Sunday, December 4, 2011

தேவ் ஆனந்த் - நினைவுகள்

தேவ் ஆனந்த் , மிக பிரசித்தி பெற்ற இந்திய பாலிவுட் நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். தேவ் ஆனந்த் தனது மூன்று சகோதரர்களில் இரண்டாவதாக பிறந்தவர். அவரது மூத்த சகோதரர் சேதன் ஆனந்த் ஒரு திரைப்பட இயக்குனர், அதேபோல் அவரது இளைய சகோதரர் விஜய் ஆனந்தும் இயக்குனர். அவர்களின் சகோதரி, ஷீல் காந்தா கப்பூர், புகழ் பெற்ற ஹிந்தி மற்றும் ஆங்கில திரைப்படத்துறையின் இயக்குனர் சேகர் கப்பூரின் தாயார்.

அனைத்துத்தரப்பு மக்களையும் தன் நடிப்பால் கவர்ந்த தேவ் ஆனந்த், நேற்று  3 டிசம்பர் 2011 லண்டனில் மாரடைப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 88.

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் பேட்டி ஒன்றில், தேவ் ஆனந்த் தான் தனக்கு முதல் இன்ஸிபிரேஷன் என்று சொல்லி இருந்தார். இன்று தேவ் ஆனந்த் மறைவிற்கு பின் அவருடைய பாடல்களை பார்க்கும் போது, சூப்பர் ஸ்டார் சொன்னது எத்தனை சரி என்பது தெரிந்தது.

நன்றி :விக்கிபிடியா

தேவ் ஆனந்த் அவர்களின் நினைவுகளாக -

Prem Pujari - Phoolon Ke Rang Se Dil Ki Kalam Se - Kishore Kumar


Saturday, November 19, 2011

Birthday : கயல்விழி முத்துலட்சுமி

சிறுமுயற்சி கயல்விழி முத்துலட்சுமி இன்று (19.11.11) தன் பிறந்த நாளை கொண்டாடுகிறார்.


அவருக்கு

!! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!வாழ்த்துவோர்
சங்கம்


Sunday, November 13, 2011

Birthday : அபிஅப்பா

தொல்ஸ் என்கிற தொல்காப்பியன் 

"தீபா வெங்கட்" புகழ்
அபிடாடி
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

சங்கத்து சிங்கங்களில் (மூத்த) சிங்கமான அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !

வாழ்த்துவோர்
ஆல் சிங்கம்ஸ் 

Monday, November 7, 2011

Birthday: கமலஹாசன், வெங்கட் பிரபு, பாடகர் கார்த்திக், அனுஷ்கா

இன்று திரையுலகத்தில் பிறந்தநாள் கொண்டாடும் கமலஹாசன், இயக்குனர் வெங்கட் பிரபு, பாடகர் மற்றும் இசையமைப்பாளர் கார்த்திக், மற்றும் ‘கார்க்கி’ புகழ் அனுஷ்கா ஆகியோருக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!Birthday: பத்மஸ்ரீ கமல்ஹாசன் பிறந்தநாள்

திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது 57 ஆவது பிறந்தநாளை இன்று 7.11.2011 கொண்டாடுகிறார்.அவருக்கு இணைய நண்பர்கள் அனைவரின் சார்பாகவும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !


களத்தூர் கண்ணம்மா வில் 1960 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த “குட்டி கமல்”, தொடர்ந்து 51 ஆண்டுகள் கலைத்துறையில் தனக்கென்ற (பல்வேறு) முத்திரைகளை பதித்த ஒரு பிரம்மாண்டம். கலைஞானியின் கலைப்பயணம் இன்னும் பல ஆண்டுகள் தொடர நல்வாழ்த்துக்கள் !!

உலக நாயகனே.....


சங்கம் மக்கள்ஸ்

Saturday, November 5, 2011

Birthday: பிறந்தநாள் வாழ்த்துக்கள் - சென்

05.11.2011

இன்று பிறந்த நாள் கொண்டாடும்

என் அன்பு நண்பண்


ASK Sen.. (a) சென்' க்கு


என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

by


Joseph Paulraj

Wednesday, November 2, 2011

அவசர உதவி தேவை ....

புற்றுநோயால் அவதிப்படும் இரண்டு வயது குழந்தைக்கு ரத்தம் தேவை

தந்தை பெயர் . திரு. பார்த்திபன் / செல்பேசி எண் - 8939307543

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

எந்த ஒரு ரத்த வகை இருந்தாலும் பெற்றுக் கொண்டு அந்த மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு தேவையான வகை தருவதாக வாக்களித்துள்ளனர்.

ஆதலால் எந்த ஒரு ரத்த வகையினரும் ரத்தம் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதை உங்களால் முடிந்த வரை ஷேர் செய்யவும். சென்னையில் உள்ள அனைவருக்கும் போய் சேரட்டும்.

நன்றி

சங்கம்

Birthday: பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ஆதவன் (சூர்யா)

எங்கள் (என்) பாசக்கார ஜூனியர்நான் ஆதவனுக்கு


மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)) (2-11-2011)


அவன் ரொம்பவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படத்தில் இருந்து


அவனுக்காக


ஒரு பாடல் ! http://thenkinnam.blogspot.com/2011/10/blog-post_22.html
தேன் கிண்ணம்: பிறை தேடும் இரவிலே உயிரேபாசக்கார சீனியர்
கோபி

Monday, October 17, 2011

Birthday: "யாவரும் நலம்" சுசி - பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

இன்று பிறந்த நாள் கொண்டாடும் (17-10-2011)

யாவரும் நலம் சுசி அவர்களுக்கு

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-)

வாழ்த்துகளுடன்

சங்கம் & நண்பிடி & தம்பிடா

Thursday, September 15, 2011

ஹாய் நான் சூர்யா..

..."ஹாய் நான் சூர்யா. இந்த குறுந்தகவலை படிச்சுட்டு உங்க நண்பர்களுக்கும் ஃபார்வேடு பண்ணுங்க"


"வசதியின்மை காரணமாக தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிற மாணவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளவும். உங்கள் கல்வி தொடர நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன்."


அகரம் பவுண்டேஷன் நிர்வாகியின் தொலைபேசி 9841091000.


இந்த செய்தியை நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பலாமே?


Thanks : UnmaiThamizhan Annachi !


Monday, September 12, 2011

நட்புகளே, உயிர் காக்க உதவுங்கள்

இந்தக் குழந்தை நண்பர் கேவிஆர் அவர்களின் கல்லூரி நண்பரின் மருமகள். அவரின் மின்னஞ்சலை உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறார்.

Friends,
Maanya, my niece, is a year old baby. Two months back we came to know that she was born with – a rare genetic disease (HURLER disease – MPS 1). Doctors have advised Cord blood stem cell transplant being the permanent solution for this disease. At present she is undergoing Enzyme replacement therapy and Cord blood stem cell transplant has been fixed on 15 September 2011 at Sir Ganga Ram Hospital, New Delhi. Estimated cost for the treatment is around 30 Lakhs. Though the appeal to seek monetary assistance is perturbing, we feel it inevitable. Please forward this to your close friends and relatives and include Maanya in your prayer for speedy recuperation. Certificates issued by the doctor in this regards are enclosed in the website www.savemaanya.com

Details for donation kindly refer our website.Thank you for free minutes you spent to read this mail and be free to contact us.

Please find below my HDFC account details
Account Number: 04441140001202
Bank Name : HDFC Bank
Branch Name : CHENNAI - VELACHERY
Address : 30 K G TOWERS,
VELACHERY BYEPASS ROAD,
VELACHERY,CHENNAI,
TAMILNADU-600042
City : CHENNAI - VELACHERY
District : CHENNAI
State : Tamil Nadu
Micr Code : 600240018IFSC
Code : HDFC0000444

Mobile numbers
G.Gowthaman+91-9444175409
K.Ganesh ( Maanya’s Father )+91-9971706838

Thanks & Regards,
G.Gowthaman

Please visit www.savemaanya.com

Birthday: பிறந்தநாள் வாழ்த்துக்கள் - வினையூக்கிஅருமை அண்ணன்

ஜெனியின் கண்ணன்ஸ்வீடன் மாப்பிள்ளை


பேய்க் கதைகளின் நாயகன்கேப் விடாமல் கடலை போடும் மன்மதன்


அன்பு சீனியர்

பேச்சில் இனியர்


அண்ணன் வினையூக்கி அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!


வாழ்த்துவோர்

அதே பழைய சங்கம் &
அதே பழைய வாழ்த்து !Sunday, September 11, 2011

திருமணநாள் வாழ்த்துகள் - மணிஜி தம்பதியனர்இருபத்தி ஐந்தாவது திருமண நாள் காணும்


"மணிஜி தம்பதியனர்களுக்கு "

! இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் !
- வாழ்த்துவது சங்கம்

Birthday: பிறந்தநாள் வாழ்த்துக்கள் - அருண்குமார்

இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும்


அருண்குமார்'

அவர்களுக்கு
எங்களது

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!
-வாழ்த்துவது சங்கம்

திருமணநாள் வாழ்த்துகள் - மங்களூர் சிவா-பூங்கொடி


இன்று மணநாள் காணும்

"மங்களூர் சிவா, 'ஹேய்டி' பூங்கொடிக்கு "

மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துகள்!!


- வாழ்த்துவது சங்கம்

Friday, September 9, 2011

Birthday: விஜி ராம்


விவரம் சொல்லித்தான் தெரியனும்னு இல்லை, சிங்கத்துக்கு எதுக்கு Intro?

Wednesday, September 7, 2011

Birthday: சஞ்சய்அன்பு = சஞ்சய்
வம்பு = சஞ்சய்
தும்பு = சஞ்சய்


பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

இப்படிக்கு,
சஞ்சய்க்கே குல்லா போட்டு அழகு பார்ப்போர் சங்கம்

Saturday, September 3, 2011

Birthday: பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாரணி

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாரணி !
 
அன்பின் மறுபெயர் தாரணி ..
எங்கள் தாரணிக்கு அன்பு செலுத்த மட்டுமே தெரியும்..
பிறர்க்கு இன்னா செய்ய என்றும் மனமற்ற தாரணி ...
எப்போதும் கல்மிஷமற்ற சிரிப்பை உதிர்த்து செல்லும் தாரணி .....
தன் பெருமை தானறியா தாரணி ....
என் உடன் பிறக்காவிட்டாலும் என் சகோதரியாய் நான் மதிக்கும் தாரணி....
உலகில் எத்தனையோ நண்பர்கள் இருந்தாலும் மனதிற்கு நெருக்கமாய் ஒரு சிலர் மட்டுமே தோன்றுவர் அப்படி என் மனதிற்கு நெருக்கமான என் பிரிய தோழி தாரணிக்கு இன்று பிறந்த நாள் அவர்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பிற்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என எனக்கு தெரியாது ... எப்போதும் தாரணிக்கான இடம் என் மனதில் இருந்து நீங்காது தாரணி நீங்கள் கடவுள் கிருபையால் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம்  

வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் மா .....

Thanks Sakthi :) 

Wednesday, August 31, 2011

Birthday: யுவன் சங்கர் ராஜா


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

Tuesday, August 23, 2011

Birthday: நரேன் முதல் வருட பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!

Nagaisiva & Dharsini 's
Son

Little Naren,
Today You're One
I can't believe a Year has gone
No longer a baby as your character comes out
We know You're Around, as You Scream and Shout
So Enjoy All the Toys, Chocolates and 
Blessings You Get Today !

Chella Kutty Naren ..

!! Wishing You A Very Happy 1st Birthday !! 
 

Friday, August 19, 2011

கருணை புரிய தருணமிதுவே!

அம்மாபேட்டை கணேசன் அவர்களை வைத்து எடுக்கும் ஆவணப்படத்திற்கு விதைத்தவசம் என்று தலைப்பிட்டிருக்கிறேன். நேற்று நானும் தனபாலும் கால்கட்டு அவிழ்க்க அந்தியூர் சென்று வந்தவரை பார்த்து வரலாம் என்று போயிருந்தோம். செல்லச்சொக்கு போட்டிருந்தார், கால் வலி தாளாமாட்டாதவராய். கொஞ்சம் மனவருத்தமும் கூட...

பக்கத்து வீட்டு அம்மையிடம் சோமாரக் கெழமையென்ன படம் புடிக்க சீனீமாக்கார பசங்க வராங்க என்று பெருமை பீற்றிக் கொண்டார் போல . அந்த அம்மைக்கு கொஞ்சம் வாய் சாஸ்தி. கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியத் தூக்கி மனையில வையிங்கறாப்பல இருக்கப்பட்ட மொகரக்கட்டைங்கள வுட்டுட்டு இந்த நடையழகனத்தாம் படம் புடிக்க வர்றாங்களா? என்று ஏவிடியம் பேசிவிட்டாளாம். எலும்பு கூடி நட வந்து நானும் வேசம் போட்டு ஆடறனோ இல்லியோ லட்சம் உரூவா செலவானாலும் போச்சாது!

 எம்மூஞ்சி எதுனாச்சிம் உள்ளூரூரு சினிமாக்கொட்டாயில தெரியாட்டி போவுது கலைஞரு குடுத்த பொட்டியில வர்ற மாதிரியாச்சும் ஒரு ஏப்பாடு பண்டிவுடு என்றவரை கண்கரிக்க பார்த்திருந்தேன். கோரியபடிக்கு ஒரு சில இடங்களில் உதவிக்கரம் நீண்டிருக்கிறது. கையிருப்பு போக நிதியாதாரம் இன்னும் தேவையிருக்கிறது. அந்த ஏழைக்கலைஞனின் ஆவலை நிறைவேற்ற அன்பர்களே
ஆவணப்பட த்திற்கு பண உதவி செய்வதைக் குறித்து மறுபடியும் ஒருமுறை பரிசீலியுங்கள் .

குறிப்பு:
--------------

கண்ணனாக கனகராஜ் வாத்தியாரும் துரியனாக அம்மாபேட்டை கணேசன் அவர்களும் சந்திக்கும் காட்சி.
அபிமன்னன் சுந்தரி கல்யாணம் : கூத்து.

உதவி செய்ய தொடர்புக்கு: 9894605371
8/16 Mayil ravanan: ஆவனப்படத்துக்கு இல்லாட்டியும் ஒரு 'Mobile Stage' - பெயர்த்தகு மேடை தயாரிக்க முடிவு செஞ்சிருக்கோம் கூத்துக்கலைஞர்களுக்காக.
8/16 Mayil ravanan: அதுக்கு 25ஆயிரம் ரூபாய் Estimate. கண்டிப்பா உங்களில் முடிஞ்சவங்க பொருள் உதவி செஞ்சாதான் முடியும்.
8/16 Mayil ravanan: நன்றி க இராமசாமி
8/16 Mayil ravanan: நன்றி kavi rajan
8/17 Mayil ravanan: நன்றி தினேஷ் குமார் (முகிலன்)
8/17 Mayil ravanan: M.Harikrishnan,
Account no: 534323956
Indian Bank,
Mecheri. 636451

Micr Code : 636019092
IFSC Code: IDIB000M025

உதவி செய்ய நினைப்பவர்கள் மேற்கண்ட இந்தியன் வங்கி எண்ணுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டுகிறேன்.

Mayil Ravanan

Friday, July 8, 2011

Birthday: கவிதாயினி காயத்ரிகவிதைகள் எல்லாம் அதிரடி,
படிக்கிறவங்களுக்கு கன்பார்ம்டு ஏர்வாடி,

கையில வெச்சுக்கிறாங்க மெஹந்தி,
இவுங்க கூட சேட் பண்ணினா நமக்கு வரும் பீதி.

நம்பர் வெச்ச ஜிமெயில் ஐடி,
ஜிடாக்ல லாகின் பண்ணினா போயிருங்க பேசாம ஓடி.

மலையில கிடைக்கும் திணை,
இவுங்க கவிதை படிச்சா நமக்கு வரும் வினை,

டீ ஆத்துறதுல இவுங்க செம கில்லாடி,
பாலை கவிதை படிச்சவன் குடுப்பான் கல்லடி.

பதிவுக்கு வெச்ச பேரு பாலை,
படிச்சா கலங்குறது நம்ம மூளை.

மக்கள் இவுங்களுக்கு குடுத்த பட்டம் கவிதாயினி,
காயத்திரி பதிவு போட்டா, படிப்பியா நீ?

பொண்ணுங்களுக்கு புடிச்ச கலரு பிங்கு,
இவுங்க பிலாக் படிச்சா ஊதுறாங்க சங்கு.

பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா..
மெட்ராசுக்கா...திருச்சிக்கா..திருத்தணிக்கா..
கவிதை எல்லாம் போட்டு
இனிமே எங்களை கொலை பண்ணவேணாங்க்கா

யானைக்கு இருக்கு தும்பிக்கை,
இவுங்க கவிதை எல்லாம் ஒரே மொக்கை.

தட்டி தட்டி கை யெல்லாம் வலிக்குது,
ஜல்லடை இல்லாமலேயே இவுங்க பதிவு எல்லாம் சலிக்குது.

அம்மணிக்கு கொஞ்சம் தலையில ஓவர் வெயிட்டு,
கலருமட்டும் கிராபிக்ஸ் இல்லாத சிவாஜி ஒயிட்டு.


என்னிக்குமே காளை மாடு பாலு தராது,
நல்லா கலாய்ச்சுக்கோ, சான்ஸ் போனா வராது.


கவிதையாலே எங்களை
கல்லால அடிக்கும்
கவலைப் படாத காரிகை
கவிதாயினி காயத்ரிக்கு பிறந்த நாள்(8-ஜூலை) நல்வாழ்த்துக்கள்

Wishes by
Sangam Groups.


இது பழைய பதிவு தான்.... என்ன பண்ண...!! வருசம் திரும்பிருச்சே....... :)

Thursday, July 7, 2011

New Born: குட்டி சுறா

ஊர்ல இவருக்கு பேர் சுறா. கார்த்தி என்று கூப்பிட்டா, “மொக்கை” சிவா மாதிரி Call me Sura அப்படின்னு உருமற ஆள் இவரு.  விகடன்ல அவர் படம் ஒரு பக்கத்துக்கு போட்டப் கூட நாங்க எல்லாம் ரொம்ப பயந்துட்டோம். ஆனா பயப்பட்ட மாதிரி 1000 பேர் எல்லாம் புரபோஸ் பண்ணலை. பேட்டா விலை மாதிரி ஜஸ்ட் 999 பேர் மட்டுமே புரபோஸ் பண்ணினாங்க.

சரி, கார்த்தியோட முழுநேர தொழில் என்னான்னு தெரியுங்களா”? “ஃபாலோ பண்றது” . மேலும் விளக்கனும்னா கீழே இருக்கிற படத்தைப் பார்த்துக்குங்க. இந்தப் படம் பார்த்தும் புரபோஸ் பண்ற இளைஞிகளுக்கு சொல்லிக்கிறது ஒன்னுதான் . 6-ஜூலை அன்னிக்குதான் குட்டி சுறா பிறந்தாரு. வாழ்த்துகள் சுறா (அ) கார்த்தி

பட உதவி: விகடன்
படம் எடுத்தது: ஜீவ்ஸ்

Birthday: Boston SriRam

வயசு என்னமோ நாய் புத்தி வந்து நாலு வருசம் ஆனாலும்  எனக்கு இப்போதான் 23 என்று சொல்லுவாரு. நம்பிடவா போறோம். பரவாயில்ல சந்தோசப்பட்டுக்கட்டுமே.

24 வது அகவையில் அடியெடுத்து வைக்கும் அன்னாருக்கு எங்களது வாழ்த்துகள்(வழக்கமா நான் சொல்றாப்ல வுழுந்து கும்பிட்டுகிறேன்னு சொல்லப்படாதுங்கிறது உத்தரவு)

பி.கு:மேல இருக்கிற படம் எடுத்து 18 வருசம்தான் ஆச்சாம்.

Birthday: சிறில் அலெக்ஸ்


இனிக்க இனிக்க தேனாக கதை வழியவிடும், தமிழ்ச்சங்கத்தின் ஒரு தூணான சிறில் அலெக்ஸ் அவர்களை வாழ பல்லாண்டு என அவரது பிறந்தநாளில் (7-7) Sangam Groups வாழ்த்தி பெருமைப்பட்டுக்கொள்கிறது.

Wednesday, July 6, 2011

Birthday: தூயா

இணையத்து சமையல் குறிப்பு பதிவுகளின் அரசி (எகொஇச) தூயா’வுக்கு இன்னிக்கு பிறந்தநாள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ...இங்கு வாழ்த்து பின்னூட்டங்கள் இடுபவர்களுக்கு தூயா தன் கையால் சமைத்த உணவு விருந்து வழங்குவார் என அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.

Monday, July 4, 2011

Wishes: ’வாத்தியார்’ இளவஞ்சி

இன்று (04-07-)பிறந்த நாள் காணும்

எங்கள் ஆசான்

இனிமே இவருக்குத் தேவை வயாக்ரா
பேசினா முன்னாடி இருக்கிறவன் மூஞ்சியில நயாகராவாழ்த்த வயதில்லை
கீழ வுழுந்து கும்புட்டுக்கறோம்!

இனிய பொறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்யாரே....!!!

Sunday, July 3, 2011

Wishes: ஆயில்யன் - திருமண வாழ்த்துகள்

இன்றைய முக்கியச் செய்தி

எலிஜிபிள் பேச்சிலர்களிலேயே மூத்தவரான அண்ணன் ஆயில்யன் அவர்களுக்கு இன்று திருமணம்


கத்தார் நாட்டுக்கே புலியாக இருக்கு அண்ணன் ஆயில்யன் அவர்கள்,
இனிமே வீட்டுல எலியாக இருப்பார் என அறிய வந்தோம்.  24 மணி நேரம் ஆன்லைனில் இருந்த காலம் போய் இன்று முதல் அண்ணார் 2.4 நொடிகள் மட்டுமே இணையத்தில் காணப்படுவார் என தகவல் அறிந்த வட்டாரம் தெரிவிக்கிறது.  இன்று வரை சமையல் என்பது என்வென்றே அறிந்திராத ஆயில்யன் அவர்கள் இனி மூன்று வேளையும் சமைப்பார் எனவும், சாப்பாட்டுக்கால இடைவெளியில் வடை, சொஜ்ஜி, பஜ்ஜி மற்றும் காபி டீ ஆத்துவார் என்றும் புலனாய்வு படை தகவல் தந்திருக்கிறது.

Twitterல் ரீட்வீட்டையே உலகுக்கு பிரபலப்படுத்திய அண்ணன் அவர்கள் இனி ரிவிட் வாங்கும் காலம் என வாநிலை ஆராய்ச்சியாளர்கள் மப்பும் மந்தாரமாக அறிவித்துள்ளார்கள்

இனிமே அண்ணன் ஆயில்யன் அவர்களை புடவை மடிக்கும் நேரத்திலோ, டிவி சீரியல் ஓடும் நேரத்தில் மட்டும் தொடர்பு கொள்ளவும் என அண்ணன் அவர்களே நேரடியாக நண்பர்களிடத்தில் மன்றாடி கேட்டுள்ளார்.

இப்படிக்கு
ஆயில்யன் அண்ணன் மேல பரிதாபப்படும் தம்பிகள்

------------------------------------------------------------------------------------
ஆயில்யன் - அனு தம்பதி 16 பேறும் பெற்று பெரு வாழ்வு வாழ என

வாழ்த்த வயதில்லாமல் விழுந்து கும்பிட்டுக்கிறோம்

Wednesday, June 15, 2011

Wishes: ஆட்சியர் ஆனந்த குமார்

ஈரோடு மாவட்ட கலைக்டர் திரு.ஆனந்தகுமார் அவர்கள் தனது மகள் கோபிகாவை இன்று பஞ்சாயத்து துவக்கப்பள்ளி , குமளான்குட்டை ,ஈரோடு இல் 2 வகுப்பில் சேர்த்துள்ளார்!  அவரின் இந்தச் செயலை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்!
இவண் 
ஈரோடு பதிவர் குழுமம்

Wednesday, June 8, 2011

திருமண வாழ்த்துக்கள்: கப்பி பய!

சான்றோர் உடைய தொண்டை நாட்டிலே, பட்டு போல் ஜொலிக்கும் ஆரணியிலே!!

* ஞானக் குழந்தை
* சிறுகதைச் சிற்பி
* சங்கத்தின் சிங்கம்
* காஞ்சித் தலைவன்
* கோலிவுட்டின் ஹ்ருதிக் ரோஷன்
......இப்படியான பல பட்டங்களைச் சுமந்து நிற்கும்

தி ஒன் & ஒன்லி ஒன்.....கப்பி பய
அண்ணலுக்கு இன்று திருமணம்! (Jun-8-2011)
சங்கத்தின் கடைக்குட்டிக் கல்யாணம் :)) அதுனால கடலை உடைச்சிக் கல்யாணம்! :))

பாக்யரதி - அப்பண்டை ராஜ்
என்னும் இந்த திவ்ய தம்பதிகளை....வாழ்த்துங்க மக்கா!!!


மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடை தாமம் நிரைதாழ்ந்த பந்தல்கீழ்
மைத்துனன் கப்பி அப்பண்டைராஜ் வந்துன்னை
கைத்தலம் பற்ற மணங்கண்டாய் பாக்யரதி!


இளவரசர் வில்லியம் திருமண விருந்தை மிஸ் பண்ணவங்க எல்லாம், இன்னிக்கி இளவரசர் கப்பி கொடுக்கும் ராயல் விருந்துக்கு ஆஜராயிடுங்க!

இனிக்கும் இல்லற வாழ்த்துக்கள், specially for Kappi, specially from me! :)
and all of us, from Sangam! Sangam! Sangam!

Friday, May 27, 2011

Birthday: ஜிராஇவனுக்கு மூன்று முகம் :)

இவன் தலைவனுக்கு ஆறு முகம்! :)


நம்ம ஜிரா என்னும் கோ.இராகவனுக்கு
இன்று,
(May-27-2011)
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க, மக்கா! :)
ஒரு ஊர்ல...ஒரு நாள்....சில்க் ஸ்மிதா + முருகன் + ஜிரா - மூவரும் சந்தித்த பதிவு இங்கே! :)
Happy Birthday Ragava :)

Thursday, May 19, 2011

Birthday: லவ்டேல் மேடி

ஈரோட்டுப் பெண்களின் மாதவன்(மேடி)
காரோட்டும் பெண்களின் கேடி,
 தறியோட்டும் பெண்களின் ரெளடி,
கறிவெட்டும் பெண்களின் கரடி..

மேடி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

இவண்
ஈரோடு தமிழ்ப்பதிவர்கள்

Tuesday, March 22, 2011

மாப்பி பவனுக்கு பிறந்தநாள்

ஊர்ல பேச்சு வழக்கில் சொல்லுவாங்க “ங்கொப்பனுக்கு தப்பாம பொறந்திருக்க” பாருன்னு, அதுமாதிரி சிங்கக்குட்டி பவன் அப்படியே அப்பா வெங்கியை உரிச்சிவெச்சிக்கிட்டு இருக்கான்...

மாப்பி இன்று 5 வது பிறந்த நாளை கொண்டாடுகிறான். அப்பா மாதிரியே சேவைகள் பல செய்து நன்றாக இருக்கும் படி வாழ்த்துகிறேன்.


Friday, March 18, 2011

Wishes: பாஸ்டன் ஸ்ரீராம்- It's a Baby Girl

புரொபைல்ல சின்ன வயசுல எடுத்தப் படத்தைப் போட்டு, நம்மளை எல்லாம் ஏமாத்தின பாஸ்டன் ஸ்ரீராம் இன்று(Mar-17 8:25PM EST) ஒரு தேவதைக்கு தகப்பனாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.

Many Many Many more happy returns of the Day SriRam! :)


Sunday, February 20, 2011

திருமண வாழ்த்து - சஞ்சய் காந்தி


இன்னார்க்கு இன்னார் என்று
இறைவன் நிர்ணயிக்க
இவருக்கு இவளே துணை என்று
இருவீட்டார் நிச்சயிக்க - இங்கே
இனிதாய் துவங்குகிறது ஒரு
இல்லறப்பயணம்

மத்தளங்கள் கொட்ட
மலர்க்கூட்டம் பொழிய
அட்சதையேற்று இவர்கள்
அமர்ந்திருக்கும் நேரம்
வாழ்க! வளர்க!! வளம் பல பெருக!!! என்று
எண் திசை அனைத்திலும் வாழ்த்துரை நிறைந்திருக்க
அன்றில் பறவையாய் மணமொன்றி வாழவும்
இசையும் இனிமையுமாய் இணைந்திருக்கவும்
அன்புருவால் நின்று ஆசீர்வதிக்கின்றோம்
தமிழ் வலைப்பதிவர்களாகிய நாங்கள்!

Wednesday, January 5, 2011

Wishes - ஆயில்யன்வலையுலக, ட்விட் உலக பிரம்மாக்களின் தோழரும், எங்கள் சங்க தலைவருமான நண்பர் ஆயில்யன் இன்று (05-ஜனவரி-2009) 17 வது வயதில் இருந்து 16 வது வயதுக்கு திரும்புகின்றார். என்றும் தனது 18 வயதை தொடாமல் இளமையுடன் பல்லாண்டு வாழ கத்தார் பதிவர்கள் சங்கம் சார்பாகவும், சங்கம் சார்பாகவும், இன்னும் நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.