Tuesday, July 1, 2008

Austin, Texas-இல் உள்ள நண்பர்கள், உடனடியாக பதிவர் சீமாச்சுக்கு உதவுங்களேன்!

விக்னேஷ்! ஆஸ்டின் பல்கலையில், அண்மையில் தான் BS முடித்தவர்!
சுமார் இருபது-இருபத்திரண்டு வயது! மேல்படிப்புக்குப் புகழ் பெற்ற CalTech-இல் இடம் கிடைத்துள்ளது!
சில மணி நேரத்துக்கு முன்பு, தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்!

இவர் நம் சகோதரப் பதிவர், சீமாச்சு அண்ணாச்சியின் உறவினர்!
பெற்றோர்கள், உடலைத் தாயகத்துக்குக் கொண்டு செல்ல, இந்தியாவில் இருந்து புறப்பட்டாகி விட்டது! சீமாச்சு அண்ணன் இன்னும் சில மணியில் நார்த் கரோலினாவில் இருந்து, ஆஸ்டின் கிளம்புகிறார். மிகவும் உடைந்து போயுள்ளார்!

அறிமுகம் இல்லாத புதிய ஊர்!
* மருத்துவமனைச் சடங்குகள், இதர formalities - இவற்றின் போது ஒரு மாரல் சப்போர்ட்டாகவோ, இல்லை வண்டி ஓட்டிச் சென்றோ,
சிறு சிறு உதவிகள் செய்ய முடியுமா?
** இல்லை, இது போன்ற சமயத்தில், உடலைத் தாயகம் கொண்டு செல்லும் வழிமுறைகளைச் சொல்லி உதவ முடியுமா என்று கேட்கிறார்!

யாரேனும் நம் சகோதர பதிவர்கள் Austin, Texas-இல் இருந்தால்,
சீமாச்சு அண்ணாச்சியைத் தொடர்பு கொள்ள முடியுமா?
அவர் அலைபேசி எண்: 1-781-696-5814


இளைஞர் விக்னேஷின் இன்னுயிர் அமைதி பெற இறைவனை வேண்டிக் கொள்கிறோம்!
பெற்றோருக்கும், சீமாச்சு அண்ணனுக்கும் நம் ஆறுதல்கள்!

11 comments:

கானா பிரபா said...

:-(

ஆயில்யன் said...

:-(

சிறில் அலெக்ஸ் said...

:(
Kodooram

வல்லிசிம்ஹன் said...

இந்தியாவிலிருந்து இதுக்கா அங்க வந்தது இந்தப் பிள்ளை.:(

Muthu said...

நெஞ்சம் துடித்தும் கனத்தும் போனது. நண்பர் திரு.சீமாச்சுவின் வேதனையில் நானும் பங்கு கொள்கிறேன்.

அன்பரே, உடனடியாக ஆஸ்டினில் என் நண்பர் திரு.பாலாஜி ஐயங்கார் என்பவரை 512-785-1010 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள சொல்லவும். என் பெயர் முத்துக்குமார். நான் 2000-ல் ஆஸ்டினில்தான் இருந்தபோது ஒன்றாக வேலை பார்த்தோம். (நானும் மயிலாடுதுறைகாரன்தான்)

அங்கே இருக்கும் வேறு சில நண்பர்களை தொடர்பு கொள்ள முயல்கிறேன்.

வேதனையுடன்
முத்துக்குமார்

சீமாச்சு.. said...

அன்பு நண்பர்களின் உதவிகளுக்கு நன்றி. செய்தி கேள்விப்பட்டு 5 மணி நேரங்களே ஆகியுள்ளன. பையனின் பெற்றோர் இந்தியாவிலிருந்து வந்து கொண்டிருக்கின்றனர்.

காரணங்கள் இன்னும் தெளிவாகவில்லை. ஆஸ்டின் போனால் தான் தெரியும் போலிருக்கிறது..

நானும் பையனின் பெற்றோரும் புதன் காலை அங்கு இருப்போம்.

இந்த அனுபவம் எனக்குப் புதிது. விக்னேஷ் என் மனைவியின் சொந்த மாமா மகன். அவன் பெற்றோருக்கு ஒரே மகன்.

இந்த நிலயில் எந்த உதவியும் சிறியது இல்லை.. ஆஸ்டின் நகரிலிருந்து ஃபார்மாலிடீஸ் முடிக்க எந்த உதவி தெரிந்தாலும் சிரமம் பார்க்காமல் தெரிவிக்கவும்.
உங்கள் அன்புக்கு என்றும் நன்றியுடன்,

சீமாச்சு

Kannabiran, Ravi Shankar (KRS) said...

முத்துக்குமார்
மிகவும் நன்றிங்க!

நீங்க கொடுத்த தொலைபேசி எண்ணை இன்று பின்னிரவு அவருக்குப் ஃபோன் போட்டுச் சொல்லி விடுகிறேன்!

Muthu said...

அன்புள்ள சீமாச்சு மற்றும் கண்ணபிரான்,

நான் நண்பர் பாலாஜி-க்கும் இன்னொரு நண்பர் திரு.பேட்ரிக் பிச்சப்பா-வுக்கும் அரை மணி முன்னதாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். எங்கள் கல்லூரி தோழர்களை (AVCC) யாஹூ மின்குழு மூலமாகவும் தொடர்பு கொண்டுள்ளேன். (உங்கள் முழுப்பெயர் தெரியாததால் 'என் வலைப்பூ நண்பர் திரு.சீமாச்சு என்பவர் தொடர்பு கொண்டால் இயன்ற உதவி செய்யவும்' என்று மின்னஞ்சலில் கேட்டுள்ளேன்)

முடிந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரி தரவும்.

அன்புடன்
முத்துக்க்குமார்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

muthukumar
seemachu's mail id is cio2003@yahoo.com

Seemachuvukkum ippo thaan tholai pesinen! Ungal nanbar, Balaji avargali-n number-ai kurithu vaithu kondar.
Houston Counsulate-ilum pesi ullar.

Matra vivarangal, arinthathum ingu tharugiren. Nandri, muthukumar!

சின்னப் பையன் said...

:-(

சீமாச்சு.. said...

நிறைய உதவிகள் வந்துள்ளன. நிறைய பயனுள்ள செய்திகள்..

இன்னும் சில கேள்விகள் இருக்கின்றன், நாளைக் காலை ஆஸ்டின் பயணம்.

still I have many more dots to connect. This weekend is going to be very heavy on our family. With all your love and affection.. I am sure I will get all the strength to face the reality..

The curtains are going to open for me.. I know what to expect.. Its going to be the most painful days I may have..

Will update you all after all settles..

Thanks for your love.. I feel I owe a lot to this society..

அன்புடன்,
சீமாச்சு..