Tuesday, June 15, 2010

உமர்தம்பி - பிறந்ததினம் இன்று..

கணிணியில் தமிழைத் தடங்கின்றி தட்டச்சிட உதவும்வகையில் தேனீ எழுத்துருவை அனைவரும் பயன்படும் வகையில் உருவாக்கித் தந்தவரான தேனீ உமர்தம்பி பிறந்த தினம் இன்று (15-06-2010). அண்ணாரின் நினைவை மனதில் ஏந்துவோம்.




தேனீ எழுத்துரு தந்த தமிழ் இணைய மக்களிடம் யுனிகோட் உமர் என்று அன்போடு அழைக்கப்படும் அதிரை   உமர்தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம் கிடைத்த செய்தி முதலில் நண்பர்கள் மற்றும் INFIT  இணையம் மூலமாகவும் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

7 comments:

ஞானவெட்டியான் said...

உமர்தம்பிக்குத் தமிழ் இணையம் கடப்பாடு உடையதாகும். அன்னாரின் பங்களிப்பை நாம் மறக்கலாகாது. இந்நாளில் அவருக்குத் தலை வணங்குவோம்.

தேவன் மாயம் said...

என்னுடைய பணிவான வணக்கங்கள்!!

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் உமர்தம்பி அவர்களுக்கு.

வாழ்க வளமுடன்!

Joseph said...

சிங்கைப் பதிவர்களால் நடத்தப்பட்ட மணற்கேணி 2009 போட்டியில் அரசியல்/சமூகம் பிரிவில் வென்ற வெற்றியாளருக்கு நாங்கள் வழங்கிய விருது தேனி உமர் தம்பி அவர்களது பெயரில் தான்.

அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

// Joseph said...

சிங்கைப் பதிவர்களால் நடத்தப்பட்ட மணற்கேணி 2009 போட்டியில் அரசியல்/சமூகம் பிரிவில் வென்ற வெற்றியாளருக்கு நாங்கள் வழங்கிய விருது தேனி உமர் தம்பி அவர்களது பெயரில் தான்.

அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

//

தகவல் பகிர்விற்கு நன்றி ஜோசப்.. மிக மகிழ்வான செய்தி..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

உமர்தம்பி அவர்களின் பிறந்ததின செய்தி வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

இந்த தன்னலம் இல்லாத இத்தமிழனை இவ்வுலகிற்கு ஞாபகப்படுத்திவரும் உங்களைப் போன்ற என்னற்ற தமிழ் வலைப்பூ சகோதர சகோதரிகளுக்கு எம்முடை நன்றிகள்.

நான் என் வலைப்பூவில் இச்செய்தியை வெளியிட வில்லை, இருந்தாலும் தற்சமையம் உங்கள் வலைப்பூ செய்தியை என் வலைப்பூவில் வெளியிடுகிறேன்.

//சிங்கைப் பதிவர்களால் நடத்தப்பட்ட மணற்கேணி 2009 போட்டியில் அரசியல்/சமூகம் பிரிவில் வென்ற வெற்றியாளருக்கு நாங்கள் வழங்கிய விருது தேனி உமர் தம்பி அவர்களது பெயரில் தான்//

ஐயா ஜோசப், உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி, இச்செய்தியை சகோ. கோவி கண்ணன் அவர்களின் வலைப்பூவில் அறிய முடிந்தது. இவ்விழா நடத்தியவர்களின் மின்னஞ்சல் இருந்தால் எனக்கு தாருங்கள், நான் அவர்களுக்கு உமர்தம்பி அவர்களின் குடும்பம் சார்பாக நன்றி மடல் அனுப்ப விரும்புகிறேன். ஈமெயில் tjdn77@gmail.com

Adirai khalid said...

உமர்தம்பி அவர்கள் மறைந்தும், மறையாமலும்அவர்கள் தமிழுக்கு தந்த பங்களிப்பு

இத்தருணத்தில், முக்கியமாக தமிழுக்கும் தமிழ் உலகிற்கும் தன் நேரத்தையும் உழைப்பையும் செலவு செய்து unicode முறையில் தமிழ் எழுத்தருவியை, தமிழ் எழுத்து பயன்பாட்டினை தமிழ் உலகிற்கு அர்பணித்த மறைந்த A. உமர்தம்பி அவர்கள் பற்றி நினைவுக் கூர்ந்தது மிகவும் பாராட்டத்தக்கது நன்றிகள்

மறைந்த A.உமர்தம்பியை பற்றி சிலர் சிலநேரங்களில் சொல்வதுண்டு "இவரை இறைவன் இவ்வளவு சீக்கிரத்தில் அழைத்திருக்க கூடாது" என்று இதை பல வலைதளங்களில் குறிப்பிட்டும் இருக்கின்றனர் அவர்களுக்காக அவர்களின் ஆக்கங்களையும் அன்பளிப்பையும் நன்றி கூறும் விதமாக நினைவு அஞ்சலி பக்கங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றனர்.
மறைந்த உமர்தம்பி S/o வா. அப்துல் ஹமீது மரைக்காயர் அவர்களின் விலை மதிப்பில்லா இந்த அற்பணிப்பு தமிழ் உலகம் கணினியை பயன்படுத்தும் வரை நிலைத்திருக்கும். நமக்கும், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாத அன்னாரின் குடும்பத்திற்கும் இறைவன் ஒருவனே போதுமானவன்

மு. அ. ஹாலித் , சிட்னி