Thursday, July 31, 2008

Wishes: கப்பி பய

முன்னாலே உருகுவே சிங்கம். பின்னாலே சென்னையில புலி. உன்னாலே உன்னாலே.. ச்ச... இப்போலே டல்லாஸ் சிறுத்தை. யாருப்பா அது? ஓவர் பில்ட் அப்-ஆ இருக்கு? அப்படின்னு கேட்குறீங்களா?

அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறெதுவும் இல்லைன்னு முன்னாலேயே சொல்லியிருக்கனும். இன்னும் லேட் ஆகுல. இப்போ சொல்லிக்கிறேன்.

TCS வெற்றிக்கரமா நடக்குதுன்னா அதுக்கு ஆதிமுதல் காரணம் நம்ம அண்ணந்தான்.

காற்றின் மொழி இசையான்னு கேட்குறவங்க ப்ராக்ராம்மிங் மொழி ஜாவா-ன்னு சொல்ற அளவுக்கு அந்த மொழியை வளர்த்த பாவளர் நம்ம அண்ணந்தான்.

தன்னடக்கம் என்பதுக்கு இன்னொரு வார்த்தை என்னன்னு அகராதியில் தேடுனீங்கன்னா அங்கே எழுதியிருப்பதும் நம்ம அண்ணன் பெயர்தான்.

Spirit of Energy எங்கே இருந்து வருதுன்னு ஆராய்ச்சி பண்ணீங்கன்னா அங்கேயும் முதலாவதாக இருப்பது நம்ம அண்ணந்தான்.

யாரிடமும் திட்டு வாங்காமல் கொடுப்பதெல்லாம் (ஆப்புக்கள்)தான் வாங்க்கிக்கிற இன்னொரு கைப்புள்ளையாக வளர்ந்து வருவதும் நம்ம அண்ணந்தான்.

ஜிடால்க்ல, மின்னஞ்சல் கும்மியில, ப்ளாக்ல துவைச்சி, பிழிஞ்சி, காய வச்சாலும் ஸ்டெடியா நிக்கிறவரும் நம்ம அண்ணந்தான்

வளர்ந்து வரும் தேன்கிண்ண சுனாமியும் நம்ம அண்ணந்தான்

பீட்டர் படங்களும் மொக்கை படங்களும் பார்த்துட்டு வந்து ஹாலிவூட் லெவெல்ல விமர்சனம் எழுதி பெயர் வாங்கினவரும் நம்ம அண்ணந்தான்

அட.. அந்த ஹாலிவூட் படங்களில் கதாநாயகனா அழைப்பு வந்தும் வேண்டாம் என நிராகரிச்ச ஹீரோவும் நம்ம அண்ணந்தான்.

டல்லாஸ் பெண்கள் சுத்தி சுத்தி வருவதும் நம்ம அண்ணனைத்தான்.

வருத்தப்படாத வாலிபன் என்றாலும் நம் நினைவில் வருபவர்களில் ஒருவர் நம்ம அண்ணந்தான்.

அபூர்வ சகோதரர்கள் அப்புவும் நம்ம அண்ணந்தான்

தசாவதாரம் அறிவுஜீவியும் நம்ம அண்ணந்தான்

அட அட அட.. நம்ம அண்ணன் பிறந்தநாளுக்கு கொஞ்சமாய் பொய் சொல்லி ரொம்பவே ஐஸ் வச்சாச்சு. அண்ணன் மனசு குளிர்ந்து நமக்கெல்லாம் பொட்டி அனுப்புவாராக. :-))


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அறிவுஜீவி கப்பி!

Vacancy: Datastaging & testing

Immediate requirements for Gurgaon with the below mentioned Skill Sets.

1) Datastage(Unix) Developer- 2-4 yrs Total exp
Base location-Gurgaon
Skill set:
Good knowledge of Data Stage – Must
UNIX exp is must .
Very good understanding of Database concepts – Must
Good knowledge of Datawarehouse concepts - Must
Understanding of Job scheduling (Desirable)


2) Datastage(Sybase) Developer- 2-4 yrs Total exp

No of Position-2
Base location-Gurgaon

Skill set:
Good knowledge of Data Stage – Must
Good knowledge of Datawarehouse concepts - Must
Very good understanding of Database(preferably Sybase) concepts – Must
Understanding of Job scheduling in Autosys or any other tool (Desirable)

3) QA (ERP )- 2-5 years Total exp Job Code-
No of Positions-5
Base location-Gurgaon
Educational Qualifications: B.Tech / MCA / Graduation (Minimum 15 years of formal education, Correspondence courses are not relevant).



Skill set:

Proficient in different kind of Testing - Black box/White box.
Proficient in Quality Processes - implementation if not in terms of defining the processes.
Should have executed the complete SDLC.
Good understanding of testing methodologies & Break Fix process.
Experience in writing, execution of test scripts, test cases.
Good working knowledge of VB Scripting, XML, XSL & HTML.

Basic knowledge of Testing tools like QTP & QC / TestDirector.

Should have worked on operating systems – Unix, Mainframes, Windows.

Good knowledge of writing queries and plsql.

Good written & oral communication skills

Experience of working in an international company is desirable.

Experience of working on ERP Testing (Oracle Apps/SAP/Peoplesoft) is preferred.

Experience on Health Care domain is preferred




4) Mainframe(Production Support) - 4+ years Total exp

Base location-Gurgaon
Work timings -Regular/Shift ( Night/Day)

Skill set:

Experience in COBOL,JCL,CICS

Production Support Mandatory and Good Communication skills



5) Java-J2EE (Production Support)- 5-9 years Total exp
No of Positions-4
Base location-Gurgaon



Skill set :

Should have executed the complete SDLC on at least one project using Java, J2EE.
Should have strong experience in core java
Should have played the role of a technical mentor in his career.
Proficient in use of application servers, preferably Websphere
Proficient in using Design tools – XML, RAD.

Experience in Framework.

Should be able to execute Unit Testing (Plan, Prepare & Execute).
Strong knowledge of systems development life cycle.
Strong knowledge of Production support environment.
Technical training skills.
Able to lead walk through of design documents.
Leads others toward technical accomplishment, collaborative project team efforts and achievement of important project goals.


6) Core Java (Production Support) 4-6 years Total exp

Base location-Gurgaon
Work timings -Regular/shift ( Night/Day)

Skill set:
Core Java-Expert, Framework (Spring, Hybernate, Struts)- Expert,
J2EE-Basic, Design Patterns-Basic
Production Support Mandatory and Good Communication skills.

Send the resumes to ilamurugu at gmail dot com

Wednesday, July 30, 2008

Wishes: சதீஷ்

"தனிமை இரவுகளில் விண்ணில் தனித்திருக்கும் நிலவுடன் என்னில் நிலைத்திருக்கும் கனவுகளை சேர்க்கும் ஓர் இரசிகன"

அப்படின்னு டகால்டி விட்டுக்கிட்டு ஒன்னும் புரியாத கவுஜயா எழுதும்
நாஞ்சில் நாட்டு தங்கம்
நம் குலச் சிங்கம்
நார்த்கரோலினா கொண்ட சோழன்
அன்பு மாப்பி சதிஷுக்கு நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!!

Wishes: புதுகை அப்துல்லா

இன்று தன் பிறந்தநாளை கொண்டாடும் புதுகை எம். அப்துல்லா அவர்களுக்கு நம்முடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.


வாழ்த்துவோர்,
சங்கம் & புதுகைத் தென்றல்

Friday, July 25, 2008

Birthday: 'செந்தழல்' ரவி

விஜய்க்கு குருவி,
விஜய.டீ.ஆருக்கு வீராச்சாமி,
கேப்டனுக்கு கஜேந்திரா,
ரஜினிக்கு பாபா,
கமலுக்கு மைதா மாவு,
சச்சினுக்கு குரலு,
கங்குலிக்கு கண்ணு,
உண்மையாருக்கு டிவிட்டரு,
அப்படியே இன்னிக்கு
செந்தழல் ரவிக்கு பொறந்தநாளு.

Wishes: பரணி

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பில்லு பரணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


வாழ்த்துவோர்,
ப்ளாக் யூனியன் & சங்கம்

Wednesday, July 23, 2008

Wishes: CVR! பிறந்த நாள் வாழ்த்துகள்!

* லவ் சயின்டிஸ்ட்
* விண்வெளி சயின்டிஸ்ட்
* சிந்தனை சயின்டிஸ்ட்
* கதை, கவிதையிலும் சயின்டிஸ்ட்
* பயணக் கட்டுரை சயின்டிஸ்ட்
* புகைப்பட சயின்டிஸ்ட்

என்று...

சதா...(வை) சிந்திச்சிக்கிட்டே இருக்கும்.....

சயின்டிஸ்ட், ஆலிவர் ட்விஸ்ட், நம்ம புன்னகை மன்னன், CVR-க்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! (Jul-24)
மனத்துக்கினிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
Many Many Happy Returns of the Day, Cinderella CVR! :))))))))))))))

Tuesday, July 22, 2008

Birthday: My Friend

மீ த பர்ஸ்டு அனுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
இப்படிக்கு சிபி , மது, அபிஅப்பா, குட்டீஸ், ஆயில்யன், ஜொங்களூர் சிவா



மற்றும்
சிங்கம்ஸ்

Saturday, July 19, 2008

Birthday: கிழுமத்தூர் பெ.மகீ


சிவாஜி படத்துல ஒரு முக்கியமான காட்சி. ரஜினி தற்கொலை பண்ணிக்குவாருன்னு தண்டவாளத்துல நிப்பாரு. விவேக் ஒரு ரயிலுல ஏறிக்கிட்டு ரன்னிங்க் கமெண்டரி குடுத்துக்கிட்டே வருவாரு. கம்பி புடிச்சு இழுத்தாலும் ரயிலு சலிக்காம ஓஓஓஓடி வரும். அப்போ அக்கா தாவணிய காட்டி நிப்பாட்டிருவாங்க ஒரு பாட்டு வரும். இதெல்லாம் யாருக்கு வேணும், ரயிலு நின்னதுக்கு காரணம் என்ன?.
கழுதை வயசானதுக்கு அப்புறம் தாவணி பார்த்தா நிக்கும், அதில்லே விஷேசம்...எதிர்த்தாப்புல நின்னது கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் ஆச்சே...அதைப்பார்த்து ஜொல்லுவிட நின்னது...சிவாஜி தப்பிச்சிட்டார்.
கிழுமத்தூர் எக்ஸ்பிரசைப் பார்த்து ஏன் நிக்கனும் ? அதுதான் தினம் கிராஸ் பண்ணுகிற இரயிலாச்சே ? எக்ஸ்பிரஸ் ரயிலு அன்னிக்குன்னு புது சொக்கா போட்டு இருந்தது? கையில முட்டாய் வேற. அப்புறம் முன்னால் இருந்த பேனரில் எழுதி இருந்தது "கிழுமத்தூர் எக்ஸ்பிரசுக்கு பிறந்த நாள்" வாழ்த்துக்கள்
வாழ்த்துச் சொல்ல விரும்புறவரு கோவி/சரா/ செந்தழல் மற்றும் எதிரிகள்
By
Sangam Groups

Tuesday, July 15, 2008

Wishes: ஹமிட் சுல்தான் @ மனதின் ஓசை


நமது நண்பர் ஹமிட் சுல்தான் @ மனதின் ஓசை அவர்களுக்கு கடந்த ஞாயிறு அன்று (13/07/2008) அழகான குட்டி தேவதை பிறந்திருக்கிறாள். இவ்வேளையில் இந்த குட்டி தேவதை நலமுடனும் கல்விகேள்விகளில் சிறந்து விளங்கவும் வாழ்த்துவோம்.

Saturday, July 12, 2008

Wishes: ஜெயஸ்ரீ ஐயப்பன்

இன்று(12-07-2008) இரண்டாவது பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படப் பிதாமகர், புனைவுகளின் திருமகர், வெண்பா வாத்தியார் ஐயப்பன்(ஜீவ்ஸ்) அண்ணாச்சியின் குட்டி தேவதை ஜெயஸ்ரீயை எல்லாரும் வாழ்த்தலாம். கூட்டமா கெளம்பி வாங்க.

Priceless Expression

Thursday, July 10, 2008

Wishes: ரசிகவ் ஞானியார்

பரிசுப்பொருட்களின்றி புத்திச் சிதற மாட்டேன்,
வாழ்த்துகளால் மட்டும் வாழ்வு இல்லை,
வாரங்களாய் மாதங்களாய்
ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்கிறாய்
என் பிறந்த நாளை,

இன்று விருந்து கேட்கத்தோன்றிய உனக்கு
வாழ்த்து சொல்ல விருப்பமில்லையோ நண்பா?
போடா...

- ரசிகவ் ஞானியார்

*********************************************************************
எவருமே
திருப்பித் தரஇயலாத
நான் பிறந்த அந்த நாளை

இன்றைய இலக்கம் மட்டும்
போலியாய் நிர்ணயிக்கின்றது

வாழ்த்துகள் பிரதியெடுத்து
பதிப்படுகின்றது
ம்
நான் கொடுத்தது
எனக்கே திருப்பி

ஒவ்வொரு பிறந்தநாளும்
நான் இறப்பதற்கு
ஒரு வருடத்தை குறைக்கிறது

யாராவது
வாழ்த்துங்களேன்

- ரசிகவ் ஞானியார்
************************************************************
இன்று பிறந்தாள் கொண்டாடும் ஞானியாருக்கு அவருடைய கவிதைகளைக் கொண்டே வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா!

Tuesday, July 8, 2008

Wishes: கவிதாயினி காயத்ரி



கவிதைகள் எல்லாம் அதிரடி,
படிக்கிறவங்களுக்கு கன்பார்ம்டு ஏர்வாடி,

கையில வெச்சுக்கிறாங்க மெஹந்தி,
இவுங்க கூட சேட் பண்ணினா நமக்கு வரும் பீதி.

நம்பர் வெச்ச ஜிமெயில் ஐடி,
ஜிடாக்ல லாகின் பண்ணினா போயிருங்க பேசாம ஓடி.

மலையில கிடைக்கும் திணை,
இவுங்க கவிதை படிச்சா நமக்கு வரும் வினை,

டீ ஆத்துறதுல இவுங்க செம கில்லாடி,
பாலை கவிதை படிச்சவன் குடுப்பான் கல்லடி.

பதிவுக்கு வெச்ச பேரு பாலை,
படிச்சா கலங்குறது நம்ம மூளை.

மக்கள் இவுங்களுக்கு குடுத்த பட்டம் கவிதாயினி,
காயத்திரி பதிவு போட்டா, படிப்பியா நீ?

பொண்ணுங்களுக்கு புடிச்ச கலரு பிங்கு,
இவுங்க பிலாக் படிச்சா ஊதுறாங்க சங்கு.

பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா..
மெட்ராசுக்கா...திருச்சிக்கா..திருத்தணிக்கா..
கவிதை எல்லாம் போட்டு
இனிமே எங்களை கொலை பண்ணவேணாங்க்கா

யானைக்கு இருக்கு தும்பிக்கை,
இவுங்க கவிதை எல்லாம் ஒரே மொக்கை.

தட்டி தட்டி கை யெல்லாம் வலிக்குது,
ஜல்லடை இல்லாமலேயே இவுங்க பதிவு எல்லாம் சலிக்குது.

அம்மணிக்கு கொஞ்சம் தலையில ஓவர் வெயிட்டு,
கலருமட்டும் கிராபிக்ஸ் இல்லாத சிவாஜி ஒயிட்டு.


என்னிக்குமே காளை மாடு பாலு தராது,
நல்லா கலாய்ச்சுக்கோ, சான்ஸ் போனா வராது.


கவிதையாலே எங்களை
கல்லால அடிக்கும்
கவலைப் படாத காரிகை
கவிதாயினி காயத்ரிக்கு பிறந்த நாள்(8-ஜூலை) நல்வாழ்த்துக்கள்





Wishes by
Sangam Groups.


இது பழைய பதிவு தான்.... என்ன பண்ண...!! வருசம் திரும்பிருச்சே....... :)

Sunday, July 6, 2008

Wishes:அருண்

மதுரை சிங்கம், கிலேவ்லேண்ட் தங்கம் அருண்'க்கு இன்று பிறந்தநாள்.

எல்லாரும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லிருங்க.




இன்னும் கொஞ்சநாளிலே அவரு எழுதின பாட்டை நாமெல்லாம் பாடவேண்டியதா வரும்...



*******************
கத்தாளங்காட்டு வழி சின்சினாட்டி ரோட்டு வழி
டேக்சி கட்டி போறவனே, வாக்கப்பட போறவனே...

ஏரோப்ளேனு எட்டு வச்சி முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ற பையன் மனம் பின்னே போகுதம்மா

ஹைட்டு மேல ஹைட்டு வச்சி மேல பறக்குதம்மா
ஜீன்ஸு போட்ட பையன் மனம் கீழ பாக்குதம்மா

தாயி தங்கமணி மனசு மருகுதம்மா
ஏர் ஹோஸ்டஸ் பாக்கயிலுன் ஓன் மொகமே தெரியுதம்மா
...
...
வாசப்படி கடக்கயிலே வரலயே பேச்சு
அமெரிக்கா தாண்டிப்புட்டா பூரிக்கட்டைனு ஆச்சு..

ஏரோப்ளேனு எட்டு வச்சி முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ற பையன் மனம் பின்னே போகுதம்மா

*** stanza 2.. dhoda***
சின்சி போய் வரவா க்ளையண்டே போய் வரவா?
டென்னிஸ் போய் வரவா ஸ்விம்மிங்கே போய் வரவா

ஜெர்சி போட்டு நான் வெளாண்ட ஃபுட்பால் ஒன்னவிட்டு
பூரிக்கட்டை சுமந்து நிற்கும் துனைவியோடு போய் வரவா?

சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த எடந்தானே..
கணிப்பொறி யாளனுக்கோ ரெண்டு எடந்தானே..

ஏரோப்ளேனு எட்டு வச்சி முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ற பையன் மனம் பின்னே போகுதம்மா

*******************

Friday, July 4, 2008

Wishes: வாத்தி


அமெரிக்க ஏகாதிபத்தியம், அடிமைச்சங்கிலியை உடைத்தெரிந்த இந்தத் திருநாளன்று பூலோகத்தில் தரித்து கடமை, சேவை மற்றும் இன்னபிற கெட்ட வார்த்தை, ஹோமோ கதைகளையும் அழுவாச்சி கவிதைகளயும் விடுத்து மூன்றாம் கண்ணில் பார்வை பதித்து வரும் 'சாமுராய்' இளவஞ்சி வாத்திக்கு எங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Thursday, July 3, 2008

Wishes: டெப்பி

இன்று தன் இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடும் தேவ் அண்ணாவின் குட்டி தேவதை டெப்பிக்கு சங்கம் சார்பாகவும் அனைவரின் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை முத்தங்களுடன் சொல்லுவோம் வாங்க.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி!

Wishes: கோபிநாத்

இன்று ஒரு வி.ஐ.பிக்கு பிறந்தநாள். அவர் யாருன்னா மாதத்துக்கு ஒரே ஒரு பதிவுதான் போடுவாரு. ஆனால், தமிழ்மணத்தில் வந்த வராத எல்லா பதிவுகளிலும் இவருடைய பின்னூட்டங்கள் நிறைந்திருக்கும். 5 வார்த்தை எழுதினார்ன்னா அதில் ஒன்றிலாவது தவறாக எழுதியிருப்பார். சும்மாவா? எங்க அண்ணன் ஆச்சே! ;-)

அந்த வி.ஐ.பி வேற யாரும் இல்ல. எங்க வேடந்தாங்கல் பறவை @ அண்ணா @ ஷார்ஜா புகழ் @ "பொறி" கோபி...

எல்லாரும் சேர்ந்து பிறந்தநாள் வாழ்த்து பாடுங்கப்பா..

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!


வாழ்த்துவோர்,
வேடந்தாங்கல் பறவைகள் & சங்கம்

Tuesday, July 1, 2008

Wishes: தஞ்சாவூரார்

பழகுதலுக்கு இனிய நண்பர்,
வெகுளியாய் தோற்றம்,
நிறை குடமாய்,
வெள்ளை மனதாய்
இருக்கும் தஞ்சாவூரார் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Austin, Texas-இல் உள்ள நண்பர்கள், உடனடியாக பதிவர் சீமாச்சுக்கு உதவுங்களேன்!

விக்னேஷ்! ஆஸ்டின் பல்கலையில், அண்மையில் தான் BS முடித்தவர்!
சுமார் இருபது-இருபத்திரண்டு வயது! மேல்படிப்புக்குப் புகழ் பெற்ற CalTech-இல் இடம் கிடைத்துள்ளது!
சில மணி நேரத்துக்கு முன்பு, தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்!

இவர் நம் சகோதரப் பதிவர், சீமாச்சு அண்ணாச்சியின் உறவினர்!
பெற்றோர்கள், உடலைத் தாயகத்துக்குக் கொண்டு செல்ல, இந்தியாவில் இருந்து புறப்பட்டாகி விட்டது! சீமாச்சு அண்ணன் இன்னும் சில மணியில் நார்த் கரோலினாவில் இருந்து, ஆஸ்டின் கிளம்புகிறார். மிகவும் உடைந்து போயுள்ளார்!

அறிமுகம் இல்லாத புதிய ஊர்!
* மருத்துவமனைச் சடங்குகள், இதர formalities - இவற்றின் போது ஒரு மாரல் சப்போர்ட்டாகவோ, இல்லை வண்டி ஓட்டிச் சென்றோ,
சிறு சிறு உதவிகள் செய்ய முடியுமா?
** இல்லை, இது போன்ற சமயத்தில், உடலைத் தாயகம் கொண்டு செல்லும் வழிமுறைகளைச் சொல்லி உதவ முடியுமா என்று கேட்கிறார்!

யாரேனும் நம் சகோதர பதிவர்கள் Austin, Texas-இல் இருந்தால்,
சீமாச்சு அண்ணாச்சியைத் தொடர்பு கொள்ள முடியுமா?
அவர் அலைபேசி எண்: 1-781-696-5814


இளைஞர் விக்னேஷின் இன்னுயிர் அமைதி பெற இறைவனை வேண்டிக் கொள்கிறோம்!
பெற்றோருக்கும், சீமாச்சு அண்ணனுக்கும் நம் ஆறுதல்கள்!