவில்லை.
இவரைப் பற்றிய குறிப்புகள்:

  1. ________ வார்த்தைகள் உள்ள பதிவிடத் தெரியாதவர்.
  2. கடும் சொற்கள் என்னவென்றே தெரியாதவர்.
  3. புள்ள பூச்சி, ஏன் கைப்புள்ளைக்குக் கூட தீங்கு விளைவிக்காதவர்.
  4. கருமமே கண் கொண்டவர், நேரமிருந்தால் மொக்கையும் போடுவார்.
  5. இந்த இளைஞரைப் பற்றி தகவல் தெரிந்தால சங்கத்துக்கு உடனடியாக தெரிவிக்கவும். சன்மானமாக பின்னூட்டங்கள் இலவசம்.
வாக்களிக்க இன்னும் சில நாட்களே
http://bloggingintamil.blogspot.com/2008/02/2007-3.html
http://bloggingintamil.blogspot.com/2008/02/2007-2.html
http://bloggingintamil.blogspot.com/2008/02/2007-1.html
By
ILA

Wednesday, February 13, 2008

Wishes: காட்டாறு


திருநெல்வேலிக்கே அல்வாவா?
திருப்பதிக்கே மொட்டையா?
பழனிக்கே பஞ்சாமிர்தமா?
மதுரைக்கே மல்லியா?

இந்த வரிசையில இன்று நாம் கேட்க வேண்டியது:


காட்டாறுக்கே அணையா?

காட்டாறுக்கு அணை கட்ட முடியுமோ இல்லையோ.. ஆனால் பிறந்த நாள் வாழ்த்து தாராளமா சொல்லலாம். :-)

இன்று பிறந்தநாள் கொண்டாடும் காட்டாறு அக்காவுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துவோர்,
பாசக்கார குடும்பம் & சங்கம்

Saturday, February 9, 2008

New Born: தேன் சொட்ட பதிந்துவரும் சிறில் அலெக்ஸ்



Blessed with a Baby Girl on Feb 05. We all Congratulate Cyril Alex..


By,
Sangamam & Sangam Groups

K4K பிறந்தநாள் வாழ்த்துக்கள்



அகர முதல எழுத்தெல்லாம் கார்த்திக் அண்ணன்
முதற்றே உலகு..


( அட நிஜமாத்தானுங்க..
நம்பளனா கடவுள் கிட்ட கேட்டு பாருங்க!
மௌனமா இருப்பார். மௌனம் சம்மதம்னு தெரியாதா?
திருவள்ளுவரே இதை எழுத வந்து தான் கொஞ்சம்
hand slip ஆகி மாத்தி எழுதிட்டதா கேள்வி...)

அப்படி பட்ட நம்ம அண்ணனுக்கு
பிறந்த நாளுன்னா சும்ம்மாவா?
சும்மா பட்டைய கிளப்பிட மாட்டோம்!

இன்னைக்கு யார் யாருக்கெல்லாம் லீவ் வேணுமோ அவிக எல்லாம் லீவ் எடுத்துகலாம்
கேட்டா அண்ணா பேர் சொல்லுங்க...

இன்னைக்கு யார் யாருக்கு எல்லாம் ஏதும் பொருள் வாங்கனுமோ.. அதை வாங்கிகலாம்.
(நீங்க தான் காசு கொடுக்கனும்.. அப்புறம்.. அதையும் நாளைக்கா கடைல ரிடர்ன் செய்திடனும்)

A for Apple,
B for Ball
வரிசையில
நம்மளுக்கு எல்லாம்
ஒரு புது மேட்டர் சொல்லி கொடுத்த
நம்ம அண்ணன்
k for Karthik
பிறந்தநாள் இன்னைக்கு!

எல்லாரும் ஒரு முறை ஹாப்பி பேர்த்டே பாடுங்க! 1.. 2... 3... ஸ்டார்ட் ம்யூஜிக்!

Friday, February 8, 2008

Help Gayathri - Leukemia



Gayatri Ramesh,aged 28 years, a mother of two children, aged 7 and 5, has been diagnosed with ACUTE LYMPHOBLASTIC LEUKEMIA (Pro B Cell), A type of BLOOD CANCER. She is presently undergoing Chemotherapy in the Christian Medical College , Vellore,India.

In the absence of any brother or sister, her Consultants have recommended an Unrelated Bone Marrow Transplantation (MUD) to be performed as soon as possible. Since such transplantations are presently not performed in India, she has to be taken to places like Australia, Singapore or the USA.

As a first step a Bone Marrow donor search has been initiated worldwide to find a suitable donor, which may take around 3 months.

The estimated cost of the treatment,even at a cheapest center is around US$ 250,000/= ( One Crore Indian rupee).( In some centers in United States the cost will be more than $500,000(> 2 crore Indian Rupee)


Your donations will help Gayatri with funds for a bone marrow transplant as soon as an unrelated bone marrow donor is identified.


http://helpgayatri.org/




நன்றி:சிவிஆர்

Tuesday, February 5, 2008

Wishes: துளசி டீச்சர்! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Feb 5 - என்னாங்க விசேசம்?

அபிஷேக் பச்சனுக்குப் பொறந்த நாளு!

அடங் கொக்க மக்கா! அதை நம்ம ஐஸு கொண்டாடிக்கும்!
நீ எதைக் கொண்டாடனும்-னு உனக்குத் தெரியாதா? இதெல்லாம் தெரியாம என்னத்த பதிவு எழுதிக் கிழிச்ச நீயி?

OMG! Gimme a break! பதிவு போட்டு அறிவு வளர்க்கும் வித்தை எல்லாம் ஐ டோண்ட் நோ! யூ சீ! மீ ஒன்லி பின்னூட்டம்ஸ்!

தோடா! பெருமாக் கோயில்ல வந்து என்னா, பீட்டர் வுடறியா நீ?
பதிவோ பின்னூட்டமோ, தமிழ்ப் பதிவோ, ஆங்கிலப் பதிவோ....ஜெர்மன் பதிவோ, ஸ்பானிஷ் பதிவோ....
ஒலகத்துல எந்தப் பதிவு எழுதறவங்க-ன்னாலும்,
அவங்க எல்லாருக்கும் இன்னிக்குப் பள்ளிக்கூடம் லீவு! தெரியுமா?

ஓ ஐ சீ! அப்படி என்னாங்க பெரிய விசேசம் இன்னிக்கி?

அட, இன்னுமா தெரியலை? அதோ லாரி நிக்குது பாரு! ஓடிப் போய் ஏறிக்கோ! இன்னிக்கி பதிவுலகத்துல எல்லாரையும் முதுமலைக் காட்டுக்குக் கூட்டிக்கிட்டு போறாங்க! யானைகள் சரணாலயத்துக்கு!

அங்கே, நம்ம யானைத் தலைவி...ச்சே...தானைத் தலைவி,
* பின்னூட்ட நாயகி,
* பதிவுலக நல்லாசிரியை,
* கலாச்சாரத் தூதுவர் (Cultural Ambassador),
* அனைவருக்கும் அக்கா,
* அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆர்டிக்கா, அன்டார்டிக்கா என்று எல்லாக் கண்டங்களிலும் பிரபலமான ஒரே டீச்சர்,
******** எங்கள் துளசி டீச்சருக்குப் பிறந்த நாள் விழா!


ஆகா!!

ஆமாம்...மாபெரும் பேரணி! பல கட்சிகளில் இருந்தும் தொண்டர்கள் வந்து துளசிதளக் கட்சியில் ஐக்கியம் ஆவுறாங்க! எடைக்கு எடை தங்கம் வேற கொடுக்கறாங்க!
பத்தாயிரம் யானைப் படைகள் - டீச்சர் தலைமையில்!
பன்னிரெண்டாயிரம் பூனைப் படைகள் - ஜிகே, ஜிக்குஜு தலமையில்!!

தேவர் ஃபிலிம்ஸ் இஷ்டைலில் யானைகளும், பூனைகளும் புதுசா புதுசா Blog துவங்கப் போகின்றன! இனிமே தமிழ்மணம் பூரா பிளிறல்களும், மியாவ்களும் போடுற சத்தத்துல, உன் வலைப்பூ எல்லாம் கதி கலங்கப் போவுது பாரு!
அதோ... டீச்சர் வராங்களே! அம்பாரி வச்ச யானை மேல!
என்னா லுக்கு! என்னா லுக்கு! என்னா கம்பீரம்! என்னா கம்பீரம்!

இன்னிக்கி ஒவ்வொரு பதிவா, பட்டத்து யானை வந்து நிக்கும்!
எல்லாரும் ஒழுங்கா கிஃப்ட்டு கொடுத்துறங்க!
அப்படியே டீச்சர் ஸ்பெஷல் - ஜாங்கிரி & கீரைப் பக்கோடா கேட்டு வாங்கிச் சாப்புடுங்க! - ஓக்கேவா? :-)


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர்!

எல்லாரும் பூக்கள் வைச்ச பொக்கே கொடுக்கப் போறாங்க! அதுனால நான் துளசி வைச்ச பொக்கே கொடுத்துக்கறேன்! :-)

இன்று போல் என்றும், என்றென்றும்...
இனிய தோழியாய், எங்கள் இளைய தோழியாய்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம்!!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல பதிவு நூறாயிரம்
சொல்லாண்டு துளசீ மணம் கமழ
நல்லாண்டு நாளும் இரும்!