Wednesday, October 28, 2009

பிறந்தநாள் வாழ்த்துகள் தீபா!!
”சிதறல்கள்” தீபாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!! :-)

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பப்பு!


கா கா' என்று என்னிடம் கா விடுகிறாய். பதிலுக்கு நானும் 'கா' விட்டால் கவலை கொள்கிறாய். நான் 'கா' விடக் கூடாதென்று கத்துகிறாய். நீ கா விட்டாலும், நான் சேலஞ்ச்தான் விடணும் என்று சொல்கிறாய் - ஆச்சி
- இனி பப்பு ’கா’ விட்டால் ஆச்சி பதிலுக்கு ‘கா’ விடக்கூடாது என்ற மிகப்பெரிய அட்வைஸோடு, இனியபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வதில் பெருமை கொள்கிறோம்!

பப்பு பேரவை

Tuesday, October 20, 2009

New born Wishes : குசும்பன் & மஞ்சு

குசும்பன் & மஞ்சு தம்பதியருக்கு இன்று அதிகாலை 4.15 மணிக்கு அழகிய (பையன் மஞ்சு மாதிரி தான் இருக்காராம். அதனால இந்த வார்த்தை கரெக்டு தான் :D) ஆண் குழந்தை பிறந்துள்ளது. பெற்றோராய் ப்ரோமோஷன் வாங்கியிருக்கும் தம்பதியருக்கும், ஜீனியர் குசும்பருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள் :)வாழ்த்துவோர்,
சங்கம்

Saturday, October 17, 2009

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - யாவரும் நலம் - சுசி


இனித்திருக்கும் இனிய தீபாவளி திருநாள் கொண்டாட்டங்களோடு, இன்று பிறந்தநாள் கொண்டாடும் "யாவரும் நலம் " சுசி அக்காவிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

வாழ்த்துக்களுடன் ...
கோபிநாத்
அமீரகம்

Thursday, October 15, 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள் - எ.பி.ஜெ.அப்துல் கலாம்தனது இலக்கைக் குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும் புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள்

வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம் ஆக்கபூர்வமான சிந்தனை; கற்பனைக் கண்ணோட்டம்; நம்பிக்கை என நான்காகும்.
-அப்துல் கலாம்


அக்டோபர் 15ல் - இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களுடன் வணங்குகிறோம்...!

Wednesday, October 14, 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள் - மதுமதிஇன்று உந்தன் இனிய பிறந்த நாளில்

உடன்பிறப்புக்களாய் ஒடோடி வந்து சொல்லும் நெருக்கத்தில்

நாங்கள் இல்லாவிட்டாலும் கூட,

உடன்பிறவா உயிர்களாய் இணைக்கும் இதயத்தோடு

இணையம் இருக்கும் இடத்திலிருந்தே

வாழ்த்துத்தோரணங்கள் தொகுத்து அனுப்புகிறோம்!

ஏற்றுகொள் எம் சகோதரியே!

உன் வாழ்வில்

பெருமை கொள் சகோதரியே!

நட்புகள் வாழ்த்தும் இந்த நாளுக்காய்....!

Saturday, October 10, 2009

Wishes: கொங்குராசா

கொங்குநாட்டுத் தங்கம், கொங்குராசா:

Blessed with a Baby Girl

Monday, October 5, 2009

Wishes - தினேஷ் & கோமா அம்மா

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தினேஷ் மற்றும் கோமா அம்மாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !!


வாழ்த்துவது,
சங்கம்.

Thursday, October 1, 2009

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஜி


வெயிலில் மழை எதிர்நோக்கும் குளுமையான கவிதைகளுக்கு சொந்தக்காரர் அன்பு நண்பர் “ஜி”யின் பிறந்த நாளில்,
மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களுடன்....!

ஒரு இளைஞன் எந்தவிதமான சமூக சூழல்களுக்கிடையில் அகப்பட்டுக்கொண்டு சைட் அடிக்க முற்படுகிறான் என்பதையும் அதன் மூலம் பெற்ற கருத்துக்களையும் பகிர்ந்துக்கொள்ளும் ஜி...!


வான தேவதைகளெல்லாம்
கல்லூரியிலும்
கணினி கம்பெனியிலும்
இடம்பெயர்ந்து விட்டதால்
இந்திரனும் இங்கே
விருப்ப‌ ஓய்வுப் பெற்று
கிழிந்த‌ ஜீன்ஸ் அணிந்து
சுற்றித் திரிகிறானாம்...

ஃபிக‌ர் அலைவ‌ரிசையில்
அறிவிப்பு
விட்டில் பூச்சுக‌ளின்
அணிவ‌குப்பு
கார்த்திகை தீபமேந்திய‌
ம‌ண்ணுல‌க‌ ம‌ங்கைக‌ள்...

'அழ‌குப் பெண்ணின் அப்ப‌ன்'
அடைமொழிக்காக‌வே உங்க‌ளைக்
க‌ள்ள‌த் தேரில்
க‌ட‌த்தி வ‌ந்தார்க‌ளோ
எங்க‌ள‌து அங்கிள்க‌ள்...

உங்களை அழகாய்ப்
படைத்தவனுக்கு
எப்படித்தான் மூக்கில் வியர்க்குமோ?
ஆஜானுபாகுவாய்
அண்ணன்களையும்
கூடவே படைத்து விடுகிறான்...

உங்கள் சேலைகளின் வண்ணங்களைத்
தோற்க்கடிக்க முடியாமல்
பட்டாம்பூச்சிகளெல்லாம்
வண்ணத்தை உதிர்த்து
வடக்கிருந்து உயிர் துறக்கின்றனவாம்...

அது எப்படியடி
உங்கள் கல்லூரி எதிர்கடையில் மட்டும்
அமிர்தம் கிடைக்கிறது?
நீங்கள் நடைபயிலும்
மாலை நேரத்தில்
நாங்கள் அருந்தும்
நாயர் கடை டீயைத்தான் சொல்கிறேன்...

'தொலை நோக்குப் பார்வை வேண்டும்'
பொருளாதார ஆசிரியர்
பாடம் நடத்துகிறார்
தொலைவில் வரும் ஃபிகர்களை
தொய்வில்லாமல் நோக்கும்
எங்கள் திறனறியாமல்...

நீங்கள்
கடந்து செல்லும்போதுமட்டும்
எங்களை
மாதவனையும் மிஞ்சும்
அழகாய்க் காட்டுகிறது
இந்த மாயக்கண்ணாடி...

எங்களுக்கான ஆயுள்தண்டனை
வரும்வரை பார்வையிடுவோம்
அதற்குப்பின்னும்...
ஜெயிலுக்குள் அடிக்கும்
திருட்டு 'தம்'மாய்...


நன்றி:- பூமி தேவதைகள்