Friday, August 28, 2009

"திருமதி பக்கங்கள்" கோமதி அரசு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!!




குழந்தைகளுக்கான இனிய பாடல்களோடும் நினைவுகளைக் கிளறும் ஆடிப்பெருக்கு இடுகைகளோடும் கலக்கிக் கொண்டிருக்கும் "திருமதி பக்கங்கள்" கோமதி அரசு அவர்களுக்கு இன்று நட்சத்திர பிறந்தநாள்!


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்,அம்மா!! உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்! :-)

"என் வானம்" அமுதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!!



(image courtesy - Google)

"என் வானம்" அமுதாவிற்கு இன்று பிறந்தநாள்!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அமுதா!!

Thursday, August 27, 2009

Prayer and Wishes: செந்தில் நாதன் நலம் பெற வேண்டி, அனைவரும் வாழ்த்துங்கள் !




உங்கள் நல் ஆசிகள்
உங்கள் நல் வேண்டுதல்கள்
உங்கள் நல் வாழ்த்துகள்
உங்கள் நல் எண்ணங்கள்

மூலமாக நண்பர் செந்தில் நாதனுக்கு இன்று நடைபெறும் VAD Fixing இதய அறுவை சிகிச்சை முடிந்து விரைவில் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்துங்கள்.

Monday, August 24, 2009

நானானி அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


நாங்கள் அம்மா என்று அழைக்கும்
நைன்வெஸ்ட்
தளத்தின் உரிமையாளரும்,
இனிய குணம் கொண்டவரும்,
பதிவர்களின் அன்பருமான
நானானிம்மாவுக்கு இன்று பிறந்த நாள்.

அன்பு நானானிம்மாவும் ,அவர்தம் குடும்பமும் எல்லா வளமும் பெற வாழ்த்தலாம் வாருங்கள் .

ஹாப்பி பர்த்டே நானானிம்மா .
வரும் வருடங்கள் நல்ல வருடங்களாக அமைய ஆரோக்கியம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறோம் .

விளம்பர உதவி : வல்லிம்மா

Wishes: நாடறிந்த பதிவருக்கு.....

Wishes: ரம்யா ரமணி

இன்று திரு.ஹரியுடன் இணைந்து தங்கள் வாழ்வின் புதிய அத்தியாயத்தை துவக்க இருக்கும் ரம்யா ரமணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !!



இரு வேறு நாவில் ஒரு வார்த்தைபேசி
ஆயிரம் கோடி ஆண்டுகள் பாடி
சந்தனம் பூசிய சந்ததி வாழ்க !!
(ஹிஹி.. வழக்கம் போல பாட்டுல இருந்து சுட்ட வரிகள் தான் ;-) )

Hearty Congratulations Hari & Ramya !!!

Sunday, August 23, 2009

Wishes: தமிழ்மணம்


உலகமெங்கும் பல நண்பர்களையும், உறவுகளையும் உருவாக்கித்தந்து, உலகத் தமிழர்களை ஒன்று கூட வைத்த ”தமிழ்மணம்” ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. தமிழ்மணம் பரப்பிய ’காசி மற்றும் “ங்” தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!.

உங்கள் சேவை தமிழர்களுக்கு என்றென்றும் தேவை.