Wednesday, September 1, 2010
சீனா சார்-செல்வி ஷங்கர் தம்பதிகளின் திருமண நாள் வாழ்த்துக்கள் !!!
1950 ல் ஒரு அக்டோபர் மாதம் 16ம் தேதி பிறந்த இவர் இன்னும் 74 நாட்களில் தனது சஷ்ட்டியப்த பூர்த்தியை தனது மனைவியோடு கோலாகலமாக கொண்டாடப்போகும் இவர் பிறந்தது என்னவோ தஞ்சை மாவட்டம் தஞ்சாவூரில் தான் எனினும் இவர் பல மாவட்டங்களுக்கு சொந்தக்காரர். ஆமாம் தஞ்சையில் பிறந்து மதுரையில் வளர்ந்து படித்து பின்னர் சென்னையில் புகழ்பெற்று இப்போது திரும்பவும் மதுரையில் வசிக்கின்றார்.
நாம் அசை போட்டால் தாடை வலிக்கும். இவர் அசை போட்டால் பதிவு பிறக்கும். அப்படியாக "அசைபோடுகிறேன்" என்கிற தலைப்பிலே எழுத ஆரம்பித்து மாதம் மாதம் தாவறாமல் வரும் பௌர்ணமி மாதிரி பளிச்சுன்னு ஒரு பதிவை பிரசவித்து விடுவார். சில சமயம் மாதத்துக்கு இரண்டு பௌர்ணமி கூட வந்து விடும். ஆனால் ஜனவரி மாதமானால் மட்டும் ஐந்துக்கு குறையாமல் பௌர்ணமி எட்டி பார்த்துவிடும்.
பதிவுலகில் இவர் சம்பாதித்தது எக்கச்சக்கம். ஆமாம் நண்பர்கள் எக்கச்சக்கம். எல்லா வயதிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு. சமீபத்தில் கூட குட்டிகோவியார் என்னும் புதிய ஆண் நண்பர், குட்டி வால் என்னும் பெண் நண்பர். இப்படியாக அந்த மாதிரி மூத்திர பதிவர்கள் முதல் மூத்த பதிவர்கள் வரை இவருக்கு நண்பர்கள்.
இவர் குடும்பமே எழுதும். இளைய மகள் 1995 கனையாழியில் கூட எழுதியிருக்காங்க. அன்பான மனைவி, அன்பான குழந்தைகள் அருமையான பேத்தி என ஒரு நிறைவான குடும்பம். கிட்ட தட்ட இவரது வெற்றிக்கு காரணம் கூட அந்த அன்பான குடும்பம் என்றே சொல்லலாம்.
எழுத வரும் பல புதியவர்களை ஊக்குவிப்பவர். எழுதி மறந்த பல பழைய பதிவுகளை தூசி தட்டி படிக்க வைப்பவர். ஆம் வலைச்சர பொறுப்பாசிரியர். \\தமிழ் கற்றவன் - அறிஞன் இல்லை - கவிஞன் இல்லை - புலவன் இல்லை - தமிழ் கற்றவன் - அவ்வளவு தான்\\ என தன்னை பற்றி குறைவாக சொல்லி கொண்டாலும் அதை எல்லாம் தாண்டி நன்றாக எழுத கூடியவர்.வங்கிப்பணியில் இருந்தவர்.
இவரை பிடிக்காதவர் இன்னும் பிறக்கவில்லை. பிறக்க போவதும் இல்லை. எந்த பிரச்சனைக்குள்ளும் இவரின் நிழல் கூட புகாது.எல்லாத்துக்கும் மேல இவர் ஒரு மனிதநேயமிக்க மனிதர். நல்ல ஆன்மீக சிந்தனை உடையவர். பிறந்தது ஒரு மடத்தின் வீட்டில், பழகியது ஒரு மடத்தின் கூட என்றெல்லாம் மடம் இவர் கூட இவர் வாழ்வில் தொடர்ந்து கொண்டே இருந்தாலும் இவர் தொடராத ஒரு மடம் அது பிடதி மடம் தான்:-)))
இத்தனை வெற்றிக்கும் காரணம் இவரது திருமணம். ஆமாம் இவரது வெற்றிக்கான சக்தி வந்ததே இவரது திருமணத்துக்கு பின்னர் தான். இன்னும் சொல்ல போனால் சக்தியே மனைவியாக வந்தது. ஆமாம் அந்த அக்காவின் பெயர் செல்விஷங்கர். ஆமாம் இப்போது புரிந்ததா இத்தனை நேரம் யாரைப்பற்றி சொல்லிக்கொண்டு இருந்தேன் என்று. அதே அதே....நாம் சீனாசார் என செல்லமாக அழைக்கும் சீனாசார்- செல்வி ஷங்கர்அவர்களின் திருமண நாள் செப்டம்பர் இரண்டாம் தேதியாகிய இன்று தான்.
நாம் வாழ்த்துவோம். ஆசீர்வாதம் வாங்கிப்போம்! சீக்கிரம் மணிவிழா கொண்டாட இருக்கும் இந்த தம்பதியர் எல்லா வளமும் பெற்று நீண்ட நாள் நம்மை எல்லாம் வழிநடத்த ஆண்டவனை வேண்டுகின்றோம்!
குறிப்பு: போஸ்டர் ஒட்டியது அபிஅப்பா! பசை தடவியது சிங்கை சிங்கம் ஜோசப் பால்ராஜ்! படம் உதவி ஆயில்யன் இல்லை கூகிள்.
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
ம் ஸ்டாட் மீசிக்!(பின்னூட்ட கயமை)
வாழ்த்துக்கள் சீனா சார் ;))
வாழ்த்துகள் ஐயா
ஐயா & அம்மாவின் ஆசிர்வாதம் வேண்டி
ஆயில்யன் :)
//மூத்திர பதிவர்கள் முதல் மூத்த பதிவர்கள் வரை இவருக்கு நண்பர்கள்///
lol :))))))))))))
இனிய மணநாள் வாழ்த்துக்கள் அம்மா, ஐயா! :)
அட்வான்ஸ் மணிவிழா வாழ்த்துக்கள்! :)
நீங்காத செல்வங்கள் நிறைந்தேலோர் எம்பாவாய்! :)
நானும் இப்பதான் கவனித்தேன். பதிவு இருப்பது தெரியாமல் இன்னொரு பதிவு போட்டு.......சீனா ஐயாவுக்கு இரட்டிப்பு வாழ்த்து.
:)
வாழ்த்த கணக்கு வச்சிக்கக் கூடாது.
சீனா சாருக்கும் அவங்க வீட்டம்மாவுக்கும் ஒரு வணக்கத்த போடுவோம்....
//
போஸ்டர் ஒட்டியது அபிஅப்பா! பசை தடவியது சிங்கை சிங்கம் ஜோசப் பால்ராஜ்
//
செவுரு புடிச்சது???
இன்று போல் என்றும் வாழ என் வாழ்த்துகளும் பிராத்தனைகளும்
தம்பதியினருக்கு என் இனிய வாழ்த்துகள்.
அன்பின் அபி அப்பா, பசை தடவிய ஜோசப் எல்லோருக்கும் நன்றி கலந்த நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
யூ த ஃபர்ஸ்டா - தொல்ஸ்
நல்லாருங்கப்பா
நட்புடன் சீனா
அன்பின் கோபிநாத்
வாழ்த்திற்கு நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் ஆயில்ஸ்
வாழ்த்திற்கு நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் கேயாரெஸ்
வாழ்த்திற்கு நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் கோவி
வாழ்த்திற்கு நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் யோகேஷ்
வாழ்த்திற்கு நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் பூங்குழலி
வாழ்த்திற்கு நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் ஜெரி
வாழ்த்திற்கு நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
இருவருக்கும் என் இனிய மணநாள் வாழ்த்துக்கள்:)!
இன்னுமொரு நூற்றாண்டிரும் என்று வாழ்த்தி வணங்குகிறேன்!
வாழ்த்துக்கள் மாப்பி :-))
என்னங் மாப்புள்ள அடுத்து மணிவிழாவா கலக்குங்க ஆச்சிக்கும் என் வாழ்த்துக்கள சொல்லிருங்க மாப்பி :-))
அன்பின் ராமலக்ஷ்மி
வாழ்த்திற்கு நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் குமரன்
வாழ்த்திற்கு நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் மச்சி கார்த்திக்
வாழ்த்திற்கு நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் மாப்பி சீனா
அன்பின் மச்சி கார்த்திக்
வாழ்த்திற்கு நன்றி
ஆச்சிக்கிட்டே சொல்லிடறேன்
சரியா
நல்வாழ்த்துகள் மச்சி
நட்புடன் சீனா
Post a Comment