Friday, October 29, 2010

Wishes : பணி ஓய்வு வாழ்த்துகள் !

அன்புக்குரிய பெரியவர் மற்றும் வலைப்பதிவர் திரு சீனா என்கிற சிதம்பரம் ஐயா தான் பார்த்துவந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் பதவியில் இருந்து சனிக்கிழமை (30 அக் 2010) பணியை நிறைவு செய்கிறார்.

36 ஆண்டுகள் 8 மாதங்கள் 20 நாட்கள் பார்த்துவந்த பணியை நிறைவு செய்து ஓய்வு பெரும் இந்நாளில் வாழ்த்துவதில் மகிழ்கிறேன். இல்லற கடமைகள் அனைத்தையும் செய்து, மகள்களுக்கு திருமணம் செய்து பேரக் குழந்தைகளை பார்த்தவர் என்பதால் அவரது பணி ஓய்வு அவருக்கு நிறைவே.

வயது அடிப்படையில் ஓய்வு என்பது பார்த்துவந்த பணிக்கு மட்டுமே. 60 வயதை அடைந்திருக்கும் சீனா ஐயாவை வாழ்த்துவதே ஆசி பெருவது போன்றதே.

எல்லா நலமும் வளமும் நிலைக்கப் பெற்று, உற்ற துணையுடன் சேர்ந்து வாழ்க இன்னும் நூறு ஆண்டுகள் !

அன்புடன்
கோவி.கண்ணன்

Thursday, October 21, 2010

குட்டிக் குசும்பனுக்கு ஹாப்பி பர்த் டே!!




தனது முதல் பிறந்தநாளை (20.10.2010) இன்று மாலை வெகு சிறப்பாகக் கொண்டாடவிருக்கும் குட்டிக் குசும்பன் திரு.இனியன் (மாப்பிள்ளையாச்சே!) அவர்களுக்கு இனிய அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Sunday, October 17, 2010

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - அவந்திகா

இன்று (18/10/2010) பிறந்த நாள் காணும் எங்கள் சகோதரி கிரிக்கெட்டின் தீவிர ரசிகை, பதிவர் அவந்திகாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வது.....

பழைய கும்மி குரூப்ஸ் :))

Saturday, October 16, 2010

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - யாவரும் நலம் சுசி!


வெற்றியை உணர்த்தும் விஜயதசமி நன்னாளில், இனிய பிறந்த நாளினை கொண்டாடும் “யாவரும் நலம் சுசி” அவர்கள் தம் வாழ்வில், மேலும் பல வெற்றிகளை பெற்றிடவும், பிறந்த நாள் நல்வாழ்த்துக்களோடு,வாழ்த்துகிறோம்!

வாழ்த்துக்களுடன் ...
சங்கம்

சீனா ஐயாவுக்கு பொறந்த நாளுங்கோ!


சக பதிவரும் வலைச்சரம் தளத்தின் நிர்வாகியுமான
நம்ம சீனா ஐயா அவர்கள் தனது 18 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்!
எல்லோரும் வாங்க! அவரை வாழ்த்தலாம்!

(படத்துல உனக்குன்னு ஒருமைல வந்துடுச்சு! ஒரு அந்நியோன்ய உரிமையா சொல்றேன்னு நினைச்சிக்குங்க..அவ்வ்வ்வ்)