Sunday, December 28, 2008

Birthday: அனுசுயா

இன்னைக்கு ஒரு பூவுக்கு பிறந்த நாள்..

யாருன்னு நான் க்ளூ கொடுப்பேன்.. நீங்க கண்டுபிடிக்கணும்.. ஓகே.. கேம் ஸ்டார்ட்... மீயூஜிக் ப்ளீஸ்...

.
.
.
.




இவங்க எழுதுறது ஜஸ்டூ ஒரு டைம் பாஸுக்கு.. அவ்வளவுதானுங்க...



.
.
.
.




பூன்னா உயிரே விடுவாங்க..



.
.
.
.




புதுசு புதுசா பூவை பற்றி ஆராய்ச்சி செய்து நமக்கும் விளக்குவாங்க



.
.
.
.




திடீர்ன்னு ரொம்ப ரொம்ப பொறுப்பா சமூதாய அக்கறை பதிவுகள் எழுதி நம்மையும் கொஞ்சம் சிந்திக்க வைப்பாங்க..



.
.
.
.

ஆங்.. சொல்ல மறந்துட்டேனே! கோயம்பத்தூர் குசும்புன்னு சொல்வாங்களே.. அது இவங்க கிட்ட ரொம்ப ஜாஸ்திங்க..



.
.
.
.




அட.. இன்னும் கண்டு பிடிக்க முடியலையா? சரி, இன்னொரு க்ளூ தர்றேன்.. இப்போ கண்டுபிடிங்க பார்ப்போம்..



.
.
.
.




இவங்க நம்ம ஷார்ஜா கோபியோட ஒரு மேட்டர்ல ஒத்து போறாங்க.. அதாவது மாதத்துக்கு ஒரே ஒரு பதிவு.. அந்த ஒன்னு போட்டதும் இந்த மாத கணக்கு தீர்ந்துடுச்சுன்னு ஹாயா உட்கார்ந்துப்பாங்க..



.
.
.
.
.
.
.
.
.




கண்டுபிட்ச்சிட்டீங்களா???



.
.
.
.




ரைக்ட்.... அவங்களேதான்..


இன்று (Dec 27) பிறந்தநாள் கொண்டாடும் அனுசுயா அவர்கள் எல்லா நலமும் பெற்று சந்தோஷமாக வாழ இறைவனை பிரார்த்திப்போம்.

Wednesday, December 24, 2008

Birthday: பெருந்தலைக்கு பிறந்தநாளு :)




இந்த இடுகைக்கு வசனம் தேவை இல்லை...

Friday, December 19, 2008

Birthday: சாரு நிவேதிதா


Pic courtesy: India Glitz

Thursday, December 18, 2008

Wishes: K.R.அதியமான் ! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அன்பே சிவம், வாழ்வே தவம்.. அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவேயில்லையடா... மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா..

என்று வலையின் தலையெழுத்து எழுதிவைத்திருக்கும் நண்பர் K.R.அதியமான் அவர்களுக்கு இன்று 18 / Dec பிறந்த நாள்.

சென்னையில் பதிவர் சந்திப்பின் போது மிக நட்பாக உரையாடினார், "உங்க பிறந்த நாள் தேதி என்ன ?" என்று கேட்டார். நான் சொன்னதும், "என்னங்க என்னோட பிறந்த நாள் தேதியைச்ச் சொல்றிங்க...உங்களுக்கு ஜோசியம் தெரியுமா ?" ன்னு கேட்டார். ஜோதிடத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டவர்.



அண்ணார் / தம்பியார் என்று சொல்ல முடியாத நண்பர் அதியாமனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள் !


Wednesday, December 17, 2008

Wishes: கோவி. கண்ணன்! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கோவியாத கண்ணன்! கோவி கண்ணன்! நாகையின் மன்னன்! சிங்கையின் அண்ணன்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்-ண்ணே! (Dec-18)

கோலிவுட்டில் கோவி-ன்னு ஒரு புது பிராஜெக்ட் வந்திருக்கு! கோ.கோ!
இந்த கோ.கோ-க்கு கோடம்பாக்கம் ஹோட்டல்-ல நயன் தலைமையில் நடிகைஸ் ஒன்லி பார்ட்டி வேற இருக்காம் இன்னிக்கி! வழக்கமா கூப்புடுற சிபியாரைக் கூட கூப்புடுலையாம்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோவி. அண்ணா!
தாங்கள் எல்லா நலமும் பெற்று,
நீடும் பீடுமாய் வாழ,
இறைவனும்,
ஈரோட்டுத் துறைவனும்,
நல்லாசி நல்கட்டும்! :)
Wish you Many Happy Returns of this Day! :)


சரி, கோ.கோ. சம்பந்தமா எதுவா இருந்தாலும் சங்கத்துல தனி போஸ்ட்டா போட்டுக்கறேன்! :)
இப்போ, கேக்-ஐ மட்டும் நீங்க வெட்டுங்க-ண்ணே!
மத்ததெல்லாம் நம்ம மக்கள்ஸ் வெட்டுவாங்க.... :)
ரெடி, இஸ்டார்ட், மீஜிக்!


கோவி அண்ணன் வாழ்த்துப் பதிவில், ஒரு கருத்து கூட சொல்லலீன்னா எப்பிடி? ஹிஹி..... இதோ என் பங்குக்கு பதிவர். கன்ஃப்யூசியஸ்! :)

Wishes: குசும்பன்

பெயர்: குசும்பன்
வயது: தள்ளாடினாலும் தள்ளிக்கொண்டு போகும் வயது
தொழில்: கலாய்த்தல், கலாய்க்கப்படுதல்
உபதொழில்: பூரிக்கட்டையில் தற்காப்புக்கலை கற்றல்
நண்பர்கள்: கலாய்க்கப்படுபவர்கள்
எதிரிகள்: தங்கமணியிடம் போட்டுக் கொடுப்பவர்கள்
பிடித்த வேலை: கார்ட்டூன் போடுவது என்று அவர் சொன்னாலும் தங்கமணி இடும் வேலைகள்
பிடிக்காத வேலை: ஆப்பீஸில் டேமேஜர் செய்ய சொல்வது
பிடித்த படம்: கீழே இருப்பது
பிடித்த பாடல்: சொல்லியடிப்பேனடி அடிச்சேன்னா கும்மியடிதானடி
பிடிக்காத பாடல்: ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும்
மறந்தது: அதான் மறந்துட்டாரே
ஒரே சந்தோஷம்: சக ரங்கமணிகள்
ஒரே பொழுதுபோக்கு: மற்றவரை டரியலாக்குவது






பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழும் கலாய்க்கப்படுபவன். புகைபடம் பார்த்து கலாய்த்து அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com


குசும்பன் அண்ணாச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!


வாழ்த்துவோர்,
சங்கம்

Friday, December 12, 2008

Wishes: ஐயா ஞானவெட்டியான் பிறந்தநாள் !

எனது பெருமதிப்பிற்கும், பலரது அன்பிற்கும் இலக்கணமாக திகழும், வாழும் சித்தர் திரு ஞானவெட்டியான் ஐயா அவர்களுக்கு இன்று (13 Dec 2008) பிறந்த நாள்.


ஐயா அவர்கள் நோயின்றி நல்துணையுடன் நெடுங்காலம் வாழவேண்டும் என்று

உளமாற (பதிவர்களின் சார்பிலும்) வாழ்த்துகிறேன் !


Wishes: Super Star ரஜினிகாந்த்



இன்றும் என்றும் ஒரே ஸ்டார், அவரே இந்த திரையுலகின் சூப்பர்ஸ்டார்.


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா!!!

Thursday, December 11, 2008

மகாகவி பாரதியார்


அறிவிலே தெளிவு,நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின்மீது தனியர சாணை,
பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம்,கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!

<>

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்!

இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூய ராமென்றிங் கூதேடா சங்கம்!

பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றிக் களித்டிருப் பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்!

மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
சித்தர்க் ளாமென்றிங் கூதேடா சங்கம்!

<>


கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உருவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில் நகர் கோபுரம் யாவுமே நான்.

இன்னிசை மாத ரிசையுளேன் நான்;
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர் தம் பொய்யெலாம் நான்;
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்

<>


யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!

<>


காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்


<>




" கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி"

வாழ்க்கையை கவியாய் செய்தோனுக்கு இன்று 126வது பிறந்ததினம்..

<>


தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

Wednesday, December 10, 2008

Wishes: முரளி கண்ணன் With புத்தம் புதிய ஸ்டார் !

நம்ம 'வலையுலக ஃப்லிம் நியூஸ் ஆனந்தன்'
முரளிகண்ணனுக்கு நேற்றிரவு 11.15 மணிக்கு (இரண்டாவதும்)
மகன் பிறந்துள்ளான்.

தாயும் சேயும் நலம்.

முரளி கண்ணனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!

(கோ.வி-ஜி... போஸ்டர் ரெடியா?)

--
அளவில்லா அன்போடு
-கிருஷ்ணா (பரிசல்காரன்)


கூடவே வாழ்த்துபவர்கள்,

Thursday, December 4, 2008

Wedding: சித்தார்த் - காயத்ரி


மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
முத்துடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தர்க்கீழ்
பெற்றோர்கள், பெரியோர்கள் மற்றும் நண்பர்களில் வாழ்த்துக்களுடன்
சித்தார்த் - காயத்ரி திருமணம் இனிதே இன்று (04/12/08) நடைப்பெறுகிறது

வாழ்வின் உன்னத கணங்களில்
உடனிருந்து வாழ்த்துவோம்.....

இலக்கியவாதி சித்தார்த் - கவிதாயினி காயத்ரி
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

Tuesday, December 2, 2008

Vacancy: Java Developer

Immediate requirements for Java Developer.

The profile requires the below mentioned skill sets:

Java Developer:

Experience in Core Java, J2EE, Spring, Hibernate, Struts.
Total experience – 3-6 yrs
Relevant Exp – 2 yrs
Location- Gurgaon
No. of positions: 20

Drop your resumes to wishessangam at gmail dot com  

UN SG's Message for Aids Day 08

MESSAGE ON THE OCCASION OF WORLD AIDS DAY
1 December 2008



On this, twentieth World AIDS Day, we are at the dawn of a new era.

Fewer people are being infected with HIV. Fewer people are dying of AIDS.

This success owes itself to people all over the world who are taking the lead to stop AIDS. Governments are delivering on their promises to scale up universal access to HIV prevention, treatment, care and support.

But this is just the beginning. There is no room for complacency.

AIDS will not go away any time soon. People are still being infected with HIV faster than we can get them on treatment. AIDS is still one of the top ten causes of death worldwide, and it is the number one killer in Africa.

The challenge now is to sustain leadership. We have to build on what we have started. And we have to maintain this momentum.

We have to end the stigma and discrimination that still stop so many people from learning how to prevent HIV and get treatment. And we need resources -- enough to provide services that will have a real impact in communities and on entire nations.

The need to lead, empower and deliver on AIDS is as real and urgent as ever.

Recently I read about a Congolese woman living with HIV who received medicine through the United Nations. She is now part of a group called the “hope-givers team”, which helps other families dealing with HIV.

On this World AIDS Day, let us all pledge to be “hope-givers” who offer encouragement and take action to create a future without AIDS.

Thank you very much.

Monday, December 1, 2008

Wishes: அம்பி! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

* டயாப்பர் சேஞ்சில் பி.எச்.டி பட்டம் பெற்ற ஒரே பதிவர்!
* திருநெல்வேலி பக்கம் தான் என்றாலும், அல்வா கொடுக்கவே ரொம்பவும் வெட்கப் படுபவர்!
* கோபிகாவுக்குக் கண்ணாலம் ஆயிருச்சே என்று உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல், பதிவு போட்டு அழுத வலையுலக உத்தமர்!
* இட்லிக்கும் தோசைக்கும் மாவரைக்கும் பதத்தை, பல இன்டர்நேஷனல் குக்குகளுக்கும் சொல்லித் தந்து கொண்டிருக்கும் சமூக சேவகர்!
* அண்மையில் ஒரு லட்சம் தலை வாங்கிய...சாரி, ஒரு லட்சம் லட்டு வாங்கிய....ச்சே...சாரி, ஒரு லட்சம் ஹிட்டு வாங்கிய அபூர்வ சிகாமணி!

இன்னும் எவ்ளோ சொல்லலாம்!
நான் 108 இல்லை 4000 சொல்லலாம்-னு நினைச்சேன்!
ஆனா அவை அடிக்கம் கருதி, இத்தோட என் கும்மியை நிறுத்திக்கிட்டு, அடியார்(ள்)கள் கும்மிக்கு வழி விடுகிறேன்! :)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்பி!
Many Happy Returns of the Day!


இந்த நாள் இனிய நாளில் (Dec-01), உங்கள் பக்கத்து சீட்டில், பதிவர்களே வந்த உட்கார வேணுமாய், எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்! இன்னுமொரு நூற்றாண்டு இரும்! :)

இது பதிவைப் படிக்காது, படம் பார்த்துக் கதை சொல்பவர்களுக்கு மட்டும்:

Saturday, November 29, 2008

Wishes: VSK! பிறந்த நாள் வாழ்த்துக்கள்

* சொந்த புராணத்தில் கந்த புராணம் எழுத முடியுமா?
* "ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்" மெட்டில், என் முருகன் இவனே இவனே-ன்னு ட்யூன் போடும் பதிவர், யாரு மக்களே?

* அவருக்குத் தான் இன்னிக்கிப் பொறந்த நாளு!
* அதுவும் சாதாரண பொறந்த நாளு இல்ல! ஒரு விசேடமான பொறந்த நாளு!

* முருகனுக்குப் புடிச்ச நம்பரையும், பெருமாளின் அவதாரத் தொகையினையும் மல்டிப்ளை சேஸ்கோண்டி! நம்பர் ஒச்சிந்தியா?

* மீதியெல்லாம் நீங்க தான் யூகிச்சிக்கோணும்! ஏன்னா போட்டுக் கொடுப்பது என்றால் என்னவென்றே தெரியாத அப்பாவிச் ஆயர்பாடிச் சிறுவன் அடியேன்! :)

* லார்டு ஆப் தி லப்டப், மன்னாரின் மன்னர்!
* திருப்புகழ்த் தேனீ, நமக்கோ ஆன்மீகத் தீனி!
* புதரகத்தில் (ஓபாமா-அகத்தில்) தமிழ்ச் சங்கப் புரவலர்,



DR. VSK
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! - Nov 29th!
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!


ஆங்...
பிறந்தநாள் தண்ணி பார்ட்டிக்கு ரெடியா?
பின்னால் இருக்கும் Can-ஐ எல்லாம்
ஆடாம அசையாம, ஸ்டெடியா எடுக்க ஆரம்பிங்க, மக்கா!
Happy Birthday SK! Ensoy your day! :)

Wednesday, November 26, 2008

Birthday: அண்ணாச்சியை கலாய்ப்போம் வாழ்த்துவோம் !

இன்று தனது 25வது பிறந்தநாளை (20வது தடவை) கொண்டாட இருக்கும் அன்பு அண்ணாச்சி, உலகம் சுற்றவில்லை யென்றாலும் எப்போதும் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் வாலிபர்..

வடகரைவேலன் அண்ணாச்சி அவர்களுக்கு

இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

குசும்பன் கவனத்திற்கு:- நந்து, சஞ்சய் போல இவரும் ஒரு தொழிலதிபர் என்பதை உங்கள் கவனத்தில் கொள்க.

அளவில்லா அன்போடு
-கிருஷ்ணா (பரிசல்காரன்)

கூடவே வாழ்த்துபவர்கள்.

Sunday, November 23, 2008

Wishes : பாரி.அரசு வாழ்க்கைத்துணை நலன் ஏற்பு விழா !

பதிவர் பாரி.அரசு என்கிற அன்பரசுக்கு இன்று 24/நவம்பர்/2008 வாழ்கை துணை நலன் ஏற்பு விழா.

இடம் : கோமள விலாஸ் ராஜூ திருமண மண்டபம், பட்டுக்கோட்டை
நேரம் : காலை 9 மணி
தொலைபேசி : (+91) 9710556876

பெரியார் வழி சீர்த்திருத்த திருமணம் செய்வதை பற்றுறுதியாகக் கொண்டு, அதன் படியே இல்லற வானில் சிறகு விரிக்கும் பாரி.அரசு இணையர்களை இந்த இனிய பொழுதில் பதிவர்கள் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.




திருமணத்திற்கு செல்ல சிங்கை விமான நிலையத்தில் வாழ்த்தி வழியனுப்பும் பதிவர் நண்பர்கள்.


வெட்கப்படுகிறார்


பேச்சிலராக பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்



திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டார் (இடது பக்கம் வரிசையில் ஐந்தாவது)

Thursday, November 20, 2008

Birthday: வெண்பூ !

இன்று பிறந்த நாள் கொண்டாடும் பதிவர் நண்பர், பாசமிகு வெண்பூ அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள் !

வாழ்த்துபவர்கள் கொண்டாடுபவர்கள்,


Wednesday, November 19, 2008

Birthday: 'சிறு முயற்சி' முத்துலெட்சுமி



சிறு முயற்சி, சிறு முயற்சி எனக் கூறி கொண்டே பல பெரிய முயற்சிகளை செய்து அதில் வெற்றிக் கொண்டும், நம் மனதில் பல விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் விதத்தில் பதிவுகளை இட்டும் வரும் நம் சிறு முயற்சி முத்துலெட்சுமி அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

அவரு எடுக்கும் முயற்சிகள் எல்லாம் என்றும் வெற்றி பெறவும் அவர் தன் வாழ்வில என்றும் வளமோடும், மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறோம்.

வாழ்த்துவது

சங்கம்

Tuesday, November 18, 2008

Birthday: ஓசை செல்லா



Kick off Your shoes,take a break, Crank the tunes, Dance & Shake, light the candles,cut the cake .Make it a day, that's simply Great!!!
Happy B'day....

Saturday, November 15, 2008

Anniversary: திரு & திருமதி 'வெட்டி' பாலாஜி


இன்று (Nov-15) திருமண நாளை கொண்டாடும் திரு & திருமதி வெட்டிக்கு சங்கம் சார்பாக வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திப்போமாக.

குட்டிப்பொண்ணுக்கு என்ன துணி எடுத்தீங்க கொல்டிகாரு?

Thursday, November 13, 2008

Birthday: அபி/நட்டு அப்பா!

Some like Sunday

Some like Monday,

But today is your Birthday!

(அபி அப்பாவுக்குத் தகுந்த மாதிரி ஒரு பஞ்ச் வாழ்த்துக்கள்)

Happy Birthday அபி/நட்டு அப்பா!

Birthday: Nimal



A prayer: To bless Your way
A wish : To lighten Your moments
A cheer: To perfect Your day
A text: To say HAPPY BIRTH DAY
Happy birthday Nimal!(ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன்)

Wednesday, November 12, 2008

Birthday: Dev


On your birthday We wish you much pleasure and joy;
We hope all of your wishes come true.
May each hour and minute be filled with delight,
And your birthday be perfect for you!

Tuesday, November 4, 2008

Wishes: செந்தில் குமார்

பதிவரும், நண்பர் ஜோசப் பால்ராஜின் ஆருயிர் நண்பருமான செந்தில் குமார் அவர்களுக்கு பிறந்த நாள் மற்றும் 50 ஆவது பதிவிற்கான வாழ்த்துக்கள் !

ah!! wat to say bout me.. I'm a small person in this huge world... - செந்தில் குமார்

ரொம்ப தன்னடக்கமாகச் சொல்றாரு இல்லையா ?

50 ஆவது பதிவா ? கிழே இருக்கிறது...
*****

"superடா trainல circulate பண்ணலாம்.." பால்ராஜ் ஆர்வமானான்..

"போங்கடா நீங்களும் உங்க magazineம்.. train வந்திடுச்சி, வாங்க போகலாம்" என்று சுவாமி குரல் குடுக்க, சபை கலைந்தது..

அம்மாப்பேட்டை நண்பர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு, அனைவரும் ரயிலுக்கு சென்றனர்..

இந்த மூன்று ஆர்வகோளாரு பசங்களும் ரயிலில் போகும்போதும் நிறுத்தவில்லை..

"மச்சி, நாம இத விடக்கூடாது. கண்டிப்பா magazine... பொடறோம்."
"ஆமம்டா.. "

ரயில் தஞ்சையை சென்றடைய 20 நிமிடங்களாகும்.
ரயில் தஞ்சையை அடைந்தபோது செந்தில், சரவணன், பால்ராஜ் மூவரும் ஒரு வார இதழுக்கு ஆசிரியர் ஆகி இருந்தனர்..

மூவரும் தங்கள் பெயரில் உள்ள எழுத்தகளை வைத்து magazineக்கு ஒரு பெயர் வைத்துவிட்டனர்.. "SenSarPal Weekly"



வாழ்த்துகள் செந்தில் குமார்
- கோவி.கண்ணன் மற்றும் ஜோசப் பால்ராஜ்

New Born: வெட்டி பாலாஜி அப்பா ஆயிட்டார்


வெட்டிப்பயல் பாலாஜி அண்ணனுக்கும் சரண்யா அண்ணிக்கும் குட்டி தேவதை பிறந்திருக்கா.
குட்டி தேவதையின் வருகை இவர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் சந்தோஷங்களை கொண்டு வர வாழ்த்துவோமாக.

வாழ்த்துவோர்,
சங்கம்

Monday, November 3, 2008

Birthday:காவ்யா D/O தெகா

நம்ம நண்பரும் அட்லாண்டாவின் ஹீரோவுமான பதிவர் தெகா என்கிற தெக்கிக்காட்டானின் இளவரசி காவ்யாவுக்கு முதல் பிறந்தநாள். வாங்க நாமளும் ஒரு வாழ்த்த சொல்லிட்டு வரலாம்

வாழ்த்துச் செய்தி
By மகேந்திரன்.பெ

ஒட்டுனது ILA

Wishes: ரிஷான் ஷெரீஃப்! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

* இணையத்தின் இளைய தளபதி, (இப்படித் தான் சொல்லச் சொன்னாரு)
* ஈடில்லா தமிழ்க் கவிதைகளை, கதைகளை எழுதிக்கிட்டே இருக்கறவரு,
* கதை/கவிப் போட்டிகளில் சொல்லி அடிப்பவரு,
* அஜீத், விஜய், சூர்யா, ஆர்யா-ன்னு இவரு போடுற ஃபோட்டோவுல இவரு மட்டும் எங்க இருக்காருன்னு யாருமே கண்டுபுடிக்க முடியாது!

* ஓர்க்குட்-ல 30000 ஸ்கிராப்பு வாங்கிய அபூர்வ சிகாமணி,
* Forward Mail-களின் முடிசூடா மன்னன், (அடங்க மாட்டீயளோ?)
* மானவல்லை நகர மேயர்
* இலங்கை இளவரசு,

ஆங் வேற என்னாப்பா?...
* த்ரிஷா, அசின் போன்றவர்களின் ஒரே கசின்


கட்டாரின் கிட்டார், ரிஷான் ஷெரீஃப்-க்கு
பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! (Nov-3)



பி.கு, உ.கு, வெ.கு:
Doha, Qatar-இல் பெண்கள் கலைக் கல்லூரி எல்லாத்துக்கும் இன்னிக்கு லீவாம்! :)

Saturday, October 18, 2008

Wishes: அவந்திகா

இன்று பிறந்தநாள் காணும் அவந்திகாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!





வாழ்த்துவோர்
சங்கம்

Tuesday, October 7, 2008

Wishes: ஆஷிஷ்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தம்பி ஆஷிஷ்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்றுபோல் என்றும் கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்க பிரார்த்திப்போமாக. :-)

வாழ்த்துவோர்,
சங்கம்

Monday, September 29, 2008

Wishes: காதல் கறுப்பியின் நாயகன் தமிழன்

ஒரு பெண்மையிடம் தோற்ற தமிழனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!






காதலை கற்பாய் நினைப்பவன் நீ
ஒரு காதல் கறுப்பியின் நாயகன் நீ
காதல் - காவியம் பாடும் நாயகனே
காத்திரு காதலி உந்தன் துணையிருப்பாள்

நீ காதலைப்பற்றி நினைக்கின்றாய்
அதன் சோகத்தை சுகமென ஏற்கின்றாய்
காதலி வந்து சேரும் முன்னே
கேளு... எங்களின் வாழ்த்துச் செய்தியினை..!!



வாழ்த்துவோர்
சென்ஷி, ஆயில்யன் மற்றும் சங்கம்

Friday, September 26, 2008

Wishes: வானவராயனுக்கும், ராணிக்கும் வாரிசு வந்தாச்சு !



சின்னக் கோடம்பாக்கம் (கோபி), சின்ன ரஜினி வீட்டில், துள்ளி விளையாட ஒரு குட்டி ரஜினி பிறந்திருக்கிறார்.

கடந்த வியாழன் 18/செப்/2008 அன்று, மனசாட்சி பதிவர் கிரி அப்பாவாக ஆகி இருக்கிறார்.

அறுவை (சிசேரியன்) செய்து ஆண் குழந்தை பிறந்திருக்கிறது, குழந்தையின் எடை 3.2KG.

தாயும் சேயும் நலம் !

"என்னைய்யா பேரு வைக்கப் போறே... குசேலன், அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா ?" தொலைபேசியில் கேட்க,

"அடபோங்க...என்ர மவனுக்கு தமிழ் பேரு வெக்காம வேற பேரு வெப்பேனாக்கும்" என்றார்


எல்லோரும் குட்டி ரஜினியையும் புதிய அப்பா-அம்மா ஆகி இருக்கும் கிரியையும் அவரது மனைவியையும் வாழ்த்துவோம்





Tuesday, September 23, 2008

Wishes: மங்கை

இன்று பிறந்தநாள் கொண்டாடும் மங்கை அக்காவுக்கு:


னி பிந்நாள் ல்வாழ்த்துக்ள் அக்கா!

வாழ்த்துவோர்,
முத்துலெட்சுமி, கோபிநாத் & சங்கம்

Thursday, September 18, 2008

Wishes: பிரேம்குமார்

காதல் கவிதைகளுக்கு சொந்தங்கள் நிறைய இருந்தாலும் நட்பு கவிதைகளுக்கு சொந்தமுன்னு சொல்லிக்க நம்ம மாப்பி ஒருதன் இருக்காரு அவரு தான் எங்கள் செல்லம் மாப்பி பிரேம்குமார்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் எங்கள் மாப்பி பிரேம்குமாருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.




எதுக்கு நமீதா போட்டோன்னு எல்லாம் கேட்டக்கூடாது. அந்த கேள்வியை அவருக்கிட்டயே கேளுங்க.

குறிப்பு: மாப்பியின் பிறந்த நாளை முன்னிட்டு டி.நகர் கிருஷ்ணவேனி தியேட்டார் அருகில் இலவசமாக ரசத்துடன் கூடிய மெதுவடை கிடைக்கும்.


வாழ்த்துக்கள் சொல்லிக்கறது - கோபிநாத், சென்ஷி, கானா பிரபா, ஸ்ரீ & சங்கம்.

Monday, September 15, 2008

Wishes: ஜீவ்ஸ்


இன்று திருமண நாளை கொண்டாடும் ஜீவ்ஸ் அண்ணா - அருணா அண்ணிக்கு வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திப்போமாக.

Friday, September 12, 2008

Wishes: வினையூக்கி

அருமை அண்ணன்
ஜெனியின் கண்ணன்
ஸ்வீடன் மாப்பிள்ளை

பேய்க் கதைகளின் நாயகன்
கேப் விடாமல் கடலை போடும் மன்மதன்

அன்பு சீனியர்
பேச்சில் இனியர்

அண்ணன் வினையூக்கி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!

Thursday, September 11, 2008

Wedding: அருண்குமார்


இன்று 11/09/2008-இல் க்லேவ்லண்ட் புகழ் அருண்குமார் ஸ்வப்னாவை கைப்பிடிக்கிறார். இத்திருமண பந்தத்தில் இணையும் அருண்குமார்-ஸ்வப்னா தம்பதிகள் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துவோம்.

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
ருண்குமார் - ஸ்ப்னா!

Wednesday, September 10, 2008

Wishes : திருமண வாழ்த்துகள்: மங்களூர் சிவா- பூங்கொடி !

பதிவுலகின் செல்லப் பிள்ளை, கொஞ்சம் ஜொள்ளுப் பிள்ளை மங்களூர் சிவாவுக்கும் - பூங்கொடிக்கும்

இன்று செப்டம்பர் 11, 2008 தேதி,

வியாழன் காலை 7.30 - 9.00 க்குள்
வடபழனி முருகன் ஆலயத்தில் நடைபெற இருக்கும் திருமணத்திற்கு சங்கம் வாழ்த்துப் பதிவர்கள் சார்பில், மாப்பிள்ளை வீட்டு சார்பில், பதிவர் நண்பர்கள் சார்பில்,

இன்றுபோல் மனம் ஒத்த இணையர்களாக என்றும் வாழ வாழ்த்துகிறேன் !








மாப்பிள்ளைக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவிக்க வேண்டியவர்கள் அலைக்க வேண்டிய கைபேசி எண் : +91 98458 95200.

அதற்காக விடிய விடிய அழைத்து அவரை தூங்கவிடாமல் செய்துவிடாதீர்கள். கூட இருப்பவர்கள் தூங்கவிடமாட்டார்கள் அது வேற.

இங்கே சிங்கையில் நள்ளிரவு 12, அங்கே சென்னையில் இரவு 9:30 பார்டி கலை கட்டி இருக்கும்.


பின்னூட்ட வாழ்த்துக் கவிதை எழுதி வதைக்கும் கும்மி பதிவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன் !

Sunday, September 7, 2008

Wishes: சஞ்சய்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நம்ம பொடியன் @ சஞ்சய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அடுத்த வருடம் தன் துணைவியாருடன் பிறந்தநாளை கொண்டாட இப்போதே நல்வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வோம். ;-)
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சஞ்சய்!!!!

Birthday: கால்காரி சிவா



இன்று பிறந்தநாள்(7-Sept) காணும் திரு. கால்கரி சிவா அவர்கள் எல்லாம் வளமும் பெற்று வாழ அன்புடன் வாழ்த்துகிறோம்.


வாழ்த்துவோர்,
சங்கம்

Monday, September 1, 2008

Wishes: G3 (aka) சொர்ணக்கா

Food Items பத்தி யாரும் ஃபார்வர்ட் பண்ணின முதலிலே ஞாபகம் வர்ற நம்ம சொர்ணக்காவுக்கு இன்னிக்கு பொறந்தநாளு.

எல்லாரும் வாழ்த்துக்கள் சொல்லிருங்கப்பா......

Friday, August 29, 2008

Need your help to save a life !!!

மருத்துவ செலவுக்கு உதவிக்கேட்டு வந்த மின்னஞ்சல். இதை படிக்கும் நண்பர்கள் உதவும் பொருட்டு இங்கே பதிவிடப்பட்டுள்ளது..



I am very sorry to inform you all that my classmate and good friend Muthuselvi is suffering from Blood Cancer (Acute Myeloid Leukemia).

She was admitted in Meenakshi Mission Hospital, Madurai on March 2008 and she has been undergoing cancer treatment there from that time onwards. The cost of her treatment has been estimated to be more than 5 lakhs. This cost of the treatment is beyond her family's earnings. Being unemployed and belonging to a poor family she has been facing severe financial problems towards her treatment. I and my college friends have contributed around 1 lakh for her treatment. But still, we are facing severe shortage of funds for her treatment.

I humbly request you all to contribute generously towards this noble cause. Whatever help that you lend towards this cause will be valued in my heart as a help done to myself.

About her:

She is a B.E. (ECE) Graduate and she was employed till January 2008 as a DOTNET trainee in a small concern in Chennai, Tamilnadu. After January she was diagnosed with 'Blood Cancer' and was instructed to leave the job and return to her hometown, Madurai. Her family is supported by her brother and father who are farmers by occupation.

Contacts:

Karthikeyan (Me, patient's friend)

Mobile: 09980070646;

Bangalore Infosys Extn: *666 61352

Muthuselvi (Patient)

Mobile 09786393613

Dr. Jeba Singh

Consultant Oncologist (MMH),

Chief of Cancer Department,

Madurai Govt. Hospital

(Please contact me for his mobile number and availability)

Mode of Contribution:

Online Transfer

(Kindly intimate after transferring the amount)

Name: Karthikeyan

ICICI bank a/c no: 004001539619

Wishes: தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு

தமிழ்மணம் திரட்டியை பல இன்னல்களுக்கு வெற்றிகரமாக இடையில் நடத்தி வரும் மூன்றாம் ஆண்டில்(Aug-13) அடியெடுத்து வைக்கும் Tamil Media International Inc நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்.

(கொஞ்சம் லேட்டாத்தான் வாழ்த்துறோம் இருந்தாலும் மறந்துடக்கூடாதுங்களே)

Wednesday, August 27, 2008

Birthday: முத்துக்குமரன்

கவிமடம் வேந்தன்,

குடில் காத்த குமரன்

முத்துவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.



வாழ்த்துவோர்,

இலவசகொத்தனார் & சங்கம்

Wishes: சஹானா

சின்னப் பையனின் தேவதைக்கு இன்று பிறந்த நாள்.

சின்னப் பையனின் பதிவு

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஹானா.


இப்படிக்கு
சங்கம்.

Sunday, August 24, 2008

Wishes: நானானி! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பத்துப் பட்டியிலும் கலக்குறவங்க, ஒன்பது-மேற்கிலும் கலக்குவாங்க!
அதாங்க 9-west வலைப்பூ!

வலைப்பூ சொந்தக்காரம்மா,

நானானி அவர்களுக்கு,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லுங்க மக்கா!

- அன்புடன், சங்கம் மற்றும் ஆயில்ஸ் அண்ணாச்சி, தமிழ் ப்ரியன், ராம லக்ஷ்மி!

அப்படியே அம்மா சுட்டுக் கொடுக்கும் கருப்புக் கலர், கருப்பு உளுந்து தோசையும், தொட்டுக்க வெங்காயச்சட்னி, தேங்காய்சட்னி, கா.....ரமிளகாய்பொடி, சாப்ட்டு போட்டு போங்க மக்கா! Birthday Cake இல்லை! Birthday தோசை தான்! :)