Friday, April 25, 2008

News: H1b 2008

The United States Citizenship and Immigration Services (USCIS) has completed the selection process on nearly 200,000 H-1B petitions received this month. More than 31,000 of the petitions received were for the Advanced Degree Exemption, reserved for graduates of U.S. universities at a Masters degree or higher. Everyone selected should receive notification by June 2nd and will eligible to begin work on 01 October, the first day of the 2009 fiscal year.

Wednesday, April 23, 2008

News: Little hearts can keep beating

Saturday, April 19, 2008

Wishes:Raam

Wednesday, April 16, 2008

Scribes Needed for Visually Challenged - Chennai

சென்னையில் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கி இம்மாத இறுதி வரை நடக்கவிருக்கும் கண்பார்வையற்றோருக்கான தேர்வில் அவர்களுக்காக தேர்வு எழுத தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள்.

மூன்று மணி நேரம் நடக்கும் தேர்வில் எழுத்தர்கள் கேள்விகளை மாணவர்களுக்குப் படித்துக்காட்டி அவர்கள் சொல்லும் பதிலை எழுதித் தர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு - தேர்வு மற்றும் மாணவர்கள் குறித்தான விவரங்கள்

எழுத்தர்களாக உதவி செய்ய விழைவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

1. மதிவாணன் - சென்னை - 9840111841
2. ரவி (09886761862 - பெங்களூர் / 9894412884 - சென்னை) or
3. மின்னஞ்சல் முகவர் : disha.volunteer@yahoo.co.in


இது தொடர்பாக வந்த மின்னஞ்சல்:

Disha foundation, have been assisting visually challenged students in pursuing their education.

Volunteers (SCRIBES) are needed at Chennai, who can write the Exams for the students & hence helping him/her pass thru the academic successfully. Basically the role of a SCRIBE is to just read the question paper for the student and write the answers given by the students in the Answer sheet.

If you and your friends could spare around 3 hours on any of the days mentioned in the excel, these students would be really thankful.

Please do consider this as a direct request from the students

To take part, pls give a call to Disha Co-Ordinator
1. Mathivanan - 9840111841 - Chennai or
2. Ravi (09886761862 - Bangalore / 9894412884 - Chennai) or
3. mail to disha.volunteer@yahoo.co.in

with the following info

* The date & Venue, where you can volunteer as a scribe.

Note: The Contact numbers of the students will be provided to the Scribes, once they confirm their commitment.

Please forward. to your like minded friends who will be interested.

Wishes: அய்யனார் - திருமணம்

இன்று இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் அய்யனார் மற்றும் அவரின் துணைவியாருக்கும் நமது திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.


இனியும் புரியாத கவிதைகள் மற்றும் பின்நவினத்துவம் தொடருமா?
இது தொடர்ந்தால், இதுவரை எதிர் கவுஜ, எதிர் பதிவுன்னு போட்டுட்டிருந்த குசும்பன் இன்று எதிர் திருமணமும் (அதாவது அய்யனாரின் திருமணம் முடிந்து ஒரு மணி நேரத்தில் இவருடைய திருமணமாம்) செய்கிறவர், இனியும் எதிர் கவுஜ, எதிர் பதிவுகளை தொடர்வேன் என்று சொல்லிவிட்டு சென்றிருக்காரே! :-)

வாழ்வின் எல்லா வளமும் பெற்று இன்று போல் என்றும் சந்தோஷத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்க!

வாழ்த்துவோர்,
சங்கம் & பாசக்கார குடும்பம்

Tuesday, April 15, 2008

Wishes : குசும்பனுக்கு டும்... டும்.. டும் !

நமது அன்புக்குரிய பதிவர் நண்பர் குசும்பன் என்கிற சரவணன், இன்று (16 ஏப் 2008) இல்லறத்தில் அடி எடுத்து வைக்கிறார்.


குசும்பனின் அவர்களின் இல்லற வாழ்க்கை அவரைப் போலவே,
என்றும் குதுகலமாக இருக்கவும்,
மணமக்கள் எல்லா வளமும் பெற்று,
இனிதே இன்புற்று வாழவும்,

பதிவர்கள் சார்பாகவும்,
தனிப்பட்ட முறையிலும், அருமைத் தம்பி குசும்பனை வாழ்த்துவது

கோவி.கண்ணன்




குசும்பா,
கால் கட்டு வந்தாச்சு, இனி நீ பதிவில் ஓடி ஆடி, பெல்லி டான்ஸ் அழகியுடன் ஆடியதெல்லாம் எழுத முடியாதே !

என்ன கொடுமை சரவணா !!!



பின்குறிப்பு : கவிஜை எழுதி வாழ்த்தும் பாசக்கார பயபுள்ளைங்க பின்னூட்டத்தில் அதனை வெளிப்படுத்துமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

Saturday, April 12, 2008

Movie: தமிழச்சி

தமிழச்சியப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

ரெட்டை அர்த்தத்துல பதிவு போட்டா வ.வா.சவுல சேர்த்துக்குவாங்களா?

"இரண்டு" என்ற கருவில் கதை/கட்டுரை/நகைச்சுவை/அனுபவம்/ கவிதை எது வேண்டுமென்றாலும் சமர்ப்பிக்கலாம். நீங்க எவ்வளவு வேண்டுமென்றாலும் எழுதலாம் ஆனால் ஒருவர் "இரண்டு" ஆக்கங்களை மட்டுமே போட்டிக்கு சமர்பிக்கலாம்.

கிஸ்டி: முதல் இடுகைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரிந்தால் அதற்கு எங்கள் 'தல' பொறுப்பேத்துக்குவாரு.

Friday, April 11, 2008

Wishes: கார்த்திகேயன் - திருமணம்

இன்று வாழ்வில் அடுத்த கட்டதுக்கு அடியெடுத்து வைக்கும் கார்த்திகேயன் - ஹேமலதா தம்பதியருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் இருக்க வாழ்த்துவோம்.


வாழ்த்துவோர்,
சங்கம் & ப்ளாக் யூனியன்

Wednesday, April 9, 2008

News: Stop the War on Journalists in Sri Lanka.

Stop the War on Journalists in Sri Lanka.



We dedicate this post as well as 150th Post for this protest.

Wishes: வல்லியம்மா! 60th பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

நாம் எல்லோரும் வல்லியம்மா என்று அன்புடன் அழைக்கும் வல்லி சிம்ஹனுக்கு இன்று மணிவிழாப் பிறந்த நாள்! (Apr 9th)

ராணுவ ரகசியத்தை வேணும்னாக் கூட வெளியில சொல்லலாம்! ஆனால் பெண்களின் வயசை மட்டும் வெளியில் சொல்லவே கூடாது! அப்படின்னு கீதையில் (சும்மானாங்காட்டியும்) சொல்லி இருக்கு! :-))))
ஆனா மக்களே, நம்ம வல்லியம்மாவின் மிகவும் ஸ்பெஷல் தினமான இன்று, அவரிடம் வாழ்த்து கூறி ஆசி பெறுவது என்பது எவ்வளவு சிறப்பானது!

இதுக்கு என்ன பண்ணலாம்-னு யோசிச்சிக்கிட்டே காலாற நடந்தேனா, அப்படியே என்னையும் அறியாமல் சென்னையில், வல்லியம்மா வீட்டுக்குப் போயிட்டேன்! பக்கத் துணைக்கு நம்ம திராச ஐயா! ரெண்டு பேருமா அம்மா வீட்டில் பலகாரங்களை ஒரு கட்டு கட்டிவிட்டு, இப்போ தான் வீடு வந்து சேர்ந்தோம்!

இன்று, அம்மாவிடம் வாழ்த்தை நேரிடையாகச் சொல்லி ஆசி பெற்றதில் எனக்கு அளவிலா மகிழ்ச்சி!
அப்படியே "60th பிறந்த நாள்"-ன்னு போடலாமா-ன்னு அம்மாவிடம் அனுமதி கேட்டேன்! அதுக்கென்னப்பா தாராளமாப் போடு-ன்னு சொல்லிட்டாங்க! ஆகா...வயதை மறைக்கத் தான் வேணுமா என்ன?
அரக்கு ரோஜா பட்டுச் சேலையில் வல்லியம்மா ஜொலி ஜொலிக்க, அவங்க முகப் பொலிவும், குரல் கனிவும்,
வல்லியம்மா என்றுமே வருத்தப்படாத வாலிபி தான்! :-)

சஷ்டியப்த பூர்த்தி என்னும் மணிவிழாக் கொண்டாட்டங்கள் பல சமயம் திருக்கடையூர் அபிராமி அம்மன் சன்னிதியில் செய்வது வழக்கம்!
பாலாம்பிகை உடனுறை மிருத்தயுஞ்ஜெய சுவாமியின் முன்னிலையில் நீண்ட ஆயுள் நல்வளம் வேண்டிச் செய்வார்கள்!
அதனால் நம்ம வல்லியம்மாவுக்கும் அபிராமி அந்தாதியின் பாடலைச் சொல்லி வாழ்த்துகிறோம்!
அன்புப் பிள்ளைகள் எல்லாரும் இந்த நன்னாளில் வீழ்ந்து வணங்குகிறோம்!

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே!


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வல்லியம்மா!
இன்னுமொரு நூற்றாண்டு இரும்! Happy Birthday to You! :-)
டீச்சரின் வாழ்த்து இங்கே

வல்லியம்மாவின் தேன் குரல், துள்ளும் இளமைக் குரல் பதிவு இங்கே!







Tuesday, April 8, 2008

Wishes:யுகாதி

ஜெமினி டிவி பார்க்கிறவங்களுக்கும், உதயா டிவி பார்க்கிறவங்களுக்கும் யுகாதி நல்வாழ்த்துக்கள்.


இப்படிக்கு
சன் டிவி பார்க்கிறவங்க

Source:

Friday, April 4, 2008

Wishes: நெல்லை விஜய்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் (முன்னாள் பதிவர்) நெல்லை விஜய் அவர்களுக்கு சங்க(ம)ம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Thursday, April 3, 2008

News: திரட்டி+ தமிழ்ப் பதிவுகள்- இணைப்பு

Acquistion, merger பத்தி கேள்விப்பட்டு இருப்பீங்க. தமிழில் இரண்டு திரட்டிகள் ஒன்றாக இணைவது இதுவே முதன் முறை ஆகும். முகுந்த் மற்றும் இரு திரட்டி அன்பர்களுக்கும் "சங்கமம்" திரட்டியின் வாழ்த்துகள்.

சங்க(ம)ம் சார்பாக
இளா

சரி, இந்தப் புதுத் திரட்டிக்கு என்ன பேரா இருக்கும்?
மேலும் இவரத்திற்கு திரட்டி - தமிழ்ப் பதிவுகள்

Wishes: சந்தோஷ் பக்கங்கள்! பிறந்த நாள் ஆப்பங்கள்!

பீர் அடிக்கும் Database உங்க கிட்ட இருக்கா? இல்லீன்னா இவர் கிட்ட கேட்கலாம்! Bud Light, Coors Light, Millers Light மாதிரி DBA Light விற்கும் தகவல் மேலாண்மை நிபுணர் இவரு!

அட இன்னும் தெரியலையா? விப்ரோவில் புகுந்து முப்பது நிமிட layoff எல்லாம் குடுத்தாரே! பிங்க் ஸ்லிப்பு கொடுத்த இவருக்குச் ரெட் ரோஸ்களைக் கொடுக்கலாமா? ஏன்னா...அண்ணாச்சிக்குப் பொறந்த நாளு!

அட,
சர்வேசனின், 2006 - சிறந்த நம்பர் II பதிவருங்கோ!
இந்தப் "பழம் பெரும்" பதிவருக்கு நம் எல்லா மக்கள்ஸ் சார்பாகவும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! (Apr-4)

சென்னை வேளச்சரிகாரவுங்களுக்கு மட்டும் அண்ணன் ECR ரோட்டுல மிட் நைட் பார்ட்டி ஏற்பாடு செஞ்சிருக்கறதா அதி"காரப்" பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன! அனுமதி இலவசம்! (கொத்ஸ்...உங்களைச் சொல்லலை!)

படத்தில் மெழுகுவர்த்திகளின் எண்ணிக்கையை எண்ணிச் சொன்னால் சந்தோஷ ரகசியம் வெளிப்படும்!
அண்ணன் சந்தோஷூக்குச் சந்தோஷம் உண்டாகட்டும்! :-))

Happy Birthday Santosh! Ensoy your day!!

மக்களே, பிறந்த நாள் ஆப்பங்கள் (Birthday Bump) கொடுக்க ரெடியா? :-)

Tuesday, April 1, 2008

Wishes: டாக்டர் டெல்பின் விக்டோரியா

என்ன இங்கே இன்னைக்கு மருந்து வாசனையா இருக்கு?

அட ஆயுதங்கள் கூட இருக்கே! ஊசி, கத்தி, கத்திரிக்கோல்,......

தூரத்துல யாரோ வெள்ளை கோட்டு போட்டு வர்றாங்களே! வக்கில்ன்னா கருப்பு கோட்டு! வெள்ளை கோட்டு யாரு போடுவா?

டாக்டர்.. டாக்டர்.. யெஸ்.. டாக்டர்தான்..

எந்த டாக்டர்ன்னு பார்க்கலாம்.. கிட்ட நெருங்கி வர்றாங்க.

அட.. இது நம்ம டெல்பின் டாக்டர்!
வாங்க வாங்க! என்ன இந்த பக்கம்?

அடடே.. இன்னைக்கு டாக்டரம்மா பிறந்த நாள் ஆச்சே! வாழ்த்து சொல்ல மறந்துட்டீங்களே!

வாங்க எல்லாரும் சேர்ந்து டாக்டரம்மாக்கு வாழ்த்து சொல்லுவோம்...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

டாக்டர் டெல்பின் (அம்மா)!
:-)


வாழ்த்துவோர்,
பாசக்கார குடும்பம் & சங்கம்