Tuesday, February 5, 2008

Wishes: துளசி டீச்சர்! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Feb 5 - என்னாங்க விசேசம்?

அபிஷேக் பச்சனுக்குப் பொறந்த நாளு!

அடங் கொக்க மக்கா! அதை நம்ம ஐஸு கொண்டாடிக்கும்!
நீ எதைக் கொண்டாடனும்-னு உனக்குத் தெரியாதா? இதெல்லாம் தெரியாம என்னத்த பதிவு எழுதிக் கிழிச்ச நீயி?

OMG! Gimme a break! பதிவு போட்டு அறிவு வளர்க்கும் வித்தை எல்லாம் ஐ டோண்ட் நோ! யூ சீ! மீ ஒன்லி பின்னூட்டம்ஸ்!

தோடா! பெருமாக் கோயில்ல வந்து என்னா, பீட்டர் வுடறியா நீ?
பதிவோ பின்னூட்டமோ, தமிழ்ப் பதிவோ, ஆங்கிலப் பதிவோ....ஜெர்மன் பதிவோ, ஸ்பானிஷ் பதிவோ....
ஒலகத்துல எந்தப் பதிவு எழுதறவங்க-ன்னாலும்,
அவங்க எல்லாருக்கும் இன்னிக்குப் பள்ளிக்கூடம் லீவு! தெரியுமா?

ஓ ஐ சீ! அப்படி என்னாங்க பெரிய விசேசம் இன்னிக்கி?

அட, இன்னுமா தெரியலை? அதோ லாரி நிக்குது பாரு! ஓடிப் போய் ஏறிக்கோ! இன்னிக்கி பதிவுலகத்துல எல்லாரையும் முதுமலைக் காட்டுக்குக் கூட்டிக்கிட்டு போறாங்க! யானைகள் சரணாலயத்துக்கு!

அங்கே, நம்ம யானைத் தலைவி...ச்சே...தானைத் தலைவி,
* பின்னூட்ட நாயகி,
* பதிவுலக நல்லாசிரியை,
* கலாச்சாரத் தூதுவர் (Cultural Ambassador),
* அனைவருக்கும் அக்கா,
* அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆர்டிக்கா, அன்டார்டிக்கா என்று எல்லாக் கண்டங்களிலும் பிரபலமான ஒரே டீச்சர்,
******** எங்கள் துளசி டீச்சருக்குப் பிறந்த நாள் விழா!


ஆகா!!

ஆமாம்...மாபெரும் பேரணி! பல கட்சிகளில் இருந்தும் தொண்டர்கள் வந்து துளசிதளக் கட்சியில் ஐக்கியம் ஆவுறாங்க! எடைக்கு எடை தங்கம் வேற கொடுக்கறாங்க!
பத்தாயிரம் யானைப் படைகள் - டீச்சர் தலைமையில்!
பன்னிரெண்டாயிரம் பூனைப் படைகள் - ஜிகே, ஜிக்குஜு தலமையில்!!

தேவர் ஃபிலிம்ஸ் இஷ்டைலில் யானைகளும், பூனைகளும் புதுசா புதுசா Blog துவங்கப் போகின்றன! இனிமே தமிழ்மணம் பூரா பிளிறல்களும், மியாவ்களும் போடுற சத்தத்துல, உன் வலைப்பூ எல்லாம் கதி கலங்கப் போவுது பாரு!
அதோ... டீச்சர் வராங்களே! அம்பாரி வச்ச யானை மேல!
என்னா லுக்கு! என்னா லுக்கு! என்னா கம்பீரம்! என்னா கம்பீரம்!

இன்னிக்கி ஒவ்வொரு பதிவா, பட்டத்து யானை வந்து நிக்கும்!
எல்லாரும் ஒழுங்கா கிஃப்ட்டு கொடுத்துறங்க!
அப்படியே டீச்சர் ஸ்பெஷல் - ஜாங்கிரி & கீரைப் பக்கோடா கேட்டு வாங்கிச் சாப்புடுங்க! - ஓக்கேவா? :-)


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர்!

எல்லாரும் பூக்கள் வைச்ச பொக்கே கொடுக்கப் போறாங்க! அதுனால நான் துளசி வைச்ச பொக்கே கொடுத்துக்கறேன்! :-)

இன்று போல் என்றும், என்றென்றும்...
இனிய தோழியாய், எங்கள் இளைய தோழியாய்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம்!!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல பதிவு நூறாயிரம்
சொல்லாண்டு துளசீ மணம் கமழ
நல்லாண்டு நாளும் இரும்!

41 comments:

புதுகைத் தென்றல் said...

மீ த ப்ர்ச்ட்டு

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் துளசி அக்கா.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பின்னூட்டத்தில் மீ த செக்கண்டு!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர்! :-)

கோவி.கண்ணன் said...

துளசி அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

துளசி அம்மா,

இனி (க்) இல்லாமல் வாழ்த்துகள் என்றே போடலாம்.
:)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அடைப்பலகையில் (template)-இல் திடீர் என்று தோன்றிய சிக்கலால், சற்று முன் இந்த இடுகை லோடு ஆவலை!

சங்கம் தீர்த்து வைக்காத பிரச்சனையைத் தனியொரு பதிவனாக வந்து தீர்த்து வைத்த கப்பியே! உன் கொற்றம் வாழ்க!

டீச்சர்...எங்க கப்பிக்கு பத்து கீரைப் பக்கோடா எக்ஸ்ட்ரா கொடுத்துருங்க! :-))

Kailashi said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் துளசி கோபால் அவர்களே. எல்லா நலமும் வளமும் பெற இறைவணைப் பிரார்த்திக்கின்றேன்.

கப்பி பய said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீச்சர் :)

CVR said...

டீச்சருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!! :-)

வெட்டிப்பயல் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் டீச்சர்...

சின்ன அம்மிணி said...

\\டீச்சர்...எங்க கப்பிக்கு பத்து கீரைப் பக்கோடா எக்ஸ்ட்ரா கொடுத்துருங்க! :-))\\ எனக்கு மட்டும் பார்சல் பண்ணி குரியர் பண்ணிடுங்க. மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

ILA(a)இளா said...

இப்பவாவது ஓட்டுரிமை கிடைக்குமா? வாழ்த்த வயதில்லை, வணக்குறோம்ங்க.

கானா பிரபா said...

//அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆர்டிக்கா, அன்டார்டிக்கா என்று அனைத்து கண்டங்களிலும் பிரபலமான ஒரே டீச்சர்,//

அவுஸ்திரேலியாவை பட்டியலில் இருந்து நீக்கியமைக்கு எம் கண்டனங்கள்.

ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிகாமணி நம்ம துளசிம்மாவுக்கு வாழ்த்து(க்)கள்.

Divya said...

துளசிம்மா , என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

அரை பிளேடு said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர்.

:)

Radha Sriram said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் துளசி..!!

இலவசக்கொத்தனார் said...

பிறந்தநாள் வாழ்த்து(க்)கள் ரீச்சர்!

இப்படிக்குக்
கொத்ஸ்

மாதாமகி என்ற வார்த்தை இல்லாமல் போஸ்டர் அடித்த ரவி டவுண் டவுண்!!

முத்துலெட்சுமி said...

happy birthday .. valzha valamudan.

பாபு மனோகர் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர்!

siva gnanamji(#18100882083107547329) said...

மனம்நிறைந்த
பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
துளசி!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

டீச்சரம்மா...

இன்னிக்கு ஒரு நாளாச்சும் கைல பிரம்பை எடுக்காம வாங்க..!

கைல பூச்செண்ட்டோட நிக்குறோம்..!

இந்தாங்க..!

வாங்கிக்குங்க..!

நல்லாயிருங்க..!

நீங்க என்னிக்குமே எங்களுக்கு டீச்சர்தான்..!

HAPPY BIRTHDAY MISS!!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கானா பிரபா said...
//அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆர்டிக்கா, அன்டார்டிக்கா என்று அனைத்து கண்டங்களிலும் பிரபலமான ஒரே டீச்சர்,//

அவுஸ்திரேலியாவை பட்டியலில் இருந்து நீக்கியமைக்கு எம் கண்டனங்கள்//

அட, ஆமாங்க! ஆப்ரிக்காவையும், அவுஸ்திரேலியாவையும் எப்படி பட்டியல்-ல சேர்க்க மறந்தேன்-ன்னு தெரியலையே! எல்லாம் இந்தக் கீரைப் பக்கோடா வாசனை செய்த மாயம் தான்! கோச்சிக்காதீங்கண்ணே! :-)

//மாதாமகி என்ற வார்த்தை இல்லாமல் போஸ்டர் அடித்த ரவி டவுண் டவுண்!!//

வந்துட்டாருய்யா வகுப்பறைத் தலைவரு! அதான் இன்னிக்கி லீவு-ன்னு சொல்லியாச்சே! அப்பறம் ஏன் கொத்ஸ் இப்படி டவுண் டவுண்-னு ட்வுன் பஸ் விடறீங்க? :-)

தஞ்சாவூரான் said...

துளசி அக்கா,

உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பட்டம் குடுத்தா கீரைப் பக்கோடா எச்சா (extra எனப் படிக்கவும்) கெடைக்குமா??

'பதிவுலகின் புதிய ஒளி' - புடிங்க பட்டத்த. அனுப்புங்க பக்கோடாவ :)

மணியன் said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் டீச்சர் ! அனைத்து பதிவுலக பிள்ளைகளையும் அரவணைத்துச் செல்லும் உங்கள் பாங்கிற்கு வந்தனங்கள் !!

பாச மலர் said...

துளசி மேடம்,

வாழ்த்துகள்..

இராம்/Raam said...

ரீச்சர்,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களும் வணக்கங்களும்.... :)

குசும்பன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீச்சர் :)

இரண்டாம் சொக்கன்...! said...

தாயே...

இன்னிக்கு மாதிரி என்னிக்குமே சந்தோஷமா இருக்க வாழ்த்துக்கள்...

சேது said...

துளசி கோபால் மேடம், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நானானி said...

துளசி டீச்சருக்கு...கை நிறைய ரோஜாக்களோடு
என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!

RATHNESH said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம்.

இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த KRS அவர்களுக்கு நன்றி.

RATHNESH

ச்சின்னப் பையன் said...

நானும் சொல்லிக்கிறேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் துளசி மேடம்...

கோபிநாத் said...

டீச்சர் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))

துளசி கோபால் said...

வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நெஞ்சம் நெகிழ நன்றி கூறுகின்றேன்.

அனைவருக்கும் என் அன்பு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

துளசியக்கா!
நெடுநாள் வாழ்ந்து; பதிவுலகில் கோலோச்சவேண்டும்;
அன்பான வாழ்த்துக்கள்

குமரன் (Kumaran) said...

மனம் மகிழும் பிறந்த நாள் வாழ்த்துகள் துளசியக்கா.

கண்மணி said...

வாழ்க பல்லாண்டு துளசியக்கா

delphine said...

Many More Happy Returns of the DAY!

யாத்திரீகன் said...

Wishing you another best year ahead with health and properity.. many more happy returns of the day teacher..

பினாத்தல் சுரேஷ் said...

யக்கோவ்..

ஹாப்பி ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் த யெஸ்டர்டே!

G.Ragavan said...

துளசி டீச்சருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். முருகப்பெருமான் அருளால் சிறப்புற்று வாழ வாழ்த்துகிறேன்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

என்றும் மகிழ்ச்சியே பொங்கட்டும்!!

cheena (சீனா) said...

பல இடங்களில் ஏற்கனவே வாழ்த்துக் கூறி விட்டாலும் இங்கு முறையாக வாழ்த்து பதிவு செய்கிறேன்.

அருமைச் சகோதரி துளசிக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்.

எண்ணிய எண்ணங்கள் எண்ணிய படி ஈடேற, இறைவனின் துணை எப்பொழுதும் இருக்க, இதயப் பூர்வமான நல் வாழ்த்துகள்.