Wednesday, April 9, 2008

Wishes: வல்லியம்மா! 60th பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

நாம் எல்லோரும் வல்லியம்மா என்று அன்புடன் அழைக்கும் வல்லி சிம்ஹனுக்கு இன்று மணிவிழாப் பிறந்த நாள்! (Apr 9th)

ராணுவ ரகசியத்தை வேணும்னாக் கூட வெளியில சொல்லலாம்! ஆனால் பெண்களின் வயசை மட்டும் வெளியில் சொல்லவே கூடாது! அப்படின்னு கீதையில் (சும்மானாங்காட்டியும்) சொல்லி இருக்கு! :-))))
ஆனா மக்களே, நம்ம வல்லியம்மாவின் மிகவும் ஸ்பெஷல் தினமான இன்று, அவரிடம் வாழ்த்து கூறி ஆசி பெறுவது என்பது எவ்வளவு சிறப்பானது!

இதுக்கு என்ன பண்ணலாம்-னு யோசிச்சிக்கிட்டே காலாற நடந்தேனா, அப்படியே என்னையும் அறியாமல் சென்னையில், வல்லியம்மா வீட்டுக்குப் போயிட்டேன்! பக்கத் துணைக்கு நம்ம திராச ஐயா! ரெண்டு பேருமா அம்மா வீட்டில் பலகாரங்களை ஒரு கட்டு கட்டிவிட்டு, இப்போ தான் வீடு வந்து சேர்ந்தோம்!

இன்று, அம்மாவிடம் வாழ்த்தை நேரிடையாகச் சொல்லி ஆசி பெற்றதில் எனக்கு அளவிலா மகிழ்ச்சி!
அப்படியே "60th பிறந்த நாள்"-ன்னு போடலாமா-ன்னு அம்மாவிடம் அனுமதி கேட்டேன்! அதுக்கென்னப்பா தாராளமாப் போடு-ன்னு சொல்லிட்டாங்க! ஆகா...வயதை மறைக்கத் தான் வேணுமா என்ன?
அரக்கு ரோஜா பட்டுச் சேலையில் வல்லியம்மா ஜொலி ஜொலிக்க, அவங்க முகப் பொலிவும், குரல் கனிவும்,
வல்லியம்மா என்றுமே வருத்தப்படாத வாலிபி தான்! :-)

சஷ்டியப்த பூர்த்தி என்னும் மணிவிழாக் கொண்டாட்டங்கள் பல சமயம் திருக்கடையூர் அபிராமி அம்மன் சன்னிதியில் செய்வது வழக்கம்!
பாலாம்பிகை உடனுறை மிருத்தயுஞ்ஜெய சுவாமியின் முன்னிலையில் நீண்ட ஆயுள் நல்வளம் வேண்டிச் செய்வார்கள்!
அதனால் நம்ம வல்லியம்மாவுக்கும் அபிராமி அந்தாதியின் பாடலைச் சொல்லி வாழ்த்துகிறோம்!
அன்புப் பிள்ளைகள் எல்லாரும் இந்த நன்னாளில் வீழ்ந்து வணங்குகிறோம்!

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே!


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வல்லியம்மா!
இன்னுமொரு நூற்றாண்டு இரும்! Happy Birthday to You! :-)
டீச்சரின் வாழ்த்து இங்கே

வல்லியம்மாவின் தேன் குரல், துள்ளும் இளமைக் குரல் பதிவு இங்கே!16 comments:

கண்மணி said...

வாழ்த்துக்கள் அம்மா இன்னும் பல நூறு ஆண்டுகள் நோய் நொடியின்றி த்ம்பதி சமேதராய் வாழனும்

வெட்டிப்பயல் said...

வாழ்த்துக்கள் அம்மா...

ILA(a)இளா said...

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

அகவை அறுபது காணும்
மிகவும் இனிய வல்லியம்மா,
பதிவின்னும் பலவிட்டு
பல்லாயிரம் (பின்னூட்டம்) காண வாழ்த்துக்கள்;)

பலகாரம் பகிராது படங்கூட பதியாது
பகர்ந்திட்ட பதிவ'ரவி'க்கு கண்டனம்!

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் அம்மா...

துளசி கோபால் said...

இனிய தோழிக்கு வாழ்த்து(க்)கள்.

இப்பத்தான் உங்க பெயரையெல்லாம் சொல்லி ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மசால்வடை
துன்னேன்.

ஏதா?

சிங்கை கோமளவிலாஸ் உபயம்.

கொஞ்சம் (???)ஆறிப்போயிருச்சு(-:

கோவி.கண்ணன் said...

வல்லியாம்மாவின் மணி விழா குறித்து பெருமகிழ்ச்சி !

வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் !

VSK said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

குமரன் (Kumaran) said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் வல்லியம்மா.

இன்னுமொரு நூற்றாண்டிரும் என்று பெரியோர்களை வாழ்த்தும் மரபின் படி அடியேனும் வாழ்த்தினேன்.

cheena (சீனா) said...

சகோதரி வல்லிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நல்லாண்டு நல்வாழ்வு வாழ நல்வாழ்த்துகள்.

மதுரையம்பதி said...

வாழ்த்துக்கள் வல்லியம்மா.....

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அம்மா...;)

தென்றல் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,அம்மா!

ஓகை said...

வாழ்த்துகளும் வணக்கங்களும்.

அன்புடன்
நடராஜன்.

ஷைலஜா said...

பிறந்தநாள் வாழ்த்துகள்! இன்னும் ஒரு நூற்றாண்டிரும்.

(முத்தமிழ் குழுல முன்கூட்டி வாழ்த்து சொல்லிட்டேன் இங்கதான் லேட் மன்னிங்க வல்லிமா)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரவி, இந்தப் பதிவை நான் பார்க்காமல் விட்டேனே.

வெகு சந்தோஷம். இங்கு வாழ்த்திய அனைத்து அன்பு மனங்களுக்கும் நன்றி.

அப்ப்போது வீட்டில் தம்பி மகனுக்குத் திருமணம். அந்த ஓட்டத்தில் பதிவைப் பார்க்காமல் விட்டு விட்டேன். மீண்டும் நன்றி .இந்த அன்புக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும். என் ஆசீர்வாதங்கள் அனைவருக்கும். நீண்ட நெடுங்காலம் நோய் நொடியின்றி மனம் நிறைந்த வாழ்வு வாழ ஆசிகள்.