Friday, March 21, 2008

***Wishes: குமரன்! "நட்சத்திரப்" பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ஏலே...அது இன்னா-லே "நட்சத்திரப்" பிறந்த நாள் வாழ்த்துக்கள்?

ஓ...அதுவா-லே! இன்னிக்கி பங்குனி உத்திரம். பல ஆலயங்களில் இன்னிக்கித் தெய்வத் திருமணங்கள் நடக்கும்!
* முருகப் பெருமான்-தெய்வயானை
* சிவபெருமான்-பார்வதி
* பெருமாள்-தாயார்-ன்னு பல இடங்களில் திருக்கல்யாண வைபவம் இன்னிக்குத் தான்!

எலே...இது மாதவிப் பந்தல்-ன்னு நெனச்சியா? நீ பாட்டுக்குப் பேசிக்கிட்டே போற? இது சுவரொட்டி! ஞாபகம் வச்சிக்கோ!

அட மக்கா! முழுசாக் கேளுடா! இந்த உத்திர நட்சத்திரத்துல தான் நம்ம அ.உ.ஆ.சூ. பதிவர் ஒருத்தரு பொறந்தாரு!
எப்ப பார்த்தாலும் இங்கிலீபீஷ் தேதியிலேயே தான் பொறந்த நாள் நோட்டீசு ஒட்டுறோம்? அதான் ஃபார் ஏ சேஞ்சு - உத்திர நட்சத்திரத்தில் ஒட்டலாம்-னு...

மருத மல்லி

அடப்பாவிங்களா! ஆன்மீகப் பதிவருங்க எல்லாம் ஒரு க்ரூப்பாத் தான் கெளம்பி இருக்காங்கடா சாமீ!

டேய்! ரொம்பத் தான் அலுத்துக்காத! அண்ணனோட பொறந்த நாளும் பக்கமாத் தான் வருது! தோ வர செவ்வாக்கெழமை - Mar 25!
ஆனாலும் நானே சுவரொட்டியில் ஒட்டிட்டுப் போவாலாம்-னு ஒரு ஒட்டுதல்ல தான்டா ஒட்டுறேன்! பேசுனது போதும்!
மதுரை அழகர் கோயில் தோசை ரெடி பண்ணச் சொன்னேனே? பண்ணீயா?

அதெல்லாம் ரெடி பண்ணியாச்சு தல! இன்னா அந்தத் தோசை செம வெயிட்டு! என்னா கனம் கனக்குது! ஸ்பெசலா தள்ளிக்கிட்டு வந்தோம்! அதுக்கு லாரி சார்ஜ மட்டும் கொடுத்துரு-இன்னா? சரி...எப்படியா அதை ஒத்தை ஆளு சாப்பிடப் போறாரு?

யாரு சொன்னா சாப்பிட-ன்னு? It is for Birthday Smash!! தலைவர் மூஞ்சியில் தோசையை ஆசையா அப்பி, தங்கச்சி பட்ட ஆசை-அண்ணன் சுட்ட தோசை-ன்னு பதிவு போட்டுருவம்ல?
அட அங்க எதுக்கு நின்னுகிட்டு முல்லைக்குத் தேரு கொடுத்துக்கிட்டு இருக்கீங்க ஸ்டாரே? அடச் சும்மா வாங்க அ.உ.ஆ.சூ!
வந்து தோசையைக் கட் பண்ணுங்க அண்ணா!



நம்ம கூடல் குமரனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா!

இன்று போல் என்றும், என்றென்றும்...
இனிய தோழனாய், எங்கள் அன்பு நண்பனாய்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று
பங்குனி உத்திரம் அன்று வாழ்த்தி மகிழ்கிறோம்!!

அப்படியே அண்ணனின் "ஒளிமயமான" திருமகளுக்கும் இன்று தான் நட்சத்திரப் பிறந்தநாள்! - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம்! :-)
Like Father, Like Daughter!
Father gets Dosai, Daughter gets the cake! :-)

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல பதிவு நூறாயிரம்
சொல்லாண்டு மீனாட்சி அருளால்
நல்லாண்டு நாளும் இரும்!

52 comments:

ஷைலஜா said...

இனிய பிறந்த நாள்வாழ்த்து குமரன்!

கோவி.கண்ணன் said...

//Wishes: குமரன்! "நட்சத்திரப்" பிறந்த நாள் வாழ்த்துக்கள்!"//

குமரன் நல்வாழ்த்துக்கள் !

இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ்க !

அன்புடன்
கோவி.கண்ணன்

ஜெகதீசன் said...

வாழ்த்துக்கள் குமரன்!!!
:)

கோவி.கண்ணன் said...

//ஒளிமயமான" திருமகளுக்கும் இன்று தான் நட்சத்திரப் பிறந்தநாள்! //

குமரனின் செல்ல மகளுக்கும் வாழ்த்துகள் !

TBCD said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் குமரன்..



(அடி தருவேன் என்று சொல்லியிருந்தேனே, பிறந்த நாள் பரிசா, அதை மீள் எடுத்துக் கொள்கிறேன்.. )

ILA (a) இளா said...

குமரன் & D/o குமரன் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வெட்டிப்பயல் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் குமரன்...

நான் கூட நட்சத்திர பிறந்த நாள்னா நட்சத்திரம் சொல்ற பிறந்த நாள் வாழ்த்து போலனு நினைச்சிட்டேன் ;)

மெளலி (மதுரையம்பதி) said...

உங்களுக்கும், உங்கள் செல்ல/செல்வ மகளுக்கும் வாழ்த்துக்கள் குமரன்.

மெளலி (மதுரையம்பதி) said...
This comment has been removed by the author.
சேதுக்கரசி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமரன்!

Unknown said...

குமரன் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தோழி said...

Hello Kumaran,

Many more happy returns of the day. very happy to wish a person who born on the same date. And special wishes to your daughter

Anu

குமரன் (Kumaran) said...

சரி. இடுகை வந்த நிமிடத்திலிருந்து நிறைய தடவை வந்து பார்த்துட்டு போயாச்சு. நன்றிகளை வரிசையா சொல்லிட வேண்டியது தான். இடுகை போட்டவரும் இருகை கூப்பி வணங்கி நன்றி சொல்லிவிட்டு நட்சத்திர வாரத்தை நிறைவு செய்துவிட்டு ஊருக்குக் கிளம்பும் நேரமும் ஆகிவிட்டது. நான் சொல்லும் நன்றிகளைப் படிக்காமல் செல்லலாமா?

நினைவு வைத்துக் கொண்டு சொல்லிவைத்து வாழ்த்துத் தட்டியை வைத்ததற்கு மிக்க நன்றி நட்சத்திரக் கண்ணபிரான் இரவிசங்கர். எனக்குத் தந்த அழகர் கோவில் தோசை எங்கள் மகளுக்குத் தந்த கேக்கை விட சுவையாக இருந்தது. அதனால் எனக்கு தோசையும் கிடைக்கவில்லை. இரண்டையும் அவளே தின்றுவிட்டாள்.

ஹாப்பி பர்த்டே சங்கயோ அஸ்கி மமானுக் ஆன்டினுக் தாங்க்ஸ். நன்னபோ நன்னம்போ மமோ மமி தட்டிய ஸொகன் எல்லா மமொ மெல்லி காத்தக் முஸுனாத்த திடொகின் கேக் தட்டிரியாஸ்பா. ககோ இஸொ? கொப்பாக் நிஜ்ஜம் திடொகின் கேக் அப்பய்? (ஹாப்பி பர்த்டே சொன்ன எல்லா மாமாக்களுக்கும் அத்தைகளுக்கும் நன்றிகள். சித்தப்பா சித்தி, மாமா மாமி அனுப்புன மாதிரி இந்த மாமாவும் சாப்புட முடியாத தோசையும் கேக்கும் அனுப்பியிருக்காருபா. ஏன் இப்படி? எப்ப உண்மையான தோசையும் கேக்கும் கிடைக்கும்? - என் மகள் சொன்னது/கேட்டது)

குமரன் (Kumaran) said...

மதுரை என்றாலே என்ன என்ன நினைவிற்கு வருமோ அவற்றை எல்லாம் சொல்லிவிட்டீர்கள். அதற்கும் ஒரு நன்றி. :-)

குமரன் (Kumaran) said...

நன்றிகள் ஷைலஜா.

குமரன் (Kumaran) said...

அன்புடன் தந்த வாழ்த்துகளுக்கு நன்றிகள் கோவி.கண்ணன்.

மகளும் பெரியப்பாவிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறாள்.

குமரன் (Kumaran) said...

நன்றிகள் ஜெகதீசன். :-)

உங்க பேரை இப்ப ரிபிசிடி எப்படி எழுதுறார்? உங்களுக்கு அது ஓகேவா? :-)

குமரன் (Kumaran) said...

செல்லமா அடியும் குடுத்துட்டு அப்புறம் தனியா ஒரு பரிசும் குடுத்துருக்கலாமே ரிபிசிடி. :-) வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

நன்றிகள் & நன்றிகள் இளா.

குமரன் (Kumaran) said...

நன்றிகள் பாலாஜி. நானும் ஒரு நொடி அப்படி நினைச்சேன். அப்புறம் தான் தெளிஞ்சது. :-)

குமரன் (Kumaran) said...

பாபா. எல்ல பாலாஜி பாவா மொகொ ஹாப்பி பர்த்டே சங்கத்தக் ஹட்வன் ஜவல்லிட்ரஸ். :-(

(அப்பா. இந்த பாலாஜி அத்திம்பேர் எனக்கு ஹாப்பி பர்த்டே சொல்ல மறந்துட்டாரு. :-( இப்படி வருத்தப்படுகிறாள் பொடியள்)

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு நன்றிகள் மௌலி.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு நன்றிகள் சேதுக்கரசி.

குமரன் (Kumaran) said...
This comment has been removed by the author.
குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு நன்றிகள் தஞ்சாவூரான். உங்களுக்கு இந்த உறைபனியினால ஒரு தொந்தரவும் இல்லையே?! எனக்கு இங்கே நடைபாதையில இருந்து உறைபனியை தூக்கிப் போட்டு போட்டு முதுகு வலிக்குது.

குமரன் (Kumaran) said...

பிறந்த நாள் நல்வாழ்த்துகள் தோழி அனு. எனக்கும் சென்னையில் அனு என்ற பெயரில் ஒரு தோழி இருக்கிறார். அவருக்கும் பங்குனி உத்திரம் தான் பிறந்தநாள். உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தவுடன் அவர் தானோ என்று நினைத்தேன். :-)

RATHNESH said...

வாழ்த்துக்கள் குமரன், தங்களுக்கும், தங்கள் மகளுக்கும்.

கோபிநாத் said...

இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள் இருவருக்கும் ;)

ஜெகதீசன் said...

//
குமரன் (Kumaran) said...
நன்றிகள் ஜெகதீசன். :-)

உங்க பேரை இப்ப ரிபிசிடி எப்படி எழுதுறார்? உங்களுக்கு அது ஓகேவா? :-)

//
எனக்கு ஒகே தான்... :)

enRenRum-anbudan.BALA said...

இனிய பிறந்த நாள்வாழ்த்து Junior !

தங்கள் மகளுக்கும்.

வல்லிசிம்ஹன் said...

சொன்னவருக்கும் வாழ்த்து.
கொண்டாடும் குமரனுக்கும்
புதல்விக்கும்
பிறந்த நாஅள் நல்வாழ்த்துகள். சேந்தனுக்கும் அவன் அம்மாவுக்கும் சந்தோஷ வாழ்த்துகள்.

Anonymous said...

வாழ்த்துகள் குமரன்.

sury siva said...

இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ‌
இந்தக்கிழவன் தரும் ஆசிகளை
இனிப்பெனவே ஏற்றுக்கொள்ளுங்கள்.

வருக.
http://arthamullavalaipathivugal.blogspot.com


சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

குமரன் (Kumaran) said...

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் இரத்னேஷ்.

குமரன் (Kumaran) said...

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் கோபிநாத்.

குமரன் (Kumaran) said...

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் சீனியர்.

குமரன் (Kumaran) said...

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் வல்லியம்மா.

குமரன் (Kumaran) said...

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் விடாது கருப்பு.

குமரன் (Kumaran) said...

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் சுப்புரத்தினம் ஐயா.

இலவசக்கொத்தனார் said...

இந்த முறை வாழ்த்துப்பா விட்டுப் போச்சே!! வெறும் வாழ்த்துகளாவது சொல்லிக்கறேம்'பா'! :)

குமரன் (Kumaran) said...

பாக்களுக்கு நன்றிகள் கொத்ஸ்.

Unknown said...

குமரன்,

தங்கள் மகளுக்கும் பிறந்த நாள் - தாமதமான வாழ்த்துக்கள் :)

//உங்களுக்கு இந்த உறைபனியினால ஒரு தொந்தரவும் இல்லையே?! எனக்கு இங்கே நடைபாதையில இருந்து உறைபனியை தூக்கிப் போட்டு போட்டு முதுகு வலிக்குது.//

அந்தத் தொல்லையே வேணாமுன்னுதான், பனி அள்ளுற பணிய பக்கத்து வீட்டு பையனுக்கு கான்ட்ராக்ட் விட்டுட்டேன் :) ஒரு தடவைக்கு 20 அமெரிக்க ரூவா!

இப்பவே என்ன வச்சு நல்லா சம்பாதிக்கிறான். பொழச்சுக்குவான் (அ) நான் தேற மாட்டேன் :) அமெரிக்கா எப்படி தொழில் அதிபர்களை (அ) சோம்பேறிகள உருவாக்குது பாத்தீங்களா? :)

குமரன் (Kumaran) said...

தஞ்சாவூரான். நானும் அதையே செஞ்சிருக்கலாம். 800 டாலர் போட்டு பனியை அள்ளிக் கொட்டும் கருவி வாங்கி வச்சிருக்கேன். ஆனா அதை எல்லா நேரத்திலயும் பயன்படுத்த முடியலை. ஒரு அளவுக்கு மேல பனி கொட்டியிருந்தா தான். இல்லாட்டி கையால தள்ளிவிடறது தான். :-)

அடுத்து ஆங்கில தேதிப்படி என்னோட பிறந்த நாள் வரும். அப்ப கூட என் பொண்ணும் கொண்டாடுவான்னு நினைக்கிறேன். அதனால வாழ்த்துகள் சொல்ல இன்னும் தாமதம் ஆகவில்லை. :-)

G.Ragavan said...

குமரனுக்கும் குமரன் செல்விக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். எல்லாம் வல்ல முருகப் பெருமான் அருளால் நீடு வாழ்க. பீடு வாழ்க.

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி இராகவன்.

இலவசக்கொத்தனார் said...

//அருளால் நீடு வாழ்க. பீடு வாழ்க.//

ஜிரா, அப்பாவும் பொண்ணும் இருக்காங்க. அதனால இதோட சேர்த்து யூ டூ வாழ்கன்னும் சொல்லிடுங்க! :))

குமரன் (Kumaran) said...

Koths, :-)

இலவசக்கொத்தனார் said...

எல்லாருக்கும் தமிழில் பதில் சொல்லிட்டு எனக்கு மட்டும் ஆங்கிலத்தில் பதில் சொல்லி, உங்கள் தமிழ் வெறுப்புணர்வை வெளிக்காட்டி வடமொழிக்கு கொடி பிடிக்கும்....

ஓ! நான் யூ டூன்னு ஆங்கிலத்தில் சொன்னதுக்காக அப்படியா? ஓக்கே ஓக்கே நான் கொஞ்சம் அவசரப்பட்டு ரெம்பிளேற் பின்னூட்டங்களைத் தேடிப் போயிட்டேன் போல!!

இலவசக்கொத்தனார் said...

போன பின்னூட்டம் ஒரு ஜாலிக்குத்தான் கும்ஸ் உங்களுக்குத் தெரியாததா. அது எல்லாம் இல்லைன்னா அப்புறம் எப்படி 50 அடிக்கிறது!

இலவசக்கொத்தனார் said...

மொய் பின்னூட்டம்.

51!!

குமரன் (Kumaran) said...

என்னோட வடமொழிக்கு கொடி பிடிக்கும் 'உணர்வை' இது வரைக்கும் ரெண்டே பேரு தான் கண்டுபிடிச்சிருக்காங்க. ஒன்னு நீங்க. இன்னொன்னு? நான் அவர் பேரைச் சொல்ல மாட்டேன். சொன்னா வழக்கம் போல வந்து திட்டுவாரு. :-)

அதெப்படி கொத்ஸ் ஆங்கிலத்துல பதில் சொன்னா வடமொழிக்குக் கொடி பிடிக்கிறா மாதிரி ஆகும். ரெம்பிளேறை தேடுனது சரி தான். ஆனா கொஞ்சமாவது லாஜிக் இருக்க வேணாமா? :-)

மொய்க்கும் நன்றிகள். (இரண்டு பொருளிலும் எடுத்துக்கோங்க. :-) )

இலவசக்கொத்தனார் said...

//ரெம்பிளேறை தேடுனது சரி தான். ஆனா கொஞ்சமாவது லாஜிக் இருக்க வேணாமா? :-) //

ஐயோ ஐயோ!! ரெம்பிளேற் பின்னூட்டங்களுக்கு லாஜிக் வேணுமா? இப்படி அப்பாவி வேஷம் போடறீங்களே கும்ஸ்!!