Monday, June 9, 2008

Wishes: தி.ரா.ச! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

* சுப்புடுவின் சீடர், வலையுலகின் இசை விமர்சகர், சங்கீதப் பிதாமகர், இசை இன்பம் வலைப்பூவில் இன்ப ராகங்கள் பொழிபவர்,
* தணிகை மலைத் தணிக்கையாளர், Auditing என்று தணிக்கைக்குத் தனி வலைப்பூ கண்டவர்,
* கம்பனின் கவியில் களிப்பவர்,
* மாதக் கிருத்திகைக்கு எங்களின் ஒரே நாட்காட்டி,
* கண்ணன் பாட்டு, முருகனருள், சிவன் பாட்டு, குருவருள் (ஆச்சார்ய ஹ்ருதயம்) என்று வலம் வருபவர்,
* முருகனில் உருகி, மால் மருகனில் அருள் பருகும் அன்பர்,
* இப்போதெல்லாம் பின்னூட்டங்களை ஏர்போர்ட்டில் இருந்து மட்டுமே பப்ளிஷ் செய்பவர்,
* எங்கள் வடார்க்காடு மாவட்டத்து மண்ணின் மைந்தன்,

திராச, TRC என்று அன்புடன் அழைக்கும் தி. ரா. சந்திரசேகரன்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் திராச ஐயா!


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல பதிவு நூறாயிரம்
சொல்லாண்டு சொற்றமிழ்ப் பண்ணாண்டு
நல்லாண்டு நாளும் இரும்!

15 comments:

Anonymous said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா

Geetha Sambasivam said...

Happy Birthday Sir, and My Namaskarams also.

மெளலி (மதுரையம்பதி) said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் திராச...

இன்னிக்கு சென்னைல இருந்திருக்க வேண்டியது....மிஸ் பண்ணிட்டேன்.

சிவமுருகன் said...

திராச ஐயா,
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

9 ஜூனா நீங்க தி.ரா.ச ?

பிறந்த நாள் நல் வாழ்த்துகள். இன்னும் அருமையான ஆனந்தமான பிறந்த நாட்கள் வர இறைவனை வேண்டுகிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
9 ஜூனா நீங்க தி.ரா.ச ?//

வல்லியம்மா
திராசவும் நானும் ஒரே தேதி! :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பின்னூட்டத்தலயும் சொல்லிக்கிறேன்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திராச!

அடியேன் ஒவ்வொரு வலைப்பூ தொடங்கிய போது வந்து முதலில் பின்னூட்டிய குருநாதர் திராச!
அவர் குட்டினாலும் மோதிரக் குட்டு தான்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திராச நல்ல பாடகர் என்பதைப் பதிவில் சொல்ல மறந்து போயிட்டேனா?

சீதா கல்யாண வைபோகமே - திருமயிலை நாகேஸ்வர ராவ் பூங்காவில் - ஞாபகம் இருக்குல்ல வல்லியம்மா? :-)

cheena (சீனா) said...

நண்பர் திராச,

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

வாழ்க வளமுடன்

குமரன் (Kumaran) said...

பிறந்த நாள் வாழ்த்துகள் தி.ரா.ச & இரவிசங்கர்.

துளசி கோபால் said...

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

இலவசக்கொத்தனார் said...

நானும் நமஸ்காரம் பண்ணிக்கறேன்!!!

தி. ரா. ச.(T.R.C.) said...

அனைவருக்கும் நன்றிகள். என் ஆசிகளும்.@கேஆர்ஸ் இப்படி என்னை ""நாய்ச் சிவிகை ஏற்றி வைத்து"" மாதிரி செய்யலாமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தி.ரா.ச ஐயா
இந்த ஆண்டு தனிப் பதிவு மிஸ் பண்ணிட்டேன்!
இருந்தாலும்...இனிய Belated Birthday Wishes :))

தி. ரா. ச.(T.R.C.) said...

வாழ்த்துக்கள் வழங்கிய அனவருக்கும் நன்றிகள். அனவருக்கும் என் ஆசிகள் வாழ்க்கையில் எல்லா நலமும் பெற. வருடா வருடம் பிறந்த நாள் வந்தாலும் இந்த வருடம் ஒரு சிறப்பு என்னவென்றால் என்னுடைய பிறந்த தேதியான 9ஆம்தேதியன்றே என் தஙகமணிக்கும் நக்ஷ்த்திர பிறந்தநாள் சேர்ந்தது அதிசயம்தான்.அதுவும் மணிவிழாவாக வந்தது.கேஆர்ஸ்சுவரொட்டி போட்டாலே போதுமே! தொலைபேசியிலும் வாழ்த்துதெரிவித்தமைக்கு நன்றி. இனி பதிவுகளைத் தொடங்க வேண்டும் மன அமைதிக்காக .