Sunday, May 11, 2008

Wishes: வெட்டிப்பயல்! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தமிழ் வலைப்பதிவுலகின் அனானிகள் எல்லாம் ஒரு முக்கியமான முடிவுக்கு வந்திருப்பதாக வெட்டி93.8 FM ஓர் அவசரச் செய்தி வெளியிட்டுள்ளது!
அதன்படி, அனானிகள் எல்லாம் இனி பின்னூட்டம் போடுவதை நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்து இருக்கிறார்கள்!

ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தீர்கள் என்று அனானிகளைக் கேட்டதற்கு, அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால்....
இதோ களத்தில் இருந்து நம் சிறப்பு நிருபரு, பாலாஜி மனோகருலு!

நிருபர்: ஏங்க இந்த விபரீத முடிவை எடுத்தீங்க?

அனானி: நாங்களா இந்த முடிவை எடுக்கலை வெட்டி! இந்த முடிவுக்கு நாங்க தள்ளப்பட்டிருக்கோம்!

நிருபர்: என்னாது....தள்ளப்பட்டீங்களா? உங்களைத் தள்ளிய கள்ளுடு எவுடு? மீக்கு தெலிசா?

அனானி: ஓ...அனானி என்பதால் தள்ளியது யாரு-ன்னு தெரியாது-ன்னு நினைச்சிட்டீங்களா வெட்டி? அனானியின் கால் அனானி அறியும்! தெரியுமா?

நிருபர்: ஓ கதை அப்படிப் போகுதா? சரி! அப்ப இனி மேல் நீங்க பின்னூட்டமே போடப் போறதில்ல! அப்போ வேற என்ன தான் பண்ணப் போறீங்க?

அனானி: பதிவு போடப் போறோம்!

நிருபர்: ஓ மை காட்! என்னாது? பதிவா? அனானிகளா?

அனானி: ஏன் போடக் கூடாதா? அனானிமஸ் ஆப்ஷன்-ல பதிவு போடறதுக்கு பிளாக்கர்-ல மாற்றம் கொண்டாந்துட்டாங்க, தெரியும்-ல?

நிருபர்: அடப்பாவிங்களா!

அனானி: பதிவுலகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முக்கியமான சமூகக் கடமையை முன்னிட்டு தான், நாங்க இந்த முடிவுக்கு வந்திருக்கோம்!

நிருபர்: எல்லாம் சரி தான்! ஆனா யாரோ ஒருத்தன் தான் உங்களை இந்த முடிவுக்குத் தள்ளி விட்டான்-னு சொன்னீங்களே? யாருங்க அவன்?

அனானி: அலோ! அவன் இவன் என்ற ஏகவசனம் வேண்டாம்! பதிவுல உன்னை விட பெரிய வெட்டி யாரும் இல்லை, அதனால யாருக்கும் பயப்படாதே!
அதே மாதிரி உன்னை விட சின்ன பொட்டி யாரும் இல்லை, அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!!

நிருபர்: அடங் கொக்க மக்கா! நாம சொன்னது நம்பிள்கேவா?

அனானி: அவரு ஒரு காலத்துல கட்டு கட்டா பதிவு போடுவாரு! ஆனாக் கால் கட்டு ஆனதுல இருந்து ஒரு கட்டும் காணோம்! அட ஒரு சீட்டுக் கட்டு கூட காணோம்-பா!
பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர்-னு ஒரு நாளைக்கு மூனு பதிவு போட்டவரு, இப்போல்லாம் பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர்-னு சாப்பிடவே நேரம் சரியா இருக்குதாம்! எடைக்கு எடை வேற கூடப் கூடிப் போயிரிச்சாம்!

நிருபர்: அடப் பாவமே!

அனானி: அது இன்னா அடப்பாவமே? அடப் புண்ணியமே-ன்னு சொல்லு! அதான் நாங்க எல்லாரும் ஒன்னாச் சேர்ந்து, அவருக்குப் பதிலா, பதிவு போடலாம்-னு களத்துல எறங்கிட்டோம்! அவரோட வலைப்பூவைக் கூட சல்லீசா ஏலத்துல எடுத்துட்டோம் தெரியுமா? ஈ-பேல எவ்ளோ-க்கு எடுத்திருப்போம்-னு நினைக்கறீங்க? பின்னூட்டத்தல சொல்லுங்க பார்ப்போம்! கைக்கு டாக்குமென்ட்ஸ் கூட வந்திருச்சி! இதோ பாருங்க பட்டா!


நிருபர்: ஆகா, இந்த பட்டாவை நான் எங்கேயோ முன்னால பாத்திருக்கேனே?

அனானி: இனி அடிச்சி ஆடிருவோம்-ல? மொத ரிலீஸ் இன்னா தெரியுமா?
தூறல்+கொல்ட்டி=பல்ட்டி!

நிருபர்: ஆகா...!
(சிறப்பு நிருபரு, பாலாஜி மனோகருலு, மயக்கம் போட்டு கீழே விழ...)


ஒரு காலத்துல வலையுலகின் முத்தப் பதிவராய் இருந்து,
இப்போது மூத்த பதிவராய் மாறிவிட்ட,
மாப்பிள்ளை (இன்னுமா?) வெட்டி காருக்கு,
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! (May-11)!


பாலாஜி,
జన్మ థిన సుభ కన్క్షాలు!

ஜன்ம தின சுப கன்க்ஷாலு! :-))
வெட்டிகரமான பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!

29 comments:

குமரன் (Kumaran) said...

வெட்டியோ வெட்டிகரமான பிறந்தநாள் வாழ்த்துகள் பாலாஜி. தமிழ்மணத்துல இன்னும் இந்த இடுகை வெளிவரலை. ஆனால் தேன்கூட்டுல வந்தாச்சு. அங்கிருந்து தான் உள்ளே வந்தேன். :-)

ILA said...

Happy birthday!

Seemachu said...

ராஜா.. ஹேப்பி பர்த் டே!! எல்லா நலனும் பெற வாழ்த்துகள்..

அன்புடன்,
சீமாச்சு..

எம்.ரிஷான் ஷெரீப் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஒரு கேக் 'வெட்டி',அதுல ஒரு பீஸ் 'வெட்டி',கண்ணபிரான் அண்ணாச்சிக்கு அத 'வெட்டி'ட்டு மீதிய அப்படியே இங்க பார்சல் பண்ணிடுங்க..ஒகே?

Boston Bala said...

வாழ்த்துகள் :)

கோபிநாத் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலாஜி ;)

கப்பி பய said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் :)

வடுவூர் குமார் said...

வாழ்த்துக்கள்,பாலாஜி.

ச்சின்னப் பையன் said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், வெட்டி....!!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தமிழ்மணத்துல இன்னும் இந்த இடுகை வெளிவரலை. ஆனால் தேன்கூட்டுல வந்தாச்சு. அங்கிருந்து தான் உள்ளே வந்தேன். :-)//

குமரன்...ஏன் இப்பிடி ஒரு கொலை வெறி உங்களுக்கு?
தமிழ்மணம் வேற, வெட்டி வேறயா என்ன? :-))
வெட்டிக்காக 40+ எல்லாம் உதயமாச்சே! மறந்துட்டீங்களா?

SP.VR. SUBBIAH said...

////ஜன்ம தின சுப கன்க்ஷாலு! :-))
வெட்டிகரமான பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!////

அட்லனே நேனு அடுகியானுன்னு அய்னாவுக்கு செப்பேசெயேண்டி!
Many more happy returns of the day,Mr.Balaji
Subbiah Vaatththiyaar

Anonymous said...

பொறந்த நாள் நல்வாழ்த்துக்கள், வெட்டி....!!!

அன்புடன்
அனானி

இலவசக்கொத்தனார் said...

//జన్మ థిన సుభ కన్క్షాలు!//

ரிப்பீட்டேய்!!

Anonymous said...

//జన్మ థిన సుభ కన్క్షాలు!//

என்னாதிது ? பிறந்த நாளுக்கு போட்ட ஜிலேபியா?

மதுரையம்பதி said...

அண்ணாச்சி, பிறந்த தின நல்வாழ்த்துக்கள்....

கானா பிரபா said...

//ஜன்ம தின சுப கன்க்ஷாலு! :-))//

ரிப்பீட்டேஏஏஏ

ஆயில்யன். said...

/கானா பிரபா said...
//ஜன்ம தின சுப கன்க்ஷாலு! :-))//

ரிப்பீட்டேஏஏஏ
//

ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்:))

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே. :-))

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் பாலாஜி!

G3 said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

தம்பி said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

Ellarum Chollitaanga!
Naan pinootathula chollaleena eppdi en thambikku? :-))))

Iniya Pirantha Naal Vaazthukkal, Balaji!:-)
Nalam pala petru vaazha, Iraivan Thunai eppothum irukka vendugiren!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

Thalai Pirantha Naal vera!
(kalyanam katti mutha poranthu naalu)
Athukku oru extra vaazthu pa! :-)

வல்லிசிம்ஹன் said...

பிறந்த நாட்கள் வாழ்த்துகள் பாலாஜி.

கோவி.கண்ணன் said...

//ஜன்ம தின சுப கன்க்ஷாலு! :-))
வெட்டிகரமான பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!//

பாலாஜி யவருகே உட்டின தின சுபஷைகளு.

கோவி.கண்ணன் said...

பாலஜி பிறந்த நாள் கொண்டாடினால் கேக் 'வெட்டி' கொண்டாடுவாரா ?

CVR said...

Wish you many more happy returns thala! :D

வெட்டிப்பயல் said...

வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்

NewBee said...

I just saw this post.

Belated Birthday wishes balaji.:)

-NewBee

P.S:Tamil font ain't working :(