Friday, July 8, 2011

Birthday: கவிதாயினி காயத்ரி



கவிதைகள் எல்லாம் அதிரடி,
படிக்கிறவங்களுக்கு கன்பார்ம்டு ஏர்வாடி,

கையில வெச்சுக்கிறாங்க மெஹந்தி,
இவுங்க கூட சேட் பண்ணினா நமக்கு வரும் பீதி.

நம்பர் வெச்ச ஜிமெயில் ஐடி,
ஜிடாக்ல லாகின் பண்ணினா போயிருங்க பேசாம ஓடி.

மலையில கிடைக்கும் திணை,
இவுங்க கவிதை படிச்சா நமக்கு வரும் வினை,

டீ ஆத்துறதுல இவுங்க செம கில்லாடி,
பாலை கவிதை படிச்சவன் குடுப்பான் கல்லடி.

பதிவுக்கு வெச்ச பேரு பாலை,
படிச்சா கலங்குறது நம்ம மூளை.

மக்கள் இவுங்களுக்கு குடுத்த பட்டம் கவிதாயினி,
காயத்திரி பதிவு போட்டா, படிப்பியா நீ?

பொண்ணுங்களுக்கு புடிச்ச கலரு பிங்கு,
இவுங்க பிலாக் படிச்சா ஊதுறாங்க சங்கு.

பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா..
மெட்ராசுக்கா...திருச்சிக்கா..திருத்தணிக்கா..
கவிதை எல்லாம் போட்டு
இனிமே எங்களை கொலை பண்ணவேணாங்க்கா

யானைக்கு இருக்கு தும்பிக்கை,
இவுங்க கவிதை எல்லாம் ஒரே மொக்கை.

தட்டி தட்டி கை யெல்லாம் வலிக்குது,
ஜல்லடை இல்லாமலேயே இவுங்க பதிவு எல்லாம் சலிக்குது.

அம்மணிக்கு கொஞ்சம் தலையில ஓவர் வெயிட்டு,
கலருமட்டும் கிராபிக்ஸ் இல்லாத சிவாஜி ஒயிட்டு.


என்னிக்குமே காளை மாடு பாலு தராது,
நல்லா கலாய்ச்சுக்கோ, சான்ஸ் போனா வராது.


கவிதையாலே எங்களை
கல்லால அடிக்கும்
கவலைப் படாத காரிகை
கவிதாயினி காயத்ரிக்கு பிறந்த நாள்(8-ஜூலை) நல்வாழ்த்துக்கள்





Wishes by
Sangam Groups.


இது பழைய பதிவு தான்.... என்ன பண்ண...!! வருசம் திரும்பிருச்சே....... :)

Thursday, July 7, 2011

New Born: குட்டி சுறா

ஊர்ல இவருக்கு பேர் சுறா. கார்த்தி என்று கூப்பிட்டா, “மொக்கை” சிவா மாதிரி Call me Sura அப்படின்னு உருமற ஆள் இவரு.  விகடன்ல அவர் படம் ஒரு பக்கத்துக்கு போட்டப் கூட நாங்க எல்லாம் ரொம்ப பயந்துட்டோம். ஆனா பயப்பட்ட மாதிரி 1000 பேர் எல்லாம் புரபோஸ் பண்ணலை. பேட்டா விலை மாதிரி ஜஸ்ட் 999 பேர் மட்டுமே புரபோஸ் பண்ணினாங்க.

சரி, கார்த்தியோட முழுநேர தொழில் என்னான்னு தெரியுங்களா”? “ஃபாலோ பண்றது” . மேலும் விளக்கனும்னா கீழே இருக்கிற படத்தைப் பார்த்துக்குங்க



. இந்தப் படம் பார்த்தும் புரபோஸ் பண்ற இளைஞிகளுக்கு சொல்லிக்கிறது ஒன்னுதான் . 6-ஜூலை அன்னிக்குதான் குட்டி சுறா பிறந்தாரு. வாழ்த்துகள் சுறா (அ) கார்த்தி

பட உதவி: விகடன்
படம் எடுத்தது: ஜீவ்ஸ்

Birthday: Boston SriRam

வயசு என்னமோ நாய் புத்தி வந்து நாலு வருசம் ஆனாலும்  எனக்கு இப்போதான் 23 என்று சொல்லுவாரு. நம்பிடவா போறோம். பரவாயில்ல சந்தோசப்பட்டுக்கட்டுமே.

24 வது அகவையில் அடியெடுத்து வைக்கும் அன்னாருக்கு எங்களது வாழ்த்துகள்(வழக்கமா நான் சொல்றாப்ல வுழுந்து கும்பிட்டுகிறேன்னு சொல்லப்படாதுங்கிறது உத்தரவு)

பி.கு:மேல இருக்கிற படம் எடுத்து 18 வருசம்தான் ஆச்சாம்.

Birthday: சிறில் அலெக்ஸ்


இனிக்க இனிக்க தேனாக கதை வழியவிடும், தமிழ்ச்சங்கத்தின் ஒரு தூணான சிறில் அலெக்ஸ் அவர்களை வாழ பல்லாண்டு என அவரது பிறந்தநாளில் (7-7) Sangam Groups வாழ்த்தி பெருமைப்பட்டுக்கொள்கிறது.

Wednesday, July 6, 2011

Birthday: தூயா

இணையத்து சமையல் குறிப்பு பதிவுகளின் அரசி (எகொஇச) தூயா’வுக்கு இன்னிக்கு பிறந்தநாள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ...







இங்கு வாழ்த்து பின்னூட்டங்கள் இடுபவர்களுக்கு தூயா தன் கையால் சமைத்த உணவு விருந்து வழங்குவார் என அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.

Monday, July 4, 2011

Wishes: ’வாத்தியார்’ இளவஞ்சி

இன்று (04-07-)பிறந்த நாள் காணும்

எங்கள் ஆசான்

இனிமே இவருக்குத் தேவை வயாக்ரா
பேசினா முன்னாடி இருக்கிறவன் மூஞ்சியில நயாகரா



வாழ்த்த வயதில்லை
கீழ வுழுந்து கும்புட்டுக்கறோம்!

இனிய பொறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்யாரே....!!!

Sunday, July 3, 2011

Wishes: ஆயில்யன் - திருமண வாழ்த்துகள்

இன்றைய முக்கியச் செய்தி

எலிஜிபிள் பேச்சிலர்களிலேயே மூத்தவரான அண்ணன் ஆயில்யன் அவர்களுக்கு இன்று திருமணம்


கத்தார் நாட்டுக்கே புலியாக இருக்கு அண்ணன் ஆயில்யன் அவர்கள்,
இனிமே வீட்டுல எலியாக இருப்பார் என அறிய வந்தோம்.  24 மணி நேரம் ஆன்லைனில் இருந்த காலம் போய் இன்று முதல் அண்ணார் 2.4 நொடிகள் மட்டுமே இணையத்தில் காணப்படுவார் என தகவல் அறிந்த வட்டாரம் தெரிவிக்கிறது.  இன்று வரை சமையல் என்பது என்வென்றே அறிந்திராத ஆயில்யன் அவர்கள் இனி மூன்று வேளையும் சமைப்பார் எனவும், சாப்பாட்டுக்கால இடைவெளியில் வடை, சொஜ்ஜி, பஜ்ஜி மற்றும் காபி டீ ஆத்துவார் என்றும் புலனாய்வு படை தகவல் தந்திருக்கிறது.

Twitterல் ரீட்வீட்டையே உலகுக்கு பிரபலப்படுத்திய அண்ணன் அவர்கள் இனி ரிவிட் வாங்கும் காலம் என வாநிலை ஆராய்ச்சியாளர்கள் மப்பும் மந்தாரமாக அறிவித்துள்ளார்கள்

இனிமே அண்ணன் ஆயில்யன் அவர்களை புடவை மடிக்கும் நேரத்திலோ, டிவி சீரியல் ஓடும் நேரத்தில் மட்டும் தொடர்பு கொள்ளவும் என அண்ணன் அவர்களே நேரடியாக நண்பர்களிடத்தில் மன்றாடி கேட்டுள்ளார்.

இப்படிக்கு
ஆயில்யன் அண்ணன் மேல பரிதாபப்படும் தம்பிகள்

------------------------------------------------------------------------------------
ஆயில்யன் - அனு தம்பதி 16 பேறும் பெற்று பெரு வாழ்வு வாழ என

வாழ்த்த வயதில்லாமல் விழுந்து கும்பிட்டுக்கிறோம்