Monday, June 2, 2008

Wishes: இசைஞானி

தலைவரின் பிறந்தநாள் இன்று...



நேற்றிலிருந்து நினைவலையில் ஓடிக் கொண்டேயிருக்கும் பாடல் ஒன்று எல்லாரும் கேட்டு ரசிக்க.







படம்: ரமணா(2003)
பாடியவர்: சாதனா சர்கம்

வானவில்லே வானவில்லே
வந்ததென்ன இப்போது
அள்ளிவந்து வண்ணங்களை
எங்கள் நெஞ்சில் நீ தூவு!
சின்னப் பறவைகள் கொஞ்சிப் பறக்குதே
பட்டுச் சிறகிலே பனி தெளிக்குதே
அடி தாய்த் தென்றலே
வந்து நீ பாடு ஆராரோ..!
(வானவில்லே..)

எந்த நாட்டுக் குயிலின் கூட்டமும்
பாடும் பாடல் கூக்கூ..!
எந்த நாட்டுக் கிளிகள் பேச்சிலும்
கொஞ்சும் மழலை உண்டு!
ஜாதி என்ன கேட்டுவிட்டு
தென்றல் நம்மை தொடுமா
தேசம் எது பாத்துவிட்டு
மண்ணில் மழை வருமா...
உன்னோடு நானும்
எல்லோரும் ஓர் சொந்தம்
அன்புள்ள உள்ளத்திலே..
(வானவில்லே..)

மேகமூட்டம் கொஞ்சம் விலகவே
வண்ணநிலவு கண்டேன்
அன்பு பொழியும் கருணை வெள்ளத்தில்
நெஞ்சம் மூழ்க நின்றேன்
உனைப் போலே சிலர் இருந்தால்
மண்ணில் சொர்க்கம் வருமே
இயற்கை அன்னை படைத்ததெல்லாம்
பொதுவினில் வருமே
மூங்கில் காடெல்லாம் சங்கீதம்
பாடாதோ தென்றலின் சொந்தத்திலே
(வானவில்லே..)


"உனைப் போலே சிலர் இருந்தால்
மண்ணில் சொர்க்கம் வருமே"
இவ்வரிகள் உன்னை விட சிறப்பாக வேறு யாருக்குப் பொருந்தும் தலைவா!!!

7 comments:

ஆயில்யன் said...

//உனைப் போலே சிலர் இருந்தால்
மண்ணில் சொர்க்கம் வருமே"
இவ்வரிகள் உன்னை விட சிறப்பாக வேறு யாருக்குப் பொருந்தும் தலைவா!!!///

மிகச்சரியான வரிகள்தான் :)

நல்வாழ்த்துக்களுடன்
(இதே பாடலை இளையராஜாவே பாடியிருப்பதும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று :)

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் ராகதேவனே

வருஷம் 65 ஸ்பெஷலும் போட்டாச்சு ;-)

http://radiospathy.blogspot.com/2008/06/65.html

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ராகதேவன் ராசாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :-)

கப்பி | Kappi said...

இசைஞானி பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

இலவசக்கொத்தனார் said...

நானும் சேர்ந்து வாழ்த்து சொல்லிக்கறேம்பா!

thamizhparavai said...

வாழ்த்த வயதில்லை..வணங்குகிறேன்...

கோபிநாத் said...

ராசாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))