Feb 5 - என்னாங்க விசேசம்?
அபிஷேக் பச்சனுக்குப் பொறந்த நாளு!
அடங் கொக்க மக்கா! அதை நம்ம ஐஸு கொண்டாடிக்கும்!
நீ எதைக் கொண்டாடனும்-னு உனக்குத் தெரியாதா? இதெல்லாம் தெரியாம என்னத்த பதிவு எழுதிக் கிழிச்ச நீயி?
OMG! Gimme a break! பதிவு போட்டு அறிவு வளர்க்கும் வித்தை எல்லாம் ஐ டோண்ட் நோ! யூ சீ! மீ ஒன்லி பின்னூட்டம்ஸ்!
தோடா! பெருமாக் கோயில்ல வந்து என்னா, பீட்டர் வுடறியா நீ?
பதிவோ பின்னூட்டமோ, தமிழ்ப் பதிவோ, ஆங்கிலப் பதிவோ....ஜெர்மன் பதிவோ, ஸ்பானிஷ் பதிவோ....
ஒலகத்துல எந்தப் பதிவு எழுதறவங்க-ன்னாலும்,
அவங்க எல்லாருக்கும் இன்னிக்குப் பள்ளிக்கூடம் லீவு! தெரியுமா?
ஓ ஐ சீ! அப்படி என்னாங்க பெரிய விசேசம் இன்னிக்கி?
அட, இன்னுமா தெரியலை? அதோ லாரி நிக்குது பாரு! ஓடிப் போய் ஏறிக்கோ! இன்னிக்கி பதிவுலகத்துல எல்லாரையும் முதுமலைக் காட்டுக்குக் கூட்டிக்கிட்டு போறாங்க! யானைகள் சரணாலயத்துக்கு!
அங்கே, நம்ம யானைத் தலைவி...ச்சே...தானைத் தலைவி,
* பின்னூட்ட நாயகி,
* பதிவுலக நல்லாசிரியை,
* கலாச்சாரத் தூதுவர் (Cultural Ambassador),
* அனைவருக்கும் அக்கா,
* அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆர்டிக்கா, அன்டார்டிக்கா என்று எல்லாக் கண்டங்களிலும் பிரபலமான ஒரே டீச்சர்,
******** எங்கள் துளசி டீச்சருக்குப் பிறந்த நாள் விழா!
ஆகா!!
ஆமாம்...மாபெரும் பேரணி! பல கட்சிகளில் இருந்தும் தொண்டர்கள் வந்து துளசிதளக் கட்சியில் ஐக்கியம் ஆவுறாங்க! எடைக்கு எடை தங்கம் வேற கொடுக்கறாங்க!
பத்தாயிரம் யானைப் படைகள் - டீச்சர் தலைமையில்!
பன்னிரெண்டாயிரம் பூனைப் படைகள் - ஜிகே, ஜிக்குஜு தலமையில்!!
தேவர் ஃபிலிம்ஸ் இஷ்டைலில் யானைகளும், பூனைகளும் புதுசா புதுசா Blog துவங்கப் போகின்றன! இனிமே தமிழ்மணம் பூரா பிளிறல்களும், மியாவ்களும் போடுற சத்தத்துல, உன் வலைப்பூ எல்லாம் கதி கலங்கப் போவுது பாரு!
அதோ... டீச்சர் வராங்களே! அம்பாரி வச்ச யானை மேல!
என்னா லுக்கு! என்னா லுக்கு! என்னா கம்பீரம்! என்னா கம்பீரம்!
இன்னிக்கி ஒவ்வொரு பதிவா, பட்டத்து யானை வந்து நிக்கும்!
எல்லாரும் ஒழுங்கா கிஃப்ட்டு கொடுத்துறங்க!
அப்படியே டீச்சர் ஸ்பெஷல் - ஜாங்கிரி & கீரைப் பக்கோடா கேட்டு வாங்கிச் சாப்புடுங்க! - ஓக்கேவா? :-)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர்!எல்லாரும் பூக்கள் வைச்ச பொக்கே கொடுக்கப் போறாங்க! அதுனால நான் துளசி வைச்ச பொக்கே கொடுத்துக்கறேன்! :-)
இன்று போல் என்றும், என்றென்றும்...
இனிய தோழியாய், எங்கள் இளைய தோழியாய்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம்!!
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல பதிவு நூறாயிரம்
சொல்லாண்டு துளசீ மணம் கமழ
நல்லாண்டு நாளும் இரும்!