Sunday, November 29, 2009

Cheena- சீனா ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நமது இனிய நண்பரும், வலைச்சர பொறுப்பாசிரியருமான சீனா ஐயாவுக்கு இன்று (29-11-2009) பிறந்தநாள். அனைத்து வளங்களும் பெற்று அவரும், அவரது குடும்பத்தினரும் நலமோடு வாழ பிரார்த்திக்கின்றோம்.

வாழ்த்துவது
சங்கம்.

இந்த நல்ல நேரத்தில் ஒரு அழகான பாடலை அவரது பேரன் பேத்திகள் தயார் செய்த இனிய பாடலினை பரிசளிக்கின்றோம். நன்றி : Newbee அக்கா

அன்பு அம்மம்மா! ஆசை அய்யய்யா!
அச்சுவெல்லம் நாதன்! அருமைப் பொண்ணு நீனா!
அள்ளித்தரும் அன்பளிப்பே இந்தப்
பாசமிகுப் பாடல்!

அன்பை அறிவை அள்ளித்தந்தீர்!
ஆசையாய்ப் பாசமாய் அரவணைத்தீர்!
அன்புப் பிள்ளைகள் இருவரையும்
கண்ணின் மணியாய்க் காத்து வளர்த்தீர்!

எல்லைகள் இல்லாக் கோடுகள் அமைத்தே!
பிள்ளைகள் இரண்டுடன் சேர்ந்தே நடந்தீர்!
மனமும் மகிழும் புன்னகை தந்தே!
மாறா முகத்துடன் வாழ்ந்து காட்டினீர்!

அம்மா அப்பா எங்களையும்
சுஜா சேது அனைவரையும்
என்றும் கைபிடித்து வழிநடத்த
ஆண்டுகள் கோடி வாழ்கவே!

இன்னும் இன்னும் கதை சொல்ல!
இனித்து இனித்து சோறூட்ட!

பண்பாய் பலமாய் உயர்ந்துவர!
பாரினில் வெற்றிகள் பலகுவிக்க!

எங்கள் இருவரின் கைபிடித்தும்!
ஷாலு நந்துவின் உடன் சேர்ந்தும்!

அம்மம்மா அய்யய்யா இருவருமே!
என்றும் துள்ளியே தாவிவருவீர்!

அருமைச் செல்வங்கள் கைபிடித்தே!
ஆண்டுகள் நூறே வாழ்ந்து மகிழ்வீர்!

- என்றும் அன்புடன்
நாதன், நீனா,
ஷாலு, நந்து

சிவா- தர்சினி திருமண வாழ்த்துக்கள்

!! சிவா- தர்சினி திருமண வாழ்த்துக்கள் !!மேல் விபரங்களுக்கு - http://siva-dharsini.weddingannouncer.com/

வாழ்த்துகளை தெரிவிப்பவர் : "பார்வைகள்" கவிதா

Friday, November 27, 2009

மணநாள் வாழ்த்துகள், அமுதா!


"என் வானம்" தம்பதியினருக்கு இனிய மணநாள் வாழ்த்துகள்!! :-)

Wednesday, November 25, 2009

Wishes: வெளிச்சப் பதிவருக்கு திருமணநாள் வாழ்த்துகள் !

வெளிச்சப் பதிவர் என்று அழைக்கபடுபவரும், ஈழத்தமிழர்கள் மீது அளவற்ற அன்பும் கொண்டவருமான, பதிவர் அத்திவெட்டி (அலசல்) ஜோதி பாரதி இன்று ஏழாம் திருமண நாள் கொண்டாடுகிறார்.

சிங்கைப் பதிவர்கள் குழுசார்பாக வாழ்த்தியவர்கள்,
நண்பர் ஜோதி பாரதி மற்றும் திருமதி ஜோதி பாரதி இணையர்கள் எல்லா நலமும், வளமும் பெற்று என்றும் இன்புற்று வாழ வாழ்த்துகள்அன்புடன்

கோவியார்.
வாருங்கள், வாழ்த்துங்கள் !

Tuesday, November 24, 2009

அமித்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
அமிர்தவர்ஷினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!! :-)

இனிய பேச்சுகளாலும்
குறும்புகளோடும்
தொடரும் அமித்து அப்டேட்ஸ்களோடும்
மற்றுமொரு இனிய ஆண்டை அமித்துவுக்கும் அமித்து அம்மாவுக்கும் வாழ்த்துகிறோம்!

Thursday, November 19, 2009

Birthday: 'சிறு முயற்சி' முத்துலெட்சுமி

சிறு முயற்சி, சிறு முயற்சி எனக் கூறி கொண்டே பல பெரிய முயற்சிகளை செய்து அதில் வெற்றிக் கொண்டும், நம் மனதில் பல விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் விதத்தில் பதிவுகளை இட்டும் வரும் நம் சிறு முயற்சி முத்துலெட்சுமி அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

அவரு எடுக்கும் முயற்சிகள் எல்லாம் என்றும் வெற்றி பெறவும் அவர் தன் வாழ்வில என்றும் வளமோடும், மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறோம்.

வாழ்த்துவது

சங்கம்

Friday, November 13, 2009

Wedding: CVR - அபர்ணா

இது வரை...
லவ் சைண்டிஸ்ட் @ விண்வெளி சைண்டிஸ்ட் @ போட்டோ சைண்டிஸ்ட்.

இனி..
இல்லற வாழ்க்கை சைண்டிஸ்ட்..

யாருப்பா??????

நம்ம (அம்பி) CVR இன்று அபர்ணா அண்ணியின் கைகளை பிடித்து இல்லற வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கிறார்.


நமது வாழ்த்துக்கள் இந்த தம்பதிகளுக்கு உரித்தாகுக. ;-)

Thursday, November 12, 2009

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஆதிமூலகிருஷ்ணன்
பேச்சுலர்களின் குரு,
இளைஞர்களின் விடி வெள்ளி,
நெல்லையின் பிசி - பி.சி ஸ்ரீராம்,
தாமிரபரணி ஆறே வெட்கப்படும் தமிழன்
அகில உலக பேச்சு(இ)லர்களின் காவல் தெய்வம்


போங்க..! இன்னும் நிறையா புகழறதுக்குள்ள எனக்கும், நான் ஆதவனுக்கும் ஒரே வெக்கம் வெக்கமா வருது! [அவுருதான் மண்டபத்துல குந்திக்கிட்டு எழுதினாரு!]

ஸோ நேரடியா இனியபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சொல்லிட்டு அண்ணே நிறைய ஆசிகளை எங்களுக்கு கொடுக்கணும்ன்னு குப்புற வுழுந்து கும்பிட்டுக்கிறோம்!

Monday, November 9, 2009

NewBorn: அப்பாக்கள் கார்த்திகேயன் & ஷோபன் பாபு


ரெண்டு சந்தோஷமான விஷயம்ங்க..

முதல்ல ப்ளாக் யூனியன்ல செல்லமாக தல என்று அழைக்கப்படும் கார்த்திகேயன் - ஹேமலதா தம்பதியர் நவம்பர் 5-இல் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கா..

இரண்டு நாளுக்கு முன்னாடி அதாவது நவம்பர் 3-இல் ஷோபன் பாபு - ஷாந்தி தம்பதியருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்திருக்கா..

இந்த இரண்டு தம்பதியர்களுக்கும், முக்கியமாக இரண்டு புது அப்பாக்களுக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம். :-)

Happy Birthdays Kutties :-)

Tuesday, November 3, 2009

Wishes : இராம்/Raam நலம் பெற வேண்டி !

கேமரா இராம், பெங்களூர் இராம் தற்போது சிங்கை இளம் சிங்கம் இன்னும் என்ன என்னவோ பெயரில் அழைக்கப்படும் இராம்/Raam என்கிற இராம சந்திர மூர்த்திக்குக்கு தீபாவளிக்கு தமிழகம் சென்று வந்ததிலிருந்து கடுமையான காய்ச்சல்.

குவளை குவளையாக அங்கங்கே அங்கங்களைக் குத்தி இரத்தம் எடுத்து சோதித்து அறிந்ததில் டெங்கியோ அல்லது சிக்கன்குனியா இவற்றில் ஏதாவது ஒன்றாக இல்லது வெறும் வைரஸ் காய்சலாகக் கூட இருக்கும், வருகிற வியாழக்கிழமை (நாளை மறுநாள்) முடிவாக சொல்லிவிடுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்களாம் சிங்கை மருத்துவர் குழுவினர்.


கடந்த 10 நாட்களாக தம்பி இராம் வீட்டில் முடங்கி இருக்கிறார். எழுந்து நடமாட முடியாத அளவுக்கு உடல் நலிவுற்று தற்பொழுது கொஞ்சம் கொஞ்சம் பரவாயில்லை.

தம்பி இராம் விரைவில் குணமடைந்து கேமராவுக்கு புத்துயுர் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆர்லிக்ஸ், பழங்கள் வாங்கிக் கொண்டு நேரில் செல்ல முடியாதவர்கள், தம்பி இராம் விரவில் நலம் பெற வாழ்த்தலாம். வேண்டலாம்.

தம்பி இராம் விரவில் குணமடைய வாழ்த்துகள்
கோவியார்


Sunday, November 1, 2009

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் -நான் ஆதவன்இன்று பிறந்த நாள் கொண்டாடும் எம் இணைய நட்புச்சகோதரர் நான் ஆதவன் [aka] சூர்யா - மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுடன்....!