வாழ்த்துகளால் மட்டும் வாழ்வு இல்லை,
வாரங்களாய் மாதங்களாய்
ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்கிறாய்
என் பிறந்த நாளை,
இன்று விருந்து கேட்கத்தோன்றிய உனக்கு
வாழ்த்து சொல்ல விருப்பமில்லையோ நண்பா?
போடா...
- ரசிகவ் ஞானியார்
*********************************************************************
எவருமே
திருப்பித் தரஇயலாத
நான் பிறந்த அந்த நாளை
இன்றைய இலக்கம் மட்டும்
போலியாய் நிர்ணயிக்கின்றது
வாழ்த்துகள் பிரதியெடுத்து
பதிப்படுகின்றது
ம்
நான் கொடுத்தது
எனக்கே திருப்பி
ஒவ்வொரு பிறந்தநாளும்
நான் இறப்பதற்கு
ஒரு வருடத்தை குறைக்கிறது
யாராவது
வாழ்த்துங்களேன்
- ரசிகவ் ஞானியார்
************************************************************
இன்று பிறந்தாள் கொண்டாடும் ஞானியாருக்கு அவருடைய கவிதைகளைக் கொண்டே வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா!
1 comment:
கவிதைன்னாவே அது நிலவு நண்பந்தான். எத்தனை கவிதைகள், கண்ணீர் துளிகள். நண்பா, போதும் உன் ஓய்வு. வா! வந்து கவிதை படி. காதலிகளை, காதலை மறக்கச் சொல், தந்தைய வீட்டில் வைக்க வை.....
Post a Comment