Tuesday, March 18, 2008

***Wishes: ஷைலஜா! நட்சத்திரப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்களுக்கு மைசூர் அல்வா தெரியுமா?

டேய் கேஆரெஸ்! ஒனக்கு இதே பொழைப்பாப் போச்சு.
தமிழ்க் கடவுள் லிஸ்ட்டுல பெருமாளையும் சேர்த்துச் சொல்லுற!
இப்ப என்னடான்னா மைசூர் பாக்கை விட்டுப்போட்டு மைசூர் அல்வா-ங்கிற! உன்னை....

டேய் மச்சி, அவசரப்படாம கேளு.
மைசூர் பாக்கோ, அஜந்தா பாக்கோ அதெல்லாம் உனக்கு ஜென்மத்துலயும் கெடைக்காது.
வேணும்னா பெங்களூரு போ! அங்கிட்டு நம்ம யக்கா ஷைலஜா சுடச்சுட அல்வா கொடுப்பாங்க!
அதுக்கு மைசூர் அல்வா-ன்னு பேரு!
யாரு நம்ம கவிதாயினி ஷைலஜாவா?
Tamil Sify-ல கலக்குவாங்களே?
முத்தமிழ்க் குழுமத்துல அடிச்சி ஆடுவாங்களே?
வவாச போட்டியில கலந்துக்கிட்டு நம்ம ராயல் ராமைச் சின்னப் புள்ளைங்கள வச்சி, ஓட்டோ ஓட்டு-ன்னு ஓட்டிப் பதிவு போட்டாங்களே! அவிங்களா?

அவிங்களே தான்! நீ சொல்லாம வுட்ட அம்மணியின் இன்னொரு பெருமை....
ஷைலஜாவின் பல கதைகள் விகடன் மற்றும் இதர அச்சு ஊடகங்களில் வந்திருக்கு!
யக்காவின் குரலைக் கேட்டிருக்கியா? இந்தா!
"அரங்கப் ப்ரியா" நம்ம முருகனருள் வலைப்பூவுக்குப் பாடிக் கொடுத்தாங்க!
இதே போல, "முருகப் ப்ரியா" யாராச்சும் நம்ம கண்ணன் பாட்டுக்கும் பாடிக் கொடுக்கோனும்! :-))


செல்லமா திருவரங்கப்ரியா-ன்னு தன்னைத் தானே கூப்பிடுக்குவாங்க!
ஆனா அரங்கன் பிரசாதமான மைசூர் பாக்கு மட்டும் கடைசி வரை கொடுக்காம அல்வா கொடுப்பாங்க!

ஓ...மைசூர்பா புராணம் அப்படிப் போகுதா?

ஆமா...வேணும்னா நம்ம VSK ஐயாவைக் கேட்டுப் பாரு!
ஷைல்ஸ் பண்ண தப்புக்குப் பாவம் அவர் பிட்டுக்கு மைசூர்பா சுமந்தாருப்பா! :-)
அக்காவை எத வேணும்னாலும் கேளு,
ஆனா மைசூர்-ன்னு.....அவங்க பேச்ச ஆரம்பிச்சாங்கன்னா...
நீ ஓசூர் வரைக்கும் ஓடிறது நல்லது!


திருவரங்கப்ரியா, கவிதாயினி, இன்குரலி
நம்ம ஷைலஜாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! (புதன்கிழமை, MARCH-19)

இன்று போல் என்றும், என்றென்றும்...
இனிய தோழியாய், எங்கள் இளைய தோழியாய்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம்!!

ஷைல்ஸ்!
பிறந்தநாள் பாக்...சாரி
பிறநதநாள் கேக்
கட் பண்ண வாங்கக்கா!


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கவிதை நூறாயிரம்
சொல்லாண்டு அரங்கன் அருளால்
நல்லாண்டு நாளும் இரும்!

23 comments:

OSAI Chella said...

நலம் வாழ வாழ்த்தும் ...

ஓசை செல்லா

பின்குறிப்பு: எனக்கு அவர்கள் வாக்களித்த மைசூர்ப்பாவுக்காகவே அடுத்தவாரம் பங்களூரு பயணிக்கிறேன்.. அவங்க கிட்ட சொல்ல வேண்டாம்.. ஷ் ஷ்!

ILA(a)இளா said...

அக்கா, ஒரு செம வெட்டு வெட்டுவோம், நல்ல சமையலா தயார் பண்ணிருங்க. அட, சாப்பாட்டு ஞாபக்த்துல சொல்ல வந்ததை மறந்துட்டேன் பாருங்க. வாழ்த்துக்கள்!

ஷைலஜா said...

நான் என்ன பெரிய ஆளுன்னு எனக்குப்போயி இப்படித்தனியா ஒரு பதிவு? இதுக்கெல்லாம் தகுதியான்னு மனசு கேட்டாலும் அன்புச்சகோதரர் ரவியின் அன்பின் மிகுதியில் நன்றியுடன் நெகிழ்ந்தே போகிறேன்! மைசூர்ப்பாகு இப்படி மானம் போகுதே இங்க?:)
அல்வால்லாம் தரமாட்டேன் நிஜம்மாவே மைசூர்பாக் ரெடட்டரெடிப்பா! யார்ல்லாம் சாப்பிடவரீங்க?
ஓசை செல்லா இளா !பயப்படாம வாங்க என்ன? நன்றி வாழ்த்திய உங்களுக்கும்!
ஷைலஜா

குமரன் (Kumaran) said...

முருகப்ரியா பாடல் வேணும்னா என் பொண்ணுகிட்ட தான் கேக்கணும். அவளுக்கும் இன்னைக்குத் தான் ஆங்கில தேதிப்படி பிறந்த நாள். அதான் நான் விடுமுறை எடுத்துக்கிட்டு வீட்டுல உக்காந்திருக்கேன். அவளைப் பாடச் சொல்லலாம். ஆனா சன் டீவி சீரியல்ல வர்ற பாட்டா தானே பாடுறா? கண்ணன் மேல சௌராஷ்ட்ர பாட்டு கூட அவ இன்னும் கத்துக்கலையே?! :-(

வழக்கம் போல என் சுய புராணத்தைப் பாடத் தொடங்கிட்டேன் பாருங்க. திருவரங்கப்ரியா கோவிச்சுக்கப் போறாங்க.

திருவரங்கப்ரியா (எ) ஷைலஜா (உங்களுக்கு shyயும் உண்டு லஜ்ஜையும் உண்டுன்னு தான் இப்படி பேரு வச்சாங்களோ?)
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன் சேவடி செவ்வித் திருக்காப்பைக் கொண்டு வாழிய நலமே!
நீங்காத செல்வமாம் அரங்கன் திருவடி வைத்த நிதி நிறைந்தேலோரெம்பாவாய்!

மஞ்சூர் ராசா said...

என் இனிய தோழி சைலஜா என்றும் மைபாவும் சர்க்கரையுமாய் இனிப்பாய் வாழ வாழ்த்துகள்.

ஷைலஜா said...

//குமரன் (Kumaran) said...
முருகப்ரியா பாடல் வேணும்னா என் பொண்ணுகிட்ட தான் கேக்கணும். அவளுக்கும் இன்னைக்குத் தான் ஆங்கில தேதிப்படி பிறந்த நாள்//

குழந்தைக்கு அத்தையின் அன்பான ஆசிகள் குமரன்.


//வழக்கம் போல என் சுய புராணத்தைப் பாடத் தொடங்கிட்டேன் பாருங்க. திருவரங்கப்ரியா கோவிச்சுக்கப் போறாங்க//

அட கோபமா கிலோ என்ன விலைங்க?:)


//நீங்காத செல்வமாம் அரங்கன் திருவடி வைத்த நிதி நிறைந்தேலோரெம்பாவாய்//

அரங்கனே சகலமும் என்றிருக்கும் எனக்கு இந்த வாழ்த்து கண்ணயும் நெஞ்சையும் நிறைக்கிறது குமரன் நன்றி.

ஷைலஜா said...

//மஞ்சூர் ராசா said...
என் இனிய தோழி சைலஜா என்றும் மைபாவும் சர்க்கரையுமாய் இனிப்பாய் வாழ வாழ்த்துகள்//

:):) நன்றி மஞ்சூர் ராசா!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

யக்கா
பின்னூட்டத்துல உங்களை வாழ்த்தலைன்னா எனக்கு அடுத்த வேளை மை...சரி வேணாம் சோறு கெடைக்காது! :-))

ஸோ...
ஹேப்பி பர்த்டே ஷைல்ஸ்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

குமரன்...
"ஒளிமயமான" உங்க பொண்ணுக்கு
ஒளியைப் பெயரில் மட்டும் கொண்ட
இந்த ஒளியும் கண்ணனின் இனிப்பான வாழ்த்தைச் சொல்லிடுங்க! :-)

முன்னமே சொல்லி இருந்தா கண்ணன் பாட்டில் ஒரு பாட்டு போடிருக்கலாம்! :-)
நானும் பங்குனி உத்திரம் அன்னிக்குத் தானே-ன்னு அசால்ட்டா இருந்துட்டேன்!

அரை பிளேடு said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மதுரையம்பதி said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஷைலஜா.

அரங்கனே சகலமும் என்றிருக்கும் உங்களுக்கு அரங்கண் சகலமும் அருளட்டும்.

ஷைலஜா said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
யக்கா
பின்னூட்டத்துல உங்களை வாழ்த்தலைன்னா எனக்கு அடுத்த வேளை மை...சரி வேணாம் சோறு கெடைக்காது! :-))

ஸோ...
ஹேப்பி பர்த்டே //
அதானே இந்தியா வரப்போ பெங்களூர் திட்டம் இருக்குல்ல அங்க மைபா தந்து செசே சோறுபோட்டு கவனிச்சிக்கறேன் நன்றி ரவி::)

ஷைலஜா said...

அரை பிளேடு said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள//

நன்றி அரைப்ளேடு.

ஷைலஜா said...

மதுரையம்பதி said...
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஷைலஜா.

அரங்கனே சகலமும் என்றிருக்கும் உங்களுக்கு அரங்கண் சகலமும் அருளட்டும்.//

அரங்கனே வாழ்த்தினமாதிரி இருக்கு ஆலவாயம்பதி வாழ்த்தும்ப்போது நன்றி.

துளசி கோபால் said...

அட! நம்ம ஷைலூக்கு பொறந்தநாளா?

ஆஹா....அல்வா அமர்க்களப்படுதே:-)))

ஜுகுஜுகு ஜீயோ ஷைலு.
ஜீத்தே ரஹோ

மதுமிதா said...

மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஷைலு. மகிழ்வுடன் வாழ வேண்டும் என்றென்றும்.

அன்புடன்
மது

ஷைலஜா said...

துளசி கோபால் said...
அட! நம்ம ஷைலூக்கு பொறந்தநாளா?

>>>ஆமா ...என்ன போங்க வயசாயிட்டேபோகுது!!!!

ஆஹா....அல்வா அமர்க்களப்படுதே:-)))
>>
மைசூர்பாக்கினை அல்வா ஆக்கிய ஆன்மீகசெம்மலை என்ன பண்லாம் சொல்லுங்க?:)

ஜுகுஜுகு ஜீயோ ஷைலு.
ஜீத்தே ரஹோ//:):)
நன்றி நன்றி துள்சிமேடம்.

ஷைலஜா said...

மதுமிதா said...
மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஷைலு. மகிழ்வுடன் வாழ வேண்டும் என்றென்றும்.

அன்புடன்
மது
//
நன்றி மது! நட்சத்திர பதிவர் இங்க என்பிறந்த நாளை அம்ர்க்களப்படுத்திட்டார் நன்றி எல்லார்க்கும்.

கோபிநாத் said...

மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா ;))

அல்வாவை பார்சல் அனுப்பிடுங்க...;)))

ஷைலஜா said...

கோபிநாத் said...
மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா ;))

அல்வாவை பார்சல் அனுப்பிடுங்க...;)))//


கண்டிப்பா அனுப்பிடறேன் ஆனா அல்வா இல்ல....புகழ்பெற்ற 'அது 'தான் அனுப்புவேன்:)
வாழ்த்துக்கு நன்றி கோபி.

இராம்/Raam said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மேடம்.... :)

அதிஷா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா ;)

ஷைலஜா said...

இராம்/Raam said...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மேடம்.... :)

March 19, 2008 1:53 PM
அதிஷா said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா ;)///

இராம்(எங்க இருக்க இப்போ)
அதிஷா!(அழகாருக்கே பேரு?:)
நன்றி மிக.

March 19, 2008 4: