Monday, December 28, 2009

Wishes - ராமலக்ஷ்மி

இன்று (டிசம்பர் 28 ) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் சிறப்பான முத்துக்களை தேர்ந்தெடுத்து சரமாக தொடுத்து வரும் ராமலக்ஷ்மி அக்காவுக்கு எங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அனைத்து வளங்களையும் பெற்று, நல்ல உடல்நலத்தோடும், மன மகிழ்வோடும் வாழ பிரார்த்தனை புரிகின்றோம்.



ஒரு கவிஞருக்கு கவிதையாலேயே வாழ்த்துச் சரத்தை தொடுக்கலாம் என எண்ணுகின்றோம். எனவே பின்னூட்டத்தில் சிறந்த வாழ்த்துக் கவிதை எழுதுபவர்களுக்கு கவிஞர் பட்டம் வழங்க முத்துச்சர ரசிகர் மன்றம் முடிவு எடுத்துள்ளது.... ஆகவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்த்திச் செல்லும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்... :-))

Thursday, December 24, 2009

Wishes : Jesus BirthDay !




அனைவருக்கும் சங்க(ம)ம் சுவரொட்டி சார்பில் கிறிஸ்து பிறந்த நாள் நல்வாழ்த்துகள் !

Thursday, December 17, 2009

Wishes : குசும்பன்


பெயர்: குசும்பன்
வயது: தள்ளாடினாலும் தள்ளிக்கொண்டு போகும் வயது
தொழில்: கலாய்த்தல், கலாய்க்கப்படுதல்
உபதொழில்: பூரிக்கட்டையில் தற்காப்புக்கலை கற்றல்
நண்பர்கள்: கலாய்க்கப்படுபவர்கள்
எதிரிகள்: தங்கமணியிடம் போட்டுக் கொடுப்பவர்கள்
பிடித்த வேலை: கார்ட்டூன் போடுவது என்று அவர் சொன்னாலும் தங்கமணி இடும் வேலைகள்
பிடிக்காத வேலை: ஆப்பீஸில் டேமேஜர் செய்ய சொல்வது
பிடித்த படம்: கீழே இருப்பது
பிடித்த பாடல்: சொல்லியடிப்பேனடி அடிச்சேன்னா கும்மியடிதானடி
பிடிக்காத பாடல்: ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும்
மறந்தது: அதான் மறந்துட்டாரே
ஒரே சந்தோஷம்: சக ரங்கமணிகள்
ஒரே பொழுதுபோக்கு: மற்றவரை டரியலாக்குவது


சமீபத்திய சந்தோசம் : ஜூனியர் குசும்பன்





பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழும் கலாய்க்கப்படுபவன். புகைபடம் பார்த்து கலாய்த்து அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com


குசும்பன் அண்ணாச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!


வாழ்த்துவோர்,
சங்கம்


நன்றி : கப்பி

Sunday, December 6, 2009

ஹேப்பி பர்த்டே 2 யு


இன்று பிறந்த நாள் கொண்டாடும் பதிவர்கள் திரு. ஜீவ்ஸ், மற்றும் திரு. ஜவஹர் இருவருக்கும் பதிவுலகம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஹேப்பி பர்த்டே பாஸ்-பாஸ்....

Saturday, December 5, 2009

New born Wishes : வா. மணிகண்டன்


நவம்பர் 28, 2009 அன்று ஆண் குழந்தைக்கு அப்பா ஆகியிருக்கும் கவிஞர் வா. மணிகண்டனுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.