Thursday, August 9, 2007

Wishes: கேஆர்எஸ்....மாட்டிக்கிட்டீங்க!


சீனியம்மா தெரியும்ல எல்லாருக்கும். அவங்கதாங்க..கொளக்கட்டாங்குறிச்சிக் கெழவி. அவங்க திண்ணைல உக்காந்திருப்பதான் கே.ஆர்.எஸ் அந்தம்மா கண்ணுல மாட்டுனாரு. சீனியம்மா விடுவாங்களா...படக்குன்னு கூப்புட்டாங்க.

"ஏலேய்..இங்ஙன வா...ஒரு முக்கியமான வெசயம்."

கேயாரெஸ்க்குப் பயந்தான். யார்ரா இது ஒரு பெரியம்மா கூப்புறாகளேன்னு. "என்ன பாட்டீ"ன்னு பயந்தாப்புல போயி நின்னாரு.

சீனியம்மாக்குக் கோவம் வந்துருச்சுல்ல. "என்னது பாட்டியா? எங்கூர்ல எல்லாம் பெரியம்மான்னு கூப்புடுவாக. ஆமா...நீ எந்தூரு?"

திக்கித் தெணறுச்சு. "வாழப்பந்தல் பெரீம்மா"

"என்னல இது...பந்தல்ல வாழையக் கட்டுவாக...வாழைல பந்தலைக் கட்டுவாகளா! என்னவோ போ..."

"இதுக்குதான் கூப்பிட்டீங்களா?"

"இல்ல.....இங்ஙன உக்காரு மொதல்ல"ன்னு திண்ணயக் காட்டுனாக சீனியம்மா. கேயாரெஸ்சு உக்காந்ததும்..."ஆமா இங்குட்டு எங்குட்டு வந்த? பேந்தப் பேந்தப் பாத்துக்கிட்டிருக்க..இங்குட்டெல்லாம் வெவரமா இருக்கனுமப்பூ. இல்லைன்னா கிண்டிக் களியாக்கீருவாக. சரியா."

"சரி பெரீம்மா. இதுக்குத்தான் கூப்பிட்டீங்களா?"

"இல்ல. மொதல்ல இங்க வந்த காரணத்தச் சொல்லுவியா...அத விட்டுட்டு..."

"அது இங்க பெருமாள் கோயில்...." இழுத்தாரு கேயாரசு.

"பெருமா கோயிலா? கொளக்கட்டாங்குறிச்சீல என்ன பெருமா கோயிலு இருக்கு. அந்த முக்குல காச்சக்கார அம்மங்கோயிலு...அதுவும் வெட்டவெளியிலதான். இந்த முடுக்குல கோப்பம்மா கோயிலு. எல்லாம் பொம்பள சாமிதான். ஆம்பள சாமியெல்லாம் இங்க கெடையாது."

"இல்ல பெரீம்மா...பெருமாள் கோயில் இங்க இருக்கு. அதுக்குத்தான் வந்தேன்."

"சொன்னாக் கேக்க மாட்டீங்கியே! ஏமுல இப்பிடி? இங்குட்டுக்கூடிப் போ...செவலாருபட்டி வரும்...அதையும் தாண்டிப் போ...சாத்தூரு வரும். அங்குட்டுத்தான் இருக்கு பெரிய பெரிய கோயிலுக. அது சரி...எதுல வந்த?"

"காருல வந்தேன் பெரீம்மா. இதுக்குத்தான் கூப்டீங்களா?"

"இல்ல...அது வேற விசயம். ஆமா...அந்த ஊதாக் காரா ஒங்காரு...நல்ல பெரிய வண்டியாத்தான் இருக்கு."

அப்பன்னு பாத்து வீட்டுக்குள்ள இருந்து கறி வதக்குற வாசம் வந்துச்சு. கேயாரசு அப்படியே மயங்கி வாசனையப் பிடிக்காரு.

"நல்லாத்தாம் மோப்பம் பிடிக்க. ஆமா நீ கறி திம்பியா? சொல்லு"

"இதுக்குத்தான் கூப்டீங்களா?"

"இல்ல. கேள்விக்கு மொதல்ல சொல்லு."

"அது வந்து....வாசனை பிடிக்கும். வாசனை வெச்சே எதெதுன்னு சரியாச் சொல்லீருவேன்."

"ஆகா. அப்படியா. நல்லதுதான்."

"சரி. எதுக்குக் கூப்டீங்க?"

"ஓ கூப்டேன்ல....சரி...கால்ல விழு"

"என்னது?"

"ஏம்ப்பா இந்தப் பயம். எங்கால்ல விழுந்தா தப்பில்லை. அதான் பாட்டீன்னு சொன்னியே."

மொதல்ல யோசிச்சாலும் கேயாரசு சீனியம்மா கால்ல விழுந்து எந்திருச்சாரு. ஒரு பத்துரூவாத்தாள கேயாரசு கைல வெச்சி, "இன்னைக்கு ஆகஸ்ட்டு 9. ஒம் பொறந்த நாளுதான. அதுக்கு வாழ்த்துச் சொல்லத்தான் கூப்புட்டேன். நீ இன்னைக்குப் பெருமாள் கோயிலத் தேடிப் போவன்னு மயிலாரு ஏற்கனவே சொல்லீட்டாரு. அதாங் கூப்புட்டு வாழ்த்துனேன். ரொம்ப நல்லாரு"ன்னு வாழ்த்துனாக. மக்கா...நீங்களும் வாழ்த்துங்க.

வாழ்த்துகளுடன்,
கோ.இராகவன்

44 comments:

ILA (a) இளா said...

Many More Happy Returns of the Day (IST) KRS.

ESTலயும் வாழ்த்து உண்டு, வழக்கம் போல Confல. :)

இராம்/Raam said...

KRS,

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.... :)

வெற்றி said...

கண்ணபிரான் ரவிசங்கர்,
உங்களுக்கு என் உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இராகவன்:

இது தமிழகத்தில் எப் பகுதியில் பேசப்படும் தமிழ்? படிக்கும் போதே சுவைக்கிறதே.

G.Ragavan said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கே.ஆர்.எஸ். :)

பாலராஜன்கீதா said...

அன்புள்ள கேஆர்எஸ்,

உங்களின் பிறந்த நாளுக்கு எங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.

சிங்கம் said...

இந்த மாத அட்லாஸ் வாலிபர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்

இராம்/Raam said...

//இராகவன்:

இது தமிழகத்தில் எப் பகுதியில் பேசப்படும் தமிழ்? படிக்கும் போதே சுவைக்கிறதே.//

வெற்றி,

இது தென் தமிழ்நாடு சுற்று வட்டாரத்து பாணிங்க.....

நம்மூரு மதுரை வந்து பாருங்க... எல்லா பேரும் அப்பிடி தானே பேசுவோம்...:)

Geetha Sambasivam said...

அட, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், ரவி, மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன். எல்லாச் சிறப்புக்களும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

CVR said...

சூப்பரு பதிவு தல!!!

கே.ஆர்.எஸ் அண்ணா!!!
நீங்கள் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று வாழ இறைவன் அருள் புரிவாராக!! :-))

குமரன் (Kumaran) said...

நல்லா மாட்டிக்கினாருபா கேயாரெஸ்ஸு. கவுண்டரோட டெவில் ஷோவைவிட இது சூப்பரா கீதே. வாழ்த்துகள் இராகவன். சாரி. சாரி. சாரிப்பா. பிறந்தநாள் வாழ்த்துகள் கேயாரெஸ். இராகவனுக்கு இந்த இடுகையை இட்டதற்கு வாழ்த்துகள். :-)

வெட்டிப்பயல் said...

அட்டகாசமான பதிவு தலைவா...

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி KRS வாழ்க! வாழ்க!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சீனிம்மா...சூலத்த வெரட்டுன பெரீம்மா...இந்தப் பேராண்டி கூடயே வண்டியில் வாங்க பெரீம்மா...

காச்சக்கார அம்மங் கோயிலுக்கும்... கோப்பம்மா கோயிலுக்கும் போயி சாமியக் கும்பிட்டு போட்டு, அப்படியே செவலாருபட்டி சாத்தூரு தாண்டிப் போயி, திருத்தங்கல் போயி வருவோம்...
அங்கண்ண பெரீய்ய்ய்ய் பெருமா கோயிலு ஒன்னு இருக்கு!

நல்லாச் சாமிய பாத்துபோட்டு, பிரசாதம் மட்டும் அங்கன வாங்காம, இங்கனயே வருவோம். மூக்கைத் துளைக்குது பெரீம்மா...ஒங்க வூட்டு பிரசாத வாசன! தட்டுல அப்படியே சுடு சோறும், அகத்திக் கீரையும் போட்டுத் தாங்க பெரீம்மா...

ஆஞ்ச கீர போட்டு
காஞ்ச பய புள்ள
மாஞ்சி மாஞ்சி தின்னுட்டுப்
மவராசனாப் போயி வாரேன்! :-)

MSATHIA said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் KRS!!
-சத்தியா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தெற்கத்தி தமிழ்த் தென்றலால் என்னைத் தாலாட்டி வாழ்த்திய ஜிரா அண்ணாவுக்கு என் அன்பும் நன்றியும்!

அப்படியே சீனியம்மா கொடுத்து வுட்ட பத்துரூவாத் தாள நீங்களே பத்திரமா வெச்சுக்குங்க ஜிரா. நாம பாக்கும் போது சீனி மிட்டாய், தேன் மிட்டாய் வாங்கக் கொடுத்தறணும் ஆமா! :-)

இளா, ராம், வெற்றி, பாலராஜன் சார், கீதாம்மா, CVR, குமரன், பாலாஜி, சங்கத்துச் சிங்கங்கள், அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி!

சங்கத்துல இதை எப்படிக் கரீட்டாக் கண்டு புடிச்சாய்ங்க-ன்னு தான் இன்னும் தெரியல! :-)))))

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சீனிம்மா...சூலத்த வெரட்டுன பெரீம்மா...இந்தப் பேராண்டி கூடயே வண்டியில் வாங்க பெரீம்மா...

காச்சக்கார அம்மங் கோயிலுக்கும்... கோப்பம்மா கோயிலுக்கும் போயி சாமியக் கும்பிட்டு போட்டு, அப்படியே செவலாருபட்டி சாத்தூரு தாண்டிப் போயி, திருத்தங்கல் போயி வருவோம்...
அங்கண்ண பெரீய்ய்ய்ய் பெருமா கோயிலு ஒன்னு இருக்கு!

நல்லாச் சாமிய பாத்துபோட்டு, பிரசாதம் மட்டும் அங்கன வாங்காம, இங்கனயே வருவோம். மூக்கைத் துளைக்குது பெரீம்மா...ஒங்க வூட்டு பிரசாத வாசன! தட்டுல அப்படியே சுடு சோறும், அகத்திக் கீரையும் போட்டுத் தாங்க பெரீம்மா...

ஆஞ்ச கீர போட்டு
காஞ்ச பய புள்ள
மாஞ்சி மாஞ்சி தின்னுட்டுப்
மவராசனாப் போயி வாரேன்! :-) //

தெய்வமே,
எங்கயோ போயிட்டீங்க!!!

இலவசக்கொத்தனார் said...

அதான் இந்த மாதம் நீங்க அட்லஸ் வாலிபர் ஆகிட்டீங்களா?!!! உங்க பிறந்த நாளுக்கு எங்களுக்குப் பரிசு!!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல!!

G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆஞ்ச கீர போட்டு
காஞ்ச பய புள்ள
மாஞ்சி மாஞ்சி தின்னுட்டுப்
மவராசனாப் போயி வாரேன்! :-) //

தெய்வமே,
எங்கயோ போயிட்டீங்க!!! //

என்ன வெட்டி, சாமி எங்க போயிரிச்சி..மலையேறீருச்சா :)))))))))))

G.Ragavan said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
தெற்கத்தி தமிழ்த் தென்றலால் என்னைத் தாலாட்டி வாழ்த்திய ஜிரா அண்ணாவுக்கு என் அன்பும் நன்றியும்!//

என்னது ஜிரா அண்ணாவா!!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

// அப்படியே சீனியம்மா கொடுத்து வுட்ட பத்துரூவாத் தாள நீங்களே பத்திரமா வெச்சுக்குங்க ஜிரா. நாம பாக்கும் போது சீனி மிட்டாய், தேன் மிட்டாய் வாங்கக் கொடுத்தறணும் ஆமா! :-) //

பத்துரூவாத்தாள ஒங்க கைலதான குடுத்தாங்க. எங்கிட்ட எப்பிடி இருக்கும்? இன்னொரு பத்து ரூவா வேணும்னா சொல்லுங்க. வெட்டி கிட்ட இருந்து கொடுக்கச் சொல்றேன். அதுக்காக இப்பிடி அபாண்டம் சொல்ல வேண்டாம்.

துளசி கோபால் said...

பொறந்தநாள் வாழ்த்து(க்)கள் நம்ம கெயாரெசுக்கு.

என்றும் அன்புடன்,

கோபால் & துளசி

வெட்டிப்பயல் said...

//பத்துரூவாத்தாள ஒங்க கைலதான குடுத்தாங்க. எங்கிட்ட எப்பிடி இருக்கும்? இன்னொரு பத்து ரூவா வேணும்னா சொல்லுங்க. வெட்டி கிட்ட இருந்து கொடுக்கச் சொல்றேன். அதுக்காக இப்பிடி அபாண்டம் சொல்ல வேண்டாம்.//

ரெண்டு பத்து ரூபாயும் வாங்கிட்டு பிரியாணி வாங்கி வரேனு போயிட்டு இன்னும் வராம இருக்கற எங்க சின்ன தல தான் வந்து இதுக்கு பதில் சொல்லனும் ;)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தெற்கத்தி தமிழ்த் தென்றலால் என்னைத் தாலாட்டி வாழ்த்திய ஜிரா அண்ணாவுக்கு என் அன்பும் நன்றியும்!//

ஆஹா,
இப்படி ஒரு அண்ணன் தம்பி இருக்கறதே எனக்கு தெரியாம போச்சே :-(

வெட்டிப்பயல் said...

CVR/KRS/விவா/சி.தல,
ஜி.ரா இந்த போட்டோல மாதவன் மாதிரியே இருக்காரு இல்ல?

G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தெற்கத்தி தமிழ்த் தென்றலால் என்னைத் தாலாட்டி வாழ்த்திய ஜிரா அண்ணாவுக்கு என் அன்பும் நன்றியும்!//

ஆஹா,
இப்படி ஒரு அண்ணன் தம்பி இருக்கறதே எனக்கு தெரியாம போச்சே :-( //

இல்ல..இல்ல..இல்லவே இல்ல...இத ஒத்துக்கவே முடியாது. எனக்கு ரவி யாருன்னே தெரியாது.

// வெட்டிப்பயல் said...
CVR/KRS/விவா/சி.தல,
ஜி.ரா இந்த போட்டோல மாதவன் மாதிரியே இருக்காரு இல்ல? //

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ILA (a) இளா said...

//சங்கத்துல இதை எப்படிக் கரீட்டாக் கண்டு புடிச்சாய்ங்க-ன்னு தான் இன்னும் தெரியல! :-)))))//
எல்லாம் ஒரு மெகா பிளான் தான். சிபியானந்தா அடிகளார் குடுத்த குறிப்பும், சீவிஆர் அளித்த தகவலையும் வைத்து, ராகவனுக்கு ஜி-டாக் மூலமாக புறா தூது அனுப்பி, வாழ்த்துக்கள் சங்கத்துல சேர்த்து பதிவை சரியா IST நேரத்துல போடுற மாதிரி செய்து..

ஜோடா குடுங்கப்பா மூச்சு வாங்குது..

ILA (a) இளா said...

//வெட்டிப்பயல் said...
CVR/KRS/விவா/சி.தல,
ஜி.ரா இந்த போட்டோல மாதவன் மாதிரியே இருக்காரு இல்ல? //

அதுவும் ஆக்ஷன் கிங்க்ன்னு நெனப்பு வேற

siva gnanamji(#18100882083107547329) said...

MANY MORE HAPPY RETURNS OF
THE DAY!

குமரன் (Kumaran) said...

இராகவன்,

என்ன பார்வை இந்த பார்வை?
கொஞ்சம் பயந்தேன் இந்த வேளை

:)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சத்தியா, சிஜி சார், கொத்ஸ்
மற்றும் என் அன்பு டீச்சர் & கோபால் சார் - வாழ்த்துக்கும் ஆசிக்கும் நன்றி!

//என்ன வெட்டி, சாமி எங்க போயிரிச்சி..மலையேறீருச்சா :)))))))))))//
எந்த மலை-ன்னு ஒங்களுக்குத் தான் தெரியுமே ஜிரா? :-)

//பத்துரூவாத்தாள ஒங்க கைலதான குடுத்தாங்க. எங்கிட்ட எப்பிடி இருக்கும்? //

குட்டிப் பசங்க கிட்ட காசக் கொடுத்தா தொலைச்சிபுடுவாங்க-ன்னு எங்க ஜிரா அண்ணன்,
அப்பறம் அதைப் பத்திரமா அவரு வாலட்-ல வாங்கி வச்சிக்கினாரு!

மொத்தம் மூணு வாலட் வச்சிருந்தாரு! அதுல பச்சைக் கலர் பர்சுல தான் பத்து ரூவா பளபளக்குது! :-))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆஹா,
இப்படி ஒரு அண்ணன் தம்பி இருக்கறதே எனக்கு தெரியாம போச்சே :-( //

இல்ல..இல்ல..இல்லவே இல்ல...இத ஒத்துக்கவே முடியாது. எனக்கு ரவி யாருன்னே தெரியாது//

என்னையும் அப்படித் தான் சொல்லச் சொல்லி இருக்காரு எங்க அண்ணன்.
கல்லடி பட்டாலும்
கண்ணடி படக்கூடாதாம்!

எனக்கும் ஜிரா யாருன்னே தெரியாது.
ஜிரா நீங்க எனக்காக அன்புடன் பாடி அனுப்பிச்ச பாட்டை, நல்ல காலம், வெளிய சொல்லவே இல்லை! :-))

//ஜி.ரா இந்த போட்டோல மாதவன் மாதிரியே இருக்காரு இல்ல? //

வெட்டி. திஸ் இஸ் டூ மச்!
அந்த மாதவன் தான் எங்க ஜிரா மாதிரியே ஒரு காலத்துல இருந்தான்...ஆனா இப்ப அவன் ஸ்டாண்டார்டு கொறைஞ்சு போச்சு!

என்ன இருந்தாலும் எங்க ஜிரா மாதிரி வருமா? எல்லாரும் சந்தனப் பொட்டு அழகனா ஆகி விட முடியுமா??? :-))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// ILA(a)இளா said...
ஜோடா குடுங்கப்பா மூச்சு வாங்குது//

இளா...
ஜோடா வேணுமா?
ஜோடி வேணுமா?? :-))))

கைப்புள்ள said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கேஆர்எஸ்.

கானா பிரபா said...

inru pol entrum vaazhga ;-)

கப்பி | Kappi said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பிரபா, தல கைப்பு - உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

கப்பி நிலவரே - மிக்க நன்றி...இன்னிக்கு ஆப்பீசுக்கு நீங்க லீவுன்னு கேள்விப்பட்டேனே! Birthday party-ஆ? :-)))

கோவி.கண்ணன் said...

ஆத்திக நண்பர்...எவரையும் புன்படுத்ததாத அவர் எழுத்துக்களலால் கவர்ந்தவன் என்பதால் அவரை வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.

இன்று போல் என்றும் வாழ்க !
எல்லா வளமும் பெற்று நிறைக !

ஜே கே | J K said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் KRS.

ப்ரசன்னா said...

MANY MORE HAPPY RETURNS OF THE DAY KRS.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ப்ரசன்னா, JK, GK
வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி!

//ஆத்திக நண்பர்...//
GK...
எப்போ SK ஐயாவின் "ஆத்திகம்" blogஐ, என் பேருக்கு எழுதி வச்சீங்க? :-)))

மெளலி (மதுரையம்பதி) said...

கே.ஆர்.எஸ்:
வாழ்த்துக்கள். நீங்கள் பல நலன்களுடன் சிறக்க இறைவன் அருளட்டும்....

தருமி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அப்போ, நம்ம ஜிரா-தான் அந்த பாட்டி/பெரீம்மா ரூபத்தில வந்திட்டாரோ ..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மெளலி சார், நன்றி.
தருமி சார்...வாழ்த்துக்கு நன்றி.
ஜிராவுக்கு ரொம்ம நாளா ஆசை, என்னைய அவரு கால்-ல விழ வைக்கணும்னு...பாருங்க பத்து ரூவா கொடுத்து, எப்படி மடக்கிப் போட்டாரு-ன்னு :-)))

அன்புத்தோழி said...

நேற்று உங்களுக்கு பிறந்த நாள் என்று கேள்வி பட்டேன். மன்னிக்க வேண்டும் அதை இன்று தான் பார்த்தேன். கால தாமதமாக இருப்பினும் உங்களுக்கு என் மனம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

''நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க''

ஷைலஜா said...

இப்போதான் இந்தப்பதிவுல பார்த்தேன்..ரவி! மனம் கனிந்த வாழ்த்துகள்!ஆன்மீகப்பணி இன்னமும் தொடர்ந்து எழுத இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்!!!
அன்புடன்
ஷைலஜா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஷைல்ஸ், அன்புத்தோழீ
அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
இன்னுமொரு நூற்றாண்டு நாம் எல்லோரும் அன்பராகவே இருப்போம்! :-)))