Thursday, January 31, 2008

Wishes: மோகன்தாஸ் - பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பதிவுலகின் முடிசூடா நக்கீரர் யார்? - அவர் பற்றி பத்து "அடி" களுக்கு மிகாமல் குறிப்பு வரைக! :-)

பதிவுலகில் வாதாடிக்கிட்டு இருப்பாரு!
டக்குன்னு பார்த்தா, புதிரா புனிதமா வினாடி வினாவில் குறுக்கெழுத்து சால்வ் பண்ணிக்கிட்டு இருப்பாரு!
டக்குன்னு பார்த்தா பொன்னியின் செல்வனுக்குப் போயி, வந்தியத்தேவன் கிட்ட வம்பு இழுத்துக்கிட்டு இருப்பாரு!
டக்குன்னு பார்த்தா காஷ்மீர்லயும் இருப்பாரு! சித்தன்ன வாசல், குடுமியான் மலையிலும் பயணக் கட்டுரை எழுதிக்கிட்டு இருப்பாரு - இப்படிப் பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நெறைஞ்சிருக்கும் ஒரே பதிவர் யார்?

கீழ்க்கண்ட படத்தைப் பார்த்து யாரு வரைஞ்சது-ன்னு கண்டுபிடிங்க! தவறான பதில் சொல்பவர்களுக்கு அண்ணனே நெகட்டிவ் மார்க்கு போட்டுருவாரு!

அட, இது என்ன +2 கேள்வித் தாள் போல ஒரே கேள்வி மயமா இருக்கே-ன்னு பாக்குறீங்களா மக்கா?
பின்னே, கேள்வி மேல் கேள்வி கேக்கறவருக்கு எப்படிப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லுறதாம்? :-)

அட, இன்னுமா கண்டுபுடிக்கல?
தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் முதல் பெயர் (first name) தான் இந்தப் பதிவருக்கும்! அதுக்காக இவரை வலையுலக மகாத்மா-ன்னு எல்லாம் கூப்பிடறது ரொம்பவே ஓவரு! சொல்லிப்புட்டேன்! :-)

அண்ணனை விக்கியில் இங்கிட்டு போய் பாருங்க!
வெறும் கையை வீசிக்கிட்டுப் போவாதீங்க! செப்புப் பட்டயம் எடுத்துக்கிட்டு போங்க! அப்பத் தான் கும்முவதற்கு ஈசியா இருக்கும்! :-)

மோகன்தாஸ் அண்ணாச்சி!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! (Jan-31)

படத்தில் மோகன்தாஸ் அண்ணனுக்கு எத்தனை மெழுகுவர்த்திகள் என்பதை முடிந்தவர்கள் எண்ணிக் கொள்ளலாம்! :-))

10 comments:

ILA (a) இளா said...

சின்ன புள்ளைய இப்படியா கலாய்க்கிறது. வாழ்த்துக்கள் மோ(கன்)தாசு.

கோபிநாத் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மோகன்தாஸ் :)

வெட்டிப்பயல் said...

வாழ்த்துக்கள் மோகன் தாஸ் :-)

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துகள் மோகன்தாஸ்!

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள்!! :)

வவ்வால் said...

வாழ்த்துகள் மோஹன்,

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் ... குளுக்கி திறந்த பீர் பாட்டில் போல குபீர்னு ஜாலியா கொண்டாடுங்க! :-))

துளசி கோபால் said...

பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

இன்று போல் என்றும் வாழ்க!

Mohandoss said...

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

ரவிசங்கர் தாங்க்ஸ், என் பிறந்தநாள் யாருக்கும் தெரியாது கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆர்குடில் எப்படியோ கொடுத்திருக்கிறேன்.

நன்றிகள்.

Anonymous said...

பிறந்த நாள் வாழ்த்துகள் மோகன்தாஸ்!!

Mohandoss said...

நன்றி வெயிலான்.