வெயிலில் மழை எதிர்நோக்கும் குளுமையான கவிதைகளுக்கு சொந்தக்காரர் அன்பு நண்பர் “ஜி”யின் பிறந்த நாளில்,
மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களுடன்....!
ஒரு இளைஞன் எந்தவிதமான சமூக சூழல்களுக்கிடையில் அகப்பட்டுக்கொண்டு சைட் அடிக்க முற்படுகிறான் என்பதையும் அதன் மூலம் பெற்ற கருத்துக்களையும் பகிர்ந்துக்கொள்ளும் ஜி...!
வான தேவதைகளெல்லாம்
கல்லூரியிலும்
கணினி கம்பெனியிலும்
இடம்பெயர்ந்து விட்டதால்
இந்திரனும் இங்கே
விருப்ப ஓய்வுப் பெற்று
கிழிந்த ஜீன்ஸ் அணிந்து
சுற்றித் திரிகிறானாம்...
ஃபிகர் அலைவரிசையில்
அறிவிப்பு
விட்டில் பூச்சுகளின்
அணிவகுப்பு
கார்த்திகை தீபமேந்திய
மண்ணுலக மங்கைகள்...
'அழகுப் பெண்ணின் அப்பன்'
அடைமொழிக்காகவே உங்களைக்
கள்ளத் தேரில்
கடத்தி வந்தார்களோ
எங்களது அங்கிள்கள்...
உங்களை அழகாய்ப்
படைத்தவனுக்கு
எப்படித்தான் மூக்கில் வியர்க்குமோ?
ஆஜானுபாகுவாய்
அண்ணன்களையும்
கூடவே படைத்து விடுகிறான்...
உங்கள் சேலைகளின் வண்ணங்களைத்
தோற்க்கடிக்க முடியாமல்
பட்டாம்பூச்சிகளெல்லாம்
வண்ணத்தை உதிர்த்து
வடக்கிருந்து உயிர் துறக்கின்றனவாம்...
அது எப்படியடி
உங்கள் கல்லூரி எதிர்கடையில் மட்டும்
அமிர்தம் கிடைக்கிறது?
நீங்கள் நடைபயிலும்
மாலை நேரத்தில்
நாங்கள் அருந்தும்
நாயர் கடை டீயைத்தான் சொல்கிறேன்...
'தொலை நோக்குப் பார்வை வேண்டும்'
பொருளாதார ஆசிரியர்
பாடம் நடத்துகிறார்
தொலைவில் வரும் ஃபிகர்களை
தொய்வில்லாமல் நோக்கும்
எங்கள் திறனறியாமல்...
நீங்கள்
கடந்து செல்லும்போதுமட்டும்
எங்களை
மாதவனையும் மிஞ்சும்
அழகாய்க் காட்டுகிறது
இந்த மாயக்கண்ணாடி...
எங்களுக்கான ஆயுள்தண்டனை
வரும்வரை பார்வையிடுவோம்
அதற்குப்பின்னும்...
ஜெயிலுக்குள் அடிக்கும்
திருட்டு 'தம்'மாய்...
நன்றி:- பூமி தேவதைகள்
11 comments:
மீ த பர்ஸ்ட்டூ இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)))
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி ... :)))
Happy Anniversary...
err....
Happy Birthday ஜியா! :))
இனிப்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்பமும் இனிமையுமாய் பல பிறந்தநாட்கள் உனக்கு அமைய இறைவன் அருள் வேண்டிக் கொள்கிறேன்! :)
போதும் போதும்...Orchard Road-ல ட்ரீட் எப்போ-ன்னு ராயல் கேக்கக் சொல்றாரு! :)
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அண்ணன் @ மொட்டை பாஸ் ஜிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். :-)
ஹேப்பி பர்த்டே ஜி!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி ;)
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
Post a Comment