Showing posts with label Wedding. Show all posts
Showing posts with label Wedding. Show all posts

Monday, November 26, 2012

Wishes: சந்தோஷ்

எத்தனைக் காலங்கடந்தாலும், தன் கடமையிலிருந்து என்றும் தவறாது,
இணையத்தில் "பொங்கலோ பொங்கல்" வைத்து 
அனைவரையும் ஆல்டைம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்
சந்தோஷ்'க்கு - ப்ரியம்'முடன்
ஸ்பெஷல் பொங்கல் வைக்க ஒருவர் வந்துவிட்டார்.....


இன்று 26.11.2012 இல்வாழ்க்கையில் இணையும்

சந்தோஷ்குமார் & ப்ரியம்வதா

தம்பதியினர் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று

!!!! வாழ்க பல்லாண்டு !! வாழ்க வளமுடன்...!!!!




வாழ்த்துவோர்
- சங்கம்

Monday, August 20, 2012

Wishes : சூர்யா(ஆதவன்)-திவ்யா திருமண வாழ்த்துகள்

நிச்சயம் நடந்த நாளிலிருந்து
சிம் அட்டை வாங்கிய' நிறுவனத்திற்கு
தன் சொத்தில் பாதியை விற்று தந்து
சிங்கப்பூர்- சென்னை கைப்பேசி வழியாகவே
கடலைப்போட்டுக்கொண்டிருந்தவரை
சொத்து முழுதும் தீர்ந்து போவதற்குள் உஷாராகி
வீட்டில் திருமணத்தேதியை குறித்துவிட

இன்று

20.08.2012 (திங்கட்கிழமை)
காலை 9 மணி முதல் 10 மணிக்குள்
வடிவுடையம்மன் (திருவொற்றியூர்) சந்நிதியில் திருமணமும்,
 மாலை 7 மணிக்கு மேல்“கங்கா காவேரி திருமண மண்டப(ம்)”த்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது.

புலியையும், சேட்டனையும்
கைக்கழுவி விட்டு



திவ்யா'வை கைப்பிடிக்கும்
 ஆதவன் என்கிற சூர்யா;விற்கு
! இனிய திருமண நல்வாழ்த்துக்கள் !


அன்புடன் வாழ்த்துவோர்

சங்கம்


=> தொலைபேசியில் வாழ்த்து தெரிவிக்க : +91- 9094257429 (ஆதவன்)

Sunday, July 3, 2011

Wishes: ஆயில்யன் - திருமண வாழ்த்துகள்

இன்றைய முக்கியச் செய்தி

எலிஜிபிள் பேச்சிலர்களிலேயே மூத்தவரான அண்ணன் ஆயில்யன் அவர்களுக்கு இன்று திருமணம்


கத்தார் நாட்டுக்கே புலியாக இருக்கு அண்ணன் ஆயில்யன் அவர்கள்,
இனிமே வீட்டுல எலியாக இருப்பார் என அறிய வந்தோம்.  24 மணி நேரம் ஆன்லைனில் இருந்த காலம் போய் இன்று முதல் அண்ணார் 2.4 நொடிகள் மட்டுமே இணையத்தில் காணப்படுவார் என தகவல் அறிந்த வட்டாரம் தெரிவிக்கிறது.  இன்று வரை சமையல் என்பது என்வென்றே அறிந்திராத ஆயில்யன் அவர்கள் இனி மூன்று வேளையும் சமைப்பார் எனவும், சாப்பாட்டுக்கால இடைவெளியில் வடை, சொஜ்ஜி, பஜ்ஜி மற்றும் காபி டீ ஆத்துவார் என்றும் புலனாய்வு படை தகவல் தந்திருக்கிறது.

Twitterல் ரீட்வீட்டையே உலகுக்கு பிரபலப்படுத்திய அண்ணன் அவர்கள் இனி ரிவிட் வாங்கும் காலம் என வாநிலை ஆராய்ச்சியாளர்கள் மப்பும் மந்தாரமாக அறிவித்துள்ளார்கள்

இனிமே அண்ணன் ஆயில்யன் அவர்களை புடவை மடிக்கும் நேரத்திலோ, டிவி சீரியல் ஓடும் நேரத்தில் மட்டும் தொடர்பு கொள்ளவும் என அண்ணன் அவர்களே நேரடியாக நண்பர்களிடத்தில் மன்றாடி கேட்டுள்ளார்.

இப்படிக்கு
ஆயில்யன் அண்ணன் மேல பரிதாபப்படும் தம்பிகள்

------------------------------------------------------------------------------------
ஆயில்யன் - அனு தம்பதி 16 பேறும் பெற்று பெரு வாழ்வு வாழ என

வாழ்த்த வயதில்லாமல் விழுந்து கும்பிட்டுக்கிறோம்

Sunday, February 20, 2011

திருமண வாழ்த்து - சஞ்சய் காந்தி


இன்னார்க்கு இன்னார் என்று
இறைவன் நிர்ணயிக்க
இவருக்கு இவளே துணை என்று
இருவீட்டார் நிச்சயிக்க - இங்கே
இனிதாய் துவங்குகிறது ஒரு
இல்லறப்பயணம்

மத்தளங்கள் கொட்ட
மலர்க்கூட்டம் பொழிய
அட்சதையேற்று இவர்கள்
அமர்ந்திருக்கும் நேரம்
வாழ்க! வளர்க!! வளம் பல பெருக!!! என்று
எண் திசை அனைத்திலும் வாழ்த்துரை நிறைந்திருக்க
அன்றில் பறவையாய் மணமொன்றி வாழவும்
இசையும் இனிமையுமாய் இணைந்திருக்கவும்
அன்புருவால் நின்று ஆசீர்வதிக்கின்றோம்
தமிழ் வலைப்பதிவர்களாகிய நாங்கள்!

Sunday, May 16, 2010

Wishes - திவ்யப்ரியா


இன்று பெற்றோர், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களின் ஆசிகளுடன் தங்கள் வாழ்வின் புதிய அத்தியாயத்தை துவக்கும் திவ்யப்ரியா & சரவணன் தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் !!

வாழ்த்துவோர்,
சங்கம்.

Friday, February 19, 2010

Wedding - .::மை ஃபிரண்ட்::. @ அனுராதா - விஜயகுமார்



இன்று (19-02-2010) இல்லறம் என்னும் நல்லறத்துக்குள் புக இருக்கும் அருமைச் சகோதரி, தமிழ் பதிவிலகின் தன்னிகரில்லாத பின்னூட்டப் புயல், தேன் கிண்ணத்தில் குடி கொண்டிருந்த கோமகள், இனி M.விஜயகுமார் அவர்களின் மன சிம்மாசனத்தில் வீற்றிருக்கப் போகும் மணமகள் மலேசியாவைச் சேர்ந்த .:: மை பிரண்ட்::. @ அனுராதா அவர்களுக்கும், அவர்களது வாழ்க்கைத் துணைவருக்கும் இதயம் கனிந்த திருமண நல்வாழ்த்துக்கள்.




இருவரும் ஒருவராக இருமன ஒருமையோடு
இல்லறம் சிறக்க வாழ்ந்து என்றுமே இன்புற்றிங்கு
குயிலிவள் வாழ்த்திற்கொப்பக் குவலயம் போற்ற என்றும்
குறைவிலா மகிழ்ச்சியோடு குலமகள் வாழ்க வாழ்க!

வாழ்த்துவது
சங்கம்.

Thursday, February 18, 2010

Wishes : இன்று திருமணம் - அதிஷா (எ) வினோத்குமார் !


இன்று 18 பிப் 2010, மாசி 6, வியாழன், காலை இந்திய நேரப்படி 7:30 - 9:00 மணி அளவில் பெயர் பெற்ற பதிவரும், எழுத்தாளர், செய்தியாளர் மற்றும் எனது பலரது அன்புத் தம்பி அதிஷா என்கிற வினோத் குமாருக்கு M கல்பனாவுடன் திருமணம் நடை பெற இருக்கிறது.

நற்தமிழ் பதிவு கூறும் பதிவர் நல்லுலகம் திரண்டு வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பதிவர்கள் யுவ கிருஷ்ணா (லக்கிலுக்), சஞ்சய் காந்தி, கோவை அண்ணாச்சி மற்றும் கோவை, திருப்பூர் பதிவர்கள் அனைவரும் திருமணத்தில் கலந்து கொண்டிருப்பார்கள், அவர்கள் யாரையேனும் அலைபேசியில் தொடர்பு கொண்டு மணமகனுக்கு நேரடியாக வாழ்த்து சொல்லுவோர் சொல்லலாம்.

அதிஷாவை தொடர்புகொள்ள : +91 9884881824

வினோத்குமார் - கல்பனா இணையர்கள் என்றும் அன்புடன் இன்புற்று வாழ்க! வாழ்க !!

அன்புடன்
கோவியார்

Wednesday, November 25, 2009

Wishes: வெளிச்சப் பதிவருக்கு திருமணநாள் வாழ்த்துகள் !

வெளிச்சப் பதிவர் என்று அழைக்கபடுபவரும், ஈழத்தமிழர்கள் மீது அளவற்ற அன்பும் கொண்டவருமான, பதிவர் அத்திவெட்டி (அலசல்) ஜோதி பாரதி இன்று ஏழாம் திருமண நாள் கொண்டாடுகிறார்.





சிங்கைப் பதிவர்கள் குழுசார்பாக வாழ்த்தியவர்கள்,




நண்பர் ஜோதி பாரதி மற்றும் திருமதி ஜோதி பாரதி இணையர்கள் எல்லா நலமும், வளமும் பெற்று என்றும் இன்புற்று வாழ வாழ்த்துகள்



அன்புடன்

கோவியார்.
வாருங்கள், வாழ்த்துங்கள் !

Friday, November 13, 2009

Wedding: CVR - அபர்ணா

இது வரை...
லவ் சைண்டிஸ்ட் @ விண்வெளி சைண்டிஸ்ட் @ போட்டோ சைண்டிஸ்ட்.

இனி..
இல்லற வாழ்க்கை சைண்டிஸ்ட்..

யாருப்பா??????

நம்ம (அம்பி) CVR இன்று அபர்ணா அண்ணியின் கைகளை பிடித்து இல்லற வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கிறார்.


நமது வாழ்த்துக்கள் இந்த தம்பதிகளுக்கு உரித்தாகுக. ;-)

Wednesday, September 16, 2009

Wishes: புதசெவி !



இன்று நான்காம் ஆண்டு மணநாள் நிறைவு காணும்,
டிபிசிடி தம்பதிக்கு இனிய நல்வாழ்த்துகள்.

இன்று போல் என்றும்,
இன்னும் அனைத்து தேவைகளும் நிறைந்து வாழ்க !
வாழ்க !! வாழ்க !!!

Tuesday, September 15, 2009

wishes - ஜீவ்ஸ்


இன்று (15-09-2009) திருமண நாளை கொண்டாடும் ஜீவ்ஸ் அண்ணா - அருணா அண்ணிக்கு வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திப்போமாக.

Sunday, September 6, 2009

wishes - சோம்பேறி


இன்று (06-09-2009) மண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் பதிவர் சோம்பேறிக்கு எங்கள் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்.

Monday, August 24, 2009

Wishes: ரம்யா ரமணி

இன்று திரு.ஹரியுடன் இணைந்து தங்கள் வாழ்வின் புதிய அத்தியாயத்தை துவக்க இருக்கும் ரம்யா ரமணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !!



இரு வேறு நாவில் ஒரு வார்த்தைபேசி
ஆயிரம் கோடி ஆண்டுகள் பாடி
சந்தனம் பூசிய சந்ததி வாழ்க !!
(ஹிஹி.. வழக்கம் போல பாட்டுல இருந்து சுட்ட வரிகள் தான் ;-) )

Hearty Congratulations Hari & Ramya !!!

Sunday, July 12, 2009

திருமண வாழ்த்து(க்)கள் - ஸ்ரீமதி & கிரிதரன்




இனிமையான இல்லற வாழ்வில் இன்று (12-ஜூலை-2009) அடியெடுத்து வைக்கும் வலைப் பதிவர் கரையோரக் கனவுகளுக்கு சொந்தக்காரர் ஸ்ரீமதி மற்றும் கிரிதரன் இருவரையும் வாழ்த்துகின்றோம்.



மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ வலைப்பதிவர்கள் சார்பிலும், சங்கத்தின் சார்பிலும் வாழ்த்துகின்றோம்.


தமிழ் பிரியன்
ஆயில்யன்
நிஜமா நல்லவன்
கானா பிரபா
காதல் கறுப்பி
மற்றும் சங்கத்தினர்

இதே வேளை நம்ம சின்னப்பாண்டி ரொம்பவே இஷ்டப்பட்டு தங்கச்சி கல்யாணத்துக்கு ஒரு வாழ்த்துப் பாட்டு போடச்சொன்னார். பெரியபாண்டி அண்ணன் சின்னப்பாண்டி சார்பில் வழங்கும் மொய் இதோ

மணமாலையும் மஞ்சளும் சூடி புதுக்கோலத்தில் நீ வரும் போது
அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில் நனைந்தே நான் வாழ்த்துவேன்


Thursday, June 11, 2009

Wishes : நம்ம வீட்டு கல்யாணம் ! பொன்ஸ் என்கிற பூர்ணா - கணபதி

வலைப் பதிவர் மற்றும் வலைப் பதிவாளர்கள் பலரால் அறியப்பட்ட சகோதரி பொன்ஸ் என்கிற பூர்ணா அவர்களுக்கு கணபதி அவர்களுடன் இன்று காலை இந்திய நேரப்படி 07:30 - 09.00 மணிக்கு சென்னையில் திருமணம் நடைபெறுகிறது.

மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ வலைப்பதிவாளர்கள் சார்பிலும், என் இல்லத்தார் சார்பிலும் வாழ்த்துகிறேன்.


மணமக்களை அனைவரும் வாழ்த்துவோம் !

Sunday, November 23, 2008

Wishes : பாரி.அரசு வாழ்க்கைத்துணை நலன் ஏற்பு விழா !

பதிவர் பாரி.அரசு என்கிற அன்பரசுக்கு இன்று 24/நவம்பர்/2008 வாழ்கை துணை நலன் ஏற்பு விழா.

இடம் : கோமள விலாஸ் ராஜூ திருமண மண்டபம், பட்டுக்கோட்டை
நேரம் : காலை 9 மணி
தொலைபேசி : (+91) 9710556876

பெரியார் வழி சீர்த்திருத்த திருமணம் செய்வதை பற்றுறுதியாகக் கொண்டு, அதன் படியே இல்லற வானில் சிறகு விரிக்கும் பாரி.அரசு இணையர்களை இந்த இனிய பொழுதில் பதிவர்கள் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.




திருமணத்திற்கு செல்ல சிங்கை விமான நிலையத்தில் வாழ்த்தி வழியனுப்பும் பதிவர் நண்பர்கள்.


வெட்கப்படுகிறார்


பேச்சிலராக பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்



திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டார் (இடது பக்கம் வரிசையில் ஐந்தாவது)

Thursday, September 11, 2008

Wedding: அருண்குமார்


இன்று 11/09/2008-இல் க்லேவ்லண்ட் புகழ் அருண்குமார் ஸ்வப்னாவை கைப்பிடிக்கிறார். இத்திருமண பந்தத்தில் இணையும் அருண்குமார்-ஸ்வப்னா தம்பதிகள் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துவோம்.

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
ருண்குமார் - ஸ்ப்னா!

Wednesday, September 10, 2008

Wishes : திருமண வாழ்த்துகள்: மங்களூர் சிவா- பூங்கொடி !

பதிவுலகின் செல்லப் பிள்ளை, கொஞ்சம் ஜொள்ளுப் பிள்ளை மங்களூர் சிவாவுக்கும் - பூங்கொடிக்கும்

இன்று செப்டம்பர் 11, 2008 தேதி,

வியாழன் காலை 7.30 - 9.00 க்குள்
வடபழனி முருகன் ஆலயத்தில் நடைபெற இருக்கும் திருமணத்திற்கு சங்கம் வாழ்த்துப் பதிவர்கள் சார்பில், மாப்பிள்ளை வீட்டு சார்பில், பதிவர் நண்பர்கள் சார்பில்,

இன்றுபோல் மனம் ஒத்த இணையர்களாக என்றும் வாழ வாழ்த்துகிறேன் !








மாப்பிள்ளைக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவிக்க வேண்டியவர்கள் அலைக்க வேண்டிய கைபேசி எண் : +91 98458 95200.

அதற்காக விடிய விடிய அழைத்து அவரை தூங்கவிடாமல் செய்துவிடாதீர்கள். கூட இருப்பவர்கள் தூங்கவிடமாட்டார்கள் அது வேற.

இங்கே சிங்கையில் நள்ளிரவு 12, அங்கே சென்னையில் இரவு 9:30 பார்டி கலை கட்டி இருக்கும்.


பின்னூட்ட வாழ்த்துக் கவிதை எழுதி வதைக்கும் கும்மி பதிவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன் !

Friday, May 16, 2008

Wedding:வேதா

We wish you a very very happy Married Life(May 15th)

Tuesday, April 15, 2008

Wishes : குசும்பனுக்கு டும்... டும்.. டும் !

நமது அன்புக்குரிய பதிவர் நண்பர் குசும்பன் என்கிற சரவணன், இன்று (16 ஏப் 2008) இல்லறத்தில் அடி எடுத்து வைக்கிறார்.


குசும்பனின் அவர்களின் இல்லற வாழ்க்கை அவரைப் போலவே,
என்றும் குதுகலமாக இருக்கவும்,
மணமக்கள் எல்லா வளமும் பெற்று,
இனிதே இன்புற்று வாழவும்,

பதிவர்கள் சார்பாகவும்,
தனிப்பட்ட முறையிலும், அருமைத் தம்பி குசும்பனை வாழ்த்துவது

கோவி.கண்ணன்




குசும்பா,
கால் கட்டு வந்தாச்சு, இனி நீ பதிவில் ஓடி ஆடி, பெல்லி டான்ஸ் அழகியுடன் ஆடியதெல்லாம் எழுத முடியாதே !

என்ன கொடுமை சரவணா !!!



பின்குறிப்பு : கவிஜை எழுதி வாழ்த்தும் பாசக்கார பயபுள்ளைங்க பின்னூட்டத்தில் அதனை வெளிப்படுத்துமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.