Sunday, December 4, 2011

தேவ் ஆனந்த் - நினைவுகள்

தேவ் ஆனந்த் , மிக பிரசித்தி பெற்ற இந்திய பாலிவுட் நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். தேவ் ஆனந்த் தனது மூன்று சகோதரர்களில் இரண்டாவதாக பிறந்தவர். அவரது மூத்த சகோதரர் சேதன் ஆனந்த் ஒரு திரைப்பட இயக்குனர், அதேபோல் அவரது இளைய சகோதரர் விஜய் ஆனந்தும் இயக்குனர். அவர்களின் சகோதரி, ஷீல் காந்தா கப்பூர், புகழ் பெற்ற ஹிந்தி மற்றும் ஆங்கில திரைப்படத்துறையின் இயக்குனர் சேகர் கப்பூரின் தாயார்.

அனைத்துத்தரப்பு மக்களையும் தன் நடிப்பால் கவர்ந்த தேவ் ஆனந்த், நேற்று  3 டிசம்பர் 2011 லண்டனில் மாரடைப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 88.

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் பேட்டி ஒன்றில், தேவ் ஆனந்த் தான் தனக்கு முதல் இன்ஸிபிரேஷன் என்று சொல்லி இருந்தார். இன்று தேவ் ஆனந்த் மறைவிற்கு பின் அவருடைய பாடல்களை பார்க்கும் போது, சூப்பர் ஸ்டார் சொன்னது எத்தனை சரி என்பது தெரிந்தது.

நன்றி :விக்கிபிடியா

தேவ் ஆனந்த் அவர்களின் நினைவுகளாக -

Prem Pujari - Phoolon Ke Rang Se Dil Ki Kalam Se - Kishore Kumar


No comments: