Tuesday, July 31, 2007
Wishes: கப்பு பய
இவர் புரொபைல் படத்துல இவரை ஏத்திட்டு போற குதிரை தலை குனிஞ்சு இருக்கும். அட அது வெட்கம், நாணம், பயிர் பச்சைன்னு நீங்க நெனச்சீங்கன்னா, அது தப்பு. அது தலை குனிஞ்சு நிக்கிறது காரணம் அதுமேல உக்காந்து இருக்கிற ஆளுதான். அவருக்கு இன்னிக்கு பொறந்த நாளு.(31-7). தலைப்புல ஸ்பெல்லிங்க மிஸ்டேக் இருக்கா?
Monday, July 30, 2007
Wishes: தேவ்
இன்று புது வேலையில் சேரும் தேவ், இன்னும் நிறைய வெற்றிகளை கண்டு, பதவி உயர்வு கிடைத்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் தேவ்!
Wishes: மருத நாயகம்
இன்று மருத நாயகம் அவர்கள் புது வேலையில் சேர்கிறார். அவர் புது வேலையை சந்தோஷமாக செய்து பல வெற்றிகளை பெற வாழ்த்துவோம்.
Friday, July 27, 2007
Wishes: ராகவன்
சான்றிதழ் படி இன்று பிறந்த நாள் காணும் எனது இனிய நண்பரும், முருகனருள் பாவலரும், பதிவுலகின் கிருபானந்த வாரியாரும், மிகச்சிறந்த படிப்பாளியுமான ஜி.ரா (எ) ஜி.ராகவன் அனைத்து வரங்களையும் பெற்று சிறப்போடு வாழ முருகனவன் அருள் புரியட்டும்.
Wishes: கோவி கண்ணன்
வயசு ஆகிருச்சுன்னு கவலைப்படாத ஒரு மனுஷன். ஏன்னா? காலங்கள் அப்படிங்கிற பதிவை நடத்துறவரே அவருதான். பேருதான் கோவி, ஆனா கோச்சுக்காத மனுசன். அப்பபோ செண்டி, கோவம்னு வரும் ஆனா Gap கிடைச்சா அப்படியே எஸ்கேப்பு ஆகுறதுல கில்லாடியான இவருக்கு இன்னிக்கு பொறந்த நாளு 27-7.
வாழ்த்துக்கள் கோவியாரே.
வாழ்த்துக்கள் கோவியாரே.
By
Sangam Groups
Wednesday, July 25, 2007
ரவிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
செந்தழலாரின் பிறந்த நாள் ஓர் அரிய கண்டுபிடிப்பு. இன்று மாலை சரியாக 6 மணிக்கு என்னிடம் கூறினார் தழலாருக்கு இன்று பிறந்த நாள் என்று. எனக்கு அதிர்ச்சி இவ்வளவு பரபரப்பான பதிவர் திரு செந்தழலாரின் பிறந்த தினத்திற்கு ஒரு பதிவுகூட இல்லையா என்று. எனவே என் சார்பாக அனானி புகழ் செந்தழலாருக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
Wishes: Bharani
இன்று..
கொடை வள்ளல்..
பாவனா கிறுக்கன்..
தமிழ் பாடல் ரசிகன்..
கவிதை கவிஞன்..
தத்துவ ஞானி..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் பரணி!!
Tuesday, July 24, 2007
Wishes: CVR
காதல் ஆய்வாளர்..
விண்வெளி விரிவுரையாளர்..
புகைப்பட வித்தகர்..
கதாசிரியர்..
என சதா சிந்திச்சிக்கிட்டே இருக்கும்..
சிந்தனையாளர்..
நம்ம விஞ்ஞானி..
அவர்களுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Simply CVR
Monday, July 23, 2007
Sunday, July 22, 2007
என் தோழியே ....
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழியே. :)
இன்று பிறந்தநாள் காணும் என் இனிய தோழி மலேசிய மகள், பா.பா.சங்கத்து செயல் வீராங்கணை அப்புறம் இணைய அரட்டை அரசி இப்டி சொல்லிகிட்டே போகலாம்.
கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு நேத்தே வாழ்த்து சொல்லிட்டாங்க. அதனால என்ன ரெண்டு வாழ்த்து வெச்சிக்கோங்க தோழி.
Saturday, July 21, 2007
Wishes:My Friend
இந்த வாஆஆஆஆஆஆஆஆஆஆஆரம் பொறந்தநாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆள் வாஆஆஆஆஆஆஆரம்.
தமிழ்ப்பதிவுகள் எல்லாமே அதிருது. எங்கே பார்த்தாலும் பொறந்த நாளு பதிவா ஓடுது. இதுக்குமேல நாங்க மட்டும் என்ன சொல்ல..
Happy Birthday to You Anu!
நாள் பார்க்காம முந்திக்கிட்டவங்க
Thursday, July 19, 2007
Wishes: ஜிகுஜிகு கூகூக்ஊஊஊ ரயிலு
சிவாஜி படத்துல ஒரு முக்கியமான காட்சி. ரஜினி தற்கொலை பண்ணிக்குவாருன்னு தண்டவாளத்துல நிப்பாரு. விவேக் ஒரு ரயிலுல ஏறிக்கிட்டு ரன்னிங்க் கமெண்டரி குடுத்துக்கிட்டே வருவாரு. கம்பி புடிச்சு இழுத்தாலும் ரயிலு சலிக்காம ஓஓஓஓடி வரும். அப்போ அக்கா தாவணிய காட்டி நிப்பாட்டிருவாங்க ஒரு பாட்டு வரும். இதெல்லாம் யாருக்கு வேணும், ரயிலு நின்னதுக்கு காரணம் என்ன?.
கழுதை வயசானதுக்கு அப்புறம் தாவணி பார்த்தா நிக்கும், அதில்லே விஷேசம்...எதிர்த்தாப்புல நின்னது கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் ஆச்சே...அதைப்பார்த்து ஜொல்லுவிட நின்னது...சிவாஜி தப்பிச்சிட்டார்.
கிழுமத்தூர் எக்ஸ்பிரசைப் பார்த்து ஏன் நிக்கனும் ? அதுதான் தினம் கிராஸ் பண்ணுகிற இரயிலாச்சே ? எக்ஸ்பிரஸ் ரயிலு அன்னிக்குன்னு புது சொக்கா போட்டு இருந்தது? கையில முட்டாய் வேற. அப்புறம் முன்னால் இருந்த பேனரில் எழுதி இருந்தது "கிழுமத்தூர் எக்ஸ்பிரசுக்கு பிறந்த நாள்" வாழ்த்துக்கள்
வாழ்த்துச் சொல்ல விரும்புறவரு கோவி/சரா/ செந்தழல் மற்றும் எதிரிகள்
By
Sangam Groups
Tuesday, July 17, 2007
அப்பா எங்களை வாழ்த்துங்களேன்
இன்று நம் பாசத்துக்குரிய நண்பர் இளாவின் அன்பு தந்தையாருக்குப் பிறந்த நாள்....
அப்பா... இணையத்தில் ஒரு இதய நண்பனாய் உங்கள் இளாவை எங்களுக்கு அளித்தமைக்கு நன்றி கூறி.. உங்கள் பிறந்த நாள் அன்று உங்களிடம் வாழ்த்துப் பெற வந்துள்ளோம்.. ..
வாழ்த்துங்கள்.. வழி காட்டுங்கள்...
என்றும் அன்புடன்
சங்கம் மக்கள்
Thursday, July 12, 2007
Wishes : துபாய் ராஜா
இன்று(12-07-07) முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும்
தெக்கத்தி சீமை கிங்கும்...
பாசத்துல்ல பனிமலையும்...
எழுச்சியிலே எரிமலையும்...
பாசத்துல்ல பனிமலையும்...
எழுச்சியிலே எரிமலையும்...
எங்களின் நண்பருமான துபாய் ராசா மற்றும் அவரின் நல்ல பாதியை நெஞ்சம் மகிழ வாழ்த்துகிறோம்.
ராசா விடம் தொடர்பு இருப்பவர்கள் மறுபடியும் அவரை பதிவுலகிற்கு அழைத்து வர வேண்டுகிறோம்.
Best Wishes
Sangam Groups
Wednesday, July 11, 2007
wishes: குட்டி தேவதை - பிறந்தநாள்
இன்று முதலாம் பிறந்தநாள் கொண்டாடும் குட்டி தேவதை ஜெயஸ்ரீ பாப்பாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
அழகு மலர் தன் வாழ்வில் அனைத்தும் வளங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கிறோம்.
அழகு மலர் தன் வாழ்வில் அனைத்தும் வளங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கிறோம்.
Best Wishes
Sangam Groups
Monday, July 9, 2007
Wishes: திருமண வாழ்த்துக்கள்
இன்று காலை(ஜூலை 9) தங்கள் வாழ்வின் புதிய அத்தியாயத்தை திருமண பந்தத்தின் மூலம் துவங்கிய திரு.கே.கே & திருமதி கவிதாவிற்கு எங்கள் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.
Wishes by,
Sangam Groups
Sangam Groups
Sunday, July 8, 2007
Wishes:சிறில் அலெக்ஸ்
இனிக்க இனிக்க தேனாக கதை வழியவிடும், தமிழ்ச்சங்கத்தின் ஒரு தூணான சிறில் அலெக்ஸ் அவர்களை வாழ பல்லாண்டு என அவரது பிறந்தநாளில் (7-7) Sangam Groups வாழ்த்தி பெருமைப்பட்டுக்கொள்கிறது.
Saturday, July 7, 2007
Wishes: கவிதாயினி காயத்ரி
கவிதைகள் எல்லாம் அதிரடி,
படிக்கிறவங்களுக்கு கன்பார்ம்டு ஏர்வாடி,
கையில வெச்சுக்கிறாங்க மெஹந்தி,
இவுங்க கூட சேட் பண்ணினா நமக்கு வரும் பீதி.
நம்பர் வெச்ச ஜிமெயில் ஐடி,
ஜிடாக்ல லாகின் பண்ணினா போயிருங்க பேசாம ஓடி.
மலையில கிடைக்கும் திணை,
இவுங்க கவிதை படிச்சா நமக்கு வரும் வினை,
டீ ஆத்துறதுல இவுங்க செம கில்லாடி,
பாலை கவிதை படிச்சவன் குடுப்பான் கல்லடி.
பதிவுக்கு வெச்ச பேரு பாலை,
படிச்சா கலங்குறது நம்ம மூளை.
மக்கள் இவுங்களுக்கு குடுத்த பட்டம் கவிதாயினி,
காயத்திரி பதிவு போட்டா, படிப்பியா நீ?
பொண்ணுங்களுக்கு புடிச்ச கலரு பிங்கு,
இவுங்க பிலாக் படிச்சா ஊதுறாங்க சங்கு.
பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா..
மெட்ராசுக்கா...திருச்சிக்கா..திருத்தணிக்கா..
கவிதை எல்லாம் போட்டு
இனிமே எங்களை கொலை பண்ணவேணாங்க்கா
யானைக்கு இருக்கு தும்பிக்கை,
இவுங்க கவிதை எல்லாம் ஒரே மொக்கை.
தட்டி தட்டி கை யெல்லாம் வலிக்குது,
ஜல்லடை இல்லாமலேயே இவுங்க பதிவு எல்லாம் சலிக்குது.
அம்மணிக்கு கொஞ்சம் தலையில ஓவர் வெயிட்டு,
கலருமட்டும் கிராபிக்ஸ் இல்லாத சிவாஜி ஒயிட்டு.

என்னிக்குமே காளை மாடு பாலு தராது,
நல்லா கலாய்ச்சுக்கோ, சான்ஸ் போனா வராது.
கவிதையாலே எங்களை
கல்லால அடிக்கும்
Wishes by
Sangam Groups.
Friday, July 6, 2007
Wishes: அருண்குமார்
பள்ளியில் முதலாய் வந்தவரும், பல பெண்களின் மனதில் முதல்வனாய் நுழைந்தவரும், Cleveland யின் Cool Guy யும் ஆன நண்பர் திரு. அருண்குமார், தன் பிறந்த நாளை இன்று (ஜுலை 6) கொண்டாடுகிறார்.
என்றும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
வாழ்த்துவது
சங்கம் & G3
Thursday, July 5, 2007
Wishes: அன்புமணி ராமதாஸ்
//NEW DELHI: The World Health Organisation (WHO) has conferred the Director-General’s Special Award to Union Health and Family Welfare Minister Anbumani Ramadoss for his outstanding contribution to tobacco control. The Award is given annually to mark the World No Tobacco Day.
According to WHO, the Award is a “global recognition of the dynamic leadership” of Dr. Ramadoss under which India took rapid strides in tobacco control.
His efforts and determination in banning tobacco usage scenes and surrogate tobacco advertisements in films and television have been widely commended by the global community.
Dr. Ramadoss has initiated the pilot National Tobacco Control Programme which integrates multiple measures to reduce tobacco use, especially among rural populations.
According to S.J. Habayeb, WHO representative to India, Dr. Ramadoss’ contributions are not limited to India, but have spilled over both regionally and globally.
“His leadership has encouraged many countries in the South East Asia region and elsewhere to develop and adopt comprehensive tobacco control measures,” he said. //
பாஸ்டன் பாலா வேண்டுகோளுக்காகவும், சங்கம் சார்பாகவும் அமைச்சரை வாழ்த்துகிறோம்

Wishes-இளவஞ்சி
July 4(updated) பிறந்தநாள் கொண்டாடிய இளவஞ்சி அவர்களை வாழ்க வாழ்க என பல்லாண்டு வாழ்த்துகிறோம்.
Belated Wishes!
Tuesday, July 3, 2007
கொத்தனாரின் வாழ்த்துச் செய்தி
பின்னூட்ட பாவலர் திரு. இலவசக் கொத்தனார் அவர்கள், வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்துக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
அவரின் வாழ்த்துச் செய்தி:
வ.வா.ச உறுப்பினர்களுக்கு,
விசேசம்: புதிய வாழ்த்துக்கள் சங்கம் கண்டதற்கு
தேதி: இன்னிக்கே
வவாசங்கம், தமிழ்ச்சங்கம் என தொடங்கி இன்று வாழ்த்துச்சங்கம் கண்ட நண்பர்களுக்கு என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்,
உங்கள் கொத்ஸ்
வாழ்த்து சங்கத்துக்கு அவரின் பரிந்துரை: வாழ்த்து சொல்லப்படுபவரின் மெயில் ஐடி வாங்கி அவருக்குத் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும். பரிசீலனை செய்து பாருங்கள்.

Wishes: சார்jaah Gopi
கிளம்பு காத்து வரட்டும் அப்படின்னு கெளம்பினவருதான் ,,இன்னிவரைக்கும் காணோம். யாராவது பார்த்தீகன்னா பாசக்கார குடும்பத்துகிட்டே காட்டி குடுக்க சொல்றாங்க
"வாழ்க்கை கற்று தரும் பல்வேறு அனுபவங்களை ரசிக்கும் ஒரு ரசிகன்" அப்படின்னு ஏதோ விஜய் ரேஞ்சுல பிலிம் காட்டுற Sharjah கோபிக்கு பொறந்தநாள் வாழ்த்துக்கள்: 3-ஜூலை
சொல்ல சொன்னது கவிதாயினி காயத்திரி.
வாழ்த்துக்கள் கோபிநாத்.
சங்கம்
Wishes: குட்டி தேவதைக்கு ஒரு வருஷம்
சங்கத்தின் போர்வாள் தேவ் அவர்களின் குட்டி தேவதைக்கு இன்று முதல் பிறந்த நாள். இது நாள் வரையில் Diapper மாற்றி கொண்டிருந்த தேவ்'ம் குடும்பத்தாரும், இனிமேல் தேவதைக்கு பின்னால் ஓடவும், பாப்பா எடுத்து எறிந்து உடையும் ரிமோட்டுகளை மாற்றவும், புதிதாக மொபைல் போன்களை வாங்கவும், கையில் கிடைக்கும் பொருட்களை பாப்பா எடுத்து வீசும் பொழுது கீழே விழாமல் பிடித்து திரும்ப அடுக்கி வைக்கவும் பழகிக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
பாப்பாவும் குடும்பத்தாரும் நீடூழி வாழ வாழ்த்தும் நெஞ்சங்கள்
சங்க சிங்கங்கள்.
வாழ்த்த விரும்புவோர் செய்ய வேண்டியவை!
எங்கள் பதிவின் மூலம் நீங்கள் வாழ்த்து சொல்ல விரும்பினால்
வாழ்த்துக்கள் பெற வேண்டியவரின்
பெயர்:
வலைப்பதிவின் இடுகை - Blog address (இருப்பின்)
விசேசம்:( உதாரணம் பிறந்தநாள்)
தேதி:
உங்கள்
பெயர்:
வலைப்பதிவின் பெயர்- Blog address(இருப்பின்)
மேற்கூறியவற்றை Sangam.Wishes@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

வாழ்த்தலாம் வாங்க!
நம் வாழ்வின் எத்தனையோ மகிழ்வுறும் தருணங்கள் வருகின்றன. அப்பொழுதெல்லாம் உறவுகளுக்கிடையேயும், நட்புகளுக்கிடையேயும் பகிர்ந்து கொள்ள, அவர்கள் மனதார வாழ்த்துக்களைத் தெரிவிக்கும்போது உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு இணையேது!
நினைக்கும்போதெல்லாம் உள்ளத்தில் மகிழ்ச்சியின் ஊற்றெடுக்க வைப்பது உறவுகளின் வாழ்த்துக்களும், உற்சாகப் படுத்தும் வார்த்தைகளும்தான்.
அவ்வகையில் நம் பதிவுலக நண்பர்களின் மகிழ்ச்சிக்குரிய தருணங்களை நம்முடனே பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதே இவ்வலைப்பூவின் நோக்கம்!
இதுவும் சங்கத்தின் ஒரு அங்கமே!
வாருங்கள்! வாழ்த்துவோம்! இனிதே வாழ்ந்திடுவோம்!
வாழ்த்தும் எண்ணங்கள் - நம்மை வலுவாக்கும்! வளமாக்கும்!
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

Subscribe to:
Posts (Atom)