நம்ம துளசி டீச்சரின் செல்லக் குட்டியும், துளசி தளம் பதிவின் ஹீரோவுமான கோபால கிருஷ்ணன் என்னும் GK,
நேற்று (May-27) காலமாகிப் போனான் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்!
GK-வின் இன்னுயிர் எம்பெருமான் திருவடியில் அமைதி கண்டு விளையாடி இருக்க வேண்டுகிறோம்!
டீச்சருக்கும் குடும்பத்தாருக்கும் நமது மனம் நிறைந்த இரங்கல்கள்!
வாழிய GK-வின் நினைவுகள்!
கோபியர் கொஞ்சும் ரமணா - GK - கோபால கிருஷ்ணா!
22 comments:
:(
அட ஆண்டவா! எப்படி ஆச்சு இப்ப்படி கோகிக்கு!
டீச்சர் மனசை தேத்திக்கனும்:-((
:(
கோகி, என்கிற கோபால கிருஷ்ணன், கட்டாயம் கண்ணன் இணையடி சேர்ந்திருப்பான்.
அவனை இழந்து ,துயரில் இருக்கும் துளசிக்கும் கோபாலுக்கும் தகுந்த மனோதைரியத்தை
அந்தக் கண்ணனே கொடுக்கட்டும்.
எட்டு வருடமே பிள்ளையாகவும் செல்லமாகவும் உறவாடி அவர்களின்
வாழ்க்கையில் மகிழ்ச்சி பொழிந்த அவனுக்கு என்றும்
இன்பம் நிறைந்த பரமனடி கிடைக்கட்டும்.
நன்றி ரவி.
:-(
:(
இறைவன் காலடியில் மலராகி விட்டான் கோகி! துளசி மேடமும் கோபால் சாரும் இத்துயரில் இருந்து மீண்டு வரப் பிரார்த்திக்கிறேன்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
துளசி அம்மாவின் ஜிகே அவங்களுக்கு ரொம்ப துணையாக இருந்தது. பிள்ளையை இழந்தது போல் சோகத்தில் இருப்பார்கள், அவர்களுக்கு ஆறுதல் கிடைக்க வேண்டும்.
:(
பயப்பட வைக்கும் தலைப்பு.
என்னைப் போல் தொடர்ந்து படிக்காதவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்படி இருக்கிறது.
தயவு செய்து மாற்றவும்.
ஐயையோ..என்னாச்சு நம்ம கோகிக்கு? :(
:(
என் ஆழ்ந்த அனுதாபங்கள்
என் ஆழ்ந்த அனுதாபங்கள்! மனவலிமை தர ஆண்டவனிடம் பிராத்திக்கிறேன்
//விஜயராஜா said...
பயப்பட வைக்கும் தலைப்பு.
என்னைப் போல் தொடர்ந்து படிக்காதவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்படி இருக்கிறது.
தயவு செய்து மாற்றவும்.//
எவரேனும் வேறொரு தலைப்பைச் சொல்லி உதவுங்கள்!
விஜயராஜா,
துயரம்: துளசி டீச்சரின் GK என்ற தலைப்பை...
துயரம்: துளசி டீச்சர் வளர்த்த செல்லம் - GK! - என்று மாற்றி விட்டேன்!
:(
கோகியை பிரிந்த வருத்தத்துடன்
ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் ப்ரார்த்தனைகள் !!!
நினைச்சுக்கூடப் பார்க்காதது எல்லாம் எப்படியோ நடந்துபோச்சு. ஆனால் 'அவன்' இல்லை என்றதை மனசு ஏத்துக்கக் கொஞ்ச நாள் ஆகும்.
எட்டுவருசம் கூடவே இருந்தவன்.
மனசைத் தேத்திக்க நாங்கள் முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்கோம்.அதான் வேற வேலையில் மூழ்கிட்டால்...... ஆனாலும் மனசுலே ஒரு பிறாண்டல்.
விசாரிப்புக்கும், எங்களுக்கு ஆறுதல் சொன்னதுக்கும்,
எங்கள் துயரத்தைப் புரிந்துகொண்ட அன்புள்ளங்களுக்கும் நன்றி.
என்றும் அன்புடன்,
துளசி & கோபால்.
வீட்டில முழு நேரமும் இருக்கும் அன்பு உயிர் போனா மனசு தேத்த கொஞ்ச நாளாகும். மனச தேத்திக்கோங்க டீச்சர்.
Sorry to hear this madam.Hope u will come out of this sorrow,very soon.
Post a Comment