Friday, July 30, 2010

Wishes : அழகிய சிங்கர் மற்றும் அருஞ்சுவை சங்கர் !

பதிவுலக பெருந்தைகள் இருவருக்கு இன்று பிறந்த நாள், எத்தனையாவது என்று கேட்காதீர்கள் கவர்ச்சி குறைந்துவிடும் :)

********சொந்தங்களே,

30-07-2010 பிரபல பாடகர் ”அண்ணண்” புதுகை அப்துல்லா , பிரபல இயக்குநர் அண்ணண் கேபிள் சங்கர் எனப்படும் சங்கர் நாரயணண் இருவருக்கும் பிறந்த நாள்.

என்னோடு இணைந்து உங்கள் வாழ்த்த உங்களை அழைக்கிறேன்.

ஜூலையில் பிறந்த சூரர்கள் சங்கத்தின் சார்பாக சிறப்பு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


இப்படிக்கும்
ஜோசப் பால்ராஜ்

Sunday, July 25, 2010

Wishes: சீனா ஐயாவின் பேத்தி நீனாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள் !

நமது சீனா ஐயா - செல்விஷங்கர் அம்மாவின் செல்லப் பேத்தி நீனாவுக்கு இன்று முதல் பிறந்தநாள், குழந்தை எல்லா வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துவதுடன், நீனாவின் பெற்றோர்களுக்கும் நல்வாழ்த்துகள்.

அன்புடன்
கோவியார்.நீனாக் கண்ணா ! நீ
நிமிர்ந்து பார்த்து சிரிக்கிறாய் !
நீண்ட உலகம் உனக்குத்தான் !
கைகள் தட்டி ; கண்கள் சிமிட்டி !
கனி வாய் திறந்து மகிழ்கிறாய் !
மணியாய் மகிழ்ந்து ! பிரியா
இதழ்கள் நாதம்(ன்) இசைக்கும்
நல்ல குடும்பம் உனக்கு !
நல்லவை எண்ணி ! நாளும்
சிறக்க நல்வாழ்த்துகள் !
நாளை உலகம் உனக்குத்தான் !
நான்முகக் கடவுள் நல்குவான் !
நாளும் மலர்ந்து ! நன்றாய் மணக்க !
அய்யய்யா ! அம்மம்மா ! அன்பு வாழ்த்துகள் !
அண்ணன் ! அக்கா ! ஆடி மகிழ
கூடி மகிழும் குழந்தை நீ !
குவளையம் சிறக்க
குறுநகை புரிவாய் !

அன்புடன்
சீனா

Wednesday, July 21, 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள் .:: மை ஃபிரண்ட் ::.


இது சங்கீத திருநாளோ!

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ

சின்னச் சின்ன ஆசைகள் சித்திரங்கள் வரைந்தாள்..

முத்தமிட கன்னங்களும் நனைந்தாளே..

கொஞ்சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..

கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்..

கண்களை பின்புறம் வந்து மூடுவாள்..

செல்லம் கொஞ்சித் தமிழ் பாடுவாள்..

தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்..

உறங்கும் பொழுதும் என்னைத் தேடுவாள்..

அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்..

பூவெல்லாம் இவை போல அழகில்லை..

பூங்காற்றில் இவை போல சுகமில்லை..

இதுபோல சொந்தங்கள் இனியில்லை..

எப்போதும் அன்புக்கு அழிவில்லை..

இவள்தானே நம் தேவதை..

நடக்கும் நடையில் ஒரு தேர் வலம்..

சிரிக்கும் அழகு ஒரு கீர்த்தனம்;

கண்ணில் மின்னும் ஒரு காவியம்;

மனதில் வரைந்து வைத்த ஒரு ஓவியம்;

நினைவில் மலர்ந்து நிற்கும் ஒரு பூவனம்..

என்றும் எங்கும் இவள் ஞாபகம்..

இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்..

இருபக்கம் காக்கின்ற கரையாவேன்;..

இமையாடும் பொன்னூஞ்சல் நானாவேன்..

இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்..

எப்போதும் தாலாட்டுவேன்..

சின்னச் சின்ன ஆசைகள் சித்திரங்கள் வரைந்தாள்..

முத்தமிட கன்னங்களும் நனைந்தாளே..

கொஞ்சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..

இது சங்கீத திருநாளே!

எம் இனிய இணைய நட்பிற்கு,
எங்களின் இணைய தமிழ் சகோதரி ..::மைபிரண்டு::.. இன்று பிறந்த நாள்!எம் மனம் மகிழ வாழ்த்துகிறோம்!


புடிச்சு போட்ட பாட்டு இங்கே இருக்கு பார்க்கலாம் :-)

Tuesday, July 20, 2010

சீமாச்சு அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!

இன்று நம் சீமாச்சு அண்ணாவுக்கு பிறந்த நாள். அவர் எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல அவருக்கு பிடித்தமான வைத்தீஸ்வரன் கோவில் அருள் மிகு செல்வமுத்துகுமரனை வேண்டுகிறோம்.

குறிப்பு #1: இதிலே யார் சீமாச்சு அண்ணா என கேட்பவர்களுக்கு அண்ணன் அவர்கள் தன் கையால் ஒரு பவுன் மோதிரம் பரிசளிப்பார் என தன்னடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றோம்.

குறிப்பு # 2: வந்து வாழ்த்துங்க. வேற எதும் இல்லை.

Thursday, July 15, 2010

Wishes : நிஜமா நல்லவருக்கு நிஜமான தேவதை !

பதிவுலக அன்புத்தம்பி நிஜமா நல்லவருக்கு இரண்டாவது குழந்தையாக குட்டி தேவதை பிறந்திருக்கிறாள்.
Baby Profile Graphics and Commentsகுட்டி தேவதை நல்லாசிகள், பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், குட்டி தேவதையின் சுட்டி அண்ணனுக்கும் நல்வாழ்த்துகள் !

Monday, July 12, 2010

Wishes: ஜெயஸ்ரீ ஐயப்பன்

இன்று(12-07-2010) 4வது பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படப் பிதாமகர், புனைவுகளின் திருமகர், வெண்பா வாத்தியார் ஐயப்பன்(ஜீவ்ஸ்) அண்ணாச்சியின் குட்டி தேவதை ஜெயஸ்ரீயை எல்லாரும் வாழ்த்தலாம். கூட்டமா கெளம்பி வாங்க.நினைவாஞ்சலி- உமர் தம்பி, சிந்தாநதி

இதே நாளில்(ஜூலை-12-2006) நம்மை எல்லாம் விட்டுப் பிரிந்த தமிழ் இணையத் தந்தை என அழைக்கப்படும் உமர் தம்பி , ஜூலை-8 ல் நம்ம விட்டுப்பிரிந்த அண்ணல் சிந்தாநதி அவர்களுடைய நினைவுகளையும் சங்கம் சார்பாக பதிகிறேன். மறக்க இயலுமா இந்த இருவரையும்?

Saturday, July 10, 2010

Wishes : பிறந்த நாள் - மாரனேரி ஜோசப் பால்ராஜ் !

ஜூலை 11, சமூக சேவகர், கொடையாளர், பலருக்கு கல்விக்கண் திறக்கும் அருளாளர், பதிவர் திரு மாரனேரி ஜோசப் பால்ராஜ் என்ற பெயருடைய சின்னவா யூசுப் பால்ராஜ் ஐயங்காருக்கு இன்று பிறந்த நாள்.ஆசிகளுடன் நல்வாழ்த்துகள்
பெரியவா கோவியார்
சிங்கப்பூர்


********

மேலும் சிறப்பு வாழ்த்துப்பாடலை இணைத்து வாழ்த்துபவர் அத்திவெட்டி திரு ஜோதிபாரதி,


தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலை கனி வயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாயிடம் உருவாகி

வண்ணம் பாடி ஒரு வளர் தென்றல் தாலாட்ட
கண்ணம் பாடி அணை கடந்து நலம் பாடி

ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர நீர்வீழ்ச்சி எனும் பேரில்
நீண்ட வரலாறாய்

வீடு தாண்டா கற்பு விளங்கும் தமிழ் மகள் போல்
ஆடு தாண்டும் காவிரியாய்
அடங்கி நடந்து
அகண்ட காவிரியாய் பின் தவழ்

கரிகாலன் பேர் வாழும் கல்லணையில் கொள்ளிடத்தில்
காணும் இடமெல்லாம் தாவிப் பெருகிவந்து
தஞ்சை வள நாட்டைத் தாயாகிக் காப்பவளாம்
தனிக்கருணை காவிரி போல்

செல்லும் இடமெல்லாம் சீர்பெருக்கி பேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்

பிள்ளையென நாளும் பேச வந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக்கனி
எங்கள் இதயக்கனி இதயக்கனி

நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணி பாடுங்கள்


நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
பாடுபட்டு சேர்த்த பொருளை கொடுக்கும்போது இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தை பார்க்கும்போது இன்பம்
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை

நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது
பிரித்து வைத்து பார்ப்பதெல்லாம் மனிதன் இதயமே
உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே

நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

நதியை போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்
கடலை போல விரிந்த இதயம் இருந்திட வேண்டும்
வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்


நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

Thursday, July 8, 2010

Wishes: கவிதாயினி காயத்ரி
கவிதைகள் எல்லாம் அதிரடி,
படிக்கிறவங்களுக்கு கன்பார்ம்டு ஏர்வாடி,

கையில வெச்சுக்கிறாங்க மெஹந்தி,
இவுங்க கூட சேட் பண்ணினா நமக்கு வரும் பீதி.

நம்பர் வெச்ச ஜிமெயில் ஐடி,
ஜிடாக்ல லாகின் பண்ணினா போயிருங்க பேசாம ஓடி.

மலையில கிடைக்கும் திணை,
இவுங்க கவிதை படிச்சா நமக்கு வரும் வினை,

டீ ஆத்துறதுல இவுங்க செம கில்லாடி,
பாலை கவிதை படிச்சவன் குடுப்பான் கல்லடி.

பதிவுக்கு வெச்ச பேரு பாலை,
படிச்சா கலங்குறது நம்ம மூளை.

மக்கள் இவுங்களுக்கு குடுத்த பட்டம் கவிதாயினி,
காயத்திரி பதிவு போட்டா, படிப்பியா நீ?

பொண்ணுங்களுக்கு புடிச்ச கலரு பிங்கு,
இவுங்க பிலாக் படிச்சா ஊதுறாங்க சங்கு.

பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா..
மெட்ராசுக்கா...திருச்சிக்கா..திருத்தணிக்கா..
கவிதை எல்லாம் போட்டு
இனிமே எங்களை கொலை பண்ணவேணாங்க்கா

யானைக்கு இருக்கு தும்பிக்கை,
இவுங்க கவிதை எல்லாம் ஒரே மொக்கை.

தட்டி தட்டி கை யெல்லாம் வலிக்குது,
ஜல்லடை இல்லாமலேயே இவுங்க பதிவு எல்லாம் சலிக்குது.

அம்மணிக்கு கொஞ்சம் தலையில ஓவர் வெயிட்டு,
கலருமட்டும் கிராபிக்ஸ் இல்லாத சிவாஜி ஒயிட்டு.
என்னிக்குமே காளை மாடு பாலு தராது,

நல்லா கலாய்ச்சுக்கோ, சான்ஸ் போனா வராது.
கவிதையாலே எங்களை

கல்லால அடிக்கும்

கவலைப் படாத காரிகை
கவிதாயினி காயத்ரிக்கு பிறந்த நாள்(8-ஜூலை) நல்வாழ்த்துக்கள்


Wishes by
Sangam Groups.


இது பழைய பதிவு தான்....2007, 2008 வருடத்தின் மீள்பதிவே. என்ன பண்ண...!!

Wednesday, July 7, 2010

Wishes: Boston ஸ்ரீராம்இன்று(07.07.10)பிறந்தநாள் கொண்டாடும் பாஸ்டன் ஸ்ரீராம் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

குறிப்பு: மேலேயுள்ள புகைப்படம் 17 வருடத்துக்கு முன்பு எடுத்தது.Saturday, July 3, 2010

Wishes: ’வாத்தியார்’ இளவஞ்சி

இன்று (04-07-2010) பிறந்த நாள் காணும்

எங்கள் ஆசான்இனிமே இவருக்குத் தேவை வயாக்ரா

பேசினா முன்னாடி இருக்கிறவன் மூஞ்சியில நயாகரா

வாழ்த்த வயதில்லை

கீழ வுழுந்து கும்புட்டுக்கறோம்!


இனிய பொறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்யாரே....!!!


Wishes: Gopinathஇன்று (03-07-2010)
பிறந்த நாள் கொண்டாடும்
அமீரகச்சிங்கம்
கோபிநாத்திற்குவாழ்த்துக்கள்!