இன்னார்க்கு இன்னார் என்று
இறைவன் நிர்ணயிக்க
இவருக்கு இவளே துணை என்று
இருவீட்டார் நிச்சயிக்க - இங்கே
இனிதாய் துவங்குகிறது ஒரு
இல்லறப்பயணம்
மத்தளங்கள் கொட்ட
மலர்க்கூட்டம் பொழிய
அட்சதையேற்று இவர்கள்
அமர்ந்திருக்கும் நேரம்
வாழ்க! வளர்க!! வளம் பல பெருக!!! என்று
எண் திசை அனைத்திலும் வாழ்த்துரை நிறைந்திருக்க
அன்றில் பறவையாய் மணமொன்றி வாழவும்
இசையும் இனிமையுமாய் இணைந்திருக்கவும்
அன்புருவால் நின்று ஆசீர்வதிக்கின்றோம்
தமிழ் வலைப்பதிவர்களாகிய நாங்கள்!