Friday, June 26, 2009

wishes : வெயிலான்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வெயிலான்!

Wishes : எழில்பாரதி

கண்ணாடி மழையில் கவிதை மழை பொழிந்து நம்மை எல்லாம் திளைக்க வைக்கும் எழில்பாரதிக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!


Wednesday, June 24, 2009

தகவல் உரிமைச் சட்டத்தின் சக்தி – ஒரு கட்டுரை

கிராம மக்களுக்கு நிதி உதவி கிடைக்கச் செய்வதில் தகவல் உரிமைச் சட்டத்தின் பங்கு
தமிழ்நாட்டில் உள்ள 100 குடும்பங்கள் அடங்கிய ஒரு சிறிய கிராமம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.10.5 இலட்சம் அளவிற்கு நிதி உதவி பெற முடியும் என்பது தங்களுக்குத் தெரியுமா?

ஆம்.ஒவ்வொரு வருடமும் பெற முடியும்.. ஆனால் கிராம மக்கள் இது போன்ற நிதி உதவி கிடைக்கிறது என்பதை தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

தகவல் உரிமைச் சட்டத்திற்குள் நுழைதல்
கீழே காணும் ஆய்வு தமிழ்நாட்டில் வறியவருக்கு உதவும் திட்டங்களின் அடிப்படையில் செய்யப் பட்டுள்ளது. இது போன்ற திட்டங்கள் மூலம் கிராம மக்கள் தொகை, கலாச்சார வேறுபாடுகளைப் பொறுத்து, அப் பகுதிகளுக்கு பொருந்தும் வகையில் இந்தியாவின் இதர மாநிலங்களிலும் நிதி உதவி கிடைக்கப் பெறும் எனக் கருதுகிறேன்.

இநதியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், 70% வாக்காளர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், இந்தியாவின் ஊரகப் பகுதி இத் தேர்தலில் முக்கிய பங்காற்றியுள்ளது என்பதும் நிரூபணமாகியுள்ளது. அதே நேரத்தில், 200 கோடீஸ்வரர்களையும், 150 கிரிமினல் வழக்குகளில் பதிவு செய்யப் பட்டவர்களையும் நாம் மகக்ளவைக்கு தேர்ந்தெடுத்துள்ளோம். எனவே இந்தியாவில் கிராமப்புற ஏழைகளுக்கு ஒசுக்கப் பட்டுள்ள நிதியானது உண்மையில் அவர்களைச் சென்றடையும் என்பதை உறுதிப் படுத்துவது எவ்வாறு?

தகவல் உரிமைச் சட்டம் என்றால் என்ன? இதை துவக்கியது யார்? எவ்வகையில் இங்கு இது உதவிகரமானது?
RTI என்பது "தகவல் பெறும் உரிமை" யை குறிக்கும். அமெரிக்காவில் உள்ள பலர் இதை தகவல் சுதந்திர சட்டத்துடன் இதை ஒப்பிடக் கூடும். ஆனால் அதுவல்ல இது. இலஞ்சம் வேரூன்றியுள்ள, அவன்/அவளுடைய உரிமைகளை, கோரிக்கைகளை அறிந்து கொள்ளாத சாதாரண குடிமகன்கள் வாழும் நாட்டில், தகவல் உரிமைச் சட்டம் ஒரு சாளரத்தைத் திறந்து இதற்கு முன்பு இருண்டு கிடந்த பகுதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. RTI பெரும்பாலும் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தக் கூடியதாக இருந்தாலும், இது எந்த வகையில் இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கு உதவக் கூடியது என்பதை மட்டும் இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறோம்..

இராஜஸ்தானில் உள்ள திரு. பங்கர் ராயின் மனைவியான திருமதி. அருணா ராய் அவர்கள் RTI யை கொண்டு வருவதில் முனைந்து செயல் பட்டவர்களில் முக்கியமானவர். திருமதி.ராய் அவர்களால் தகவல் உரிமை என்ற கருத்தை எவ்வாறு உருவாக்கி, மக்களவை முன் வைத்து, சட்டமாக அமுலுக்கு கொண்டு வர முடிந்தது என்பது இக் கட்டுரையாளருக்கு இன்னும் ஒரு புரியாத புதிராக வே உள்ளது ஒரு மக்களவை உறுப்பினர், தன்னுடைய இலஞ்சம் வாங்கும் வழக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய கருத்தை ஆமோதித்து ஏன் வாக்களிக்க வேண்டும்.

உலக வங்கி மற்றும் இந்தியாவால் வரையறுக்கப் பட்ட இன்றைய வறுமையின் அளவு என்ன?
சில வருடங்களுக்கு முன்புவரை, மாதம் ரூ.2500க்கும் குறைவாக சம்பாத்தியம் உள்ள குடும்பமானது வறுமை நிலையில் உள்ளதாக வரையறுக்கப் பட்டது.. குடும்பத்தில் உள்ள நபர்கள் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. துரதிருஷ்டவசமாக, இந்திய அரசு வறுமை அளவு பற்றிய விளக்கத்தை ஒரு மனிதன் நாளொன்றுக்கு எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கலோரிகள் அடிப்படையில் கணக்கிடுவதாக மாற்றிக் கொண்டது. . ஒரு மனிதன் வாழவும், வேலை செய்யவும் தேவையான குறைந்த பட்ச சக்தி கிடைக்க உண்ண வேண்டிய உணவின் அளவு கிராமப்புற மக்களுக்கு 2400 கலோரிகள் எனவும் நகர்புறங்களில் உள்ளவர்களுக்கு 2100 கலோரிகள் எனவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மேலை நாடுகள் ஒருங்கிணைந்து "ஆயிரம் ஆண்டு வளர்ச்சி குறிக்கோள்" (MDG). என்பதை வரையறுத்தது. இந்த MDG அடிப்படையில், வறுமையின் அளவு 2 தரமாக பிரிக்கப் பட்டது.. "வறுமையின் விளிம்பு" என்பது நாளொன்றுக்கு $ 1 டாலர் க்கும் குறைவாக சம்பதிப்பவர்களை குறித்தது.. அடுத்த பிரிவானது நாளொன்றுக்கு $ 2 டாலர்கள் வரை சம்பாதிக்க இயன்றவர்களை "வறுமை"யின் ஆரம்பநிலையில் உள்ளவர்களாக விவரித்தது. .இன்றைய உலக மக்கள் தொகையான 600கோடி மக்களை எடுத்துக் கொண்டால், 100 கோடி மக்கள் நாளொன்றுக்கு 1 டாலர் அல்லது அதற்கும் குறைவாக சம்பாதிக்கும் பிரமிடின் அடித்தளத்தில் உள்ளவர்களாக உலக வங்கி கணக்கிட்டுள்ளது. இரண்டாவது 100கோடி மக்கள் 2 டாலர் அல்லது அதற்கு குறைவாக சம்பதிப்பவர்களாக உள்ளனர். அதாவது உலகில் வாழும் 3 மனிதர்களில் ஒருவர் 'வறுமையின் ஆரம்பநிலை' அல்லது 'வறுமையின் விளிம்பு' நிலையில் உள்ளனர் என்றாகிறது..

உதாரணம் கிராமப்புற ஏழை வாழ்வது "வறுமைக் கோட்டிற்கு கீழ்" (BPL)

இரகசிய சுவிஸ் வங்கிகளில் ஏழைகளுக்கான பணம் மறைத்து வைக்கப் பட்டுள்ளது. இலண்டனில் நடைபெறவுள்ள உலக உச்சி மாநாடு G20 யில் மன்மோகன்சிங் பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிடும்போது, இந்திய குடிமக்களால் சுவிஸ் வங்கிகளில் இரகசிய கணக்குகளில் மறைத்து வைத்துள்ள 1500 பில்லியன் டாலர்களை வெளிக் கொணர்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதை நினைவு கூர்வார் என நம்புகிறோம்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற ஏழை மக்களுக்கான தமிழக அரசின் நலத் திட்டங்கள்
வறுமையில் வாழும் மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு நிதி உதவிகளை அளிக்கிறது. இதில் மிகவும் பிரசித்தமானது மாதாந்திர பொருட்கள் வாங்கும் குடும்ப அடையாள அட்டை. இதன் மூலம் மாதா மாதம் ரூ.307க்கு 11 அத்தியாவசிய உணவு மற்றும் மளிகை சாமான்கள் பெறலாம். ஆனால் அரசு வழங்கும் மேலும் 25 நலத் திட்டங்கள் பற்றி சாதாரண சராசரி கிரமப்புற மனிதர்களுக்கு தெரியாது.
ஒரு சிறந்த உதாரணம் 'முதியோர் உதவித் தொகை திட்டம்'. இத் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் எந்தவொரு கிராமத்தவரும் மாதம் ரூ.400 உதவித் தொகை வாங்க தகுதியுடையவராவார். இன்னொரு நல்ல திட்டம் கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெறுவதற்கு முன்பும் பின்புமாக இரு தவணைகளில் ரூ.6000 பெறுவது..

நடைமுறையில் உள்ள தமிழக அரசின் நலத் திட்டங்கள்
கிராமப்புற குடுமபங்களுக்கு (வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்)
வ.எண் திட்டம் தகுதி பயன்கள் ஒரு வருடத்திற்கான மதிப்பு ரூபாயில்
1 குடும்ப அடையாள அட்டை கிராமங்களில் வாழும் BPL குடும்பங்கள் மான்ய விலையில் அத்தியாவசிய உணவு/மளிகை பொருட்கள் ரூ.1000 மதிப்புள்ள உணவு/மளிகை பொருட்கள் ரூ.307க்கு வழங்கப்படும்.
இக் கட்டுரையின் இறுதியில் 24 நலத் திட்டங்களுக்கான முழுப் பட்டியலும் தரப் பட்டுள்ளது .

எவ்வாறு RTI என்ற சக்தியை பயன்படுத்தி, ஏழைகளை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பெறுவைப்பீர்கள்
ஒவ்வொரு கிராமத்தவருக்கும் RTI மூலம் தனது கோரிக்கையை எளிய முறையில் விண்ணப்பிக்க உரிமை உண்டு. மேலும் தன்னுடைய விண்ணப்பம் இதுவரை பரிசீலிக்கப் படாததற்கான காரணத்தையும் விசாரிக்க முடியும்.. கோரிக்கை விண்ணப்பம் மிக எளிதான ஒன்று (ஒரு வெள்ளைத் தாளில் ரூ.10க்கான கோர்ட் கட்டண வில்லையை ஒட்டி எழுதுதல்) என்றாலும், கோரிக்கையை எழுதும் வாக்கிய அமைப்பு முறை மிகவும் முக்கியமானதாகும்.
குடும்ப அடையாள அட்டை வாங்க விண்ணப்பத்ததின் தற்போதைய நிலை பற்றி விசாரிக்கும் எளிய உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
தவறான வழி: குடும்ப வழங்கல் அட்டை பெறுவதற்கான எனது விண்ணப்பம் எந்நிலையில் உள்ளது?
சரியான வழி: நான் குடும்ப வழங்கல் அட்டை பெற இன்ன தேதியில் விண்ணப்பித்தேன். இதன் நகல் என்னிடம் உள்ளது. என்னுடைய விண்ணப் பதிவு எண் xxxx ஆகும். இன்றைய தேதியில் எந்த பதிவு எண் பரிசீலனையில் உள்ளது? இந்த பரிசீலனை முறைப்படி, குடும்ப வழங்கல் அட்டைக்கான என்னுடைய விண்ணப்பம் அனுமதிக்கப் படுவதற்கான உத்தேச தேதியை குறிப்பிட முடியுமா?.
இதர நிதி உதவிக்கான பெரும்பாலான விண்ணப்பங்கள் பற்றிய RTI விசாரிப்பை இது போன்ற வாக்கிய அமைப்புகளை பயன்படுத்தி எழுதலாம்..

சிறிய, நடுத்தர, பெரிய அளவு கிராமங்கள் எல்லா அளவுகளிலும் கிராமங்கள் உள்ளன..அங்கு 100 குடும்பங்கள் இருந்தால் அதை சிறிய கிராமம் என்கிறோம். ஒரு நடுத்தரமான கிராமத்தில் 250 லிருந்து 300 குடும்பங்கள் இருக்கலாம். ஒரு பெரிய கிராமத்தில் 400 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்கள் இருக்கும். 500 குடும்பங்கள் வரை உள்ள கிராமம் அல்லது சில கிராமங்கள் இணைந்து அந்த அளவில் உள்ள அமைப்பு பஞ்சாயத்து ஆகும்.

வடக்கு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு பரிசோதனை கிராமத்தில், , அக் கிராம மக்களுக்கு கிடைக்கும் நலத் திட்ட உதவிகளின் மதிப்பை கணக்கிட்டோம்.. பரிசோதனைக்கு சரியாக 100 குடும்பங்கள் உள்ள சிறிய கிராமத்தை எடுத்துக் கொண்டோம். அங்கு 100 ஆண்கள், 100 பெண்கள், 100 சிறுவர்கள் உள்ளனர். போதுமான வாழ்வாதார வாய்ப்புகள் இல்லாத காரணததினால், ஏறக்குறைய60% மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள். அதன் சுருக்கப் பட்டியல் இதோ.

1. குடும்ப வழங்கல் அட்டை
குடும்ப வழங்கல் அட்டை பெறுவதற்கு தகுதி நீங்கள் திருமணமானவராக இருக்க வேண்டும். 75% தகுதியுள்ள குடும்பங்கள் ஏற்கனவே குடும்ப வழங்கல் அட்டை பெற்றுள்ளவர்களாக எடுத்துக் கொள்ளலாம். இந்த 4ல் 1பங்கு குடும்பங்களில் 60% அதாவது 15 குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் என எடுத்துக் கொண்டால், இந்த 15 குடும்பங்கள் குடும்ப வழங்கல் அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டியவர்களாவர். .ஒரு குடும்ப வழங்கல் அட்டையின் பொருளாதார மதிப்பு என்ன?
மாதாந்திரம் இந்த அட்டைக்கு அரசு வழங்கும் பொருட்கள் விவரம்
வ.எண் பொருட்கள் அளவு விலை மொத்த மதிப்பு
1 புழுங்கல் அரிசி 20 கி.கி ரூ. 1 கி.கி க்கு ரூ 20.00
2 சர்க்கரை 2 கி.கி ரூ 13.50 கி.கி க்கு ரூ 27.00
3 மண்ணெண்னை 3 லிட்டர் ரூ 8.70 லிட்டருக்கு ரூ 26.10
4 கடலை பருப்பு 1 கி.கி ரூ 32 கி.கி க்கு ரூ 32.00
5 உளுத்தம் பருப்பு 1 கி.கி ரூ 36 கி.கி க்கு ரூ 36.00
6 மல்லி, மிளகாய் 1 கி.கி ரூ 50 கி.கி க்கு ரூ 50.00
7 ஆட்டா மாவு 1 கி.கி ரூ 11 கி.கி க்கு ரூ 11.00
8 சமையல் எண்னை 1 லிட்டர் ரூ 35 லிட்டருக்கு ரூ 35.00
9 கோதுமை 5 கி.கி ரூ 7.50 கி.கி க்கு ரூ 37.50
10 சுஜி மாவு 1 கி.கி ரூ 17 கி.கி க்கு ரூ 17.00
11 மைதா மாவு 1 கி.கி ரூ 16 கி.கி க்கு ரூ 16.00
மொத்தம் ரூ 307.50
இதே பொருட்களின் விலை வெளிச் சந்தையில் அதிகம். அதாவது ரூ.1000 மதிப்புடையதாகும். எனவே, குடும்ப வழங்கல் அட்டை இல்லாதவருக்கு ஏற்படும் பொருளாதார பலு ரூ.700 ஆகும்.

நாம் சோதனைக்குட்படுத்திய 100 குடும்பங்கள் உள்ள சிறிய கிராமத்தில் பெரும்பாலானவர்களுககு ஏற்கனவே குடும்ப வழங்கல் அட்டை உள்ளதாக எடுத்துக் கொண்டால், ஒரு வருடத்தில் 15 தகுதியுடைய குடும்பங்கள் குடும்ப வழங்கல் அட்டை பெற வேண்டியவர்களாவர்..
15 குடும்பங்கள் X ரூ. 700 மாதத்திற்கு X 12 மாதங்களுக்கு = ரூ. 1,26,000
2. முதியோர் உதவித் தொகை
100 குடும்பங்களில் 10 குடும்பங்களில் முதியோர் உதவித் தொகை வாங்குவதற்குரியவர்கள் இருப்பதாக எடுத்துக் கொள்வோம். ஒரு வருட உதவித் தொகையின் மதிப்பு ரூ.4800. எனவே, 10 குடும்பங்களில், குடும்பத்திற்கு ஒரு முதியவர் இருப்பதாகக் கொண்டால் அதன் மதிப்பு ரூ. 4800 X 1 X 10 = ரூ. 48,000
இது போல், நாம் 24 வகை நலத் திட்டங்களப் பெறாதவர்களின் பொருளாதார மதிப்பை கணக்கிடலாம்.

100 குடும்பங்கள் உள்ள சிறிய கிராமம் பெறக்கூடிய பயன்களின் பட்டியல்
திட்டம்1 குடும்ப வழங்கல் அட்டை 15 குடும்பங்கள்
X மாதம் ரூ. 700
X 12 மாதம் ரூ.1,26,000
2 முதியோர் உதவித் தொகை 10 நபர்கள் X வருடத்திற்கு ரூ.4,800 ரூ.4,8000
3 ஊனமுற்றோர் உதவித் தொகை 5 நபர்கள் X வருடத்திற்கு ரூ.4,800 ரூ.24,000
4 ஆதரவற்ற விதவைகள் உதவித் தொகை 4 விதவைகள் X வருடத்திற்கு ரூ. 4,800 ரூ.19,200
5 விவசாய கூலிகளுக்கு ஒய்வூதியம் 5 நபர்கள் X வருடத்திற்கு ரூ.4,800 ரூ.24,000
6 கணவனால் கைவிடப் பட்ட பெண் 4 பெண்கள் X வருடத்திற்கு ரூ.4,800 ரூ.19,200
7 குடும்பத் தலைவர் இறப்பு 2 இறப்புகள் X ரூ.10,000 ஒரு தடவை ரூ.20,000
8 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு விபதது நிவாரணம் 5 விபத்துகள் ஒரு வருடத்தில் X ரூ.15,000 ரூ.75,000
9 கட்டிடத் தொழிலாளர்களுக்கு விபதது நிவாரணம் 5 விபத்துகள் ஒரு வருடத்தில் X ரூ.25,000 ரூ.1,25,000
10 படுகாயமடைந்தோருக்கான விபத்து நிவாரணம் 3 படுகாயமடைந்தோர் X ரூ.10,000 ரூ. 30,000
11 சாலை விபத்து நிவாரணம் 2 இறப்புகள் X ரூ.10,000 ரூ. 20,000
12 இயற்கை பேரழிவு நிவாரணம் 5 இறப்புகள் X ரூ.50,000 ரூ.2,50,000
13 பிரதமர் நிவாரண நிதி 1 இறப்பு X ரூ.50,000 ரூ.50,000
14 வீட்டு விலங்குகள் இறப்பு 4 பசுக்கள் X ரூ.5,000
10 ஆடுகள் X ரூ.1,000 ரூ.30,000
15 இயற்கை அழிவுகளால் பயிர் சேதாரம் – வெள்ளம், வறட்சி 20 விவசாயிகள் X ஒரு விவசாயிக்கு ரூ.5,000 ரூ.1,00,000
16,17,18 இலவச நிலம் கணக்கிடப் படவில்லை கணக்கிடப் படவில்லை
19 முதியோர் ஒய்வூதியம் -60 வயதுக்கு மேல் முன்னரே கணக்கிட்ப் பட்டுள்ளது கணக்கிட்ப் பட்டுள்ளது
20 விபத்தால் மரணம் முன்னரே கணக்கிட்ப் பட்டுள்ளது கணக்கிட்ப் பட்டு விட்டது
21 இயற்கை மரணம் முன்னரே கணக்கிட்ப் பட்டுள்ளது கணக்கிட்ப் பட்டு விட்டது
22 திருமண உதவித் தொகை ரூ.3000 X 4 ஆண்கள்
ரூ.5,000 X 4 பெண்கள் ரூ.32,000
23 தாய் சேய் நலம் 4 கர்ப்பிணி பெண்கள் ரூ. 6000 வீதம் ரூ.24,000
24 கல்வி உதவித் தொகை 20 மாணவர்கள் X வருடத்திற்கு ரூ.1,500 வீதம் Rs 30,000
மொத்தம் Rs 11,76,000
100 குடும்பங்களடங்கிய இந்த சிறிய கிராமத்திற்கு கிடைக்கும் வருடாந்திர பயன்கள் ரூ. 11,76,000 ஆகும்.
இந்த மொத்தத் தொகையில், குடும்ப வழங்கல் அட்டை மூலம் பெறும் நன்மையானது, அதற்கு அடுத்த வருடங்களிலும் தொடரும்.
எனவே ரூ.1,26,000த்தை ரூ.11,76,000த்திலிருந்து கழித்தால் வருவது. = ரூ.10,50,000

இந்த தொகை ரூ.10,50,000 க்கு மறுபடியும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஒவ்வொரு வருடமும் வந்து கொண்டே இருப்பர். உதாரணமாக புதிதாக முதியோர் உதவித் தொகை, கர்ப்பிணி பெண்கள் உதவித் தொகை பெற வருடந்தோறும் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.

இப் பகுதியில் உள்ள 50 கிராமங்களுக்கு கிடைக்கும் மொத்தத் தொகை
நாம் 50 கிராமங்களை 400 குடும்பங்கள் உள்ள 6 பெரிய கிராமங்கள், 200 குடும்பங்கள் உள்ள 14 நடுத்தர கிராமங்கள் மற்றும் 100 குடும்பங்கள் உள்ள 30 கிராமங்களாக பிரிக்கலாம். நாம் எளிதாக ஒரு சிறிய கிராமத்திற்கு கிடைக்கும் ரூ.10.5 லட்சத்தை அடிப்படையாக வைத்து விகிதாச்சார முறையில் 50 கிராமங்களுக்கு கிடைப்பதை கணக்கிடலாம்.

ஒகு வருடத்திற்கு கிடைக்கும் 50 கிராமங்களுக்கான மொத்த்த தொகை = ரூ. 934.5 அல்லது ரூ. 9.3 கோடி (அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும்)
அவ்வாறு, தமிழ்நாடு முழுவதற்கும் ஒதுக்கப்படும் தொகை எவ்வளவு
12,600 பஞ்சாயத்துகள்.. சராசரி ஒரு பஞ்சாயத்திற்கு 3 கிராமங்கள் என்று வைத்துக் கொண்டால், 37,800 கிராமங்கள். 50 கிராமங்களுக்கு ரூ.9.3 கோடியானால் தமிழ்நாடு முழுவதற்கும் ரூ.7,030 கோடி என கணக்கிடலாம்

எந்த நாட்டுப் பணமானாலும் இது மிகப் பெரிய தொகையாகும்.. நம்மால் இந்த முழுத்தொகையையும் விரைவில் பெற முடியாமல் போகலாம். என்றாலும்
ஒவ்வொரு பஞ்சாயத்து, மாவட்டத்திற்கு ஒரு இலக்கை நிர்ணயித்து படிப்படியாக சில வருடங்களில் அதை அடையலாம்.

இம் முயற்சியில் எவ்வாறு தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துதவது
கிராம மக்களிடம் இலஞ்சம் இல்லாத இடமே இல்லை அதனால் அரசிடமிருந்து எல்லா உதவிகளையும் பெறலாம் என கிராம மக்களிடம் சொல்வது போதாது. உதாரணத்திற்கு தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், அரசு வழங்கும் இலவசங்களான கலர் தொலைக் காட்சி , மண்ணெண்னை ஸ்டவ் போக மிகப் பெரிய தொகையை மக்களுக்கு வழங்காமல் உண்ணையில் தன்னிடம் வைத்துக் கொண்டுள்ளது. மக்களுக்கு சேர வேண்டிய இப் பெரும் பயன்களை நாம் கணக்கிட்டு, அவர்களுக்கு தெரிவிக்காதவரை, அவர்களால் எதையும் கண்கூடாக பார்க்க முடியாது.

நம் அனைவருக்கும் அறிவு தான் வலிமை என்று தெரியும். அறிவு மறுக்கப்டும்போது பலனும் மறுக்கப் படும். இங்கு தான் தகவல் உரிமைச் சட்டம் நமக்கு கை கொடுக்கிறது. தகவல் உரிமைச் சட்டம் என்னும் சக்தியை பயன்படுத்தி நமது கிராம மக்களுக்கு அவர்களுக்கு உரியதை பெற்றுத் தர உதவுவோமாக.

நீங்கள் இந்தியாவின் வேறு மாநிலத்தை சேர்ந்தவரானால், கூகிள் தேடுதல் மூலமாக தங்களது மாநில அரசின் ஊரக வளர்ச்சித்துறை உள்ள பல்வேறு நலத் திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தற்போது கிடைக்கும் தமிழக அரசின் நலத் திட்டங்கள்

(Tamil version of these items are available in www.tn.gov.in. We can simply copy it from that site)
For Rural Families (Below Poverty Line)
S.N Scheme Eligibility Benefits Value in Rs. Per annum
1 Family Ration card BPL families Living in the Villages At subsidized rate food commodities will be distributed Rs.1000 worth of commodities will be distributed at a cost of Rs.307.

Monthly Pension to vulnerable
2 Old Age Pension Age 65 and above
No income sources
Unable to earn
Not having son above 18 years.
No assets more than Rs.5000 except thatched house To be applied to Tashildar
Rs.400 per Month
Free 1 set Dhoti/saree for Deepavali/Pongal
4Kg rice per month 4800 + 200 + 1000 = 6000
3 Pension to Diasabled More than 60% Disablement
Age above 45
No income sources
Unable to earn
No son/grandson above 18 years.
No age restriction for Complete Blindness
No assets more than Rs.5000 To be applied to Tashildar
Rs.400 per Month
Free 1 set Dhoti/saree for Deepavali/Pongal
4Kg rice per month
4800 + 200 + 1000 = 6000
4 Pension to destitute Widows No age restriction
Not remarried
No income sources
No assets more than Rs.5000
To be applied to Tashildar
Rs.400 per Month
Free 1 set Dhoti/saree for Deepavali/Pongal
4Kg rice per month 4800 + 200 + 1000 = 6000
5 Pension for Agriculture Labourers Age 60 and above
No income sources
Agriculture labourer
Not having son above 18 years.
No assets more than Rs.5000 except thatched house To be applied to Tashildar
Rs.400 per Month
Free 1 set Dhoti/saree for Deepavali/Pongal
4Kg rice per month 4800 + 200 + 1000 = 6000
6 Destitute women abandoned by husband Minimum 30 years
Nativity proof
Legally married
Minimum 5 years separation
No income sources
No assets more than Rs.5000 To be applied to Tashildar
Rs.400 per Month
Free 1 set Dhoti/saree for Deepavali/Pongal
4Kg Rice per month 4800 + 200 + 1000 = 6000

For Natural death of Rural Poor
7 Redressal to Vulnerable Death of earning member of the family
No cultivable land
Annual Income not exceeding Rs.7200 per annum To be applied to Tashildar
One time support from Central Govt Rs.10000

Accident Relief to Rural Poor
8 Accident Relief for Farm and nonfarm unorganized labourers Legal heir of the victim
Documents to be produced
1. First Information Report
Death certificate,
Post Mortem Report
Applied within 6 months from the dat of Death One time support from State & Central Govt Central Rs.10000 + State Rs.5000 = Rs.15000
9 Accident Relief for Building Construction workers Legal heir of the victim
Documents to be produced
1. First Information Report
2.Death certificate,
3.Post Mortem Report
4.Applied within 6 months
from the date of Death To be applied to Tashildar
1.One time support from State & Central Govt

2. Chief Minister Relief fund (to be applied to District Collector)
Central Rs.10000 + State Rs.5000 +Rs.10000 =Rs.25000
10 Accident relief for wounded Legal heir of the wounded
Documents to be produced
1. First Information Report
2. Medical Certificate
3.Applied within 6 months
from the date of Death One time support from State & Central Govt
Rs.7,500 to Rs.15,000 according to the seriousness of wound
11 Road Accident relief
Legal heir of the victim
Documents to be produced
1. First Information Report
2.Death certificate,
3.Post Mortem Report
4.Applied within 6 months
from the dat of Death Death relief to bereaved family by Revenue Divisional officer (RDO) For death Rs.10000
Disablement Rs.6000
Loss of Organ partially Rs.4000
Injuries Rs.400

Relief on Natural Calamities
12 Relief for Natural calamities For Death
1.Legal heir of the victim
Documents to be produced
1. First Information Report
2.Death certificate,
3.Post Mortem Report
4. Legal heir certificate
5. Postal savings or Bank A/c of legal heir
For loss of organ or vision
To be applied To Tashildar Rs.50,000
Rs.10,000
13 Prime Minister relief fund for natural calamities For Death
1.Legal heir of the victim
Documents to be produced
1. First Information Report
2.Death certificate,
3.Post Mortem Report
4. Legal heir certificate
5. Postal savings or BankA/c of legal heir
For affected people
To be applied through District Collector Rs.50,000
14 Death of Domestic animals during natural calamitites Affected owner of the animals
Death Certificate from Veterinary department (only for uninsured animals) To be applied to Tashildar Rs.5000 for Cow, Buffalo
For calf Rs.3000
Goat /sheep Rs.1000
15 Loss of crop during Natural Calamities Affected Cultivator
Certificate from Village Administrative Officer To be applied to Tashildar
Land affected by soil erosion & crop spoiled
Per Hectare Erosion Rs.10000
Rainfed crop Rs.1000
Irrigation Rs.2500
Permanent cropRs.4000
Sericulture Rs.2000
Mulberry Rs.1500

Providing land and house sites to Landless Labourers

16 Providing land for landless Labourers Native of the village
Annual Income should not exceed Rs.16,000.
Should be involved in Farm activity. To be applied to Tashildar
Sanction will be given by Tashildar to Commissioner of Revenue as per the value of the Land. Land worth ranging from Rs.10000 to 2.50 lac
17 Providing House site to landless poor Native of the village
Annual Income should not exceed Rs.16,000.Rural Rs.24000 for urban areas
To be applied to Tashildar
Sanction will be given by Tashildar to Commissioner of Revenue as per the value of the Land. Land worth ranging from Rs.10000 to 2.50 lac
18 Providing 2 Acre free land to Agriculture labourers 1.Annual income not exceeding Rs.16000
2. Small and marginal cultivating lands. Encroached by Landless labourers
3. Renovated public lands without encroachment
4. Lands of small and marginal farmers require renovation
Priority for SC/ST families To be applied to Village Committee functioning under VAO
1. Community Certificate
2. Income certificate
3. small]marginal farmer
4. Land availability particulars Land worth ranging from Rs.10000 to 2.50 lac

Schemes for Farmers, Unorganized Agriculture, Artisan and Construction Labourers

Eligibility : families of Small and Marginal farmers, Agriculture landless labourers, Village Artisans, Labourers engaged in Construction work having membership - Farmers/Labourer ID Card issued by Agriculture and other Labourers Board

S.N Scheme Benefits
19 Old age pension for members aged 60 and above Rs.400 per month
20 Accident benefit (includes death due to lightening, poisonous creatures) Death Loss of Organs (full) Loss of Organs (Partial) Severe Injuries
Rs.1 Lakh Rs.1 Lakh Rs.50000 Rs.20000
21 Natural Death
Cremation, Rituals Rs.10,000
+ Rs.2,500 =12,500
22 Marriage Assistance for Members Male Female Son Daughter
Rs.3000 Rs.5000 Rs.3000 Rs.5000
23 Mother & Child Anti Natal Post Natal Abortion (Natural) Abortion (made)
Rs.3000 Rs.3000 Rs.3000 Rs.3000
24 Educational Scholarship for the sons and Daughters of the family per Annum Course Days Scholar Hostel
Girls Boys Girls Boys
10th Std Rs.1500 Rs.1250
12th Std Rs.2000 Rs.1750
Vocational training Rs.1750 Rs.1250 Rs.1950 Rs.1450
Under graduate Rs.2250 Rs.1750 Rs.2500 Rs.2000
Post graduate Rs.2750 Rs.2250 Rs.3750 Rs.3250
Professional Course Rs.2750 Rs.2250 Rs.4750 Rs.4250
Post graduate in Professional Course Rs.4750 Rs.4250 Rs.6750 Rs.6250

Wishes: கண்மணி

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நம் கண்மணி டீச்சருக்கு உங்க வாழ்த்துக்களை அள்ளி வீசுங்க.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா!!!
வாழ்த்துவோர்,
வேடந்தாங்கல் பறவைகள் & சங்கம்

Monday, June 22, 2009

இளைய தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்


நாளைய தமிழகத்தின்
தலையெழுத்து
எங்கள்
இதயத் தளபதியாகிய
இளைய தளபதிக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


(தலைவா! நீயும் வரேன் வரேன்ன்னு சொல்லிட்டு அப்பாலிக்கா மாத்தி மாத்தி பேசி எங்களைக் கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்பக் கூடாது சொல்லிட்டேன்)


நீ எந்த ஊரு

நான் எந்த ஊரு

முகவரி தேவையில்ல

இல்ல இல்ல

நீ எந்த உறவு

நான் என்ன உறவு

சொந்தத்தில் அர்த்தம் இல்ல

இல்ல இல்ல

கட்சிக்கொடி உறவா

இல்ல இல்ல

ஹே

மேட்டுக்குடி உறவா

இல்ல இல்ல

அட

கள்ளு கட உறவா

இல்லவே இல்ல

உன்ன யாரோ பெத்திருக்க

என்னை யாரோ பெத்திருக்க

ஆனாலும்

நீயும் நானும்

அண்ணன் தம்பிடா

Saturday, June 20, 2009

வாழ்த்துக்கள் : அப்பா விழியன்

ஒரு அழகான
குட்டிப் பொண்ணுக்கு
அப்பாவாகியிருக்கும் நம்ம
விழியனுக்கு
வாழ்த்துக்கள்!

புதுசா இந்த உலகில்
காலடி எடுத்து வைத்திருக்கும்
குட்டி தேவதைக்கும்
வாழ்த்துக்கள்!

Tuesday, June 16, 2009

Wishes:- நட்டு S/o அபி அப்பாவிழிகளை நிறைக்கின்ற சிரிப்பு விடுதலையாகி காற்றில் தவழும்;

வித்துக்கள் தொடங்கிய பருவம் உன் இதழ்களில் பூத்துக் குலுங்கும்;

மெல்லிய புருவத்தின் கீழே பூ விழி ஈர்ப்பின் விசையில் அந்தர கோடி அண்டமும்,

உன் காலடி சேர வரங்கள் கேட்கும்;

இத்தனை சிறப்பும் உனக்காய் தந்து,மனம் மகிழ சொல்லும் வாழ்த்தினை ஏற்று,

நீ வளம் பல பெற இறைவன் ஆசிகளோடு,

எம் ஆசிகளும் கலந்திருக்கும் உன் இனிய வாழ்வினில்...!

Friday, June 12, 2009

Help: வலைப்பதிவர்களுக்கும் ஒரு உருக்கமான வேண்டுகோள்!

நம் தமிழினம் இன்று இலங்கையில் பட்ட பாடுகள் இன்னும் நம் கண்களைவிட்டே கூட மறையவில்லை. அய்யோ அம்மா, தெய்வமே என்றெல்லாம் கூக்குரலிட்டு, செல்லடித்து, உடல்வெந்து, உண்ண உணவின்றி, உடுத்த உடைகளின்றி, காயங்களுக்கு கட்டிடக்கூட முடியாமல் தப்பிபிழைத்து இன்று தாம் எங்கிருக்கிறோம் என்று கூட வெளியில் இருப்பவர்களுக்கு / தம் குடும்பத்தார்க்கு சொல்லமுடியாமல் பலர் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்கள் மாணவிகள் வடக்கு, கிழக்கு, மற்றும் கொழும்புவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்துவருகிறார்கள். அவர்களின் நிலைமை மிகவும் கொடுமையானது. தம் தந்தை, தாய் உயிருடன் இருக்கிறார்களா என்று கூட அறியமுடியாத சூழல் அங்கே நிலவுகிறது. அவர்களுக்கு இதுவரை பணம் அனுப்பிவந்த அவர்கள் குடும்பத்தினர் அடுத்தவேலை சாப்பாட்டிற்கே வரிசையில் முகாம்களில் நின்றுகொண்டிருக்கலாம் அல்லது அமைதிப்பிரதேசத்தில் நிரந்தர அமைதியை அடைந்திருக்கலாம் என்று அஞ்சுகிறோம்.

இரண்டு மாணவிகள் கையில் பணமின்றி வேறுவழியும் தெரியாமல் மரணத்தை தழுவியதாகவும் அறிகிறோம். இவ்வாறு தத்தளிக்கும் நம் தமிழ் மாணவர்களை அரசியல் விருப்பு வெறுப்பின்றி ஆதரவுக்கரம் நீட்டி அரவணைப்பது என்பது தமிழராய் பிறந்த, உணர்ந்த நம் அனைவருக்குமான வரலாற்று கடமையாகும். இப்பணியில் எம் நண்பர்கள் சிலர் இறங்கியுள்ளார்கள். இதுவரை 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாணவிகள் உதவிக்காக அடையாளம் காணப்பட்டு காத்திருக்கிறார்கள். அவர்களில் 80க்கும் மேற்பட்டோர் தற்போது எம் புலம் பெயர் நண்பர்களால் உதவியளிக்கப்பட்டு தங்களது படிப்பை தொடர்கிறார்கள்... மற்றவர்கள் என்று உதவிவரும் என்று எதிர்பார்த்து உண்ண உணவுக்குகூட வழியற்று காத்திருக்கிறார்கள். எனவே தமிழர்களே, வலைப்பதிவர்களே நாம் அனைவரும் நம்மால் இயன்ற ஒரு சிறு தொகையை இம்மாணவர்களுக்காக திரட்டி அளிக்கவேண்டிய அவசரத்தில் அவசியத்தில் உள்ளோம் என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ் வரலாற்றுக் கடமையில், மனிதாபிமான உதவியில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பும் பதிவர்கள், திரட்டிகள், அமைப்புகள், வாசகர்கள், தமிழ் உணர்வாளர்கள் போன்றவர்கள் சர்வதேச தமிழ்மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்மின தோழன் ரிஷியை funds4students@googlemail.com என்ற மின்னஞ்சல் மூலமாக [ தொலைபேசி எண்: (044)7551449606 ] தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் இருக்கும் பதிவர்கள் , மாணவர்கள், மாணவ அமைப்புகள் இதை ஒரு இடரகற்றும் முயற்சியாகக் கருதி செயலாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

"இருப்பவர்களையாவது காப்போம்... நம் சிறு உதவிகளால்... நன்றி!"

ஓசை செல்லாவின் பதிவினை அப்படியே கொடுத்துள்ளோம். உதவும் கரங்களுக்கு நன்றி

Thursday, June 11, 2009

Wishes : நம்ம வீட்டு கல்யாணம் ! பொன்ஸ் என்கிற பூர்ணா - கணபதி

வலைப் பதிவர் மற்றும் வலைப் பதிவாளர்கள் பலரால் அறியப்பட்ட சகோதரி பொன்ஸ் என்கிற பூர்ணா அவர்களுக்கு கணபதி அவர்களுடன் இன்று காலை இந்திய நேரப்படி 07:30 - 09.00 மணிக்கு சென்னையில் திருமணம் நடைபெறுகிறது.

மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ வலைப்பதிவாளர்கள் சார்பிலும், என் இல்லத்தார் சார்பிலும் வாழ்த்துகிறேன்.


மணமக்களை அனைவரும் வாழ்த்துவோம் !

Wednesday, June 10, 2009

Wishes : கவிதா

கவுஜை, மொக்கை, பாட்டு, சீரியஸ் பதிவு என ரவுண்டு கட்டி கலக்கும் கவிதாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)வாழ்த்துவோர்,
கோபி & சங்கம்

Tuesday, June 9, 2009

அடர்கானக புலிக்கு ஆண் புலிக்குட்டி


அமீரகத்தில் இருக்கும் ஒரே ஒரு அடர்கானக புலிக்கு இன்று (9/6/2009) காலை 8.30 ஆண் புலிக்குட்டி பிறந்து இருக்கிறது.

இனி குழந்தை அய்யனார் எழுதும் கவிதை பேப்பரில் ஒன்னுக்கு அடிக்கவும்,
கவிதை எழுத உட்காந்தால் போய் லேப்டாப்பில் மேல் உட்காந்து கவிதை எழுதவிடாமல் தடுக்கவும் குழந்தையை வாழ்த்துவோம்!

Saturday, June 6, 2009

Wishes: நந்து f/o நிலா

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நந்து ஃபாதர் ஆஃப் நிலா அவர்களுக்கு சங்கம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்