Tuesday, June 29, 2010

நம்ப மக்காவுக்கு பொறந்தநாளுங்க

கவிதையை பொழப்பாக்கி
வாழற சனம் மத்தியிலே
கவிதையை பொறப்பாக்கி
தெனம் தந்த ராசா

கருவேலமரத்து நிழலு
வெயிலு நேரத்தோட ஓஞ்சுச்சு
அந்த நிழலோட வெப்பத்தையும்
உணர வைக்கும் உன் கவிமூச்சு


கோயில்ல சாமியைவச்சு படைக்குற
மனுசப்பயலுக்கா(க) - எங்க
சாமி மனசை கோயிலாக்கி
வாழுது பாரு மக்கா

சோத்தை பங்கு போட்டு
பாசத்தை ஊட்டும் தாயா(ய்)
நேசத்தை நெஞ்சுல வைச்சே
எழுத்தை சுமந்தே சேயா(ய்)

இத்தனை அன்பை எழுத்துல வச்சு
ஆதரவா தோளுல தூக்கி
செல்லமா முத்தங்கொடுத்து
தமிழை தாலாட்ட உன்னைத்தாண்டி
யாருமில்லை ஈடு..
கவிதை புரியாதவனை புரியவைக்க
எடுக்கலை நீ பாடு...

உன் குடும்பமுன்னு சொல்லும்போது
நானுமிங்க சேர்ந்து நிப்பேன்.
உன் பொறப்புல ஒண்ணா இல்லையேன்னு
கொஞ்சம் தவிச்சு வைப்பேன்

***

இன்னைக்கு (29/06/2010) பொறந்த நாளு கொண்டாடுற, நம்ப மக்கா பா. ராஜாராம் அண்ணனுக்கு ஒறமொறை சகிதமா வாழ்த்துச் சொல்ல கூப்பிடுறேன்.

வந்து வாழ்த்திட்டுப் போங்க மக்கா!
*
*

32 comments:

சென்ஷி said...

பின்னூட்டத்திலும் வாழ்த்துக்களை சொல்லிச் செல்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள் பா. ரா.

அஷீதா said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

அன்பேசிவம் said...

அன்பின் மகாப்பா, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
:-)

☼ வெயிலான் said...

இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் பா.ரா....!

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணாச்சி !

உண்மைத்தமிழன் said...

அண்ணாச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் பா ரா.

கவிஞரை வாழ்த்தி நீங்க எழுதியிருக்கும் கவிதை அருமை சென்ஷி:)!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஓஹ்.. இன்னைக்குத்தான் பிறந்தநாளா... வாழ்த்துகள் ராஜாராம்.

யாழினி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

க.பாலாசி said...

வாழ்த்துக்களும், வணக்கங்களும் தலைவரே...

தமிழ் அமுதன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

சிநேகிதன் அக்பர் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா.

எப்பவும் சிரிச்சிட்டு இருக்குற போட்டோ கிடைக்கலையா. பாஸ்போர்ட்டுக்கு எடுத்த போட்டோ மாதிரி இருக்கு :)

அனேகமாக இதுதான் வலையில் அவரது முதல் படம் என்று நினைக்கிறேன்.

சென்ஷி said...

@ அக்பர்..

உண்மைதான். என்னிடமிருந்த ஒரு புகைப்படம் இது மாத்திரம்தான். பா.ரா.வை நேரில் சந்தித்த மற்ற நண்பர்களின் மின்மடல் முகவரி தெரியாததால் அண்ணனின் புதிய புகைப்படம் கேட்க இயலவில்லை. தங்களிடம் இருப்பினோ அல்லது தொடர்பிலிருப்பவர்களிடம் இருந்தாலோ கொடுத்துதவவும்.

pudugaithendral said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

rajasundararajan said...

படத்தெப் பார்த்தா, பொலீஸ் வேலைக்கான ஆளு மாதிரி இருக்கு, ஆனா என்னமா எழுதுறாரு பாருங்க!

வாழ்க பல்லாண்டு.

Anonymous said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

நன்றி சென்ஷி!

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

நன்றி ராஜசுந்தரராஜன் அண்ணே!

Ken said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் PARA

அன்புடன் அருணா said...

பூங்கொத்துடன் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பா. ரா!

ராஜ நடராஜன் said...

வாழ்க வளமுடன்!பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் மக்கா ..

சொல்லவே இல்ல !

Unknown said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....

செ.சரவணக்குமார் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பா.ரா அண்ணா.

நன்றி சென்ஷி. பா.ரா அண்ணனோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன. அவற்றை பதிவில் வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் வெளியிட இயலவில்லை. இப்போது நீங்கள் கருவேல நிழல் நூலின் பின் அட்டையில் உள்ள பா.ராவின் படத்தை வெளியிட்டதன் மூலம் நம் சொந்தங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். தேவையெனில் சொல்லுங்கள் அண்ணனின் மற்ற புகைப்படங்களை மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.

ப்ரியங்கள் நிறைந்த ஒரு மனிதரை வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி சென்ஷி.

சென்ஷி said...

@செ.சரவணக்குமார்...

உங்ககிட்டேதான் கேக்க நினைச்சேன். ஆனா மெயில் ஐடி இல்லாததால விட்டுப்போச்சு. :(

என் மெயில் ஐடிக்கு அனுப்பி வைக்க இயலுமா?

senshe.indian@gmail.com

சுசி said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பா.ரா..

கவிதை நல்லா இருக்கு சென்ஷி.

நசரேயன் said...

வாழ்த்துக்கள் பா. ரா அண்ணே

செ.சரவணக்குமார் said...

பா.ரா அண்ணனின் சில புகைப்படங்களை அனுப்பியுள்ளேன் நண்பரே.

நன்றி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்றும் வளமோடு பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம். வாழ்த்துக்கள் பாரா அண்ணே..

உங்கள் ஸ்டார்ஜன்.

Prathap Kumar S. said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாரா அண்ணாச்சி... :))

மாதவராஜ் said...

இப்போதுதான் அறிந்தேன். மிக்க சந்தோஷம்.
வாழ்த்துக்கள் மக்கா!

ராம்ஜி_யாஹூ said...

WISHES TO PAA RAA