Friday, August 28, 2009
"திருமதி பக்கங்கள்" கோமதி அரசு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!!
குழந்தைகளுக்கான இனிய பாடல்களோடும் நினைவுகளைக் கிளறும் ஆடிப்பெருக்கு இடுகைகளோடும் கலக்கிக் கொண்டிருக்கும் "திருமதி பக்கங்கள்" கோமதி அரசு அவர்களுக்கு இன்று நட்சத்திர பிறந்தநாள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்,அம்மா!! உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்! :-)
"என் வானம்" அமுதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!!
(image courtesy - Google)
"என் வானம்" அமுதாவிற்கு இன்று பிறந்தநாள்!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அமுதா!!
Thursday, August 27, 2009
Prayer and Wishes: செந்தில் நாதன் நலம் பெற வேண்டி, அனைவரும் வாழ்த்துங்கள் !
உங்கள் நல் ஆசிகள்
உங்கள் நல் வேண்டுதல்கள்
உங்கள் நல் வாழ்த்துகள்
உங்கள் நல் எண்ணங்கள்
மூலமாக நண்பர் செந்தில் நாதனுக்கு இன்று நடைபெறும் VAD Fixing இதய அறுவை சிகிச்சை முடிந்து விரைவில் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்துங்கள்.
Monday, August 24, 2009
நானானி அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நாங்கள் அம்மா என்று அழைக்கும்
நைன்வெஸ்ட்
தளத்தின் உரிமையாளரும்,
இனிய குணம் கொண்டவரும்,
பதிவர்களின் அன்பருமான
நானானிம்மாவுக்கு இன்று பிறந்த நாள்.
அன்பு நானானிம்மாவும் ,அவர்தம் குடும்பமும் எல்லா வளமும் பெற வாழ்த்தலாம் வாருங்கள் .
ஹாப்பி பர்த்டே நானானிம்மா .
வரும் வருடங்கள் நல்ல வருடங்களாக அமைய ஆரோக்கியம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறோம் .
விளம்பர உதவி : வல்லிம்மா
Wishes: ரம்யா ரமணி
இன்று திரு.ஹரியுடன் இணைந்து தங்கள் வாழ்வின் புதிய அத்தியாயத்தை துவக்க இருக்கும் ரம்யா ரமணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !!
இரு வேறு நாவில் ஒரு வார்த்தைபேசி
ஆயிரம் கோடி ஆண்டுகள் பாடி
சந்தனம் பூசிய சந்ததி வாழ்க !!
(ஹிஹி.. வழக்கம் போல பாட்டுல இருந்து சுட்ட வரிகள் தான் ;-) )ஆயிரம் கோடி ஆண்டுகள் பாடி
சந்தனம் பூசிய சந்ததி வாழ்க !!
Hearty Congratulations Hari & Ramya !!!
Sunday, August 23, 2009
Wishes: தமிழ்மணம்
உலகமெங்கும் பல நண்பர்களையும், உறவுகளையும் உருவாக்கித்தந்து, உலகத் தமிழர்களை ஒன்று கூட வைத்த ”தமிழ்மணம்” ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. தமிழ்மணம் பரப்பிய ’காசி’ மற்றும் “ங்” தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!.
உங்கள் சேவை தமிழர்களுக்கு என்றென்றும் தேவை.
அர்ச்சனா மோகன்ராஜ் - பிறந்தநாள் வாழ்த்துகள்!!
கைப்புள்ள aka மோகன்ராஜ் மற்றும் ரேணுகா மோகன்ராஜ் அவர்களின் குட்டிதேவதை அர்ச்சனாவிற்கு இன்று முதல் பிறந்தநாள்!!
அன்பு அர்ச்சனா,
வாழ்வில் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்!! உன் சுட்டித்தனத்தோடும் குறும்புகளோடும் கைப்ஸை டரியலாக்கிவிட இனிதாய் அமையட்டும் இன்னுமொரு அழகிய வருடம்!! :-)
அன்பு அர்ச்சனா,
வாழ்வில் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்!! உன் சுட்டித்தனத்தோடும் குறும்புகளோடும் கைப்ஸை டரியலாக்கிவிட இனிதாய் அமையட்டும் இன்னுமொரு அழகிய வருடம்!! :-)
Friday, August 21, 2009
Wishes: நாடோடி இலக்கியன் !
பிரபல கும்மி பதிவர், கவிஜர், இளைஞர் நாடோடி இலக்கியனுக்கு இன்னிக்கு பிறந்த நாள்.
பிறந்தநாள், இன்று பிறந்த நாள், நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.
தன் நாடோடி வாழ்க்கையில், தற்போது திருப்பூரில் இருக்கும் அன்பு நண்பர் நாடோடி இலக்கியன் என்ற பாரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரியைப் பற்றி மேலும் நாலும் நல்ல வார்த்தைகள்,

கேட்க கிடைக்காத பாடல்களை அநாயாசமாக பாடும் பாடகர் - ஒரு வல்லவரு
முதல் மழை என்ற வலைத்தளத்தில் கவிதை எழுதுகிற கவிஞர் - ஒரு நல்லவரு
நாடோடி இலக்கியன் பக்கங்களில் தஞ்சை மண்ணின் மணம் வீச பதிவுகள் எழுதி வருகிறார் - ஊர்கார நாட்டாமை
பிரபல பதிவரின் சகோதரர் என்பது பலருக்குத் தெரியாத உண்மை :)
அன்புடன் வாழ்த்துவது,
வெயிலான் மற்றும் திருப்பூர் பதிவர்கள்.
வாழ்த்துறவங்க பரிசு கொடுக்கிறவங்க வரிசையாக வாங்க.
அன்புடன் வாழ்த்துவது,
வெயிலான் மற்றும் திருப்பூர் பதிவர்கள்.
வாழ்த்துறவங்க பரிசு கொடுக்கிறவங்க வரிசையாக வாங்க.
Wishes:தெக்ஸ்,வேதா,இம்சை அரசி,JK
இப்படி ஒரு குவாட்ரபிள் ஜாக்பாட் யாருக்கு அடிக்கும் சொல்லுங்க. நாலு பேருக்கு இன்னிக்கு பொறந்த நாளு.
நாலு பேரு நடுவிலே!
வாழ்த்துக்கள் நம்ம மனசுலே!
1.இம்சையவே ராஜாங்கமா பண்ணும் இம்சை அரசி
2. கொல்லி மலைச் சாரலில் நனைஞ்சிகிட்டே இருக்கும் JK, (பார்த்துக்குங்கப்பு, சளி புடிச்சிக்க போவுது )
3. சர்வம் கிருஷ்ணார்ப்"பணம்"னு சொல்ற வேதா.
4. "ஏன் இப்படி? ஏன் இப்படி?"ன்னு கேட்டுகிட்டே இயற்கையை நேசிக்கச் சொல்லும் தெக்கத்திக் காட்டான்.
ஆகிய நாலு பேரும் ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும்னு சங்கம் வாழ்த்துதுங்கோ......வ்!
Thursday, August 20, 2009
WISHES- இலவசக்கொத்தனார்
பின்னூட்டப் புயல்,
வெண்பா வேந்தன்
குறுக்கெழுத்து கோமான்;
இலவசக் கொத்தனாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !
குறுக்கெழுத்து போட்டி மட்டும் இட்டு தன் ப்ளாக்கர் கடமையினை,மாதா மாதம் நிறைவேற்றிக்கொண்டிருக்கும் அண்ணாச்சி மீண்டும் வந்து, ஆண்டு முழுதும் அருமையாய் பதிவுகளை வழங்கிடவேண்டுமாய் ஒரு சின்ன ரிக்வெஸ்ட் வுட்டுக்கிறோம் :)
Wednesday, August 19, 2009
WISHES - கலையரசன்
இன்று (19-08-2009) பிறந்த நாள் காணும்
எங்களுக்கு நண்பன்
அழகான பெண்களுக்கு அண்ணன்
வம்பு பிடிச்ச குதிரைக்கு இவன் ஜாக்கி
எல்லோரும் வம்படியா கட்டி விட்டாங்க ராக்கி
அமீரக பதிவர்களில் ஒரு சன்
அறுசுவை பிரியாணியின் அரசன்
வடலூர் தந்த கறுப்பு நிலா
துபாயை சுற்றும் அழகு மிளா
கலையரசன் பொறந்த நாளுக்கு
வாழ்த்து சொல்லிக்குறோமுங்கோ!
என்றென்றும் அன்புடன்
அமீரக பதிவர்கள்

Sunday, August 16, 2009
WISHES:- மயிலாடுதுறை சிவா
மனம்நிறை அன்புண்டு நல்நட்பும் மாறா
குணமுண்டு உன்னிடத்தில் தோழா - சினம்
பிறந்ததை கண்டதில்லை உன்னிடத்தில் கேளென்
பிறந்தநாள் வாழ்துனக் கு
ஆத்திகனும் மெச்சும் அருமையான நட்புண்டு
நாத்திகம் பேசிடும் நல்லிதயம் - வேற்றுமை
இன்றி பழகிடும் நல்நண்பா இந்நாளும்
எந்நாளும் வாழியவே நலம்!
குணமுண்டு உன்னிடத்தில் தோழா - சினம்
பிறந்ததை கண்டதில்லை உன்னிடத்தில் கேளென்
பிறந்தநாள் வாழ்துனக் கு
ஆத்திகனும் மெச்சும் அருமையான நட்புண்டு
நாத்திகம் பேசிடும் நல்லிதயம் - வேற்றுமை
இன்றி பழகிடும் நல்நண்பா இந்நாளும்
எந்நாளும் வாழியவே நலம்!
-வெண்பா வாத்தி - ஜீவ்ஸ் !
இன்று 16.08.09 தன் பிறந்த நாளினை கொண்டாடும் எங்கள் மண்ணின் மைந்தன் சகோதரர் மயிலாடுதுறை சிவா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)
Tuesday, August 11, 2009
Wishes: நிகில் ஆதித்யா !
பின்னூட்டப் புயல், பாசக்கார பயப்புள்ள விஜய் ஆனந்தின் அன்பு மகன் நிகில் ஆதித்யா என்கிற நிகிலுக்கு இன்று 11 ஆகஸ்ட் 2009 முதல் பிறந்த நாள்.
குழந்தை நிகில் எல்லா வளமும், நலமும் பெற்று அவன் அப்பனை உதைத்துத் திருத்தவேண்டும் என்று வாழ்த்துகிறேன் :)
நீங்களும் வாழ்த்துங்கள் !
குழந்தை நிகில் எல்லா வளமும், நலமும் பெற்று அவன் அப்பனை உதைத்துத் திருத்தவேண்டும் என்று வாழ்த்துகிறேன் :)
நீங்களும் வாழ்த்துங்கள் !
Sunday, August 9, 2009
Wishes: கேஆர்எஸ்
சீனியம்மா தெரியும்ல எல்லாருக்கும். அவங்கதாங்க..கொளக்கட்டாங்குறிச்சிக் கெழவி. அவங்க திண்ணைல உக்காந்திருப்பதான் கே.ஆர்.எஸ் அந்தம்மா கண்ணுல மாட்டுனாரு. சீனியம்மா விடுவாங்களா...படக்குன்னு கூப்புட்டாங்க.
"ஏலேய்..இங்ஙன வா...ஒரு முக்கியமான வெசயம்."
கேயாரெஸ்க்குப் பயந்தான். யார்ரா இது ஒரு பெரியம்மா கூப்புறாகளேன்னு. "என்ன பாட்டீ"ன்னு பயந்தாப்புல போயி நின்னாரு.
சீனியம்மாக்குக் கோவம் வந்துருச்சுல்ல. "என்னது பாட்டியா? எங்கூர்ல எல்லாம் பெரியம்மான்னு கூப்புடுவாக. ஆமா...நீ எந்தூரு?"
திக்கித் தெணறுச்சு. "வாழப்பந்தல் பெரீம்மா"
"என்னல இது...பந்தல்ல வாழையக் கட்டுவாக...வாழைல பந்தலைக் கட்டுவாகளா! என்னவோ போ..."
"இதுக்குதான் கூப்பிட்டீங்களா?"
"இல்ல.....இங்ஙன உக்காரு மொதல்ல"ன்னு திண்ணயக் காட்டுனாக சீனியம்மா. கேயாரெஸ்சு உக்காந்ததும்..."ஆமா இங்குட்டு எங்குட்டு வந்த? பேந்தப் பேந்தப் பாத்துக்கிட்டிருக்க..இங்குட்டெல்லாம் வெவரமா இருக்கனுமப்பூ. இல்லைன்னா கிண்டிக் களியாக்கீருவாக. சரியா."
"சரி பெரீம்மா. இதுக்குத்தான் கூப்பிட்டீங்களா?"
"இல்ல. மொதல்ல இங்க வந்த காரணத்தச் சொல்லுவியா...அத விட்டுட்டு..."
"அது இங்க பெருமாள் கோயில்...." இழுத்தாரு கேயாரசு.
"பெருமா கோயிலா? கொளக்கட்டாங்குறிச்சீல என்ன பெருமா கோயிலு இருக்கு. அந்த முக்குல காச்சக்கார அம்மங்கோயிலு...அதுவும் வெட்டவெளியிலதான். இந்த முடுக்குல கோப்பம்மா கோயிலு. எல்லாம் பொம்பள சாமிதான். ஆம்பள சாமியெல்லாம் இங்க கெடையாது."
"இல்ல பெரீம்மா...பெருமாள் கோயில் இங்க இருக்கு. அதுக்குத்தான் வந்தேன்."
"சொன்னாக் கேக்க மாட்டீங்கியே! ஏமுல இப்பிடி? இங்குட்டுக்கூடிப் போ...செவலாருபட்டி வரும்...அதையும் தாண்டிப் போ...சாத்தூரு வரும். அங்குட்டுத்தான் இருக்கு பெரிய பெரிய கோயிலுக. அது சரி...எதுல வந்த?"
"காருல வந்தேன் பெரீம்மா. இதுக்குத்தான் கூப்டீங்களா?"
"இல்ல...அது வேற விசயம். ஆமா...அந்த ஊதாக் காரா ஒங்காரு...நல்ல பெரிய வண்டியாத்தான் இருக்கு."
அப்பன்னு பாத்து வீட்டுக்குள்ள இருந்து கறி வதக்குற வாசம் வந்துச்சு. கேயாரசு அப்படியே மயங்கி வாசனையப் பிடிக்காரு.
"நல்லாத்தாம் மோப்பம் பிடிக்க. ஆமா நீ கறி திம்பியா? சொல்லு"
"இதுக்குத்தான் கூப்டீங்களா?"
"இல்ல. கேள்விக்கு மொதல்ல சொல்லு."
"அது வந்து....வாசனை பிடிக்கும். வாசனை வெச்சே எதெதுன்னு சரியாச் சொல்லீருவேன்."
"ஆகா. அப்படியா. நல்லதுதான்."
"சரி. எதுக்குக் கூப்டீங்க?"
"ஓ கூப்டேன்ல....சரி...கால்ல விழு"
"என்னது?"
"ஏம்ப்பா இந்தப் பயம். எங்கால்ல விழுந்தா தப்பில்லை. அதான் பாட்டீன்னு சொன்னியே."
மொதல்ல யோசிச்சாலும் கேயாரசு சீனியம்மா கால்ல விழுந்து எந்திருச்சாரு. ஒரு பத்துரூவாத்தாள கேயாரசு கைல வெச்சி, "இன்னைக்கு ஆகஸ்ட்டு 9. ஒம் பொறந்த நாளுதான. அதுக்கு வாழ்த்துச் சொல்லத்தான் கூப்புட்டேன். நீ இன்னைக்குப் பெருமாள் கோயிலத் தேடிப் போவன்னு மயிலாரு ஏற்கனவே சொல்லீட்டாரு. அதாங் கூப்புட்டு வாழ்த்துனேன். ரொம்ப நல்லாரு"ன்னு வாழ்த்துனாக. மக்கா...நீங்களும் வாழ்த்துங்க.

வாழ்த்துகளுடன்,
கோ.இராகவன் & சங்கம்
கோ.இராகவன் & சங்கம்
பி.கு. : இது பழைய பதிவு தான்.... என்ன பண்ண...!! வருசம் திரும்பிருச்சே....... :)
Saturday, August 8, 2009
Friday, August 7, 2009
New Born: பாலபாரதி & லக்ஷ்மி தம்பதியர்
தல பாலபாரதி - மலர்வனம் லக்ஷ்மி தம்பதிகளுக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறான்.
சிங்கக் குட்டிக்கும், பெற்றோர்களுக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
செல்வன் எல்லாப் பேரும் புகழும் பெற்று நலமாக வாழ வாழ்த்துக்கள்..
இதுவரையில் பாலபாரதியை ஆண்கள் மட்டுமே மாம்ஸ் என்றழைத்த காலம் மாறி, சின்ன பெண்களும் மாம்ஸ் என்று முறையோடு அழைக்கும் காலம இனி.
வாழ்த்துவோர்,
சங்கம்
Wednesday, August 5, 2009
நிலாவுக்கு இன்று பிறந்த நாள் !
நமது அன்புக்குறிய பதிவர் திரு KVR என்கிற K.V.ராஜா அவர்களின் செல்ல மகள் நிலாவுக்கு இன்று பிறந்த நாள்.
நிலாவை அன்புடன் வாழ்த்துபவர்கள்,
பதிவுலகின்
மாமா, அத்தை, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா, அண்ணன், அக்கா, தங்கை, தம்பிகள் மற்றும் அப்பா, அம்மா உறவினர்கள்
நிலா எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க, வளர்க !
அன்புடன்
கோவி கண்ணன்
Sunday, August 2, 2009
Wishes: மதுரையம்பதி!
* மதுரையின் மல்லி! பெங்களூர் கில்லி!
* ஜல்லியிலும் ஜல்லி, ஆனா அமைதியான ஜல்லி! :)
* அண்ணனின் கெத்தே கெத்து! அவரோ அம்பாளின் சொத்து!
* அடியேன் "மெளலி அண்ணா" என்று அழைத்து வைத்த
மதுரையம்பதி என்னும் மெளனராகம் மிஸ்டர் சந்திரமெளலி, மிஸ்டர் சந்திரமெளலிக்கு.....
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! (Aug-02)
மனத்துக்கினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மெளலி அண்ணா!
Many Many Happy Returns of the Day!:)))
உங்களுக்கான ஒரு வரலாற்றுக் காவியம் இதோ:
நாங்க எதை மறந்தாலும் இதை மறக்க மாட்டோம்-ல்ல? :))

Subscribe to:
Posts (Atom)