Monday, September 29, 2008

Wishes: காதல் கறுப்பியின் நாயகன் தமிழன்

ஒரு பெண்மையிடம் தோற்ற தமிழனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!






காதலை கற்பாய் நினைப்பவன் நீ
ஒரு காதல் கறுப்பியின் நாயகன் நீ
காதல் - காவியம் பாடும் நாயகனே
காத்திரு காதலி உந்தன் துணையிருப்பாள்

நீ காதலைப்பற்றி நினைக்கின்றாய்
அதன் சோகத்தை சுகமென ஏற்கின்றாய்
காதலி வந்து சேரும் முன்னே
கேளு... எங்களின் வாழ்த்துச் செய்தியினை..!!



வாழ்த்துவோர்
சென்ஷி, ஆயில்யன் மற்றும் சங்கம்

Friday, September 26, 2008

Wishes: வானவராயனுக்கும், ராணிக்கும் வாரிசு வந்தாச்சு !



சின்னக் கோடம்பாக்கம் (கோபி), சின்ன ரஜினி வீட்டில், துள்ளி விளையாட ஒரு குட்டி ரஜினி பிறந்திருக்கிறார்.

கடந்த வியாழன் 18/செப்/2008 அன்று, மனசாட்சி பதிவர் கிரி அப்பாவாக ஆகி இருக்கிறார்.

அறுவை (சிசேரியன்) செய்து ஆண் குழந்தை பிறந்திருக்கிறது, குழந்தையின் எடை 3.2KG.

தாயும் சேயும் நலம் !

"என்னைய்யா பேரு வைக்கப் போறே... குசேலன், அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா ?" தொலைபேசியில் கேட்க,

"அடபோங்க...என்ர மவனுக்கு தமிழ் பேரு வெக்காம வேற பேரு வெப்பேனாக்கும்" என்றார்


எல்லோரும் குட்டி ரஜினியையும் புதிய அப்பா-அம்மா ஆகி இருக்கும் கிரியையும் அவரது மனைவியையும் வாழ்த்துவோம்





Tuesday, September 23, 2008

Wishes: மங்கை

இன்று பிறந்தநாள் கொண்டாடும் மங்கை அக்காவுக்கு:


னி பிந்நாள் ல்வாழ்த்துக்ள் அக்கா!

வாழ்த்துவோர்,
முத்துலெட்சுமி, கோபிநாத் & சங்கம்

Thursday, September 18, 2008

Wishes: பிரேம்குமார்

காதல் கவிதைகளுக்கு சொந்தங்கள் நிறைய இருந்தாலும் நட்பு கவிதைகளுக்கு சொந்தமுன்னு சொல்லிக்க நம்ம மாப்பி ஒருதன் இருக்காரு அவரு தான் எங்கள் செல்லம் மாப்பி பிரேம்குமார்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் எங்கள் மாப்பி பிரேம்குமாருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.




எதுக்கு நமீதா போட்டோன்னு எல்லாம் கேட்டக்கூடாது. அந்த கேள்வியை அவருக்கிட்டயே கேளுங்க.

குறிப்பு: மாப்பியின் பிறந்த நாளை முன்னிட்டு டி.நகர் கிருஷ்ணவேனி தியேட்டார் அருகில் இலவசமாக ரசத்துடன் கூடிய மெதுவடை கிடைக்கும்.


வாழ்த்துக்கள் சொல்லிக்கறது - கோபிநாத், சென்ஷி, கானா பிரபா, ஸ்ரீ & சங்கம்.

Monday, September 15, 2008

Wishes: ஜீவ்ஸ்


இன்று திருமண நாளை கொண்டாடும் ஜீவ்ஸ் அண்ணா - அருணா அண்ணிக்கு வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திப்போமாக.

Friday, September 12, 2008

Wishes: வினையூக்கி

அருமை அண்ணன்
ஜெனியின் கண்ணன்
ஸ்வீடன் மாப்பிள்ளை

பேய்க் கதைகளின் நாயகன்
கேப் விடாமல் கடலை போடும் மன்மதன்

அன்பு சீனியர்
பேச்சில் இனியர்

அண்ணன் வினையூக்கி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!

Thursday, September 11, 2008

Wedding: அருண்குமார்


இன்று 11/09/2008-இல் க்லேவ்லண்ட் புகழ் அருண்குமார் ஸ்வப்னாவை கைப்பிடிக்கிறார். இத்திருமண பந்தத்தில் இணையும் அருண்குமார்-ஸ்வப்னா தம்பதிகள் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துவோம்.

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
ருண்குமார் - ஸ்ப்னா!

Wednesday, September 10, 2008

Wishes : திருமண வாழ்த்துகள்: மங்களூர் சிவா- பூங்கொடி !

பதிவுலகின் செல்லப் பிள்ளை, கொஞ்சம் ஜொள்ளுப் பிள்ளை மங்களூர் சிவாவுக்கும் - பூங்கொடிக்கும்

இன்று செப்டம்பர் 11, 2008 தேதி,

வியாழன் காலை 7.30 - 9.00 க்குள்
வடபழனி முருகன் ஆலயத்தில் நடைபெற இருக்கும் திருமணத்திற்கு சங்கம் வாழ்த்துப் பதிவர்கள் சார்பில், மாப்பிள்ளை வீட்டு சார்பில், பதிவர் நண்பர்கள் சார்பில்,

இன்றுபோல் மனம் ஒத்த இணையர்களாக என்றும் வாழ வாழ்த்துகிறேன் !








மாப்பிள்ளைக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவிக்க வேண்டியவர்கள் அலைக்க வேண்டிய கைபேசி எண் : +91 98458 95200.

அதற்காக விடிய விடிய அழைத்து அவரை தூங்கவிடாமல் செய்துவிடாதீர்கள். கூட இருப்பவர்கள் தூங்கவிடமாட்டார்கள் அது வேற.

இங்கே சிங்கையில் நள்ளிரவு 12, அங்கே சென்னையில் இரவு 9:30 பார்டி கலை கட்டி இருக்கும்.


பின்னூட்ட வாழ்த்துக் கவிதை எழுதி வதைக்கும் கும்மி பதிவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன் !

Sunday, September 7, 2008

Wishes: சஞ்சய்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நம்ம பொடியன் @ சஞ்சய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அடுத்த வருடம் தன் துணைவியாருடன் பிறந்தநாளை கொண்டாட இப்போதே நல்வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வோம். ;-)
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சஞ்சய்!!!!

Birthday: கால்காரி சிவா



இன்று பிறந்தநாள்(7-Sept) காணும் திரு. கால்கரி சிவா அவர்கள் எல்லாம் வளமும் பெற்று வாழ அன்புடன் வாழ்த்துகிறோம்.


வாழ்த்துவோர்,
சங்கம்

Monday, September 1, 2008

Wishes: G3 (aka) சொர்ணக்கா

Food Items பத்தி யாரும் ஃபார்வர்ட் பண்ணின முதலிலே ஞாபகம் வர்ற நம்ம சொர்ணக்காவுக்கு இன்னிக்கு பொறந்தநாளு.

எல்லாரும் வாழ்த்துக்கள் சொல்லிருங்கப்பா......