
வாழற சனம் மத்தியிலே
கவிதையை பொறப்பாக்கி
தெனம் தந்த ராசா
கருவேலமரத்து நிழலு
வெயிலு நேரத்தோட ஓஞ்சுச்சு
அந்த நிழலோட வெப்பத்தையும்
உணர வைக்கும் உன் கவிமூச்சு
கோயில்ல சாமியைவச்சு படைக்குற
மனுசப்பயலுக்கா(க) - எங்க
சாமி மனசை கோயிலாக்கி
வாழுது பாரு மக்கா
சோத்தை பங்கு போட்டு
பாசத்தை ஊட்டும் தாயா(ய்)
நேசத்தை நெஞ்சுல வைச்சே
எழுத்தை சுமந்தே சேயா(ய்)
இத்தனை அன்பை எழுத்துல வச்சு
ஆதரவா தோளுல தூக்கி
செல்லமா முத்தங்கொடுத்து
தமிழை தாலாட்ட உன்னைத்தாண்டி
யாருமில்லை ஈடு..
கவிதை புரியாதவனை புரியவைக்க
எடுக்கலை நீ பாடு...
உன் குடும்பமுன்னு சொல்லும்போது
நானுமிங்க சேர்ந்து நிப்பேன்.
உன் பொறப்புல ஒண்ணா இல்லையேன்னு
கொஞ்சம் தவிச்சு வைப்பேன்
***
இன்னைக்கு (29/06/2010) பொறந்த நாளு கொண்டாடுற, நம்ப மக்கா பா. ராஜாராம் அண்ணனுக்கு ஒறமொறை சகிதமா வாழ்த்துச் சொல்ல கூப்பிடுறேன்.
வந்து வாழ்த்திட்டுப் போங்க மக்கா!
*
*