Tuesday, June 24, 2008
Wishes: கண்மணி
Tuesday, June 17, 2008
Wishes:நடராஜ்
வாழ்த்துவோர்,
சங்கம் & அமிரகத்து நண்பர்கள்
Monday, June 16, 2008
Wishes: மாதினி
இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாதினி குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
வாழ்த்துவோர்,
வேடாந்தாங்கல் பறவைகள் & சங்கம்
Monday, June 9, 2008
Wishes: தி.ரா.ச! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
* தணிகை மலைத் தணிக்கையாளர், Auditing என்று தணிக்கைக்குத் தனி வலைப்பூ கண்டவர்,
* கம்பனின் கவியில் களிப்பவர்,
* மாதக் கிருத்திகைக்கு எங்களின் ஒரே நாட்காட்டி,
* கண்ணன் பாட்டு, முருகனருள், சிவன் பாட்டு, குருவருள் (ஆச்சார்ய ஹ்ருதயம்) என்று வலம் வருபவர்,
* முருகனில் உருகி, மால் மருகனில் அருள் பருகும் அன்பர்,
* இப்போதெல்லாம் பின்னூட்டங்களை ஏர்போர்ட்டில் இருந்து மட்டுமே பப்ளிஷ் செய்பவர்,
* எங்கள் வடார்க்காடு மாவட்டத்து மண்ணின் மைந்தன்,
திராச, TRC என்று அன்புடன் அழைக்கும் தி. ரா. சந்திரசேகரன்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் திராச ஐயா!
பல பதிவு நூறாயிரம்
சொல்லாண்டு சொற்றமிழ்ப் பண்ணாண்டு
நல்லாண்டு நாளும் இரும்!
Friday, June 6, 2008
Wishes - நந்து
சங்கம்
Thursday, June 5, 2008
Newborn: அம்பிக்குப் ப்ரமோஷன்
இந்த இனிய வேளையில், அம்பிக்கும் அவருடைய துணைவியாருக்கும் நம்ம எல்லோருடைய நல்வாழ்த்துகளையும் தெரிவிக்கலாம் வாங்க.
Tuesday, June 3, 2008
Wishes. திரு & திருமதி. மோகன்ராஜ் கைப்புள்ள
விவேகத்தின் திருவுருவமே!
அடங்காத காளையே!
பாய்ந்தோடும் காட்டாறே!
சங்கம் வைத்த சிங்கமே!
எங்கள் குலத் தங்கமே!
நீ அரைத்த மாவில் சுட்டால்
இட்லியும் இனிக்கும்!
உன் கைப்பட்ட அரிசிச்சோறும்
கமகமவென மணக்கும்!
புகைப்படக்கலை
உனக்கு கைவந்த கலை!
எதிரிகளைக் கண்டால்
நீ ஒரு எரிமலை!
ராசாவின் ரசிகன் உனக்கு
தொண்டர்கள் பல கோடி!
அவர்கள் நெஞ்சங்கள் எல்லாம்
கொள்ளை கொண்ட நீ கேடி!
இன்று நீ சேகரிப்பாய் தபால்தலை!
நாளை உன் பெயரில்
ஐநா வெளியிடும் சிறப்பு தபால்தலை!
அளவில்லா அன்பு கொண்ட நண்பன் நீ!
எங்கள் துயரங்களைத் தாங்கும் தோழன் நீ!
நீ ரங்கமணி டீமில் சேர்ந்து
ஒருவருடம் ஆகிவிட்டது!
ஆனால் இன்று உனக்கு
ஒரு வயது குறைந்துவிட்டது!
சங்கத்தின் முன்னோடி
காலத்தின் கண்ணாடி
தல உந்தன் திருமண நாளில்
வாழ்த்துகிறோம் கொண்டாடி!
தல மோகன்ராஜ் மற்றும் அண்ணிக்கு எங்கள் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!!
Monday, June 2, 2008
Wishes: அபி அப்பா - அம்மா
13 வருடங்கள் முடிந்து 14-ஆம் ஆண்டில் வெற்றிகரமான அடியெடுத்து வைக்கும் குமார் அண்ணா - கிருஷ்ணா அண்ணிக்கு வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வின் சந்தோஷங்களாக இரண்டு முத்துக்கள், அபி மற்றும் நட்ராஜ் எப்போதும் கூடவே இருப்பார்கள். குடும்பம் சகிதமாக நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.
வாழ்த்துவோர்,
சங்கம் & வேடந்தாங்கல் பறவைகள்
Wishes: இசைஞானி
நேற்றிலிருந்து நினைவலையில் ஓடிக் கொண்டேயிருக்கும் பாடல் ஒன்று எல்லாரும் கேட்டு ரசிக்க.
படம்: ரமணா(2003)
பாடியவர்: சாதனா சர்கம்
வானவில்லே வானவில்லே
வந்ததென்ன இப்போது
அள்ளிவந்து வண்ணங்களை
எங்கள் நெஞ்சில் நீ தூவு!
சின்னப் பறவைகள் கொஞ்சிப் பறக்குதே
பட்டுச் சிறகிலே பனி தெளிக்குதே
அடி தாய்த் தென்றலே
வந்து நீ பாடு ஆராரோ..!
(வானவில்லே..)
எந்த நாட்டுக் குயிலின் கூட்டமும்
பாடும் பாடல் கூக்கூ..!
எந்த நாட்டுக் கிளிகள் பேச்சிலும்
கொஞ்சும் மழலை உண்டு!
ஜாதி என்ன கேட்டுவிட்டு
தென்றல் நம்மை தொடுமா
தேசம் எது பாத்துவிட்டு
மண்ணில் மழை வருமா...
உன்னோடு நானும்
எல்லோரும் ஓர் சொந்தம்
அன்புள்ள உள்ளத்திலே..
(வானவில்லே..)
மேகமூட்டம் கொஞ்சம் விலகவே
வண்ணநிலவு கண்டேன்
அன்பு பொழியும் கருணை வெள்ளத்தில்
நெஞ்சம் மூழ்க நின்றேன்
உனைப் போலே சிலர் இருந்தால்
மண்ணில் சொர்க்கம் வருமே
இயற்கை அன்னை படைத்ததெல்லாம்
பொதுவினில் வருமே
மூங்கில் காடெல்லாம் சங்கீதம்
பாடாதோ தென்றலின் சொந்தத்திலே
(வானவில்லே..)
"உனைப் போலே சிலர் இருந்தால்
மண்ணில் சொர்க்கம் வருமே"
இவ்வரிகள் உன்னை விட சிறப்பாக வேறு யாருக்குப் பொருந்தும் தலைவா!!!