Thursday, December 27, 2007

Wishes: அனுசுயா

இன்னைக்கு ஒரு பூவுக்கு பிறந்த நாள்..

யாருன்னு நான் க்ளூ கொடுப்பேன்.. நீங்க கண்டுபிடிக்கணும்.. ஓகே.. கேம் ஸ்டார்ட்... மீயூஜிக் ப்ளீஸ்...
.
.
.
.


இவங்க எழுதுறது ஜஸ்டூ ஒரு டைம் பாஸுக்கு.. அவ்வளவுதானுங்க...


.
.
.
.


பூன்னா உயிரே விடுவாங்க..


.
.
.
.


புதுசு புதுசா பூவை பற்றி ஆராய்ச்சி செய்து நமக்கும் விளக்குவாங்க


.
.
.
.


திடீர்ன்னு ரொம்ப ரொம்ப பொறுப்பா சமூதாய அக்கறை பதிவுகள் எழுதி நம்மையும் கொஞ்சம் சிந்திக்க வைப்பாங்க..


.
.
.
.
ஆங்.. சொல்ல மறந்துட்டேனே! கோயம்பத்தூர் குசும்புன்னு சொல்வாங்களே.. அது இவங்க கிட்ட ரொம்ப ஜாஸ்திங்க..


.
.
.
.


அட.. இன்னும் கண்டு பிடிக்க முடியலையா? சரி, இன்னொரு க்ளூ தர்றேன்.. இப்போ கண்டுபிடிங்க பார்ப்போம்..


.
.
.
.


இவங்க நம்ம ஷார்ஜா கோபியோட ஒரு மேட்டர்ல ஒத்து போறாங்க.. அதாவது மாதத்துக்கு ஒரே ஒரு பதிவு.. அந்த ஒன்னு போட்டதும் இந்த மாத கணக்கு தீர்ந்துடுச்சுன்னு ஹாயா உட்கார்ந்துப்பாங்க..


.
.
.
.
.
.
.
.
.


கண்டுபிட்ச்சிட்டீங்களா???


.
.
.
.


ரைக்ட்.... அவங்களேதான்..

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனுசுயா அவர்கள் எல்லா நலமும் பெற்று சந்தோஷமாக வாழ இறைவனை பிரார்த்திப்போம்.


Monday, December 24, 2007

Wishes: பினாங்கு பெரும் தலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

எனது நண்பரும், மலேசியா பினாங்கிலிருந்து பதிவுலகை கலக்கிவரும் மதுரை மண்ணின் மைந்தன்,'பதிவுலக இளம்புயல்' டிபிசிடி - அரவிந்த் அவர்கள் இன்று அவதரித்த பொன்னாள்...

நண்பர் டிபிசிடி மேலும் மேலும் பணியில் சிறந்து புகழடைய வேண்டும், நோயின்றி மகிழ்வுடன் நூற்றாண்டுகள் வாழவேண்டும்.

அன்புடன் வாழ்த்துரைப்போர்,

கோவி.கண்ணன் மற்றும் குடும்பத்தினர்
பாரி.அரசு
ஜெகதீசன்
பேபி இளமதி
பேபி மதுமிதா
பேபி பவன்
அண்ட்
குட்டீஸ்

Friday, December 21, 2007

Wishes: Eid Mubarak

முஸ்லீம் அன்பர்களுக்கு ஹஜ்ஜி பெருநாள் வாழ்த்துக்கள்..

ஈத் அல் முபாரக்.

வாழ்த்துவோர்,

சங்கம்

Thursday, December 20, 2007

Wishes : K.P.

Hi Chums,

Join me in wishing Kandapalani for his Golden Jubliee (50th Birthday Today).

Lets all pray for a long and happy life for KP.Regards,
Vizhiyan(Umanath)
For Mitralok - World of Friends, Bangalore (வேறு எங்கும் கிளைகள் இல்லை)

Joint adipathu
Net Guys & 8 Guys - GSPians, Nagapattinam

&

SANGAM

Tuesday, December 18, 2007

Wishes: கோவி கண்ணன்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் எங்களின் இதய நாயகன் என் தொழில் ஆசான் கோவியாருக்கு எங்கள் அன்பு கலந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

Monday, December 17, 2007

டூ -இன்- ஒன் வாழ்த்துப் பதிவுங்கோ

கும்மியில தனியா போட்டாலும் சுவரொட்டியின் 101 வது பதிவு நம்மளதா இருக்கட்டுமேன்னு நெனச்சப்போ ஒரு வி.ஐ.பி வந்து

ரெண்டு வி.வி.ஐ.பிகளை

டூ-இன் -ஒன்னா

வாழ்த்தனும் னு கேட்டுக்கிட்டாரு.

அதென்ன டூ-இன் -ஒன் வாழ்த்தா?

சதம் [100]அடித்த அபி அப்பாவுக்கும்

[அரை சதம் ஆகிவிட்ட] பர்த் டே பாய் குசும்பனுக்கும் சேர்த்துத்தான்.

அது சரி அந்த வி.ஐ.பி யாருன்னு கேக்கறீங்களா?

வாழ்த்தப் போவது யாருங்கோ......இங்கே பாருங்கோ
*
*

*

**

*


**


**


வாழ்த்துக்கள் குசும்பா......கீஇகீகி....கி.கீ... .[இது சந்தோஷம்]
வாழ்த்துக்கள் அபி அப்பா...குர்ர்ர்ர்..கிர்ர்ர்...கீஇர்ர்ர்ர்[இது தப்பு தப்பு எழுதற கோபம்]

Wishes:குசும்பன்

அமிரகத்து கலாய்த்தல் சங்கத்தின் தளபதி, கோட்-சூட் போட்டுதான் தமிழனுக்கு நகைச்சுவையில் அசத்தவோ இல்லை கலக்கவோ முடியுமென அனைவருக்கும் வழிகாட்டியாக நின்று காட்டியவர்

குசும்பன் என இந்த நல்லுகம் அறியப்படும் அண்ணன் சரவணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Friday, December 14, 2007

Wishes: கார்த்திக் பிரபுவுக்கு பிரமோஷன்

குட்டி தேவதைக்கு அப்பாவாக இல்லறத்தில் உயர்வு பெற்றிருக்கும் காதல் பித்தர், மசாலா மிக்ஸ் மன்னன் கார்த்திக் பிரபு அவர்களை வாழ்த்துகிறோம்.
குட்டித் தேவதைக்கு அன்பான ஆசிகளையும் தம்பதியருக்கு வாழ்த்துக்களையும் கூறிக் கொள்கிறோம்.

Wednesday, December 12, 2007

Wishes: Super star ரஜினிகாந்த்


அபூர்வராகங்களில் வெறுமையும், தோல்வியும், நோயின் தீவிரத்தை தன் கண்களிலே திணித்து நடிப்பை அலட்டாமல் பைரவி வீடா'ன்னு நுழைந்த நடிகர் இன்று தலைமுறைகள் கடந்த அனைவரின் மனதில் நுழைந்தவர்.

நடிகனின் ஆளுமையும், தனிதன்மையும் எந்தளவுக்கு முக்கியமென அனைவருக்கும் உணர்த்தியவர்.

ஸ்டைல் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்.

மொழி கடந்து தேசம் கடந்து நடிகனாய் நிப்பான் தேசத்து மக்களையும் ஈர்த்தவர்

என்றொன்றும் இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Tuesday, December 11, 2007

பாரதி - 125 வது பிறந்ததினம்!அறிவிலே தெளிவு

நெஞ்சிலே உறுதி

அகத்திலே அன்பினோர் வெள்ளம்,

பொறிகளின் மீது தனியரசாணை

பொழுதெலாம் நினது பேரருளின் நெறியிலே நாட்டம்

கரும யோகத்தில் நிலைத்திடல்

என்றிவையருளாய்

குறி குணமேதும் இல்லதாய் அனைத்தாய்க்

குலவிடு தனிப்பரம் பொருளே!


Wishes:மதுமிதா ஸ்ரீ

அரவிந்த் (TBCD) அவர்களின் அன்பு மகள் மதுமிதா ஸ்ரீ'க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
குழந்தை வருங்காலங்களில் அனைத்து வளமும் எல்லையில்லா இன்பமும் பெற்று வாழ,அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!வாழ்த்துவோர்,

நண்பர்கள் & சங்கம்

Friday, December 7, 2007

Wishes:அபுதாபி ஆணழகர் கதிர்

எழுத்து சுரங்கம், அழுத்தமான சிறுகதைகளின் அரங்கம், பாவானாவின் அன்பு, தம்பி உமா கதிருக்கு இன்னக்கு வயசு இருபத்தியாறு முடிஞ்சு இருபத்தியஞ்சு ஆரம்பிக்குது..... :)

அதுனாலே ஒங்களுக்கு விருப்பப்பட்ட முறையிலே கேக் ரெடி செஞ்சு வாழ்த்துக்களை சொல்லிருங்க.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கதிர்.


வாழ்த்துவோர்,

சங்கம் & நண்பர்கள் & அமிரகத்து கோஷ்டிஸ்

Thursday, December 6, 2007

Wishes: Jeeves பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வெண்பா வித்தகர்,புன்னகை பொக்கிஷம்,தமிழில் புகைப்படக்கலை கண்ட காவியத்தலைவர்.
இனிமையான பேச்சிலும்,அன்பான பழக்கத்திலும் ,நண்பர்களின் மனம் கவர்ந்த பாசக்கார அண்ணாச்சி!!


கவிதை,புகைப்படக்கலை பல துறைகளில் தடம் பதித்த/பதிக்கும் அன்பு அண்ணன் ஜீவ்ஸின் பிறந்தநாள் இன்று!!!

அவர் வாழ்வில் எல்லா நலமும் ,எல்லா வளமும் எல்லையில்லா இன்பமும் பெற்று வாழ,அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :)


அண்ணாச்சி மக்களோடு சேர்ந்து கலக்கும் தமிழில் புகைப்படக்கலை(PIT) நடத்தும் இந்த மாதப் போட்டியில் கலந்துகொள்ள இங்க க்ளிக்குங்க!நன்றி:சிவிஆர்

Wednesday, December 5, 2007

இந்த குட்டி பையன் நலம் பெற பிரார்திப்போம்

Dear Friends,

My son got stroke 3 weeks back and he is recovering now. There was a small blood clot in the right side of the brain so left side got affected. Still they are not able to find out the root cause of this. Please pray for my son.

Rgs,
Stanley C
"Stanley,Charles,DUBAI,NME-GLOBE-IS/IT"


ஸ்டான்லியின் மகன் நலம் பெற இறைவனை பிரார்த்திப்போமாக..

Saturday, December 1, 2007

Wishes: புதுகைத்தென்றல்


புதுசாய் புயலாய் கிளம்பியிருக்கும் புதுகைத்தென்றல் மற்றும் அவரது கணவருக்கு 13-ஆம் வருட திருமண நாள் வாழ்த்துக்கள்..