Showing posts with label Get Well Soon. Show all posts
Showing posts with label Get Well Soon. Show all posts

Tuesday, November 3, 2009

Wishes : இராம்/Raam நலம் பெற வேண்டி !

கேமரா இராம், பெங்களூர் இராம் தற்போது சிங்கை இளம் சிங்கம் இன்னும் என்ன என்னவோ பெயரில் அழைக்கப்படும் இராம்/Raam என்கிற இராம சந்திர மூர்த்திக்குக்கு தீபாவளிக்கு தமிழகம் சென்று வந்ததிலிருந்து கடுமையான காய்ச்சல்.

குவளை குவளையாக அங்கங்கே அங்கங்களைக் குத்தி இரத்தம் எடுத்து சோதித்து அறிந்ததில் டெங்கியோ அல்லது சிக்கன்குனியா இவற்றில் ஏதாவது ஒன்றாக இல்லது வெறும் வைரஸ் காய்சலாகக் கூட இருக்கும், வருகிற வியாழக்கிழமை (நாளை மறுநாள்) முடிவாக சொல்லிவிடுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்களாம் சிங்கை மருத்துவர் குழுவினர்.


கடந்த 10 நாட்களாக தம்பி இராம் வீட்டில் முடங்கி இருக்கிறார். எழுந்து நடமாட முடியாத அளவுக்கு உடல் நலிவுற்று தற்பொழுது கொஞ்சம் கொஞ்சம் பரவாயில்லை.

தம்பி இராம் விரைவில் குணமடைந்து கேமராவுக்கு புத்துயுர் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆர்லிக்ஸ், பழங்கள் வாங்கிக் கொண்டு நேரில் செல்ல முடியாதவர்கள், தம்பி இராம் விரவில் நலம் பெற வாழ்த்தலாம். வேண்டலாம்.

தம்பி இராம் விரவில் குணமடைய வாழ்த்துகள்
கோவியார்