Tuesday, March 25, 2008

Download: Santosh Subramaniam MP3 Songs


Download MP3 Songs

Thanks:
Pic- IndiaGlitz
Songs: MegaUpload

Monday, March 24, 2008

Wishes: அனுசுயா - திருமணம்

இன்று மார்ச் 24, இல்லற வாழ்வில் இனிதே அடியெடுத்து வைக்கும் தோழி அனுசுயாவுக்கும் அவரது கணவர் சுந்தரம் அவர்களுக்கும் வாழ்வில் எல்லா வளமும் சுகமும் பெற்று நீடுழி வாழ உளங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவர்கள் திருமணம் இன்று காலையில் சிறப்பாக நடைப்பெற்றது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


வாழ்த்துவோர்,
சங்கம்

Sunday, March 23, 2008

Wishes: அருட்பெருங்கோ - பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் காதல் முரசு அருட்பெருங்கோ! வயசாயிடுச்சுன்னு கவலை வேண்டாம். கீழே பாருங்க. ;-)

Friday, March 21, 2008

***Wishes: குமரன்! "நட்சத்திரப்" பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ஏலே...அது இன்னா-லே "நட்சத்திரப்" பிறந்த நாள் வாழ்த்துக்கள்?

ஓ...அதுவா-லே! இன்னிக்கி பங்குனி உத்திரம். பல ஆலயங்களில் இன்னிக்கித் தெய்வத் திருமணங்கள் நடக்கும்!
* முருகப் பெருமான்-தெய்வயானை
* சிவபெருமான்-பார்வதி
* பெருமாள்-தாயார்-ன்னு பல இடங்களில் திருக்கல்யாண வைபவம் இன்னிக்குத் தான்!

எலே...இது மாதவிப் பந்தல்-ன்னு நெனச்சியா? நீ பாட்டுக்குப் பேசிக்கிட்டே போற? இது சுவரொட்டி! ஞாபகம் வச்சிக்கோ!

அட மக்கா! முழுசாக் கேளுடா! இந்த உத்திர நட்சத்திரத்துல தான் நம்ம அ.உ.ஆ.சூ. பதிவர் ஒருத்தரு பொறந்தாரு!
எப்ப பார்த்தாலும் இங்கிலீபீஷ் தேதியிலேயே தான் பொறந்த நாள் நோட்டீசு ஒட்டுறோம்? அதான் ஃபார் ஏ சேஞ்சு - உத்திர நட்சத்திரத்தில் ஒட்டலாம்-னு...

மருத மல்லி

அடப்பாவிங்களா! ஆன்மீகப் பதிவருங்க எல்லாம் ஒரு க்ரூப்பாத் தான் கெளம்பி இருக்காங்கடா சாமீ!

டேய்! ரொம்பத் தான் அலுத்துக்காத! அண்ணனோட பொறந்த நாளும் பக்கமாத் தான் வருது! தோ வர செவ்வாக்கெழமை - Mar 25!
ஆனாலும் நானே சுவரொட்டியில் ஒட்டிட்டுப் போவாலாம்-னு ஒரு ஒட்டுதல்ல தான்டா ஒட்டுறேன்! பேசுனது போதும்!
மதுரை அழகர் கோயில் தோசை ரெடி பண்ணச் சொன்னேனே? பண்ணீயா?

அதெல்லாம் ரெடி பண்ணியாச்சு தல! இன்னா அந்தத் தோசை செம வெயிட்டு! என்னா கனம் கனக்குது! ஸ்பெசலா தள்ளிக்கிட்டு வந்தோம்! அதுக்கு லாரி சார்ஜ மட்டும் கொடுத்துரு-இன்னா? சரி...எப்படியா அதை ஒத்தை ஆளு சாப்பிடப் போறாரு?

யாரு சொன்னா சாப்பிட-ன்னு? It is for Birthday Smash!! தலைவர் மூஞ்சியில் தோசையை ஆசையா அப்பி, தங்கச்சி பட்ட ஆசை-அண்ணன் சுட்ட தோசை-ன்னு பதிவு போட்டுருவம்ல?
அட அங்க எதுக்கு நின்னுகிட்டு முல்லைக்குத் தேரு கொடுத்துக்கிட்டு இருக்கீங்க ஸ்டாரே? அடச் சும்மா வாங்க அ.உ.ஆ.சூ!
வந்து தோசையைக் கட் பண்ணுங்க அண்ணா!நம்ம கூடல் குமரனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா!

இன்று போல் என்றும், என்றென்றும்...
இனிய தோழனாய், எங்கள் அன்பு நண்பனாய்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று
பங்குனி உத்திரம் அன்று வாழ்த்தி மகிழ்கிறோம்!!

அப்படியே அண்ணனின் "ஒளிமயமான" திருமகளுக்கும் இன்று தான் நட்சத்திரப் பிறந்தநாள்! - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம்! :-)
Like Father, Like Daughter!
Father gets Dosai, Daughter gets the cake! :-)

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல பதிவு நூறாயிரம்
சொல்லாண்டு மீனாட்சி அருளால்
நல்லாண்டு நாளும் இரும்!

Wishes: அனுராதா - பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழி அனுராதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...


வாழ்த்துவோர்,
சங்கம்

Wednesday, March 19, 2008

அஞ்சலி:ரகுவரன்


சென்னை: பிரபல நடிகர் ரகுவரன் காலமானார். அவருக்கு வயது 60.

வில்லன், ஹீரோ, குணசித்திரம் என பல்வேறு பாத்திரங்களில் நடித்த மிகச் சிறந்த நடிகர் ரகுவரன்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான ரகுவரன் பல காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நீரிழிவு நோயும் இருந்தது.
சமீபத்தில் காலில் கட்டி வந்து அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.

இந் நிலையில் கடந்த சில தினங்களாக உடல் நிலை மிகவும் மோசமாகியது. இதையடுத்து அவரை கவனித்துக் கொள்ள நர்ஸ் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

இந் நிலையில் இன்று அதிகாலை அவர் மயங்கினார். இதையடுத்து சென்னை சேத்துப்பட்டில் உள்ள மேத்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார்.

தகவல் அறிந்ததும் அவரது மனைவி ரோகிணி மருத்துமனைக்கு மகனுடன் ஓடி வந்து கதறி அழுதார்.

பின்னர் அவரது உடல் தியாகராய நகர் ஜெகதாம்பாள் தெருவில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. உடல் அருகே அமர்ந்து ரோகிணியும் மகன் சாய் சித்தார்த்தும் கதறி அழுது கொண்டிருந்தது அங்கிருந்தவர்களை கலங்கச் செய்தது.

இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

என்பதுகளில் தமிழில் அறிமுகமான முக்கிய நடிகர்களில் ஒருவர் ரகுவரன். அவர் நடித்த சம்சாரம் அது மின்சாரம், மக்கள் என் பக்கம், மனிதன், ராஜா சின்ன ரோஜா, பாட்ஷா மற்றும் முதல்வன் படங்கள் மறக்க முடியாதவை. 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

கே.எஸ்.ரவிகுமாரின் புரியாத புதிர் படத்தில் சைகோத்தனமான வில்லன் என்ற பாத்திரத்துக்கு புதிய பரிமாணம் கொடுத்திருப்பார் ரகுவரன்.

இடையில் கூட்டுப்புழுக்கள், மைக்கேல் ராஜ், என்வழி தனிவழி போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். இதில் கூட்டு புழுக்களில் அவரது எதார்த்தமான நடிப்பு மறக்க முடியாதது.

ரஜினிக்கு மிகப் பிடித்த நடிகர்களில் ஒருவர் ரகுவரன். அதனால்தான் அவரை தனது பெரும்பாலான படங்களில் நடிக்கச் செய்திருந்தார்.
சிவாஜியில் கூட சில காட்சிகளில் நடித்திருந்தார் ரகுவரன்.

சமீபத்தில் ரிலீசான தொடக்கம் படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் நடித்திருந்தார் ரகுவரன். அவர் நடித்து கடைசியாக வந்த படம் சில நேரங்களில். இதில் சைக்கோத்தனமான மருத்துவர் வேடத்தில் நடித்திருந்தார்.

யாரடி நீ மோகினி, அஜீத்தின் புதிய படம் ஆகியவற்றிலும் அவர் நடித்து வந்ததார்.

ரோகிணியுடன் திருமணம்- பிரிவு:

ரகுவரனுக்கு குடி போதைப் பழக்கம் இருந்தது. அவரை இந்த கொடிய பழக்கத்திலிருந்து மீட்க முயன்றவர்களில் ஒருவர்தான் ரோகிணி.

நாளடையில் இந்த பழக்கம் காதலாக மாறியது. நடிப்புத் தொழிலில் மிக உச்சத்தில் இருந்த நேரத்தில் ரோகினியை திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகள் இருவரும் இணைபிரியா தம்பதிகளாக வாழ்ந்தனர். அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். ரகுவரனை போதைப் பழக்கத்திலிருந்து திருத்த முடியவில்லை என்றும், அவருடன் தொடர்ந்து வசிப்பது கடினம் என்பதாலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் ரோகிணி குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் போதையிலிருந்து இப்போது முழுவதுமாக மீண்டுவிட்டதாக ரகுவரன் கூறியிருந்தார்.

இடையில் தனது மகனை மட்டும் அடிக்கடி பார்த்து வந்தார் ரகுவரன்.

நடிப்பைத் தவிர இசையில் தீவிர ஆர்வம் இருந்த்து ரகுவரனுக்கு. சில இசை ஆல்பங்களையும் தயாரித்திருந்தார். தீவிர சாய் பாபா பக்தரான ரகுவரன் தனது மகனுக்கு சாய் சித்தார்த் என்றே பெயர் சூட்டியிருந்தார்.

ரகுவரன் வாழ்க்கைக் குறிப்பு:

1948ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கோவையில் பிறந்தவர் ரகுவரன். இவரது குடும்பத்தின் பூர்வீகம் கேரளா.

ஏழாவது மனிதன் படம்தான் ரகுவரன் நடித்த முதல் படம். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த ரகுவரன் பின்னர் வில்லன் கேரக்டர்களுக்கு மாறினார். இதுதான் அவரது பன்முக நடிப்புக்கு வழிவகுத்தது. வித்தியாசமான வில்லத்தனத்தைக் காட்டி நடித்த ரகுவரனுக்கு குறுகிய காலத்திலேயே பெரும் பெயர் கிடைத்தது.

சத்யராஜுடன் நடித்த மக்கள் என் பக்கம், பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான வேடங்களில் கலக்கினார்.

ஒரு மனிதனின் கதை என்ற தொலைக்காட்சித் தொடரில் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அதில் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் குடிகாரனாக மாறி கடைசியில் எப்படி சீரழிகிறான் என்பதுதான் அந்த தொடரின் கதை.

ரகுவரனின் நடிப்புக்குப் பெயர் போன படங்கள் அஞ்சலி, பாட்ஷா, புரியாத புதிர், முதல்வன் என பல படங்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

கிட்டத்தட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார் ரகுவரன். அவருடன் நடிக்காத ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.

இன்றைய தலைமுறை நடிகர்களான விஜய், அஜீத், விஷால், சூர்யா, சிம்பு, தனுஷ் ஆகியோருடனும் நடித்துள்ளார் ரகுவரன். இளம் நடிகர்களுக்கு நல்ல ஆலோசகராகவும் விளங்கினார்.

தனது நடிப்பாற்றலால், தென்னாட்டு அல் பசினோ என்றும் புகழப்பட்டவர் ரகுவரன். அவரது மரணம், தமிழ்த் திரையுலகுக்கு பெரும் இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

குடும்பம்:

ரகுவரனின் தந்தை வேலாயுதம், தாய் கஸ்தூரி. இவருக்கு ரமேஷ், சுரேஷ் என்ற சகோதரர்கள் உள்ளனர். ரோகிணியை பிரிந்த பிறகு பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.

இரங்கல்:

ரகுவரனின் உடலுக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் சத்யராஜ், விஜய், தலைவாசல் விஜய், விவேக், நடிகை ரேவதி உள்பட ஏராளமானார் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

ரகுவரன் உண்மையிலேயே ஒரு இணையில்லா நடிகர் என்றும் அவரது மறைவு தன்னை பெரும் துயரத்துக்குள்ளாக்கியிருப்பதாகவும் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் ஆகியோரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
News Source: Thats Tamil

Tuesday, March 18, 2008

***Wishes: ஷைலஜா! நட்சத்திரப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்களுக்கு மைசூர் அல்வா தெரியுமா?

டேய் கேஆரெஸ்! ஒனக்கு இதே பொழைப்பாப் போச்சு.
தமிழ்க் கடவுள் லிஸ்ட்டுல பெருமாளையும் சேர்த்துச் சொல்லுற!
இப்ப என்னடான்னா மைசூர் பாக்கை விட்டுப்போட்டு மைசூர் அல்வா-ங்கிற! உன்னை....

டேய் மச்சி, அவசரப்படாம கேளு.
மைசூர் பாக்கோ, அஜந்தா பாக்கோ அதெல்லாம் உனக்கு ஜென்மத்துலயும் கெடைக்காது.
வேணும்னா பெங்களூரு போ! அங்கிட்டு நம்ம யக்கா ஷைலஜா சுடச்சுட அல்வா கொடுப்பாங்க!
அதுக்கு மைசூர் அல்வா-ன்னு பேரு!
யாரு நம்ம கவிதாயினி ஷைலஜாவா?
Tamil Sify-ல கலக்குவாங்களே?
முத்தமிழ்க் குழுமத்துல அடிச்சி ஆடுவாங்களே?
வவாச போட்டியில கலந்துக்கிட்டு நம்ம ராயல் ராமைச் சின்னப் புள்ளைங்கள வச்சி, ஓட்டோ ஓட்டு-ன்னு ஓட்டிப் பதிவு போட்டாங்களே! அவிங்களா?

அவிங்களே தான்! நீ சொல்லாம வுட்ட அம்மணியின் இன்னொரு பெருமை....
ஷைலஜாவின் பல கதைகள் விகடன் மற்றும் இதர அச்சு ஊடகங்களில் வந்திருக்கு!
யக்காவின் குரலைக் கேட்டிருக்கியா? இந்தா!
"அரங்கப் ப்ரியா" நம்ம முருகனருள் வலைப்பூவுக்குப் பாடிக் கொடுத்தாங்க!
இதே போல, "முருகப் ப்ரியா" யாராச்சும் நம்ம கண்ணன் பாட்டுக்கும் பாடிக் கொடுக்கோனும்! :-))


செல்லமா திருவரங்கப்ரியா-ன்னு தன்னைத் தானே கூப்பிடுக்குவாங்க!
ஆனா அரங்கன் பிரசாதமான மைசூர் பாக்கு மட்டும் கடைசி வரை கொடுக்காம அல்வா கொடுப்பாங்க!

ஓ...மைசூர்பா புராணம் அப்படிப் போகுதா?

ஆமா...வேணும்னா நம்ம VSK ஐயாவைக் கேட்டுப் பாரு!
ஷைல்ஸ் பண்ண தப்புக்குப் பாவம் அவர் பிட்டுக்கு மைசூர்பா சுமந்தாருப்பா! :-)
அக்காவை எத வேணும்னாலும் கேளு,
ஆனா மைசூர்-ன்னு.....அவங்க பேச்ச ஆரம்பிச்சாங்கன்னா...
நீ ஓசூர் வரைக்கும் ஓடிறது நல்லது!


திருவரங்கப்ரியா, கவிதாயினி, இன்குரலி
நம்ம ஷைலஜாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! (புதன்கிழமை, MARCH-19)

இன்று போல் என்றும், என்றென்றும்...
இனிய தோழியாய், எங்கள் இளைய தோழியாய்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம்!!

ஷைல்ஸ்!
பிறந்தநாள் பாக்...சாரி
பிறநதநாள் கேக்
கட் பண்ண வாங்கக்கா!


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கவிதை நூறாயிரம்
சொல்லாண்டு அரங்கன் அருளால்
நல்லாண்டு நாளும் இரும்!

Monday, March 17, 2008

Smile Foundation - Volunteers needed for taking classes

பி.கு: பெரியதாய்ப் பார்க்க படத்தின் மேல் க்ளிக்கவும்

Friday, March 14, 2008

Wishes: நவீன் பிரகாஷ்

வலையுலக தபூசங்கர் காதல் கவிஞர் நவீன் பிரகாஷ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துவோர்,
சங்கம்

Wednesday, March 12, 2008

Wishes: (My Days) Gops! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Mar 13 அன்று பிறந்த நாள் காணும்
பதிவுலக BMW,
நம்ம கோப்ஸ் அண்ணாச்சிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! கச்சேரி இப்பவே ஸ்டார்ட்டு!

"அண்ணாச்சிக்கு இதுவரை மொத்தம் 73 கார்கள் இருக்கு!"


"ஆகா..."

"என்ன ஓகோ?"

"இல்ல...ஐஸ்வர்யா-அபிசேக்கு கிட்டகூட இம்புட்டு காரு இருக்குமான்னு தெரியலை! அதான் கேட்டேன்!"

"எலே, எடுபட்ட பயலே...யாரை யாரோட கம்பேர் பண்ணுற? ஐஸ்வர்யா கிட்ட இல்லாத ஐஸ்வர்யம் நம்ம அண்ணாச்சி கிட்ட இருக்கு! தெரியும்-ல!
ஒவ்வொரு நாளைக்கு
ஒவ்வொரு ஃபிகரை
ஒவ்வொரு காரில்
தள்ளிக்கிட்டுப் போவாரா?-ன்னு அசட்டுத்தனமா எல்லாம் கேட்கக்கூடாது! பிச்சிப்பிடுவேன் பிச்சி"

"அத்தனையும் அவர் சொந்தக் காரா?"

"ஆமா...சொந்தக் காருன்னா ஒடனே சொந்தக்காரு ஆயிடுவீங்களே! போங்கடா போய் ஒரு மட்டமான கேக்கா ஆர்டர் பண்ணிட்டு வாங்க!"

"எதுக்குண்ணே, மட்டமான கேக்கு?"

"அடே, இது மூஞ்சியில் அடிக்கும் Birthday Smash கேக்கு-டா! வரியா, போயி Gops Smash பண்ணிட்டு வருவோம்?"

"ஓ நான் ரெடிண்ணே....அடி-ன்னு சொன்னாப் போதும்! அண்ணன் தம்பி எல்லாம் ஓடோடி வருவோம்ண்ணே!
பொறந்த நாள் அதுவுமா ஏதோ ஆசை தோசை அப்பளம் பஜ்ஜி பார்ட்டி வேற அரேஞ்ச் பண்ணி இருக்-காராம்!
போய் ஒரு குடி குடிச்சிட்டு....ச்சே....நாக்குழறது.....ஒரு புடி புடிச்சிட்டு வருவோம்"

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோப்ஸ்!

Enjoy Your Day!
Innikku entha car, man? :-)

Wishes - ஷ்யாம் & மருதம் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்இன்று பிறந்தநாள் கொண்டாடும் நாட்டாமை ஷ்யாம் & பாடும் குயில் மருதம் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாழ்த்துவோர்,
சங்கம்

Tuesday, March 11, 2008

Anniversary: சிபிதிருமண நாள் காணும் அண்ணன் சிபி மற்றும் அவரது துணைவியாருக்கு எங்கள் வாழ்த்துக்கள்

Monday, March 10, 2008

Wishes: மின்னல்

பேச்சுலராக இருந்து நேற்று முதல் பேச்சிலராகியிருக்கும் மின்னலுக்கு சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்!!! வாழ்வில் எல்லா வளமும் சுகமும் பெற்று நீடுழி வாழ உளங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குசும்பனின் டிப்ஸுக்கு ஒரு ரிப்பீட்ட்டு இடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்!!

சங்கத்தின் சார்பாக மின்னலுக்கு தபாலில் அனுப்பிய மொய் பணம் தபால் தலை ஒட்டாததால் சங்க ஆப்பீஸுக்கே திரும்பிவிட்டது. ஹனிமூன் முடிந்ததும் மின்னலு நேராக வந்து தல கைப்புவிடம் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டு மொய் பணத்தையும் வாங்கிக்கொள்ள வேண்டுகிறோம்!!

வாழ்த்துக்கள் மின்னல் & திருமதி மின்னல்!!

Saturday, March 8, 2008

News: குசேலன்-பட பூஜைவிக்கி செய்தி:

பட பூஜை- படத் தொகுப்பு

பட பூஜை செய்தி

Friday, March 7, 2008

Wishes: "புலி" நாகை சிவா


கப்பியின் வாழ்த்து
புலி இருக்கறது சூடானு,
இவரு பதிவுலகுல டானு.
பதிவு போட்டா செம ரகளை,
இவர்தான் நம்ம சகலை.
மொக்கைதான் இவரோட சோலி,
பின்னூட்டத்துக்கு வந்தா எல்லாரும் காலி.
பலப்பல பிகர்களை பார்த்து,
குஜாலா இருக்கட்டும் இதுவே என் வாழ்த்து...

இளா

பயங்கரமா உறுமும்,
செத்தாலும் புல் திங்காது,
தைரியத்துல கிங்கு,
பக்கத்துல போனா சங்கு...
வரிவரியா பட்டை,
உசரத்துல நம்ம விட குட்டை...
இது நெச புலி....


பயங்கரமா தூங்கும்,
கிடைச்சா ஃபுல்லை தனியாளா அடிக்கும்,
ராத்திரில தனியா போனா ஹார்ட் அட்டாக்கு,
அப்போ பக்கத்துல போனா நமக்கு சங்கு..
வரி போட்ட சட்டை,
வெள்ளியானா மட்டை,
பேருதான் புலி
ஆனா மனசுக்குள்ள எப்பவும் கிலி
தேவை எல்லாம் சரக்கு,
புள்ளைங்கள பார்த்தா ப்ளாட்டு.
இதுதான் நம்ம "புலி"

CVR

"அன்பு நண்பர் நாகை சிவாவிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் ,வெற்றிகளும் என்றென்றும் பல்கிப்பெருகட்டும்!! "

KRS
"மகளிர் தினத்துக்குச் சரியாக ஒரு நாள் முன்னர் பிறந்ததால்
அழகியர்க்கு எல்லாம் அண்ணனாகிப் போனதாய் எண்ணாதே அன்புப் புலியே! :-))
நீ அண்ணனல்ல! காதல் மன்னன்!
கள்ளக் கண்ணன்! கன்னியர் வண்ணன்!
"நாகை"க் கடலில் நாவற்பழக் கன்னி ஒருத்தி
பொன்னியின் செல்வன் புலிக்கு படகோட்டுவாள்-ன்னு
காலையில் வெயிட் மெஷினில் எடை பார்த்த போது வாசகம் சொல்லிற்று!
நாகைக் கடலில் ஹவுஸ் போட் பார்ட்டியாமே? இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா! Ensoy your day! :-) "

சங்க(ம)ம் சிங்கம்ஸ்:
மகளிர் தினத்துக்கு முன்னாடியே பொறந்து சைட் அடிக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்த நாகை சிவாவுக்கு வாழ்த்துக்கள்!

காதலன் சென்ஷி:
எண்ணி 13 எழுத்துக்களில் எழுகின்ற வாழ்த்துக்களை
என்னால் தர இயலவில்லை.
வார்த்தைக்குவியல்களில் தேடி
வாழ்த்துக்களை அள்ள முயற்சிக்கிறேன்.
கைவிரல் இடுக்குகளிலிருந்தும்
உன் வாழ்த்துக்கான வார்த்தைகள்
சிந்தி வழிகின்றன.
போதாது போதாது என பதறி
மனக்குவியல்களின் அத்தனை வார்த்தைகளையும்
காற்றுடன் அள்ளி வீசியெறிகின்றேன்.
இன்றுன்னை சுற்றும் வாழ்த்துக்களின்
ஏதேனும் மிச்சத்தில் எனது வாழ்த்தும்
சேர்ந்திருக்குமென்ற நம்பிக்கையில்
இங்கும் என் வாழ்த்துக்களை
பதிவு செய்கின்றேன்.
என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கொத்ஸ்:
சூடான சர்ச்சைகளில் சிக்காத வல்லவன்
சூடானில் செந்தமிழைச் சீராகத் தந்தவன்
நாடாது நற்பெயரைப் பெற்றிடும் நல்லவன்மேல்
பாடினேன் பாவொன்றே பார்!


தேதி: Mar-7-2008

Tuesday, March 4, 2008

Need Your Help - 2 years old Child - Congenital Hydro cephalous

மின்மடலில் வந்தது:

Vaishnavi is 2 years and 5 months baby girl suffering from Congenital Hydro cephalous disease.
She needs an operation. The operation costs around 5 lakhs to save her life(within 1 or 2 months operation should be done).Aadarana Helping Hand Community is taking initiative in collecting money for her surgery. Aadarana team alone could not afford the cost of operation and take further care so seeking your kindness in contribution. So far we gathered upto two lakhs.Still need a huge to save that life..Hoping you all will help us in saving the life of that kid... Even it is one Rupee you are going to contribute will help us to save Vaishnavi.

Please pass on this email to your friends if you think that might help us.
Child details:

Name: Vaishnavi A
Age : 2years and 5 months
Suffering from Congenital Hydro Cephalous

Contact person : Giri (Father of the baby) Or Aadarana team

If you have any queries you can ping any of Aadarana team members listed below.

You can go through the link given below...

http://aadaranavidya.org

Name Contact Number Location

Murali Manohar - 9940084849 Chennai
Chakrapani - 99001 90881 Bangalore
Praveen - 99864 81459 Bangalore
Suman Sanjay - 94905 68780 Tirupathi
Anil Kumar - 98666 18236 Tirupathi
Kamalakar - 9790917680 Chennai
Srinivasulu - 99860 68330 Bangalore

Account details :

Bank Name : ICICI Bank
Account holder : AADARANA HELPING HAND COMMUNITY
Account No: 630901059062
Branch : Thilak road, Tirupathi
Account type :Current Account

(or)

Murali Manohar R.V.(Working in ODC-2)

Account No : 000901580295

Thank you very much for your love & support.