Saturday, July 10, 2010

Wishes : பிறந்த நாள் - மாரனேரி ஜோசப் பால்ராஜ் !

ஜூலை 11, சமூக சேவகர், கொடையாளர், பலருக்கு கல்விக்கண் திறக்கும் அருளாளர், பதிவர் திரு மாரனேரி ஜோசப் பால்ராஜ் என்ற பெயருடைய சின்னவா யூசுப் பால்ராஜ் ஐயங்காருக்கு இன்று பிறந்த நாள்.ஆசிகளுடன் நல்வாழ்த்துகள்
பெரியவா கோவியார்
சிங்கப்பூர்


********

மேலும் சிறப்பு வாழ்த்துப்பாடலை இணைத்து வாழ்த்துபவர் அத்திவெட்டி திரு ஜோதிபாரதி,


தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலை கனி வயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாயிடம் உருவாகி

வண்ணம் பாடி ஒரு வளர் தென்றல் தாலாட்ட
கண்ணம் பாடி அணை கடந்து நலம் பாடி

ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர நீர்வீழ்ச்சி எனும் பேரில்
நீண்ட வரலாறாய்

வீடு தாண்டா கற்பு விளங்கும் தமிழ் மகள் போல்
ஆடு தாண்டும் காவிரியாய்
அடங்கி நடந்து
அகண்ட காவிரியாய் பின் தவழ்

கரிகாலன் பேர் வாழும் கல்லணையில் கொள்ளிடத்தில்
காணும் இடமெல்லாம் தாவிப் பெருகிவந்து
தஞ்சை வள நாட்டைத் தாயாகிக் காப்பவளாம்
தனிக்கருணை காவிரி போல்

செல்லும் இடமெல்லாம் சீர்பெருக்கி பேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்

பிள்ளையென நாளும் பேச வந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக்கனி
எங்கள் இதயக்கனி இதயக்கனி

நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணி பாடுங்கள்


நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
பாடுபட்டு சேர்த்த பொருளை கொடுக்கும்போது இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தை பார்க்கும்போது இன்பம்
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை

நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது
பிரித்து வைத்து பார்ப்பதெல்லாம் மனிதன் இதயமே
உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே

நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

நதியை போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்
கடலை போல விரிந்த இதயம் இருந்திட வேண்டும்
வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்


நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

25 comments:

ஜெகதீசன் said...

வாழ்த்துகள் ஜோசப்!

*இயற்கை ராஜி* said...

வாழ்த்துகள்

காயத்ரி சித்தார்த் said...

கோவியண்ணா.. ஜோசப் இமேஜை டேமேஜ் பண்றதுக்குன்னே இந்த போட்டோ போட்டீங்களா?

ஜோ உண்மைய சொல்லுங்க.. இது எத்தினியாவது பர்த் டே? :)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துகள் யூசுப் பால்ராஜ் ஐயங்கார்!

காயத்ரி சித்தார்த் said...

வாழ்த்துக்கள் ஜோ.. :)

மாமா, அத்தம்மா & அமுதினி

கோவி.கண்ணன் said...

//Blogger காயத்ரி சித்தார்த் said...

கோவியண்ணா.. ஜோசப் இமேஜை டேமேஜ் பண்றதுக்குன்னே இந்த போட்டோ போட்டீங்களா?/

ஐயோ தாய்குலமே ! அரசியலா, நான் வரலை, படத்தை மாற்றிவிட்டேன்
:)

இனியவள் புனிதா said...

Happy Birthday Joseph Sir :-)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

படத்தை மாற்றிய பகலவன் கோவியாருக்கு நன்றி!

கோவி.கண்ணன் said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...

படத்தை மாற்றிய பகலவன் கோவியாருக்கு நன்றி!/

கேக்குல கருப்பு செவப்பு இருக்குன்னு அரசியல் பண்ணிடாதிய

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கோவி.கண்ணன் said...
//அத்திவெட்டி ஜோதிபாரதி said...

படத்தை மாற்றிய பகலவன் கோவியாருக்கு நன்றி!/

கேக்குல கருப்பு செவப்பு இருக்குன்னு அரசியல் பண்ணிடாதிய//

கோவியாரே!

பாட்டுலயுந்தான் கறுப்பு செவப்பு வெள்ளை இருக்கு!

அதுக்கும் இதுக்கும் கழிச்சிக்கிடுவோம் கவலை வேண்டாம்!

அரசியல் பிரச்சனை வராது!

அபி அப்பா said...

கோவை-ஈரோடு கூட்டனியின் மாப்பி
அமுதினியின் அத்தான்,
மாரநேரியின் மைந்தன்
சிங்கையின் சிங்கம்
யூசுப் பால்ராஜ் ஐயங்கார்
வாழ்க வாழ்க வாழ்கவே!!

அபி அப்பா said...

கோவை-ஈரோடு கூட்டனியின் மாப்பி
அமுதினியின் அத்தான்,
மாரநேரியின் மைந்தன்
சிங்கையின் சிங்கம்
யூசுப் பால்ராஜ் ஐயங்கார்
வாழ்க வாழ்க வாழ்கவே!!

முகவை மைந்தன் said...

பிறந்தநாள் வாழ்த்துகள்!

ILA(@)இளா said...

வாழ்த்துகள் ஜோசப்பு!

ஸ்வாமி ஓம்கார் said...

கலியுக கர்ணனுக்கு
வாழ்த்தும் ஆசியும்

கோபிநாத் said...

எங்க சீனியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-)))

Anonymous said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

கானா பிரபா said...

அதிமுக கொபசெ ஜோசப் பால்ராஜுக்கு வாழ்த்துக்கள்

(இதயக்கனி பாட்டை வச்சுத் தான் முடிவெடுத்தோம்)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

குசும்பன் said...

//பலருக்கு கல்விக்கண் திறக்கும் அருளாளர்//

பலருக்கு கண் திறக்கும் சோசப்புக்கு கண் தெரியாதா?இப்படி கண்ணாடி போட்டுக்கிட்டு இருக்கார், கையில் ஒரு குச்சி வெச்சிக்க வாங்கி கொடுங்கப்பா:))

வாழ்த்துக்கள் மச்சி!

ராம்ஜி_யாஹூ said...

birthday wishes

ஜோசப் பால்ராஜ் said...

வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

ரொம்ப ஓவரா புகழாதிங்க, எனக்கு கூச்சமா இருக்கு. என்னால முடிஞ்சத மட்டுமே செய்யிறேன். அதில் புகழ ஒன்றுமில்லை என்பதே என் எண்ணம்.

என். உலகநாதன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜோசப்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

வாழ்த்துகள் யூசுப் பால்ராஜ் ஐயங்கார்!