Friday, March 7, 2008

Wishes: "புலி" நாகை சிவா


கப்பியின் வாழ்த்து
புலி இருக்கறது சூடானு,
இவரு பதிவுலகுல டானு.
பதிவு போட்டா செம ரகளை,
இவர்தான் நம்ம சகலை.
மொக்கைதான் இவரோட சோலி,
பின்னூட்டத்துக்கு வந்தா எல்லாரும் காலி.
பலப்பல பிகர்களை பார்த்து,
குஜாலா இருக்கட்டும் இதுவே என் வாழ்த்து...

இளா

பயங்கரமா உறுமும்,
செத்தாலும் புல் திங்காது,
தைரியத்துல கிங்கு,
பக்கத்துல போனா சங்கு...
வரிவரியா பட்டை,
உசரத்துல நம்ம விட குட்டை...
இது நெச புலி....


பயங்கரமா தூங்கும்,
கிடைச்சா ஃபுல்லை தனியாளா அடிக்கும்,
ராத்திரில தனியா போனா ஹார்ட் அட்டாக்கு,
அப்போ பக்கத்துல போனா நமக்கு சங்கு..
வரி போட்ட சட்டை,
வெள்ளியானா மட்டை,
பேருதான் புலி
ஆனா மனசுக்குள்ள எப்பவும் கிலி
தேவை எல்லாம் சரக்கு,
புள்ளைங்கள பார்த்தா ப்ளாட்டு.
இதுதான் நம்ம "புலி"

CVR

"அன்பு நண்பர் நாகை சிவாவிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் ,வெற்றிகளும் என்றென்றும் பல்கிப்பெருகட்டும்!! "

KRS
"மகளிர் தினத்துக்குச் சரியாக ஒரு நாள் முன்னர் பிறந்ததால்
அழகியர்க்கு எல்லாம் அண்ணனாகிப் போனதாய் எண்ணாதே அன்புப் புலியே! :-))
நீ அண்ணனல்ல! காதல் மன்னன்!
கள்ளக் கண்ணன்! கன்னியர் வண்ணன்!
"நாகை"க் கடலில் நாவற்பழக் கன்னி ஒருத்தி
பொன்னியின் செல்வன் புலிக்கு படகோட்டுவாள்-ன்னு
காலையில் வெயிட் மெஷினில் எடை பார்த்த போது வாசகம் சொல்லிற்று!
நாகைக் கடலில் ஹவுஸ் போட் பார்ட்டியாமே? இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா! Ensoy your day! :-) "

சங்க(ம)ம் சிங்கம்ஸ்:
மகளிர் தினத்துக்கு முன்னாடியே பொறந்து சைட் அடிக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்த நாகை சிவாவுக்கு வாழ்த்துக்கள்!

காதலன் சென்ஷி:
எண்ணி 13 எழுத்துக்களில் எழுகின்ற வாழ்த்துக்களை
என்னால் தர இயலவில்லை.
வார்த்தைக்குவியல்களில் தேடி
வாழ்த்துக்களை அள்ள முயற்சிக்கிறேன்.
கைவிரல் இடுக்குகளிலிருந்தும்
உன் வாழ்த்துக்கான வார்த்தைகள்
சிந்தி வழிகின்றன.
போதாது போதாது என பதறி
மனக்குவியல்களின் அத்தனை வார்த்தைகளையும்
காற்றுடன் அள்ளி வீசியெறிகின்றேன்.
இன்றுன்னை சுற்றும் வாழ்த்துக்களின்
ஏதேனும் மிச்சத்தில் எனது வாழ்த்தும்
சேர்ந்திருக்குமென்ற நம்பிக்கையில்
இங்கும் என் வாழ்த்துக்களை
பதிவு செய்கின்றேன்.
என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கொத்ஸ்:
சூடான சர்ச்சைகளில் சிக்காத வல்லவன்
சூடானில் செந்தமிழைச் சீராகத் தந்தவன்
நாடாது நற்பெயரைப் பெற்றிடும் நல்லவன்மேல்
பாடினேன் பாவொன்றே பார்!


தேதி: Mar-7-2008

21 comments:

சென்ஷி said...

//சங்க(ம)ம் சிங்கம்ஸ்:
மகளிர் தினத்துக்கு முன்னாடியே பொறந்து சைட் அடிக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்த நாகை சிவாவுக்கு வாழ்த்துக்கள்!//

என்னாமா உழைச்சுருக்கீங்கய்யா... :)))

கலக்குறீங்க போங்க..

பின்னூட்டத்திலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வது உங்கள் அன்பு சென்ஷி :))

கோபிநாத் said...

மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகா ;))

கோபிநாத் said...

\\பலப்பல பிகர்களை பார்த்து,
குஜாலா இருக்கட்டும் இதுவே என் வாழ்த்து...
\\

ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்

கோபிநாத் said...

\\எண்ணி 13 எழுத்துக்களில் எழுகின்ற வாழ்த்துக்களை
என்னால் தர இயலவில்லை.\\

மாப்பி....எப்படி டா இப்படி எல்லாம்..சூப்பரு ;))

வாழ்த்துக்கள் புலி ராசா ;)))

கோபிநாத் said...

இந்த பதிவை "விவாதமேடை" இருக்கு...இதுல ஏதே ஒரு உள்குத்து இருக்கு...அதை அறிவதே நம் இலக்கு ;))

ஆயில்யன் said...

எங்க மாவட்டத்துக்காரருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))

G.Ragavan said...

சூடான சூடானில் சூடம் போல் சுடர் விடும் சூடானாருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். நீடு வாழ பீடு வாழ முருகனை வணங்குகிறேன்.

இலவசக்கொத்தனார் said...

புலி பசித்தாலும் புல்லைத் திங்காதுன்னுதான் சொல்லி இருக்காங்க. குடிக்காதுன்னு சொல்லவே இல்லை. அதனால சுத்தி இருக்கறவங்க சந்தோஷத்தை எல்லாம் மனசில் வெச்சு ஒரு புல்லை ஓப்பன் பண்ணும்மா!!

அப்படியே நமக்கு ஒரு ஜிகர்தண்டா!! :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கோபிநாத் said...
இந்த பதிவை "விவாதமேடை" இருக்கு...இதுல ஏதே ஒரு உள்குத்து இருக்கு...
அதை அறிவதே நம் இலக்கு ;))//

கோபி நீ கலக்கு!
எடுத்திடுவோம் சுளுக்கு!! :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
புலி பசித்தாலும் புல்லைத் திங்காதுன்னுதான் சொல்லி இருக்காங்க. குடிக்காதுன்னு சொல்லவே இல்லை//

அடா அடா அடா! கொத்திட்டீங்க தெய்வமே! காலைக் காட்டுங்க! :-)

சரி...
புல்லாக ஊத்துவான் புலி-ன்னு ஈற்றடிக்கி ஒரு வெண்பா பாடுறது? :-)

இலவசக்கொத்தனார் said...

//அடா அடா அடா! கொத்திட்டீங்க தெய்வமே! காலைக் காட்டுங்க! :-)//

1/4

//சரி...
புல்லாக ஊத்துவான் புலி-ன்னு ஈற்றடிக்கி ஒரு வெண்பா பாடுறது? :-)//

முடியாதே!! ஊத்துவான் புலி அப்படின்னு சொன்னா தளை தட்டுதே!!

அதுக்குப் பதிலா
'பாடினேன் பாவொன்றே பார்!"

கோவி.கண்ணன் said...

நாகை தங்கத்துக்கு வாழ்த்துக்கள் !

கைப்புள்ள said...

கோபியர் கொஞ்சும் ரமணன் எங்கள் அன்பு சூடான் புலிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

அய்யனார் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

காயத்ரி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புளி.. ச்சீ.. புலி!!

காயத்ரி said...

//மகளிர் தினத்துக்கு முன்னாடியே பொறந்து சைட் அடிக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்த நாகை சிவாவுக்கு வாழ்த்துக்கள்//

:))

G3 said...

இங்குட்டும் புலிக்கு ஒரு வாழ்த்து :)

அனுசுயா said...

புலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

இராம்/Raam said...

பயப்புள்ள'க்கு வாழ்த்து சொல்லுவீங்கன்னு பார்த்தா எல்லாரும் கொலைவெறியோட திரியிறிங்க போலே..... :)

புலி,

ஒனக்கு நான் உண்மையான வாழ்த்து சொல்லுறேன்... வாங்கிக்கோ... :)

அடுத்த பொறந்த நாளுக்குள்ளே கல்யாணம் நடக்க என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்... :)

நாகை சிவா said...

வாழ்த்து சொன்ன அம்புட்டு ஜனத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிச்சுக்குறேன். விரிவாக அப்பாலிக்கா வந்து அல்லாருக்கும் நன்றி சொல்லுறேன்.

காட்டாறு said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா.