Wednesday, August 8, 2007

சிங்கப்பூருக்கு இன்று பிறந்த நாள்


சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்த நாளை ஆண்டு தோறும் ஆக. 8 ஆம் தேதி விமர்சியாக கொண்டாடுகிறது. இதை சிங்கப்பூர் தேசிய தினம் என்று(ம்) சொல்லுவார்கள்.

சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் தேசிய தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் விபரங்களுக்கு : நேசனல் டே பரேட் - சிங்கப்பூர்

- அன்புடன்
கோவி.கண்ணன்

2 comments:

ILA (a) இளா said...

சிங்கப்பூருக்கும், சிங்கப்பூர் வாசிகளுக்கும் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்

வெற்றி said...

சிங்கப்பூருக்கும் அத் திருநாட்டின் மக்களுக்கும் எனது வாழ்த்துக்கள். பல்லின மக்களும் எப்படி வாழ வேணும் என்பதை இலங்கை போன்ற நாடுகள் சிங்கப்பூரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேணும்.

சிங்கப்பூரின் உருவாக்கத்திலும், அதன் வளர்ச்சியிலும் தமிழர்களின் பங்கு அளப்பரியது.

கீழுள்ள பந்தியை எனது முன்னைய பதிவொன்றில் எழுதியிருந்தேன்:

"சிங்கப்பூரை உருவாக்கிய சிற்பிகள் அல்லது சிங்கப்பூரின் தந்தைகள் என்று அழைக்கப்படுமளவுக்குப் புகழ் பெற்றவர்களில் ஒருவர் சின்னத்தம்பி இராஜரத்தினம். இவர் சிங்கப்பூரின் துணைப்பிரதமராக இருந்தவர். சிங்கப்பூர் உருவாகியதில் இருந்து பல அமைச்சுப் பொறுப்புக்களையும் வகித்தவர். இவர் யாழ்ப்பாணத்தில் பிறந்தவரே."