அம்மாபேட்டை கணேசன் அவர்களை வைத்து எடுக்கும் ஆவணப்படத்திற்கு விதைத்தவசம் என்று தலைப்பிட்டிருக்கிறேன். நேற்று நானும் தனபாலும் கால்கட்டு அவிழ்க்க அந்தியூர் சென்று வந்தவரை பார்த்து வரலாம் என்று போயிருந்தோம். செல்லச்சொக்கு போட்டிருந்தார், கால் வலி தாளாமாட்டாதவராய். கொஞ்சம் மனவருத்தமும் கூட...
பக்கத்து வீட்டு அம்மையிடம் சோமாரக் கெழமையென்ன படம் புடிக்க சீனீமாக்கார பசங்க வராங்க என்று பெருமை பீற்றிக் கொண்டார் போல . அந்த அம்மைக்கு கொஞ்சம் வாய் சாஸ்தி. கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியத் தூக்கி மனையில வையிங்கறாப்பல இருக்கப்பட்ட மொகரக்கட்டைங்கள வுட்டுட்டு இந்த நடையழகனத்தாம் படம் புடிக்க வர்றாங்களா? என்று ஏவிடியம் பேசிவிட்டாளாம். எலும்பு கூடி நட வந்து நானும் வேசம் போட்டு ஆடறனோ இல்லியோ லட்சம் உரூவா செலவானாலும் போச்சாது!
எம்மூஞ்சி எதுனாச்சிம் உள்ளூரூரு சினிமாக்கொட்டாயில தெரியாட்டி போவுது கலைஞரு குடுத்த பொட்டியில வர்ற மாதிரியாச்சும் ஒரு ஏப்பாடு பண்டிவுடு என்றவரை கண்கரிக்க பார்த்திருந்தேன். கோரியபடிக்கு ஒரு சில இடங்களில் உதவிக்கரம் நீண்டிருக்கிறது. கையிருப்பு போக நிதியாதாரம் இன்னும் தேவையிருக்கிறது. அந்த ஏழைக்கலைஞனின் ஆவலை நிறைவேற்ற அன்பர்களே
ஆவணப்பட த்திற்கு பண உதவி செய்வதைக் குறித்து மறுபடியும் ஒருமுறை பரிசீலியுங்கள் .
குறிப்பு:
--------------
கண்ணனாக கனகராஜ் வாத்தியாரும் துரியனாக அம்மாபேட்டை கணேசன் அவர்களும் சந்திக்கும் காட்சி.
அபிமன்னன் சுந்தரி கல்யாணம் : கூத்து.
உதவி செய்ய தொடர்புக்கு: 9894605371
8/16 Mayil ravanan: ஆவனப்படத்துக்கு இல்லாட்டியும் ஒரு 'Mobile Stage' - பெயர்த்தகு மேடை தயாரிக்க முடிவு செஞ்சிருக்கோம் கூத்துக்கலைஞர்களுக்காக.
8/16 Mayil ravanan: அதுக்கு 25ஆயிரம் ரூபாய் Estimate. கண்டிப்பா உங்களில் முடிஞ்சவங்க பொருள் உதவி செஞ்சாதான் முடியும்.
8/16 Mayil ravanan: நன்றி க இராமசாமி
8/16 Mayil ravanan: நன்றி kavi rajan
8/17 Mayil ravanan: நன்றி தினேஷ் குமார் (முகிலன்)
8/17 Mayil ravanan: M.Harikrishnan,
Account no: 534323956
Indian Bank,
Mecheri. 636451
Micr Code : 636019092
IFSC Code: IDIB000M025
உதவி செய்ய நினைப்பவர்கள் மேற்கண்ட இந்தியன் வங்கி எண்ணுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டுகிறேன்.
Mayil Ravanan