Tuesday, September 22, 2009

wishes - மங்கை

எச் ஐ வி எயிட்ஸ் நோய் பற்றிய வெறுப்பாளர்கள் நிறைந்த இச்சூழலில் பதிவைப்படிக்கும் ஒவ்வொருவரையும் இவருடைய எழுத்துக்கள் நோயுற்றோரை சகமனிதனாய் பார்க்கவும் மதிக்கவும் பழக்குகிறது. மீனாட்சி என் தோழி என்று அவர் நோயுடன் போராடும் ஒவ்வொரு பெண்களுக்காகவும் பேசுகிறார். ''ஒரு முறை மீனாட்சியும் நானும் கோவையில் ஒரு கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தோம். எய்ட்ஸ்சுக்கு முடிவு மரணம் தான் என்று பேசிக்கொண்டிருந்த என்னிடம் 'ஒரு நிமிடம்' என்று கூறி விட்டு," அக்கா! எய்ட்ஸ்னா மரணம் மரணம்...னு சொல்றீங்களே.. எல்லாருக்கும் முடிவு மரணம் தானே.. ஒரு பக்கம் பாதிக்கப்பட்டவர்களிடம், பயம் வேண்டாம், நீங்கள் இன்னும் நீன்ட காலம் வாழலாம் என்று ஆலோசனை கூறும் நீங்களே,எய்ட்ஸ்க்கு முடிவு மரணம் என்று முரண்பாடாக கூறுகிறீர்களே" என்றாள். எய்ட்ஸால் பாதிக்க பட்ட அவர் அருகில் இருக்கும் போது நான் அவ்வாறு கூறியது சரி அல்ல என்று பின்புதான் உணர்ந்தேன். மேலும் இது போல 'Negative Messages' எந்த வித பயனும் தராது என்பதும் உண்மை.''

பெண் சிசுக்கொலை களோ குழந்தைத் தொழிலாளர் கொடுமைகளோ முதுமையில் வெறுப்பில் உழல்வோரோ, ப்ரீ ஸ்கூல் குழந்தையின் மேல் திணிப்போ சமூகத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்விலும் தன்னைப்பாதிக்கின்றவற்றை எழுதி வைக்கிறார். கணவன் மூலமாக் எச் ஐ வி நோயிற்கு ஆளாகும் ஒரு பெண் எவ்வாறு வீட்டினரால் துரத்தப்பட்டு துயருறுகிறார் என்பது பற்றி பரிக்ஷீத் எனும் குறுப்படம் எடுப்பதில் உழைத்திருக்கிறார்.

வலிகளை பகிர்தலின் அவசியம் என அதிரவைக்கிறார். பல்பான கதை , முதல்முறையா நான் ஓடிப்போன கதை, நீங்களும் சாப்பிடுங்க (பீடி) என்று நகைச்சுவையில் நம்மை லேசாக்குகிறார் மங்கை.

இன்று (23-09-09) பிறந்த நாள் காணும் மங்கை அவர்களின் சமூகப்பங்கு மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்!

(குறிப்புகளுக்கு நன்றி - 4tamil media)

வாழ்த்துக்களில் இணைவது....

தெ.கா., சென்ஷி, கோபிநாத் & முத்துலட்சுமி

16 comments:

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மங்கை!

//மேலும் இது போல 'Negative Messages' எந்த வித பயனும் தராது என்பதும் உண்மை.''//

உண்மைதான். அருமையான பகிர்வுக்கும் நன்றி சென்ஷி!

Anonymous said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மங்கை

MyFriend said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா. :-)

பெருசு said...

தொடரட்டும் உங்கள் பணி

வாழ்த்துக்கள் சகோதரி

துளசி கோபால் said...

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

நல்லா இருங்கோ

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துகள் மங்கை மேடம்!

தீப்பெட்டி said...

வாழ்த்துகள்..

கோபிநாத் said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் மங்கை.. :)

நலம் தானா ? நலம் தானா? உடலும் உள்ளமும் நலம்தானா.. தில்லானாமோகனாம்பாள் பிரியையே உங்களுக்காக இன்று அந்த படம் பாட்டு எங்க வீட்டில் ஓடுச்சு .. :)

Mangai said...

aahaa...Nandri Nandri... Anaivarukkum Nenjaanda Nandrigal

தமிழ் அமுதன் said...

பலதரப்பட்ட பதிவுகள்,பலதரப்பட்ட பதிவர்கள் இவர்களில் மங்கை மேடம் போல மிக சிலரே முழுக்க முழுக்க சமுதாய சிந்தனையோடு எழுதுகிறார்கள்..! இவரது பதிவுகள் ஒரு டாக்குமெண்டரி படம்போல !! மேலும் பல பதிவுகள் எழுதி அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் ...!

வல்லிசிம்ஹன் said...

பிறந்தநாள் நல் வாழ்த்துகள் மங்கை.

உங்கள் பணி எப்பவும் போல நன்கு தொடரவும், மகிழ்ச்சியும்,ஆரோக்கியமும் நிறையவும் மனதார்ந்த வாழ்த்துகள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மங்கை மேடம்

கோமதி அரசு said...

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் மங்கை!


வாழ்க வளமுடன்.


மங்கையின் சமுதாய நற்பணிகளை
தொகுத்து மலர் செண்டாக மங்கைக்கு
அளித்த சென்ஷிக்கு பாராட்டுக்கள்.

Thekkikattan|தெகா said...

இந்தாங்க என்னோட வாழ்த்துக்களும்! மேலும் மேலும் தங்களின் நற்பணி தொடர ஆசிகளும்[அது நான் சொல்ல முடியாதே:)], சரி வேண்டிக் கொண்டே...

சென்ஷி, வாழ்த்து அட்டையில என்னையும் சேர்த்துக்கிட்டதுக்கு நன்றிப்போய் ... :-)

டவுசர் பாண்டி... said...

உளம் நிறை வாழ்த்துக்கள்....