இன்றைய முக்கியச் செய்தி
எலிஜிபிள் பேச்சிலர்களிலேயே மூத்தவரான அண்ணன் ஆயில்யன் அவர்களுக்கு இன்று திருமணம்
கத்தார் நாட்டுக்கே புலியாக இருக்கு அண்ணன் ஆயில்யன் அவர்கள்,
இனிமே வீட்டுல எலியாக இருப்பார் என அறிய வந்தோம். 24 மணி நேரம் ஆன்லைனில் இருந்த காலம் போய் இன்று முதல் அண்ணார் 2.4 நொடிகள் மட்டுமே இணையத்தில் காணப்படுவார் என தகவல் அறிந்த வட்டாரம் தெரிவிக்கிறது. இன்று வரை சமையல் என்பது என்வென்றே அறிந்திராத ஆயில்யன் அவர்கள் இனி மூன்று வேளையும் சமைப்பார் எனவும், சாப்பாட்டுக்கால இடைவெளியில் வடை, சொஜ்ஜி, பஜ்ஜி மற்றும் காபி டீ ஆத்துவார் என்றும் புலனாய்வு படை தகவல் தந்திருக்கிறது.
Twitterல் ரீட்வீட்டையே உலகுக்கு பிரபலப்படுத்திய அண்ணன் அவர்கள் இனி ரிவிட் வாங்கும் காலம் என வாநிலை ஆராய்ச்சியாளர்கள் மப்பும் மந்தாரமாக அறிவித்துள்ளார்கள்
இனிமே அண்ணன் ஆயில்யன் அவர்களை புடவை மடிக்கும் நேரத்திலோ, டிவி சீரியல் ஓடும் நேரத்தில் மட்டும் தொடர்பு கொள்ளவும் என அண்ணன் அவர்களே நேரடியாக நண்பர்களிடத்தில் மன்றாடி கேட்டுள்ளார்.
இப்படிக்கு
ஆயில்யன் அண்ணன் மேல பரிதாபப்படும் தம்பிகள்
------------------------------------------------------------------------------------
ஆயில்யன் - அனு தம்பதி 16 பேறும் பெற்று பெரு வாழ்வு வாழ என
வாழ்த்த வயதில்லாமல் விழுந்து கும்பிட்டுக்கிறோம்
12 comments:
:)
//அண்ணன் ஆயில்யன் அவர்களை புடவை மடிக்கும் நேரத்தில் மட்டும் தொடர்பு கொள்ளவும்//
என்ன ஆணவம்? அண்ணி கஷ்டப்பட்டுப் புடைவை மடிக்க, அந்த நேரத்தில் மட்டும் தான் அண்ணன் ஆயில்யன் பேசுவாராமா? இது உச்சகட்ட ஆணாதிக்கம்!:))
இனிய திருமண வாழ்த்துக்கள் அனு-ஆயில்யன் AA ஜோடி! :)
முருகனருளால் நீடு பீடு வாழ்க! நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
நானும் ஒருதபா மல்லாக்க விழுந்து கும்பிட்டு ஆ அ தம்பதிகளை வாழ்த்திக்கிறேன்
//நானும் ஒருதபா மல்லாக்க விழுந்து கும்பிட்டு ஆ அ தம்பதிகளை வாழ்த்திக்கிறேன்//
:)))) ரிப்பீட்டே :)))))
ஆயில்யன் திருமணத்துக்கு, நானும் என் முருகனும் சென்று வாழ்த்திய முருகனருள் பதிவு இங்கே!:)) http://muruganarul.blogspot.com/2011/07/ayilyan-marriage.html
அனு ஆயில்யன் இருவருக்கும் அன்பான திருமண வாழ்த்துக்கள்!
ஆயிலியன் அங்கிளை வாழ்த்த வயதில்லை. இருந்தாலும் இதுமாதிரி சமயத்துல வயது வித்தியாசம் பார்க்க வேண்டியதில்லை.. ஆயில் தம்பதி பதினாறு செல்வங்களும் நாலஞ்சு புள்ள குட்டிங்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.
மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள் சின்ன பாண்டி & அண்ணி :-)
/நானும் ஒருதபா மல்லாக்க விழுந்து கும்பிட்டு ஆ அ தம்பதிகளை வாழ்த்திக்கிறேன் /
ரிப்பீட்டேய்.. ;-)
வாழ்த்துகள்
ஆயில்யன், அனு தம்பதிக்கு இனிய வாழ்த்துகள்.
அனு ஆயில்யன் திருமணத்தில் கலந்து கொண்டோம் - மண மக்கள் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்
Post a Comment